Friday, April 11, 2014

வானவில் -குக்கூ- Go - வா - நான் சிகப்பு மனிதன்

"அட வானவில் .." என்கிறீர்களா ..."வானவில்லா.. அப்படின்னா?" என்கிறீர்களா எனத் தெரிய வில்லை.. 

வானவில் எழுதி எத்தனை மாதம் ஆனது !!  வீடுதிரும்பலில் பதிவுகளும் கூட ஏகமாய் குறைந்து தான் போய் விட்டன..

ஆகஸ்ட் 29, 2013-ல் கம்பனி சட்டம் வெளியானது முதல் அது சம்பந்தமாக படிக்க, எழுத, பேச நிறைய  வாய்ப்புகள் அமைந்து விட்டன. மனதில் இருப்பதை தான் எழுத முடியும்... இங்கு தொடர்ந்து கம்பனி சட்டம் குறித்து எழுத முடியுமா ? அதனால் தான் எப்போதாவது சினிமா பார்க்கும்போது அதன் விமர்சனத்தை மட்டும் எழுதி வருகிறேன்... 

செய்த பயணங்களும், சாப்பிடும் உணவகங்களும் குறித்து எழுத எவ்வளவோ இருந்தும் mood-ம் இல்லை - நேரமும் இல்லை.

மேலும் இப்போது கம்பனி சட்டம் குறித்து ஆங்கிலத்தில் ஒரு ப்ளாக் துவங்கி தினம் ஒரு பதிவு அங்கு எழுதி வருகிறோம்.. (கடந்த ஒரு வாரமாய் அங்கும் வாரத்திற்கு 3 என மாற்றி விட்டோம்) ; இங்கு நான் மட்டுமல்ல என்னோடு சேர்ந்து 10க்கும் மேற்பட்ட கம்பனி செகரட்டரிகள் எழுதுகிறார்கள்..

உங்களுக்கு அந்த ப்ளாக் எவ்வளவு சுவாரஸ்யம் தரும் என தெரியவில்லை; இருப்பினும் ப்ளாக் முகவரி பகிர்கிறேன்

http://corporatelaws.blogspot.in/

வானவில் தொடர்ந்து வருமா என உறுதி சொல்ல முடியவில்லை; இயலும்போது எழுதுகிறேன் !

பார்த்த படம் - குக்கூ

ரிலீஸ் ஆகி மூன்றாம் நாளே பார்த்தாகி விட்டது . ராஜூ முருகன் எழுத்தை போலவே மனதை வருடும் படம். படத்தில் என்னை ரொம்ப ரொம்ப அசத்திய விஷயம் ஹீரோ தினேஷ் நடிப்பு. அடேங்கப்பா.. பின்னி எடுத்துட்டார்... க்ளாஸ் ! தினேஷ் செல்ல வேண்டிய உயரம் இன்னும் நிறைய இருக்கிறது. இயக்குனர்கள் இவரை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

Elango and Nandhini in Cuckoo

அடுத்து இசை அமைப்பாளர் சந்தோஷ்.. அட்டகாசமான பாடல்கள்; உறுத்தாத பின்னணி இசை ; ராஜூ முருகனின் பாசிடிவ் அப்ரோச்..., சின்ன சின்ன பாத்திரங்கள் மனதை அள்ளுவது என ஒரு அருமையான பீல் குட் மூவி !

படத்தில் என்னை உறுத்திய விஷயம் ஹீரோயின் தான். நடிப்பில் தினேஷ் எங்கோ ஒரு உயரத்தில் இருக்க, அவருக்கு ஈடு கொடுக்க முடியவில்லை இந்த பெண்ணால்! கண்ணை மேலும் கீழுமாக மாற்றி அவர் பார்ப்பது வேறு கண் தெரியாதவர் என்ற உணர்வை தர மறுக்கிறது

இன்னொரு சிறு குறை - மெலோ டிராமாடிக் கிளைமாக்ஸ். ஆனால் அதை கூட பொறுத்து கொள்ளலாம்

ராஜூ முருகன்.. நிச்சயம் ஒரு நம்பிக்கை தரும் இயக்குனராக இருக்கிறார். தஞ்சை மண் என்பதில் கூடுதல் பெருமை !

என்னா பாட்டுடே

எளிய மனிதர்களின் காதல்.. இதுதான் பாடலின் பின்புலம்.. 

மிக அழகான மெலடி.. அற்புதமான வரிகள்.. 

கல்லும் மண்ணும் வீடுகள் இல்லை....
அன்பின் வீடோ அழிவது இல்லை

வெறும் தரையில் படுத்துக் கொண்டு
விண்மீன் பார்ப்பது யோகமடா
உன் மடியில் இருந்தால்
வாழ்க்கை எதுவும் தேவை இல்லையடி

ஆடியோ வடிவில் எப்போது கேட்டாலும்  மனதை என்னவோ செய்யும் இந்த பாட்டு ....




படித்ததில் பிடித்தது

மணமக்கள் உருவத்துடன் கூடிய சேலைக்கு ஆர்டர் தர விரும்புவோர், 04254 252 022 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மணமக்கள் பெயரை பட்டுபுடவையில் நெய்து தரும் விளம்பரம் பார்த்து இருப்பீர்கள்.. சிறுமுகையில் மணமக்கள் படத்தையை அழகாக நெய்து தருகிறார்கள் அற்புத கலைஞர்கள் விளம்பரம் செய்ய வசதியற்றவர்கள். சேலை நெய்பவர்களின் கைக்குள் எத்தனை கலைநயம் ஒளிந்திருக்கிறதோ !



(ஃபேஸ்புக்கில் பார்த்தது . நம்பர் எடுக்கவில்லை .தரம் சரியில்லை என்பதெற்கெல்லாம் கம்பெனி பொறுப்பல்ல )

:))

புகழ் பெற்ற கடைகள் தங்கள் சொந்த செலவில் விளம்பரம் செய்கிறார்கள், ஆனால் இதுபோன்ற நெசவாளர்களுக்கு விளம்பரம் செய்ய போதிய பணம் இல்லை இருந்தும் மக்கள் தானாகவே முன்வந்து விளம்பரம் செய்கிறார்கள் சமூக வலைத்தளங்களின். பெருமைக்குரிய விடயம். ஷேர் பண்ணூங்க.. ஏழை கலைஞர்களுக்கு விளம்பரமாகட்டும்

போஸ்டர் கார்னர் 



ரிலீஸிங் டுடே   - நான் சிகப்பு மனிதன் 

மான் கராத்தே படம் பார்க்கும் போது அதே தியேட்டரில் " நான் சிகப்பு மனிதன் " ட்ரைய்லர் போட்டனர். வித்யாசமான கதை களம். ஹீரோவுக்கு பகலில் கூட திடீர் திடீர் என தூங்கி விடும் வியாதி. இதை வைத்து வரும் பிரச்சனைகளை மையமாக கதை பின்னப்பட்டுள்ளது தெரிகிறது.



ஹீரோ விஷால்  அதான் சற்று மிரட்சியாக உள்ளது. லக்ஷ்மி மேனன் உடன் இரண்டாவது படம் உடனே  நடிக்கிறார்... பீச் கில்மா காட்சி மற்றும் முத்த காட்சிகள் உண்டு என வேறு ஹைப் கிளப்புகிறார்கள்...

4 நாள் கழித்து ரிவியூ நன்றாக இருந்தால் செல்ல எண்ணம் ! பார்க்கலாம் !

Go  - வா !

யெஸ் .. கொலம்பஸ். கொலம்பஸ். விட்டாச்சு லீவு...

கோவா பயணம் விரைவில்; நேரம் இருப்பின் சுருக்கமாக எழுதுகிறேன் ..

7 comments:

  1. மணமக்கள் படம் உட்பட வண்ணக் கலவையில் பல நுட்பங்களும் செய்கிறோம்... அட்டை அடிப்பவர்களுக்கு (Jacquard Card Punching) வேலை தான் அதிகமோ அதிகம்...

    ReplyDelete
  2. புடவையில் ஃபோட்டோ.என்னவெல்லாம் செய்கிறார்கள்.விஷால் பக்கத்து வீட்டு பையன் மாதிரி சாதரணமாய் இருப்பது,வருவது எனக்கு பிடிக்கிறது. ரொம்ப அலட்டவும் மாட்டார்.

    ReplyDelete
  3. Veeduthirumbal pathivu adikadi varathathal neenda naal nanbanai pirinda unarvu. Apuram oru doubt CS na Company Secretary abbv na anna?

    ReplyDelete
  4. வானவில் மீண்டும் உதித்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  5. வானவில் மீண்டும் உதித்ததில் மகிழ்ச்சி.

    கோவா பயணம் - எஞ்சாய் மாடி!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...