Monday, August 15, 2011

வானவில்: சுதந்திர தின டிவி சிறப்பு நிகழ்ச்சிகள் -ஓர் பார்வை

பிறந்த நாள்

வழக்கம் போல் இந்த வருட பிறந்த நாளும் இனிமையாக கழிந்தது. சிறு வயது முதலே எனது பிறந்த நாளை வீட்டில் விமர்சையாக கொண்டாடுவார்கள். பெரிய அண்ணன் கலர் பேப்பர்களை வாங்கி வெவ்வேறு சைசில் நறுக்கி வீடு முழுதும் ஓட்டுவார். அதில் பல அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து எழுதியது போல் அவரே எழுதுவார். அந்த சின்ன வயதில் ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்.

இந்த ஆண்டு ரெண்டு கேக் வெட்டினேன் ! அலுவலகத்தில் ஒன்று. வீட்டில் ரெண்டாவது !! ஆபிசில் சரியான வேலை எனவே வீட்டுக்கு வரவே இரவு ஒன்பதரை ஆகி விட்டது. அப்போது சர்பிரைஸ் ஆக கேக் வெட்ட வைத்து, பலூனுக்குள் என்னெவோ போட்டு வெடிக்க வைத்து அசத்தி விட்டனர். என் பெண் சின்ன வயதிலிருந்தே தானாக தயார் செய்த க்ரீடிங்க்ஸ் தருவாள். கூடவே இந்த முறை ஒரு ஆர்ட் வொர்க்கும் தந்தாள்.

நண்பர்களின் வாழ்த்துக்கும், அன்பிற்கும் நன்றி !

சுதந்திர தின டிவி நிகழ்ச்சிகள்: ஒரு பார்வை

இணையத்தில் விசேஷ தினங்களில் டிவி சிறப்பு நிகழ்ச்சிகளை விடாமல் பார்த்து விட்டு, அது பற்றி எழுதும் ஒரே பதிவு வீடுதிரும்பல் என்கிற உங்களின் எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் விதத்தில் இதோ ஒரு சிறு அலசல்..

கலைஞரில் லியோனி பட்டிமன்றம் ஓரளவு சிரிக்க வைத்தது. இனியவன் பேசும்போது வசந்த மாளிகை பாடல் வரியான "அன்னத்தை தொட்ட கைகளினால் மது கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்" என்பதை மேற்கோள் காட்டி, இதன் அர்த்தம் " சாப்பிட்ட பின் சரக்கடிக்க கூடாது" என்பதே என்று வில்லங்க விளக்கம் குடுத்தார். லியோனி கிராமத்து டென்ட் கொட்டகையில் மணல் கொட்டி படம் பார்க்கும் அனுபவத்தை சொன்னபோது மலரும் நினைவு !

சாலமன் பாப்பையா பட்டி மன்றத்தில் மனிதாபினம் வளர்கிறது என்று பேசிய பாரதி பாஸ்கர் பின்னி எடுத்தார். மிக உணர்ச்சி பூர்வமாக இந்தியாவில் மட்டுமே என்னென்ன விதத்தில் கருணை மிகுந்த மனிதர்களை பார்க்க முடியும் என்று பேசி நெகிழ வைத்தார். (சாலமன் பாப்பையா பட்டி மன்றங்களில் ராஜா எப்போதும் தோற்கும் அணியிலேயே இருப்பார். போலவே பாரதி பாஸ்கர் எப்போதும் ஜெயிக்கும் அணிதான். கவனித்துள்ளீர்களா?)

பல்வேறு படங்கள் போடப்பட்டன. ஜெயா டிவியில் சரத்குமார், நயன்தாரா நடித்த "தலைமகனும்" சன்னில் போட்ட "வாடா" படமும் எது மோசமான படம் என்பதற்கு போட்டியிட்டன. கலைஞரில் ரெண்டாவது முறையாக மதராச பட்டினமும் சன்னில் இருபதாவது முறையாக கில்லியும் போட்ட போது, விஜய் இது வரை காண்பிக்காத " யுத்தம் செய்" ஒளி பரப்பி, அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தது.

விஜய்யின் சுதந்திர தின சிறப்பு நீயா நானா செம போர். தமிழில் மட்டுமே பேசுவோர், அதற்கு நேர் எதிரான மற்றொரு பிரிவினர். நிகழ்ச்சி எங்குமே சிறிதும் சுவாரஸ்யம் இல்லை.

அனுஷ்கா பேட்டி கலைஞரில் பார்க்க முடியாத படி வேறு எதோ வேலை. நீங்க யாராவது பார்த்தீங்களா? தலைவி எப்படி இருந்தாங்க? என்ன சொன்னாங்க? :)))

அனைத்து சேனல்களும் சொல்லி வைத்த மாதிரி தெய்வ திருமகள் படம் குறித்து விக்ரமை அழைத்து பேசியது. அதுவும் இரவு பத்து மணிக்கு பல சேனல்களில் விக்ரம் பேட்டி தான். விஜய்யில் மட்டும் "நிலா" (பேபி சாரா) வந்தது.

சன் கில்லி, வாடா, வானம் என ஒரே நாளில் மூன்று படங்கள் போட்டு கே டிவி போல் இருந்தது. கலைஞரும் மதராச பட்டினம், தூங்கா நகரம்,வாரணம் ஆயிரம் என ஒரே பட மயம் தான். ஆட்சிக்கு வந்த பின்னும் ஜெயாவில் நல்ல படங்கள் வந்த பாடில்லை. இருப்பதில் விஜய் சினிமா மட்டுமின்றி பல நிகழ்ச்சிகளும் கலந்து காண்பித்ததால் பரவாயில்லை என சொல்ல வேண்டும்.

QUOTE CORNER

A hero fears nothing, complains of nothing and never gives away.

பிடித்த பாட்டு - முன்பே வா என் அன்பே வா

கடந்த சில ஆண்டுகளாக எனது ரிங் டோன் இந்த பாட்டு தான். மாற்றவே மனம் வரலை. பாடிய இரு குரல்களுமே (நரேஷ் ஐயர் & ஸ்ரேயா கோஷல்) எனக்கு ரொம்ப, ரொம்ப favourite. படமாக்கிய விதமும் அருமை. பூக்கள், மழை, ஏரி, மலை, பசுமை, கல்லூரி வளாகம் என இந்த பாடலின் Background ..அனைத்துமே ரசிக்கும் படி இருக்கும். அதுவும் கடைசியில் வருகிற ஸ்ரேயா கோஷலின் ஹம்மிங்.. சூப்பர்ப் .. சான்சே இல்லை! உங்களில் பலருக்கும் இந்த பாட்டு பிடிக்கும் என்றே நினைக்கிறேன்நாட்டி கார்னர்

கார வகைகளில் "நீட்ட குச்சி" போன்ற ஒரு காரம் விற்கப்படும் தெரியுமா? மரவள்ளிகிழங்கு சிப்ஸ் தான் இது! மிக சின்ன குச்சி போல் இருக்கும். இதை நாட்டி விரும்பி சாப்பிடும். ஒவ்வொரு சிறு குச்சி தந்தால், அதை பிடித்தவாறு சாப்பிடும் அழகு இருக்கே !  "கருக்..முருக்" என சத்தம் வருகிற மாதிரி சாப்பிடும் நாட்டி. அநேகமாய் எப்போது குடுத்தாலும் மறுக்கமால் இதை சாப்பிடும். தன் இரு விரல்களுக்கு இடையே அதனை பிடித்து கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவதை பார்த்தால், மனிதர்கள் சிகரெட் பிடிப்பது தான் நமக்கு ஞாபகம் வரும் !!

அய்யாசாமியும் மாருதி காரும்

அய்யாசாமிக்கு கார் ஓட்ட வரு......ம்.... ஆனா வரா..........து..!! (அவர் கார் ஓட்டும் லட்சணத்தை இதுக்கு மேல் தெளிவா சொல்ல முடியாது). ஒரு காலத்தில் தத்தக்கு பித்தக்குன்னு கார் ஓட்டிக்கிட்டுருந்தார். ஒரு ஞாயிறு இரவு குடும்பத்துடன் வரும்போது வண்டி பிரேக் டவுன் ஆகி நடு காட்டில் நிற்க வேண்டியதா ஆகிடுச்சு. அன்னிக்கு வீட்டுக்கு வருவதற்குள் "போதும் போதும்"னு ஆகி, அதிலிருந்து கார் எடுக்காமலே நிறுத்தி வச்சிருந்தார். பின் மாச கணக்கில் கார் சும்மா இருப்பதை பார்த்து ரத்த கண்ணீர் வர, காரை குடுத்துட்டார் (ஆம் விக்கலை. குடுத்துட்டார்)

19 comments:

 1. // காரை குடுத்துட்டார் (ஆம் விக்கலை. குடுத்துட்டார்) //

  காசு கொடுத்து வாங்கியிருந்தா கொடுத்திருக்கபாட்டீங்க....

  ReplyDelete
 2. சாலமன் பாப்பையா பட்டி மன்றத்தில் ராஜா அவர்கள் ஆம்புலன்ஸ்க்கு எத்தனை பேர்கள் வழிவிடுகிறார்கள்? என்று கேட்ட போது பயங்கர கைதட்டல்.

  ReplyDelete
 3. மகளின் கைவண்ணம் அழகு.

  ReplyDelete
 4. எப்போதும் பாரதி பாஸ்கர் பேசிய பிறகுதானே ராஜா வருவார்..? இன்றுதான் முன்னாலேயே வந்து விட்டாரோ..?

  ReplyDelete
 5. very good art work by ur girlie.
  continue updating naughty .

  ReplyDelete
 6. மிக சிறப்பான பார்வை. அனைத்தும் நன்று.


  //ஒரு ஞாயிறு இரவு குடும்பத்துடன் வரும்போது வண்டி பிரேக் டவுன் ஆகி நடு காட்டில் நிற்க வேண்டியதா ஆகிடுச்சு//  கூடிய விரைவில் புதிய கார் வாங்கி,மகிழ்சியாக பயணத்தைத் தொடரவும். அது குறித்து ஒரு பதிவும் போடுவீர்கள் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 7. மகள் செய்த க்ரீட்டிங்க்ஸ் அழகு. வாழ்த்துகள் - மகளுக்கு.

  //டிவி சிறப்பு நிகழ்ச்சிகளை விடாமல் பார்த்து விட்டு//
  இதுக்காகவே உங்களுக்கு “பொறுமைத் திலகம்” அவார்ட் கொடுக்கணும்!!

  //நாட்டி விரும்பி சாப்பிடும்//
  எரிக்காதா? (காரம்)

  //காரை குடுத்துட்டார்//
  இந்த விஷயத்தைக் காரைக் குடுக்க முன்னாடி சொல்லிருக்கலாம்ல? சே.. வட போச்சே.. :-)))))

  ReplyDelete
 8. சுதந்திர தின வாழ்த்துக்கள்!!!!!!!!


  இந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க
  http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

  ReplyDelete
 9. கொஞ்ச‌ம் தாம‌தித்தாலும்....பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக‌ள் மோக‌ன் :)

  இது போன்ற‌ நாட்க‌ளில் டிவி பார்ப்ப‌தை விட்டு ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாகிற‌து

  ஏழாம் அறிவு வ‌ரும்வ‌ரை விஜ‌ய் டிவி தெய்வ‌த்திரும‌க‌ளை விடாது போல‌!

  //தலைவி எப்படி இருந்தாங்க? என்ன சொன்னாங்க?//

  ஆங்...அப்புற‌ம்? வீட்டுல‌ ப்ளாக் ப‌டிக்க‌ற‌துல்ல‌ங்க‌ற‌ தைரிய‌த்துல‌ எழுத‌றீங்க‌. எல்லா நாளும் ஒரே மாதிரியிருக்காது மோக‌ன், சொல்ற‌து சொல்லிட்டேன் ;)))

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. உங்க மகளின் வாழ்த்து அட்டை அழகாக இருக்கு.வாழ்த்துக்கள்.
  தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றிய பார்வை சுவாரசியமா இருக்கு.

  ReplyDelete
 12. //(சாலமன் பாப்பையா பட்டி மன்றங்களில் ராஜா எப்போதும் தோற்கும் அணியிலேயே இருப்பார். போலவே பாரதி பாஸ்கர் எப்போதும் ஜெயிக்கும் அணிதான். கவனித்துள்ளீர்களா?)//

  நேற்று இதையே தான் நானும் யோசித்துக் கொண்டு இருந்தேன் அப்பட்டி மன்றத்தின் போது. தில்லியில் வந்திருந்த போதும் அதே தோற்கும் அணிதான்.

  உங்கள் மகளின் கைவண்ணம் அழகு...

  தொடரட்டும் வானவில். வண்ணம் பரவட்டும்...

  ReplyDelete
 13. Anonymous10:23:00 AM

  முதலில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

  அப்புறம் நிகழ்ச்சிகளைப்பற்றின ஒரு மினிஅலசல் நன்றாகவே இருந்தது..

  யுத்தம் செய் படம் பார்க்கும்போது 12 டூ 1 கரண்ட் கட்... சுதந்திர தினம்னு கூட விடாம கடமையை செய்தாங்க..

  அப்புறம் வானம் படம் பார்த்தேன்.. படம் நல்லாத்தான் இருக்குது.... ஏன் ஓடலைன்னு ஆச்சரியமா இருக்கு.....

  ReplyDelete
 14. vanavil is excellent.
  i have had 8 lovebirds. but one day i forgot to close the door. paranthupoiduchu. that i was very sad.

  i also noticed barathi always in winner team. pathavachudathinga.

  ReplyDelete
 15. //சன் கில்லி, வாடா, வானம் என ஒரே நாளில் மூன்று படங்கள் போட்டு கே டிவி போல் இருந்தது. கலைஞரும் மதராச பட்டினம், தூங்கா நகரம்,வாரணம் ஆயிரம் என ஒரே பட மயம் தான்.//

  நல்லாத்தான் சுதந்திரத்தை கொண்டாடுகிறார்கள். ஏதாவது ஒரு டி.வி.யிலாவது சுதந்திரத்தை பற்றி ஒரு நிகழ்ச்சி இருந்ததா இல்லையா?

  ReplyDelete
 16. மாதவா: கார் காசு குடுத்து தான் வாங்கினார் அய்யாசாமி. பின்னே மாமனாரா வாங்கி தருவார்?
  **
  ஜோதிஜி: ஆம் ஆம்புலன்ஸ் பற்றி ராஜா சரியா பேசினார்.
  **
  நன்றி ராமலட்சுமி. மகளிடம் அனைவரின் பாராட்டை சொன்னேன். மகிழ்ந்தாள்
  **
  ஸ்ரீராம்: அப்படியா? நான் கவனித்ததில்லை.
  **
  Thanks Dr. Vadivukkarasi. Had conveyed it to her. Glad that you like what is written about Naughty.

  ReplyDelete
 17. நன்றி அமைதி அப்பா ..தங்களின் அன்புக்கும், நல்லெண்ணத்துக்கும்
  **
  ஹுசைனம்மா
  //இதுக்காகவே உங்களுக்கு “பொறுமைத் திலகம்” அவார்ட் கொடுக்கணும்!! //
  ஹி ஹி
  **
  நன்றி கார்த்தி
  **
  ரகு: நன்றி . அவங்க கிட்டேயே சொல்லுவேன். அடிக்கடி தலைவி மாறுவதால் ஒன்னும் சொல்வதில்லை. ஒரே ஆள் இருந்தால் தான் பிரச்சனை
  **
  நன்றி ராம்வி. பெண்ணிடம் சொல்கிறேன்
  **
  நன்றி வெங்கட். வானவில் தொடரும்

  ReplyDelete
 18. ஷீ-நிசி :விரிவான கருத்துக்கு நன்றி. அட அதே படம் நாங்க பார்த்தப்போ கூட கரன்ட் கட் !!
  **
  Maya: Thanks for your comment. Felt bad on knowing about your love birds. Particularly when they escape, they get caught with some other birds like crow, which eat them immediately.

  **
  ஆதி மனிதன்: லீவு நாள் என காலை நாம் சற்று தாமதமாக எழுவோம்,. அதற்குள் சுதந்திர தின பாடல்கள் அல்லது வேறு நிகழ்ச்சி முடிந்திருக்கும்

  ReplyDelete
 19. மகளின் கைவண்ணம் அழகு. அருமை. பாராட்டுக்கள்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...