உடுப்பி கிருஷ்ணா போளி ஸ்டால் என்பது அந்த கடை பெயர். வேளச்சேரி விஜய நகர் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது.
பெயரில் தான் போளி ஸ்டாலே ஒழிய - சுற்று வட்டம் முழுக்க டிபன் மற்றும் வெரைட்டி ரைஸ் வகைகளுக்கு தான் இக்கடை மிக பிரபலம் ! கூட்டம் எப்போதும் இருக்கும் கடை இது !
கடையின் சிறப்பே 25 ரூபாயில் - சப்பாத்தி , பரோட்டா, ஸ்பெஷல் தோசை துவங்கி - மதியம் பல வெரைட்டி ரைஸ் வகைகளும் வழங்குவது தான்.
சின்ன கடை என்றாலும் - ஏராளமான உணவு வகைகள் இங்கு இருக்கும். பொங்கல், பூரி, கிச்சடி, ஏழெட்டு வகை தோசைகள் (ஆனியன் தோசை, பொடி தோசை, etc ), இட்லி, கேசரி - என சுவர் முழுதும் வரிசை வரிசையாக - இங்கு கிடைக்கும் உணவுகளை லிஸ்ட் செய்துள்ளனர்
வேளச்சேரி சுற்றி ஏராள ஐ. டி மற்றும் BPO நிறுவனங்கள் உள்ளன இங்கு பணிபுரியும் பேச்சிலர்களுக்கு இந்த கடை செம அட்ராக்ஷன். இங்கு உட்கார்ந்து சாப்பிடும் வசதி கிடையாது.
கடையின் இரண்டு பக்கமும் தட்டை மேலே வைத்து விட்டு நின்று கொண்டே சாப்பிடும் படி ஏற்பாடு செய்துள்ளனர். மக்களும் எந்த கம்பிலேயிண்ட்டும் இன்றி நின்றவாறு சாப்பிட்டு விட்டு செல்கிறார்கள்
காலை டிபன் - 6.30 முதல் 10.30 வரை
லஞ்ச் - மதியம் 12 முதல் 3 வரை
மாலை 4 to 6.30 ஸ்நாக்ஸ் (வடை, போண்டா வகையறாக்கள் )
7 முதல் 10 வரை இரவு உணவு
- என காலை ஆறு முதல் - இரவு 10.30 வரை நான் ஸ்டாபாக இயங்கும் கடை இது !
என்ன ஒன்று - சுற்றுப்புற சுத்தம் மட்டும் இன்னும் சற்று improve செய்யலாம் !
இங்கு வெவ்வேறு தருணங்களில் - பொங்கல் (நெய் !!!) , தோசை, கிச்சடி ( காய்கறிகள் நிறைய) , சாம்பார் சாதம், வடை, போண்டா உள்ளிட்டவை சாப்பிட்டுள்ளேன். கொடுத்த காசுக்கு வயிறும் மனதும் நிறையும் !
மேலதிக தகவல்கள் :
உடுப்பி கிருஷ்ணா போளி ஸ்டால்
17, டான்சி நகர் , இரண்டாவது தெரு
தரமணி லிங்க் ரோடு , வேளச்சேரி
(விஜய நகர் பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் )

எங்க பாஸ் ரெண்டு மூணு தரம் இங்கே சாப்பிட்டிருப்பதாகச் சொன்னார்கள்.
ReplyDeleteதகவலுக்கு நன்றி! போகும் போது சுவைத்து பார்க்கிறேன்! நன்றி!
ReplyDeleteநான் வேளச்சேரியில் தான் !இருக்கிறேன் . பல முறை இங்கு சாப்பிடிருக்கிறேன் . நன்றாக இருக்கும். அனால் பல சமயம் சூடாக இருக்காது. ஆனால் பட்ஜெட் விலையில் சாபிடிவதற்கு ஏற்ற இடம்
ReplyDeleteநானும், தூயா மற்றும் என் ஃப்ரெண்ட் கூட போய் மாலைல சிற்றுண்டி சாப்பிட்டோம். சுவை நல்லாதான் இருந்துச்சு
ReplyDeleteநல்ல தகவல்.
ReplyDeleteநன்றி மோகன்.
ஸ்ரீராம் சார்: அப்படியா? நன்றி
ReplyDeleteசுரேஷ் : நன்றி சென்று பாருங்கள்
முரளி கிருஷ்ணா: தங்கள் அனுபவம் சொன்னமைக்கு நன்றி
ராஜி: அட அப்படியா? நன்றி
வெங்கட்: வாங்க நன்றி
//விஜய நகர் பேருந்து நிலையத்துக்கு மிக அருகில்// இது ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் வருவது போல் இல்லையே?! இந்தக் கடைக்கு கொஞ்சம் முன்பு, 21L பஸ் திரும்பும் இடத்தில, ஸ்டேட் பேங்க் இருக்கும் ரோட்டின் முனையில் இது போல ஒரு சின்னக் கடை இருக்கும். பெயர் மறந்துவிட்டது. அங்கும் சாப்பாடு நன்றாகவும் சூடாகவும் இருக்கும்.
ReplyDeleteStalin that shop closed
Delete