Tuesday, April 22, 2014

வானவில் - வோட்டர் ஐ. டி குளறுபடி-சாக்லேட் ரூம்- உஸ்தாத் ஹோட்டல்

வோட்டர் ஐ. டி குளறுபடிகள் 

இன்னொரு தேர்தல் வந்து விட்டது. மடிப்பாக்கம் வந்து ஏழு வருடமாக தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்காக போராடி வருகிறேன். இதுவரை எத்தனை முறை அதற்கான பாரம் நிரப்பி கொடுத்தேன் என்று கணக்கே இல்லை. தாம்பரம் - தலைமை அலுவலகம் பல முறை சென்றும் பார்த்தாகி விட்டது. ஊஹூம்

நமக்கு தான் இப்படி என்றால் - புழுதிவாக்கம் அரசு பள்ளிக்கு சமீபத்தில் சென்றபோது அங்குள்ள ஆசிரியை இது ரொம்ப சாதாரணம் என்றார். 10 - 15 முறைக்கு மேல் அப்ளிகேஷன் நிரப்பி தந்தும் வாக்காளர் அடையாள அட்டை வருவதே இல்லையாம்.. வி. ஏ . ஓ அலுவலகம், தாம்பரம் ஆபிஸ், அது இது என்று அலைய  விடுகிறார்களே ஒழிய வாக்காளர் அடையாள அட்டை கைக்கு வருவதே இல்லை.

என்னிடம் பேசிய டீச்சர் தனது மகளுக்கு இந்த அட்டை வாங்குவதற்குள் தான் பட்ட பாட்டை சொல்லி நொந்து கொண்டார். " நாங்க தான் எல்லா வீட்டுக்கும் போய் தகவல் வாங்குறோம்; எங்களுக்கே ரொம்ப நாள் கார்ட் தரலை. பெண்ணுக்கு ஏதாவது ஒரு ஐ. டி கார்டாவாது வேண்டும் என ரொம்ப போராடி வாங்கினோம்" என்றார்

நாம் இதற்கான அப்ளிகேஷன் நிரப்பி தந்தும் ஏன் அரசாங்கத்தால் சரியாக கார்ட் தர முடியவில்லை? நாம் நிரப்பி தருகிற அப்ளிகேஷன் என்ன ஆகிறது ? ஒவ்வொரு முறை போய் கேட்கும் போதும் புதிதாக நிரப்பி தர சொல்லி அவர்கள் தான் சொல்கிறார்கள்..

அரசாங்கம் மீதும் அரசு துறைகள் மீதும் வெறுப்பையும் நம்பிக்கையின்மையையும் தருகிற விஷயங்களாக இவை இருக்கின்றன... ஹூம்

அழகு கார்னர் 

நிவேதா தாமஸ்.. போராளி உள்ளிட்ட படங்களில் நடித்தவரை ஜில்லாவில்விஜய்க்கு தங்கையாக்கினர்  :((

அழகு, திறமை இரண்டும் இருந்தும் தமிழ் திரை உலகம் ஏன் இன்னும் கண்டு கொள்ளாமல் இருக்கிறதோ தெரியவில்லை




டிவி பக்கம்

ஆதித்யா சானலில் கல்லூரிகளுக்கு சென்று தமிழில் பேச சொல்லி நடத்தும் நிகழ்ச்சி செம காமெடியாக உள்ளது. ஆங்கிலத்தில் சில வரிகளை சொல்லி தமிழில் சொல்லுங்க என்பதும், அவர்கள் தரும் பதிலுக்கு நிகழ்ச்சி காம்பியர் தரும் கவுண்டர் மற்றும் முக பாவமும் பட்டாசு !

இதில் யாரேனும் ஒரு பிரபலத்தின் புகைப்படம் காட்டி " யார் இவர்? " என கேட்டு கல்லூரி மாணவர்களின் அறியாமை வேறு பறை சாற்றுகிறார்கள்.

இந்த வாரம் ம. பொ. சி புகைப்படத்தை காட்டி யாரென்று கேட்க, " பாரதியார் சொந்தக்காரர்" என்றும் " வ. உ  சி" என்றும் அவர்கள் சொன்ன பதில் தமிழ் ஆர்வலகளுக்கு கோபத்தை வரவழைத்திருக்கும்.. !

உணவகம் அறிமுகம் - சாக்லேட் ரூம் வேளச்சேரி 



வேளச்சேரி 200 அடி சாலையில் உள்ளது சாக்கேலேட் ரூம்; பெயருக்கேற்ப சாக்லேட் வகை இங்கு அதிகமாக கிடைக்கிறது. 11 காலை டு 11 இரவு கடை திறந்திருக்கும் . மாலை தான் கூட்டம் ! மிக அழகான ஆம்பியன்ஸ்...

பிட்சா போன்றவையும் இங்கு உண்டு; ஆனால் சாக்கலேட் தான் பலரும் விரும்புகிற உணவாக இருப்பதாக கடைக்காரர் கூறினார். (கீழே இவர்களுக்கு ஒரு துணிக்கடை உண்டு.. அது நாங்கள் வழக்கமாய் செல்லும் கடை.. இரண்டிற்கும் ஓனர் ஒருவரே என்பதால், அவர் பல ஆண்டுகளாக நல்ல பழக்கம்)

பெண்களுக்கு சாக்லேட் பிடிக்கும் என்பதால் அவர்களை தான் அதிகம் காண முடிகிறது ( ஹீ ஹீ )

நிச்சயம் ஒரு வித்தியாச அனுபவத்திற்காக ஒரு முறை விசிட் அடியுங்கள்



பாடல் கார்னர் 

இந்த வாரம் வெளிவர உள்ள " என்னமோ எதோ" படப்பாடல் இது..

இமான் என்றால் துள்ளல் இசை தான் அதிகம் இசைப்பார் என்பதற்கு மாறாக ஒரு சோக மற்றும் மெலடி பாடல் இது.. பாடியவர் ரொம்ப ஸ்பெஷல் ஆன ஒருவர்... பாருங்கள்...




ஐ. பி. எல் கார்னர் 

இந்த வருட ஐ. பி. எல் லில் பாவரைட் அணி எதனையும் இப்போதைக்கு சொல்ல முடியவில்லை. ஆனாலும் மொஹாலி அணி அதன் இரண்டு வீரர்களுக்காக கவனத்தை கவர்கிறது..

மேக்ஸ் வெல்  மற்றும் மில்லர். அடுத்தடுத்து 205 மற்றும் 190 ரன்களை இந்த இருவரணி அனாயசமாக அடித்து ஜெயித்தது கண் கொள்ளா காட்சி.

மேக்ஸ் வெல் ஆட்டத்தை இதுவரை பார்க்கா விடில் இன்று மாலை நடக்கும் மேட்சில் அவசியம் பாருங்கள் ( இன்று மொஹாலி Vs   சண் ரைசர்ஸ் ) அடேங்கப்பா. என்னா அடி.. 5- அல்லது 10 பந்துகளுக்கு பிறகு ஒரே சிக்சர் மழை தான். இந்த வருட ஐ. பி. எல் லில் அசத்த போகிற வீரர்களில் மேக்ஸ் வெல்லுக்கு மிக பெரிய இடம் இருக்க போகிறது. அவரை விரைவில் அவுட் ஆக்காமல் 30 - 40 பந்துகள் ஆட விட்டால் எந்த அணியும் ரத்த கண்ணீர் சிந்த வேண்டியது தான்.

இன்னொரு பக்கம் கில்லர் மில்லர்... 20 பந்துகளில் 50 அடிப்பதை வழக்கமாக  கொண்டுள்ளார்.

இந்த இருவரை தவிர இந்த அணியில் சொல்லி கொள்கிற மாதிரி இல்லை எனினும் இதுவரை இந்த இருவர் அணியே வெற்றி தேடி தந்து  கொண்டிருக்கிறது

சென்னை முதல் மேட்சை விட நல்ல பவுலிங் வரிசையை அமைத்து கொண்டு நேற்று மிக பெரும் வெற்றியை ஈட்டியது மகிழ்ச்சி. இருப்பினும் பிரேவோ இல்லாதது பெரும் பின்னடைவு தான்..

பார்த்த படம் - உஸ்தாத் ஹோட்டல் 

அட்டகாசமான படம்.. எப்படித்தான் இவ்வளவு அழகான கதையெல்லாம் யோசிக்க முடிகிறதோ ?

பெண்களுடனே வளர்ந்து சமையலின் மீது ஆர்வம் கொண்ட ஹீரோ- ஒரு சந்தர்ப்பத்தில் தனது தாத்தாவுடன் சில மாதங்கள் இருக்க நேரிடுகிறது. தாத்தா வைத்திருக்கும் ஹோட்டலின் பெயர் தான் உஸ்தாத் ஹோட்டல். வெளிநாடு செல்ல துடிக்கும் அவனை உஸ்தாத் ஹோட்டல் என்ன செய்தது என்பது தான் கதை.

அன்பு தான் படத்தின் அடிநாதம். நகைச்சுவை மேலும் மனிதர்களின் மென் உணர்வுகளை அழகாக தொட்டு செல்கிறார் இயக்குனர்.

முக்கிய பாத்திரத்தில் திலகன்  .. என்னா நடிப்புடா சாமி ! இறுதியில் அவரை ஒட்டி வரும் ஒரு டுவிஸ்ட் கவிதை.. (அதை அறிய - டைட்டில் ஓடி முடியும் கடைசி ஷாட் வரை காத்திருக்க வேண்டும்.. )

மலையாளத்தின் அற்புதமான படங்களில் ஒன்றான இப்படத்தை அவசியம் பாருங்கள் !

13 comments:

  1. Welcome back Sir...... Goa tour pathivu arumai. Meendum vaanavil padippathil santhosam !!

    ReplyDelete
  2. ஆமாம் அதென்ன பெண்கள் தான் அதிகம் சாக்லேட் விரும்பி சாப்பிடுகிறார்கள்.? ஆனால் உண்மை தான்.

    உஸ்தாத் ஹோட்டல் பற்றி கேள்விபட்டுளேன்.தமிழில் விக்ரம் பிரபு,ராஜ்கிரண் நடிக்க தலப்பா கட்டி என்று ரீமேக் ஆகிறது .பார்க்கலாம்.

    ReplyDelete
  3. Enakum voter id munu varusama form fill panni varala. Ana internet mulama apply pannathum rendu masathula vandhudichi.

    ReplyDelete
  4. நிவேதா தாமஸ்..அழகா இருக்காங்கன்னு சொல்லி இப்படி அவர் படத்தை அலங்கோலம் பண்ணிட்டீங்களே!

    ReplyDelete
  5. வானவில்லின் வண்ணங்கள் அருமை! நிவேதா தாமஸ் அழகாத்தான் இருக்காங்க! அவங்க படம்தான் அழகா இல்லை! இந்த வருட ஐ.பி.எல் இன்னமும் பார்க்கவில்லை! இனிதான் பார்க்கவேண்டும். உஸ்தாத் ஹோட்டல் வாய்ப்பு கிடைக்கையில் பார்க்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  6. உஸ்தாத் ஹோட்டல் பார்க்க வேண்டும்...

    ReplyDelete
  7. 18 வயது நிரம்பிய என் மகளுக்கு ஆன் - லைனில் வோட்டர் ஐடி-க்கு விண்ணப்பித்தேன். இரண்டே மாதத்தில் வீடு வந்து தந்து சென்றார்கள். இந்த தேர்தலில் முதல் முறையாக வாக்கை செலுத்தப் போகிறாள்..

    ReplyDelete
  8. please go to elections.tn.gov.in and apply online

    ReplyDelete
  9. நான் அக்டோபர் மாதம் ஆன்லைனில் வோட்டர் ஐடிக்கு விண்ணப்பித்தேன். எப்போது போய் status பார்த்தாலும் data entry pending என்றே வரும். ஜனவரியில் தாலுக்கா ஆபீசில் புதிய விண்ணப்பம் தரச் சொன்னார்கள். கொடுத்தேன். இதுவரை என் பெயர் வோட்டர் லிஸ்ட்டில் வரவில்லை. இம்மாதிரி விண்ணப்பம் கொடுத்து தாலுக்க ஆபீசில் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்ட விண்ணப்பங்கள் 67,000 என்று தகவல் வந்திருக்கிறது. வாழ்க அம்மா நாமம்!

    ReplyDelete
  10. அந்த பாடல் மிக அருமைங்க ..கேட்டு முடிச்சவுடன் எனக்கும் கண்ணீர் வந்தது ..என்னவொரு கணீரென்ற குரல் ..சூப்பர்ப் !

    Angelin.

    ReplyDelete
  11. சென்ற 2011 தேர்தலில் நான் எனது மனைவி மற்றும் எனது மகன் மூவரும் ஓட்டுப் போட்டோம். இம்முறை வாக்காளர் பட்டியலில் எனது மகனின் பெயர் மற்றுமே இருந்தது. பலமுறை கேட்டும் சரியான பதில் கிட்டவில்லை. எனவே இன்று ஒட்டு போடவில்லை.
    வாழ்க தேர்தல் ஆணையம்.

    ReplyDelete
  12. விஜயலக்ஷ்மி..... அருமையான பாடகி....

    உஸ்தாத் ஹோட்டல் - நல்ல படம் என்று தோன்றுகிறது. பார்க்க முயல்கிறேன்....

    ReplyDelete
  13. நண்பர்களே தங்களின் கருத்துகளுக்கு நன்றி; குறிப்பாக வோட்டர் ஐ. டி குறித்து இணையத்தில் விண்ணப்பித்தால் விரைவில் கிடைக்கும் என்ற தகவல்.. நிச்சயம் முயல்கிறேன்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...