Monday, August 1, 2011

ஜூனியர் அச்சீவரும் காக்னிசன்ட் நிறுவனமும்

ஜூனியர் அச்சிவ்மென்ட் (JA) என்கிற தொண்டு நிறுவனம் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. பல நாடுகளில் கிளைகள் கொண்ட இந்நிறுவனம் சில பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளிகளுக்கு தேவையான Infrastructure உள்ளிட்ட வசதிகளை செய்து தருகிறது. மேலும் பல பள்ளிகளில் உள்ள பத்தாம் மட்டும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தொடர் பயிற்சி அளித்து அவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற உதவுகிறது. இதே போல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தும் இவர்கள் பற்றி மேலும் அறிய http://jaindia.org/ என்கிற இணைய தளத்தை பாருங்கள்.

இத்தகைய ஒரு நிகழ்வாக புழுதிவாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக மாணவர்களுக்கு பல்வேறு வித படிப்புகள் மற்றும் வேலை வாய்ப்பு குறித்த தகவல் பகிரும் நிகழ்ச்சி ஜூலை 30 அன்று நடந்தது. இது பற்றிய சிறு தொகுப்பு இதோ .

நிகழ்ச்சி குறித்து பள்ளி மாணவர்கள் இடையே நிகழ்ச்சி பொறுப்பாளர்களில் ஒருவரான கிருத்திகா பேசியபோது எடுத்த வீடியோ இதோ



பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சி நடந்தது. 15-க்கும் மேற்பட்ட வாலண்டியர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். HSBC, Deloitte, KPMG, என பல நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் JA-வுடன் சேர்ந்து வாலண்டியர்களாக தொண்டாற்றுகிறார்கள். இதில் மிக அதிக ஆர்வம் காட்டுகிறது காக்னிசன்ட் நிறுவனம். இதன் ஊழியர்கள் பலர் சனி, ஞாயிறுகளில் இதே பணியை செய்கின்றனர். புழுதிவாக்கம் பள்ளிக்கு வந்த வாலண்டியர்களில் என்னை தவிர மற்ற அனைவரும் காக்னிசன்ட் ஊழியர்களே !


வாலண்டியர்களில் ஒருவரான கிருத்திகா ஒரு முறை சென்னையை அடுத்துள்ள ஒரு குறிப்பிட்ட பள்ளிக்கு வாரா வாரம் சென்று பாடம் நடத்துவது குறித்து சொன்னார். நானும் பாடம் எடுப்பெதேன்றால் செல்லலாமே என ஆர்வத்துடன கேட்டேன். " மூணு மணிக்கு வேன் வரும். கிளம்பணும்" என்றார். நான் கூட மதியம் மூணு மணி என்று தான் நினைத்தேன். அப்புறம் தான் தெரிந்தது ... காலை மூணு மணி என்று! அப்போது தான் ஒவ்வொருவராய் கூட்டி கொண்டு சென்னைக்கு வெளியே உள்ள பள்ளிக்கு காலை எட்டு மணிக்குள் சென்று சேர்ந்து பாடம் எடுக்க முடியுமாம்! (நமக்கு இந்த அளவு ரிஸ்க் சரிப்படாது என புழுதிவாக்கம் பள்ளியுடன் தற்போது நான் நிறுத்தி கொண்டிருக்கிறேன் ).

காலை அனைத்து வாலண்டியர்களுக்கும் அன்றைக்கு நடத்த வேண்டிய நிகழ்வு பற்றி ஒரு சிறு briefing தருகிறார்கள். மாணவர்களுக்கு என்னென்ன உதாரணம் தரலாம். எவை பற்றி பேச கூடாது என்கிற அனுபவங்கள் பகிரப்படுகிறது. இது முடிந்ததும் ஓரிரு வாலண்டியர்கள் ஒவ்வொரு வகுப்புக்கும் செல்கிறார்கள்.


துவக்கத்தில் " World of Oppurtunities" என்கிற தலைப்பில் இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து பேசுகிறார்கள். உதாரணமாக ஒரு ஓட்டல் என்றாலே அதில் எத்தனை வித வேலைகள் உள்ளன. சர்வர், கிளீனர், காஷியர், சூப்பர்வைசர், சமைப்பவர் - (இதிலேயே பல வித speciality உண்டு ), செக்யூரிட்டி, ஓனர்.. இப்படி பல வித ஆட்கள் உள்ளனர். இது ஒவ்வொரு நிறுவனத்துக்கும் எப்படி பொருந்துகிறது என மாணவர்களை வைத்தே ஒவ்வொரு நிறுவனத்திலும் உள்ள பல வித வேலைகளை சொல்ல வைக்கிறார்கள்.உங்களுக்கு பிடித்த துறை, பிடித்த வேலை எது என நீங்கள் முடிவு செய்யுங்கள் என்பது தான் இதில் சொல்ல வருகிற கருத்து.
மாணவர்களில் சிலரிடம் வித்தியாச திறமை தென்பட்டால் அதனை கண்டு பிடித்து பாராட்டவும் தவறுவதில்லை. நமது அருள் அரசை பேச சொல்லி வாலண்டியர்கள் கேட்ட வீடியோ இதோ




அடுத்து வேலைக்கு தேவையான குணங்கள் என்னென்ன என்பது குறித்து சில வகுப்புகள் நடக்கின்றன. இதில் பல வித ரோல் பிலேகள் (Role play ) சுவாரசியமாக உள்ளது. உதாரணமாக வேலைக்கு இன்டர்வியூ எனில் என்னென்ன கேள்விகள் கேட்பார்கள் என இன்டர்வியூ நடத்தி காட்டுகிறார்கள்.அங்குள்ள மாணவர்கள் வேலைக்கு ஆட்களை எடுத்தால் எந்தெந்த வேலைக்கு யார் யாரை எடுப்பார்கள் என்பது பற்றி சிறு கேம் வைக்கிறார்கள். ஒவ்வொரு நிலையிலும் நல்ல பதில் சொல்லும் மாணவர்களுக்கு சாக்லேட் வழங்கி பாராட்டு கிடைக்கிறது.

வகுப்பில் எடுத்த ஒரு வீடியோ இதோ




அருகில் உள்ள படத்தில் இருப்பவர்கள் பற்றிய தகவல் சுவாரஸ்யம் ஆனது. கணவன்- மனைவியான இவர்கள் இருவருமே HR-க்கு படித்தவர்கள். இருவரும் சேர்ந்தே நிகழ்ச்சிக்கு வருகிறார்கள். சேவையில் இருவருக்கும்  ஈடுபாடு உள்ளது பாராட்டுக்குரியது. நிகழ்ச்சி முடிந்ததும் மாணவர்களுக்கு கலந்து கொண்டமைக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாணவர்களை வைத்தே வழங்கப்பட்டஇந்த நிகழ்வில் எடுத்த வீடியோ இதோ







அது போன வருஷம் ! து இந்த வருஷம் !!

சென்னை JA பொறுப்பாளர்களில் ஒருவரான மோகன் ராஜ் மிக மிக அருமையாகவும், விழுந்து விழுந்து சிரிக்கும் படியும் பேசுவார். காலை அவர் பேசிய போது கேமரா கை வசம் இல்லாததால் வீடியோ எடுக்க முடியவில்லை :((( இவருக்கு விசிறிகள் அதிகமாகி கொண்டே போகிறார்கள். (மோகன் ராஜ் இந்த வருட படத்தில் நடு நாயகமாக நின்று கொண்டு என் தோள் மீது  கை போட்டிருக்கிறார் பாருங்கள்..) நகைச்சுவைக்கு என்றும் தனி மரியாதை தான் !!

ஒவ்வொரு முறையும் வித்தியாச அனுபவமும் நிறைய மன நிறைவும் தரும் இந்த நிகழ்ச்சியில் நீங்களும் இயலும் போது உங்கள் ஊரிலிருந்தே கூட பங்கேற்கலாம்...http://jaindia.org/  இணைய தளத்தில் உங்களை வாலண்டியர் ஆக பதிவு செய்தால்.. ! வாலண்டியர் ஆகிறவர்கள் நிகழ்ச்சிக்கு தொடர்ந்து வர முடியாது என நினைத்தால், பல்வேறு படிப்புகள் குறித்த மாணவர்களின் சந்தேகங்களுக்கு மெயில் மூலம் விளக்கம் கூட அளிக்கலாம்.

சனிக்கிழமை காலை சற்று அதிக நேரம் தூங்கலாம் என எண்ணாமல் மாணவர்களுடன் ஆர்வமாய் தங்கள் அனுபவத்தை பகிரும் இவர்கள் நிச்சயம் வித்தியாசமானவர்கள் தான் !

15 comments:

  1. அன்பின் மோகன்குமார் - நலல்தொரு பணியினைச் செய்து வரும் JACP க்கு நல்வாழ்த்துகள் - அதில் பங்கெடுக்கும் அனைத்துத் தன்னார்வலர்களுக்கும் ( மோகன் குமார் உட்பட ) பார்ர்ட்டுகளும் நன்றியும். பகிர்வினிற்கு நன்றி மோகன் குமார் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. இந்தியர்கள் குறிப்பாக நடுத்தர தமிழர்களின் சொத்தே கல்விதான் என யாரோ சொல்லி கேட்டிருக்கிறேன். அதிலும் கிராமப்புற/நகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ/மாணவியருக்கு அவர்கள் வாழ்வில் முன்னேற
    நல் வழிகாட்டியாய் தொண்டாற்றுவது என்பது மிகவும் உயர்வான ஒரு பணி. உங்கள் பணி மேலும் சிறக்க நல்வாழ்த்துக்கள்.

    வெளியில் இருந்தாலும் இம்மாதிரியான விசயங்களில் என்னால் ஏதும் சிறிதளவு செய்வதற்கு வாய்ப்பிருந்தால் தெரிவிக்கவும். முடிந்தால் செய்கிறேன்.

    ReplyDelete
  3. அருமையான பதிவு மோகன்.
    எங்கக்கா என்னாமா பேசுது!!! :-)

    ReplyDelete
  4. வித்தியாசமான பதிவும் பகிர்வும். நன்றி. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. பாராட்டப் பட வேண்டிய சேவை.

    ReplyDelete
  6. நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. மிக நல்ல செயல்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும் சார்.

    ******************

    //அது போன வருஷம் ! இது இந்த வருஷம் !!//

    மிகப் பெரிய முன்னேற்றம் தெரிகிறது சார்.

    ReplyDelete
  8. இதிலெல்லாம் பங்கெடுத்துக்கவாவது இந்தியா/சென்னையில இருக்கணும்போல இருக்கு. வாழ்த்துகள் உங்கள் சேவை மனப்பான்மைக்கு.

    ReplyDelete
  9. very nice effort. also your effort of introducing their gud work among the readers.best wishes.

    ReplyDelete
  10. /அது போன வருஷம் ! இது இந்த வருஷம் !!/

    உங்கள் குழுவுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். இந்த சேவை தொடர என்றும் இறையருள் துணையிருக்கட்டும். அருளின் பேச்சு நன்று.

    ReplyDelete
  11. பதிவர்களுக்காக- பதிவரால்- பதிவர் தென்றல் மாத இதழ். மேலும் விவரங்களுக்கு என் வலைத்தளம் வருக...

    ReplyDelete
  12. பங்கெடுக்கும் அனைத்துத் தன்னார்வலர்களுக்கும் பாராட்டுகளும் நன்றியும். பகிர்விற்கு நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. தங்கள் பதிவில் கமலா டீச்சர் பற்றி படித்தேன்.

    எங்கள் ஆசிரியையும் கமலா டீச்சர்தான். வீடும் பள்ளியின் அருகேதான். அவர்கள் மகன் பெயரும் மோகன்குமார் தான்.

    ReplyDelete
  14. மிகவும் அருமையான தொண்டு.வாழ்த்துக்கள் மோகன் குமார்.

    ReplyDelete
  15. அருமையான பதிவு.
    மனப்பூர்வ வாழ்த்துகள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...