Sunday, June 23, 2013

தில்லு முல்லு : ஒரிஜினல் Vs நகல் - விமர்சனம்

ரிஜினல் "தில்லு முல்லு"வை மறக்கவே முடியாது. கல்யாணத்திற்கு சற்று முன்பு ஒரு சின்ன "தில்லு முல்லு" செய்திருந்தேன். விஷயம் இரண்டு வீட்டுக்கும் தெரியாது.. ஹவுஸ் பாஸிடம் மட்டும் முன்பே சொல்லியிருந்தேன். திருமணமான அன்று இரவு 10 மணிக்கு - சன் டிவியில் போட்ட படம் - தில்லு முல்லு ! கீழே பெரிய சொந்த காரர் கூட்டமே உட்கார்ந்து படம் பார்த்து கொண்டிருந்தது ! நானும் அரை மணி நேரம் அமர்ந்து பார்த்தேன். உள்ளுக்குள் நமட்டு சிரிப்பு " நம்ம தில்லு முல்லு வேலை தெரிஞ்சால் கொன்னு புடுவானுகளே !"

அதென்ன தில்லு முல்லு என மண்டையை உடைத்து கொள்ள வேண்டாம்... நிச்சயம் ஆன போது வேலையில் இருந்த நான் - திருமணத்திற்கு சற்று முன்பு வேலையை ரிசைன் செய்திருந்தேன். வேலையில் இல்லாமல் திருமணம் செய்து கொண்ட உண்மை தான் இரு குடும்பத்துக்கும் தெரியாது (மனைவி தவிர)

புதிய தில்லு முல்லு விற்கு வருவோம்



மூலக்கதையை அப்படியே எடுத்து கொண்டு  திரைக்கதையை முழுவதும் மாற்றி விட்டனர். அதுவே படத்தை காப்பாற்றி விட்டது. பழைய படத்திலிருந்து அப்படியே எடுத்து உபயோகிக்கும் சில காட்சிகள் - நமக்கு சிரிப்பை வரவழைக்காமல் Flat - ஆக இருக்கின்றன.

உதாரணத்துக்கு ஹீரோவின் தம்பி - முதல் முறை - பாஸ் வீட்டுக்கு வரும்போது அவர் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச " என்னடா வேலைக்காரா" என்று கூப்பிடும் காட்சியை இங்கு பார்க்கும்போது சின்ன சிரிப்பு கூட வர மாட்டேன் என்கிறது ! பழைய காட்சியை அப்படியே சுட்ட பல இடத்திலும் இதே நிலை தான் !



ஆனால் 90 % திரைக்கதை மாற்றப்பட்டு, சிவாவிற்கு ஏற்றார் போல் செய்துள்ளதால், பல இடங்கள் சிரிப்பு அள்ளுது !

ரஜினி - தேங்காய் மறந்து விட்டு பார்த்தால் சிவா- பிரகாஷ் ராஜ் கெமிஸ்ட்ரி போக போக செமையாய் பிக் அப் ஆகிடுது (இந்த படத்தில் ஹீரோயினுடன் அல்ல - பிரகாஷ் ராஜுடன் உள்ள கெமிஸ்ட்ரி தானே ரொம்ப முக்கியம்?)

ரெட்டை வேட ஹீரோக்களை ஆராய ஒரு டிடெக்டிவ் வருகிறார்.. அவர் பெயர் - கணேஷ் வசந்த் ! ஹோட்டலில் பிரகாஷ் ராஜ் கணக்கில் கணேஷ் வசந்த் - சாப்பிட்டு விட்டு தன் குடும்பத்துக்கு பார்சல் வாங்கி செல்வதை காண - நல்லவேளை சுஜாதா உயிருடன் இல்லை !



புது பாடல்கள் எதுவும் சற்றும் கவராமல் போகிறது. ரீ மேக் செய்த 2 பாட்டுமே ஓகே ! இசை ஒரு சொதப்பல் என்றால் - மிகபெரிய சொதப்பல் ஹீரோயின் தான் ! வாயில் நுழையாத பெயர் கொண்ட அந்த வெள்ளை பெண்ணை எப்படி இப்பாத்திரதுக்கு தேர்ந்தெடுத்தனரோ ? உருப்படியான ஹீரோயின் இருந்தால் படம் இன்னும் நாலு நாள் கூட ஓடிருக்கும் ! (இப்ப ஹிட் படமே 3 வாரம் தானே ஓடுது !)

மாதவி - என்ன ஒரு அழகு ! நடிப்பில் முக்கால் வாசி வேலையை அந்த அழகான கண்களே செய்து விடும் !



பதிவராய் இருந்து தொலைப்பதால் - படம் பார்த்து விமர்சனம் எழுதணும் என்ற கடமை உணர்ச்சியில் - லாஜிக் குறைகள் தெரிந்து கொண்டே இருக்கின்றன..

** கராத்தே மாஸ்டர் - ஜிம் போனாலும், ஹோட்டல் போனாலும் கராத்தே டிரெஸில் மட்டும் தான் போவாரா? (நல்லவேளை துபாய்- க்கு மப்டியில் போனார் )

** சாராயம் விற்று (செமையாய்) சம்பாதிக்கும் கோவை சரளா - வேலை காரியாய் இருக்க வேண்டிய அவசியம் என்ன ?

** மார்கெட்டிங் மேனேஜரை " பேன்க் போய் - 7 லட்சம் பணம் எடுத்து வா" என்று சொல்ல, அவர் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்டா என்ன ?

சரி விடுங்க !

மெயின் படத்தில் ஹீரோவின் தில்லு முல்லு வேலை தெரிந்து அடுத்த 5 நிமிடத்தில் படம் முடிஞ்சிடும் இங்கு அப்ப தான் சந்தானம் என்ட்ரி ! அடுத்த 10 நிமிஷத்துக்கு சந்தானம் - சந்தானமாகவே கலக்குகிறார் !

தில்லு முல்லு - ஜாலியா ஒரு முறை பார்த்து சிரிங்க சார் !
*********
அண்மை பதிவு: உணவகம் அறிமுகம் - திண்டுக்கல் வேலு பிரியாணி

13 comments:

  1. உண்மைய உங்க பாஸ்கிட்ட சொல்லிட்டீங்களே .அதனால் அத தில்லுமுல்லுன்னு ஒத்துக்க முடியாது.
    பழையதோடு ஒப்பிட்டால் ரீமேக்குகள் சொதப்பலாகத் தான் தெரியும்.

    ReplyDelete
  2. ரஜினியோடு சிவாவை ஒப்பிடாமல் பார்த்தால் படம் நன்று தான்

    ReplyDelete
    Replies
    1. பிரேம் : ஆம் நன்றி

      Delete
  3. Anonymous12:08:00 PM

    தில்லு முல்லாக பார்க்காமல் புதியதோர் படமாய் காணின் ரசிக்கலாம்..

    ReplyDelete
    Replies
    1. நிரஞ்சன் தம்பி : எஸ் சார்

      Delete
  4. தகவல் பிழை: ஒரிஜினல் தில்லு முல்லு பாலச்சந்தர் படம் இல்லை; ரிஷிகேஷ் முகர்ஜியின் "கோல்மால்". ஒரிஜினல் பார்த்திருந்த எனக்கு பாலச்சந்தர் படமே வடிகஞ்சியாகத்தான் தெரிந்தது. "தில்லு முல்லு (2013)" பற்றி நானும் சப்பைக்கட்டு விமர்சனமே எழுதி இருந்தேன், அது கேபிள் சங்கர் முகதாட்சண்யத்திற்காக. அவர் கதைவசனம் எழுதிய 'ஈகோ' வேந்தர் மூவீஸின் அடுத்த படம். உங்கள் விமர்சனமும் அதே லாஜிக்தானா, அல்லது...?

    ReplyDelete
  5. நிஜமான ஒரிஜினல் - கோல்மால் அமோல் பலேகர் நடித்தது. மிகவும் அருமையாக செய்திருப்பார்.

    தமிழ் தில்லுமுல்லு [ரஜினி] நடித்ததும் பிடித்திருந்தது. புதிய தில்லு முல்லு பார்க்கவில்லை! பார்க்கணும் இங்கே வெளியிட்டால்.

    ReplyDelete
    Replies
    1. விரைவில் டிவி யில் வந்துடும் வெங்கட்

      Delete
  6. Unga thillu mullu kadhai melum virivaaga yezhudhunga pls. More than film story, your story is interesting. Ananthanaryanan

    ReplyDelete
    Replies
    1. அனந்து : நன்றி. எப்பவாவது எழுதுறேன்

      Delete
  7. புதிய தில்லு முல்லுவைப் பார்த்தால் பழசும், அமோல் பாலேக்கரின் கோல்மாலும் ஏற்படுத்திய இமேஜ் கலைஞ்சுரும் போலிருக்கே..

    ReplyDelete
    Replies
    1. வாங்க மேடம். ரொம்ப நாள் கழித்து வந்தமைக்கு நன்றி

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...