Wednesday, August 17, 2011

காஞ்சனா முனி- 2: எப்படி சூப்பர் ஹிட் ஆனது?




இந்த படம் ஓடாது என்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தன.
பொதுவாகவே இரண்டாம் பாக படங்கள் பெரும் வெற்றி பெறுவதில்லை எனபது ஒன்று. பேய் படங்கள் பல (சமீபத்து ஆனந்த புரத்து வீடு உட்பட) தோல்வியை தழுவின என்பது அடுத்த காரணம். இதன் ஹீரோயின் லட்சுமி ராய் நடித்து வெற்றி பெற்ற படங்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணும். கடைசியாக பெண்கள் பெயரில் வருகிற தமிழ் படங்களில் பத்தில் ஒன்று தான் ஓடும். மீதம் ஒன்பது படம் ஓடாது (சீரியல்கள் மட்டும் பெண்கள் பெயரில் தான்)

இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்க அவற்றை தவிர்த்து இந்த படம் எப்படி வென்றது ... இதோ ஒரு பார்வை.

பேய் பழி வாங்கும் வழக்கமான கதை என்பது கடைசி அரை மணியில் தான் நமக்கு புரிகிறது. அது வரை (குறிப்பாக இடைவேளைக்கு முன் வரை) கதை எதை நோக்கி நகர்கிறது என்பது புரியாமலும், அதே நேரம் சற்று ஆர்வத்துடனும் பார்க்க வைத்துள்ளனர்.

பொதுவாய் நான் பேய் படங்களை முழுவதுமாக தவிர்த்து விடுவேன். காசு குடுத்து விட்டு பயந்துட்டு வரணுமா என்பது என் எண்ணம். ஆனால் இப்படி நினைக்கும் என்னை போன்றோரே ரசிக்கும் படி பெரும்பகுதி படம் இருந்தது என்பது தான் உண்மை. குறிப்பாய் கோவை சரளா & தேவதர்ஷினி அடிக்கிற லூட்டி. அடடா ! அட்டகாசம். படத்தின் வெற்றிக்கு மிக மிக முக்கிய காரணம் இவர்களே. பெண்கள் வருகை இதனால் அதிகரிக்கிறது என்பதோடு ஆண்களும் ரசிக்கும் படி உள்ளது இவர்கள் காமெடி. அதிலும் வீட்டில் பேய் உள்ளதா என தெரிந்து கொள்ள இவர்கள் எடுக்கும் டெஸ்டுகளும் அதற்கு இருவரின் ரீ ஆக்ஷனும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இது போன்ற மாமியார்- மருமகள் நிஜத்தில் பார்க்க முடியாது என்றாலும், படத்தில் நிச்சயம் ரசிக்கலாம். கோவை சரளா டயலாக் டெலிவரி செம! பல வசனங்கள் நிறுத்தி, இழுத்து இவர் பேசும் போது சிரிப்பு பிய்த்து கொண்டு போகிறது.

கதை மிக நேராக வேறு எந்த விஷயத்தையும் தொடாமல், டைவர்ட் ஆகாமல் செல்கிறது. ராகவா லாரன்ஸ் பயம், ஜொள்ளு கலந்த அந்த பாத்திரத்துக்கு சரியாக பொருந்துகிறார்.

சரத் குமாரை ஒரு சர்பிரைஸ் ஆக (படம் முடியும் வரை வெளியே தெரியாமல்) உபயோகித்துள்ளனர். சாதாரண மக்களிடம் சரத் குமாருக்கு இன்னும் கூட ஒரு ரீச் இருப்பது புரிகிறது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒரு ஆழமான விஷயத்தை தொடுகிறது. சமீபத்தில் திருநங்கைகள் சம்பந்தமாக சில படங்கள் வந்து எதுவும் சரியாக ஓடவில்லை. இந்த படம் சொல்லும் ஆதாரமான விஷயம் திருநங்கைகள் பற்றியது. படம் செம ஹிட்.

பயமுறுத்தும் அல்லது பயமுறுத்த முயற்சிக்கும் காட்சிகளை இரவிலும், பகலில் ரொமான்ஸ் அல்லது காமெடி காட்சிகள் என தெளிவாக பிரித்து விட்டார் இயக்குனர். திகில் காட்சிகளிலும் இருக்கும் காமெடி தான் நம்மை அவற்றை ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவு, எடிட்டிங் இவை பற்றியெல்லாம் கவலை படாது, தான் யாருக்காக படம் எடுக்கிறோம் என தீர்மானமாக உள்ளார். படம் பெரும்பாலும் ஒரு பங்களாவில் நடக்கிறது. சில காட்சிகள் ஒரு கிரவுண்டில் ..மிஞ்சி போனால் பாடல்களுக்கு ஊட்டி!  

மிக சிக்கனமான பட்ஜெட்டில் எடுத்த இந்த படம் தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவருக்கும் எக்க சக்கமாய் பணம் சம்பாதித்து கொண்டிருப்பதாக சமீபத்து சென்னை பதிவர் சந்திப்பில் பேசி கொண்டனர். (அது தான் நான் இந்த படம் பார்க்க காரணமே) பதிவர்களில் பலர் படம் பார்த்திருந்தனர். அவரவரும் படம் எப்படி ஓடுகிறது என தங்கள் version பகிர்ந்து கொண்டனர். 

இனி படத்தில் ரசிக்க முடியாத சில விஷயங்கள்:

ராகவா லாரன்ஸ் அம்மா கோவை சரளா இடுப்பில் ஏறி கொள்வது சிரிக்க வைத்தாலும், அண்ணி இடுப்பில் ஏறுவதேல்லாம் டூ மச்.

ஹீரோயின் இன்றியே இந்த படம் எடுத்திருக்கலாம் எனினும் Commercial compulsion -க்காக லட்சுமி ராய். இன்னும் சற்று ஸ்கோப் உள்ள பாத்திரமாகவும், இன்னும் நல்ல ஹீரோயினாகவும் இருந்திருக்கலாம்.

கடைசி பாட்டு மற்றும் சண்டை போர். பேய் நரசிம்மர் கோயில் உள்ளே எல்லாம் புகுந்து பின் வில்லனை கொல்வது 
ஹிஹி.

திருஷ்டி பரிகாரம் போல் பாடல்கள். திரை அரங்கம் என்றால் சிகரெட் பிடிக்கவும், சி டியில் பார்த்தால் forward செய்யவும் வைக்கின்றன .

மீண்டும் படம் ஓடுகிற விஷயத்துக்கு வருவோம். வெளியீட்டின் போது தந்த சரியான மார்கெட்டிங் 
படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்! டிவி, பேப்பர் இன்ன பிற மீடியாக்களில் ராம. நாராயணன் தந்த விளம்பரங்கள் படத்தை நன்கு பிரபலமாக்கி விட்டது. குறிப்பாக குட்டி பசங்கள் படம் பார்க்க காட்டும் ஆர்வமும், பெண்கள் கூட்டம் திரை அரங்கிற்கு வந்ததும் படத்தை வெற்றி பெற வைத்து விட்டது. 

தமிழ் திரை உலகம் இன்றைக்கு இருக்கும் நிலையில் இத்தகைய வெற்றிகள் குளுக்கோஸ் ஏற்றுவது போல் உள்ளது.

காஞ்சனா: நன்றாக சிரிக்க வைக்கிறது இந்த முனி !

16 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. மார்க்கெட்டிங்கில் பிச்சு உத‌றுறாங்க‌...ச‌ந்தேக‌மேயில்லாம‌ல், அருந்த‌தீக்கு அப்புற‌ம் இராம‌.நாராய‌ண‌னுக்கு இது மீண்டும் ஒரு வெற்றி ப‌ட‌ம்தான்

    ReplyDelete
  3. Unmaiyilaye kuttizellam rombave enjoy pandtanga indha padathai.....

    ReplyDelete
  4. விளம்பரங்கள் நிறைய வருகின்றன... அதிலேயே நிறைய காட்சிகள் வந்துவிட்டன என்று கூடத் தோன்றுகிறது. பார்க்கலாம்... சீக்கிரமே உலகத் தொலைக்காட்சியில் முதல் முறையாக.... காட்டும்போது.

    [தில்லியில் பிரச்சனையே படம் பார்ப்பது தான். வெள்ளியிலிருந்து அடுத்த வியாழன் வரை ஒரு படம் ஓடினாலே பெரிய விஷயம். அதற்கும் வெகு தூரம் செல்ல வேண்டும்....] அதனால் பெரும்பாலும் படங்கள் பார்ப்பதேயில்லை... :)

    ReplyDelete
  5. //டிவி, பேப்பர் இன்ன பிற மீடியாக்களில் ராம. நாராயணன் தந்த விளம்பரங்கள் படத்தை நன்கு பிரபலமாக்கி விட்டது.//

    அப்புறம் இப்ப மோகன் சார் (இலவசமாக) தருகின்ற விளம்பரமும் ஒரு முக்கிய காரணம்...ஹி ஹி

    ReplyDelete
  6. முதலில் வந்த ஒன்றிரண்டு விமர்சனப் பதிவுகளும் நல்ல காமெடி படம் எனச் சொன்னதால், நம்ம்ம்ம்ப்பி படத்தைப் பார்க்கத் தொடங்கி, அலறி... நடுங்கி... படத்தை நிறுத்தி.. திட்டு வாங்கி..

    ஆனா, இப்பவும் எல்லாரும் படம் நல்லாருக்குனு சொல்றீங்க.. எனக்குத்தான் படம் பார்க்கத் தைரியம் இல்ல போல.. :-(((((

    ReplyDelete
  7. நன்றாக விமர்சனம் செய்து இருக்கீங்க.

    ReplyDelete
  8. நல்ல விமர்சனம். படம் பார்க்கிற அளவு எனக்கு தைரியம் இல்லை.

    ReplyDelete
  9. நானும் படம் பார்த்தேன்.... :) மிகவும் பிடித்திருந்தது. சுவாரசியமாக.. இருக்கிறது படம் :)

    ReplyDelete
  10. இது ஒரு எதிர் பாரத ஓட்டம்... லாரன்ஸ் பிரபுதேவா மாதிரி இல்லை.. நிஜ சரம்க்கு உள்ளவர்.. நீங்க நம்ம ப்லோக்கு வந்து பாருங்களே.. டீ காப்பி எல்லாம் சூடா இருக்கும்,,,, ஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா? - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல் உங்க ஓட்டும் கமெண்டும் அவசியம் பாஸ்...

    ReplyDelete
  11. கோவை சரளாவின் நடிப்பு இந்தப் படத்துக்குப் பெரிய ப்ளஸ். சரத்தைத்தான் வீணடித்து விட்டதாகத் தோன்றியது.

    ReplyDelete
  12. Ya . . Really jolly movie . .

    ReplyDelete
  13. Full length comedy movie

    ReplyDelete
  14. பின்னூட்டமிட்ட. தமிழ் மணம் மற்றும் இன்ட்லியில் வாக்களித்த நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  15. குழந்தைகளுக்கு மிக பிடித்து இருக்கிறது.முனி-3 பார்க்க காத்து இருக்கிறார்கள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...