Thursday, May 15, 2014

மீண்டும் தஞ்சைக்குப் போகலாம்.....

ஞ்சைக்கு இன்னொரு விசிட்... இம்முறை 4 நாள் வேறெங்கும் செல்லாமல் தஞ்சையில் மட்டுமே கழிந்தது. சில அனுபவங்கள் இங்கு பதிகிறேன்...



* யிலில் சென்று இறங்கியதும், இதுவரை நேரில் பார்த்திராத ஒரு நண்பர் அருகில் வந்து " என்ன மோகன்குமார் .. எப்படி இருக்கீங்க ? " என்று பேசினார். அடுத்த வரி " என்னை அடையாளம் தெரியுதா ?"

"ம்ம்.. தெரியுது.. நாடோடி இலக்கியன் (கூகிள் பிளஸ் புகழ்) " என்று சொல்ல " ஆமாம். நிஜ பேர் பாரி " என்றார்.

ரயில் ஏற்கனவே மிக தாமதம் என்பதால் இருவரும் அதிகம் பேசாமல் கிளம்ப - மகள் கேட்டாள் " யாரு அவரு ? ப்ளாகரா ?"

" ப்ளாக் வாசிப்பவரா ? " என கேட்காமல் ப்ளாகரா என கேட்கிறாளே என்ற ஆச்சரியத்துடன் " ஆமாம்" என்றேன்...

வீட்டிலே உள்ளவங்களுக்கு கூட ப்ளாக் உலகில் - படிப்பது ,  எழுதுவது இரண்டும் ஒரே க்ரூப் தான் என தெரிஞ்சிருக்கு !

* களுடன் தஞ்சையை அடிக்கடி சுற்றி வந்தேன். சாந்தி தியேட்டரிலிருந்து விஜயா தியேட்டர் செல்லும் சாலையில் செல்லும்போது ஒரு விஷயம் மிக ஆச்சரியப்படுத்தியது. அந்த சிறிய சாலையில் இரண்டு புறமும் டைலர் கடைகள்......25- 30 கடைகள் வரிசையாக இருக்கும் போலும். செல்ல செல்ல, இன்னும் இன்னும் இன்னும் என டைலர் கடையாகவே இருக்க, எப்படி இது என சிரிப்பும் வியப்பும் எட்டி பார்த்தது.

முன்பும் இத்தெருவில் சில டைலர் கடைகள் இருக்கும் என்றாலும் இந்த அளவிற்கு இல்லை ! அனைத்து கடைகளிலும் உடைகளும் ஏராளாமாக தைக்க வந்திருந்ததையும் கவனிக்க முடிந்தது.

ஞ்சையில் நாங்கள் இம்முறை பார்த்து வியந்த இன்னொரு விஷயம் திருவள்ளுவர் தியேட்டரை ஒட்டி உள்ள " முருகன் புத்தக கடை" .. அடேங்கப்பா ! தஞ்சையில் இவ்வளவு பெரிய புத்தக கடையா ? 2-3 நூலகங்களை ஒன்றாய் சேர்த்தது  போல் பறந்து விரிந்து இருக்கிறது,. பாட புத்தகங்கள் தொடங்கி அனைத்து வகை தமிழ் இலக்கியமும்  இங்கு கிடைக்கிறது. மேலும் ஆங்கில புத்தகங்களும் கூட குவிந்து கிடக்கிறது. இத்தனை வருடம்  தஞ்சையில் இருந்தும் இப்படி ஒரு புத்தக கடை தெரியாமல் இருப்பது சற்று வெட்கமாக இருந்தது.

தஞ்சையில் சில நாள் இருப்பது போல் சென்றால் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே திருவள்ளுவர் தியேட்டர் முன்பு இருக்கும் இக்கடைக்கு அவசியம் ஒரு விசிட் அடியுங்கள் !

ஞ்சையில் நிறைய ஷேர் ஆட்டோக்கள் புழங்க தொடங்கி விட்டன. இதில் ஆச்சரியமான விஷயம் மிக அதிக தூரத்துக்கும் குறைவான அளவு தான் பணம் வாங்குகிறார்கள். உதாரணமாக லட்சுமி சீவலில் இருந்து வல்லம் செல்ல - 8-9 கிலோ மீட்டர் இருக்கும். ஷேர் ஆட்டோவில் 7 ரூபாய் தான் டிக்கெட். குறைவான தொகை என 3 ரூபாய் கூட வாங்குகிறார்கள் ( சென்னையில் பல ஷேர் ஆட்டோக்கள் 10-க்கு குறைவாக வாங்குவதில்லை என்பது நினைவுக்கு வந்தது )

* ஞ்சை பாலாஜி நகர்/  TPS  நகர் பேருந்து நிலையம் அருகே புதிதாக ஒரு காபி கடை துவங்கப்பட்டுள்ளது. 10, 12, 15 என மூன்று ரேட்டில் கிடைக்கும் காபி அட்டகாசமான சுவை. (விலை - அளவை பொறுத்து மட்டுமே மாறுகிறது, மற்றபடி தரம் ஒன்றே) ; இக்கடையை குறிப்பிட காரணம் - இக்கதையை நடத்தும் நபர் (ஓனரும் அவரே - காபி மாஸ்டரும் அவரே) சென்னையில் ஒரு நல்ல வேலையில் இருந்ததை  விட்டு விட்டு இப்போது இக்கடை துவங்கியுள்ளார் !

* லக்ஷன் தினம் நாங்கள் சென்றிருந்தோம். முக்கிய கட்சியிலிருந்து "சாதாரண மனிதர்கள் " குடும்பங்களுக்கு ரூ. 500 சப்ளை ஆகிக் கொண்டிருந்தது. எலக்ஷன் கமிஷன் மிக நியாயமாக தேர்தல் நடத்துகிறது ;எந்த தவறும் நடக்க விடுவதில்லை என்பது எவ்வளவு பெரிய பம்மாத்து ! ஹூம்

ஞ்சை போய் விட்டு பழைய பஸ் ஸ்டாண்ட் அன்பு கடையில் லஸ்ஸி அல்லது பால் குடிக்காமல் வர முடியுமா... ? வெய்யிலுக்கு இதமாக லஸ்ஸி .. அதே அற்புத சுவை.. இப்போது விலை 20 ரூபாய். குடிக்க, குடிக்க " அய்யய்யோ .. காலி ஆகுதே !" என வருத்தம் எட்டிப்பார்க்க , குடித்து முடித்ததும் இன்னும் ஒன்று குடிக்கலாமா என்ற சலனம் ஒரு புறம் எழும்ப,  வண்டியை எடுத்துகிட்டு விடு ஜூட்....

* ஞ்சையில் இருந்த காலங்களில் நான் அதிக நேரம் செலவழித்த இடங்கள் - தியேட்டர்கள் தான் ! அவற்றை ஒவ்வொன்றாக மகளுக்கு சுற்றி காண்பித்தேன். ராஜா கலையரங்கம் தியேட்டர் இன்னும் இருப்பது ஆச்சரியப்படுத்தியது. ( இன்னமும் அவளோட ராவுகள் போன்ற படங்கள் தான் ...... ) யாகப்பா தியேட்டர் மூடி விட்டதாக சொன்னார்கள். தியேட்டர் இருந்த இடத்திற்கு கூட செல்ல முடியவில்லை. ஞானம் தியேட்டர் ஞானம் ஹோட்டலாகி ரொம்ப வருஷம் ஆகிறது. ஜூபிடர், திருவள்ளுவர் போன்றவை எப்படியோ காலம் தள்ளி கொண்டிருக்கின்றன. ராணி பேரடைஸ் - பிக் சினிமாஸ் ஆன பின் இன்னும் ஒரு முறை கூட படம் பார்க்க வில்லை.

* ஞ்சையில் சில கடைகளில்  " கரண்ட் இல்லாத போதும் சிராக்ஸ் எடுக்கப்படும் " என பெரிய எழுத்தில் எழுதி போட்டுள்ளது புன்னகையை வரவழைக்கிறது. மின் வெட்டு எலக்ஷன் நேரம் வரை சற்று அடக்கி வாசித்தாலும் மற்றபடி - மிக மிக அதிகம் தான்.

* துவரை தஞ்சையில் செல்லாத ஒரு இடத்துக்கு சென்று நிறைய தகவல்கள் சேகரித்துள்ளேன். அது பற்றி தனியாக பின்பு....

* எப்போது பேட்டரி குறைந்தாலும் சொந்த ஊருக்கு சென்று வந்தால் உடல் மற்றும் மனது ரீ சார்ஜ் ஆன மாதிரி ஆகிவிடுகிறது... கவனித்துள்ளீர்களா  ? 

19 comments:

  1. Sir, Tanjore is a happening place and happy to see all the useful information you have shared. Next time when I visit, I would love to go there. Good post which reflects your love on your city !

    ReplyDelete
  2. "* எலக்ஷன் தினம் நாங்கள் சென்றிருந்தோம். முக்கிய கட்சியிலிருந்து "சாதாரண மனிதர்கள் " குடும்பங்களுக்கு ரூ. 500 சப்ளை ஆகிக் கொண்டிருந்தது. எலக்ஷன் கமிஷன் மிக நியாயமாக தேர்தல் நடத்துகிறது ;எந்த தவறும் நடக்க விடுவதில்லை என்பது எவ்வளவு பெரிய பம்மாத்து"

    ஒரு வக்கீலாக இருக்கும் நீங்கள் நேரில் கண்டிருகிரீர்கள்.. ஏன் இதைபற்றி முறையிடக்கூடாது? உங்களை மாதிரி எல்லாரும் ஒதுங்கினால் எப்படி எலக்சன் கமிசன் இவர்களை கட்டுபடுத்த முடியும்????

    ReplyDelete
  3. /************/ப்ளாக் உலகில் - படிப்பது , எழுதுவது இரண்டும் ஒரே க்ரூப் தான் என தெரிஞ்சிருக்கு /************/

    இதை ஆட்சேபிக்கிறேன்!!!!

    நான் blog படிப்பது மட்டும்தான்!!!! எழுதுவது இல்லை!!!!

    ReplyDelete
  4. சுவையான தகவல்கள்..... இந்த வாரம் தஞ்சை போக நினைத்திருக்கிறேன்........

    ReplyDelete
  5. What is the name of the coffee shop....

    ReplyDelete
  6. நான் மார்ச் கடைசி வாரம் தஞ்சை சென்று வந்தேன். படித்த பள்ளி, வசித்த ஹவுசிங் யூனிட், ஈஸ்வரி நகர் ஆஞ்சநேயர் கோவில், மருத்துவக்கல்லூரி சாலை மசூதி என்று சுற்றிப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டேன்! ரயில்வே ஸ்டேஷன் மேரீஸ் கார்னர் அருகில் இருப்பதே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது!

    ReplyDelete
  7. தஞ்சை இதுவரை சென்றது இல்லை! ஒரு முறை செல்ல வேண்டும்! சுவையான பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  8. எப்போது பேட்டரி குறைந்தாலும் சொந்த ஊருக்கு சென்று வந்தால் உடல் மற்றும் மனது ரீ சார்ஜ் ஆன மாதிரி ஆகிவிடுகிறது... கவனித்துள்ளீர்களா ?
    >>
    கவனித்துள்ளோம். அதுக்கு காரணம் சிறு வயது எண்ணக்கள் மனசுல நிழலாடுவதால்....,

    ReplyDelete
  9. தஞ்சை சரபோஜி கல்லூரி நினைவுகளை என்னுள் கொண்டுவந்துவிட்டீர்கள் சார்!

    தஞ்சையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கிய மாணவனை சந்தித்து விரிவாக எழுதியிருந்தீர்கள். அந்த மாணவன் தற்பொழுது +2 முடித்திருப்பார் என்று நினைக்கிறேன். அவரைப் பற்றி விபரங்கள் தெரிந்தால் இங்கு குறிப்பிடவும்!

    ReplyDelete
  10. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  11. Anna thanks na. Again i lived in tanjore because of ur writings for few hours. Then i am also one of the member of blog reader association.

    ReplyDelete
  12. தாங்கள் தஞ்சைக்கு வந்தது தெரியாமல் போய்விட்டதே
    அடுத்து முறை தஞ்சைக்கு வரும் பொழுது தெரிவியுங்கள்

    ReplyDelete
  13. சிறந்த பயணப் பகிர்வு

    ReplyDelete
  14. // * எப்போது பேட்டரி குறைந்தாலும் சொந்த ஊருக்கு சென்று வந்தால் உடல் மற்றும் மனது ரீ சார்ஜ் ஆன மாதிரி ஆகிவிடுகிறது... கவனித்துள்ளீர்களா ?

    கவனிக்கிறோமா ? அனுபவிக்கறே சார்;

    ReplyDelete
  15. உண்மைதான் சொந்த ஊருக்கு போவதில் மனசு ரீசார்ஜ் ஆகும் சார்! அருமையான பகிர்வு மனசு நம் தேசத்தை நோக்கி என்ன செய்வது!ம்ம்

    ReplyDelete
  16. பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி !

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...