Monday, June 7, 2010

அறியாதவை

* உன் வாழ்வில் நீ விடும்
கடைசி மூச்சு
எதுவென அறிவாயா நீ?

மரணத்துக்கு பின்
உன் உயிர் என்னவாகுமென
தெரியுமா உனக்கு?

நினைவு சங்கிலி பிசகி
தூக்க உலகில் நுழையும் கணத்தை
உணர முடியுமா?

நம்பிக்கை அவநம்பிக்கை
அலை வரிசைகளில்
மாறி மாறி பயணித்ததுண்டா?





கடவுள்களின் பெயர்களும்
முகங்களும்
குழம்பி தவித்ததுண்டா?

அறிந்தோ அறியாமலோ
யார் யாரை காயப்படுத்தினோமென
கணக்கு பார்த்து
மனசுக்குள் கண்ணீர் வடித்ததுண்டா ?

* இவற்றிற்கெல்லாம்
உன் பதில் இல்லையெனில்
நோயில் வீழ்ந்து பார்.

அறியாதவைகளை அறிய வைக்கும் மந்திரம்
உன் உடலை உருக்க வல்ல
நோய்க்கு மட்டுமே தெரியும்!

12 comments:

  1. அருமை. கடைசியாய் சொல்லியிருப்பதும் உண்மை.

    ReplyDelete
  2. //அறியாதவைகளை அறிய வைக்கும் மந்திரம்
    உன் உடலை உருக்க வல்ல
    நோய்க்கு மட்டுமே தெரியும்! //

    நூற்றுக்கு நூறு உண்மை.

    ReplyDelete
  3. //அறிந்தோ அறியாமலோ
    யார் யாரை காயப்படுத்தினோமென
    கணக்கு பார்த்து
    மனசுக்குள் கண்ணீர் வடித்ததுண்டா ? //

    இந்த வரிகளை மட்டும் புரிந்து நடந்தால், நமக்கு எல்லோரும் நண்பர்களே...!

    சிந்தனையைத் தூண்டும் வரிகள்.
    நன்றி சார்.

    ReplyDelete
  4. அதுவும் காய்ச்சல் வரும் பொழுதுகளில் இதுபோன்று சிலதை உணரமுடியும்...

    நல்ல கவிதை...

    ReplyDelete
  5. மிக அருமையான கவிதை மோகன்.

    இதைத் தான் அறிஞர் ஒருவர் அன்றே சொன்னார் :
    வளமை உலகுக்கு உன்னை தெரிய வைக்கிறது;
    வறுமை உலகை உனக்குத் தெரிய வைக்கிறது.

    ReplyDelete
  6. தொடர் ஊக்கத்திற்கு நன்றி ராம லக்ஷ்மி, வெங்கட், அமைதி அப்பா
    **
    பாலாஜி: ஆம் ஜுரம் வந்த ஒரு பொழுதில் தான் நானும் எழுதினேன். கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி
    **
    நன்றி பெயர் சொல்ல.

    ReplyDelete
  7. ரொம்ப நல்லாருக்கு மோகன்.

    ReplyDelete
  8. உண்மையான வரிகள். அழகான ஓவியம்.

    ReplyDelete
  9. அறியாதவைகளை அறிய வைக்கும் மந்திரம்
    உன் உடலை உருக்க வல்ல
    நோய்க்கு மட்டுமே தெரியும்!


    ...... ம்ம்ம்ம்...... உண்மைதான்.

    ReplyDelete
  10. நல்லாருக்கு மோகன்! வாழ்த்துகள்!

    ReplyDelete
  11. நன்றி ர‌கு
    ***
    நன்றி ராஜாராம்; கவிஞரான நீங்கள் பாராட்டுவது மகிழ்ச்சி தருகிறது
    ***
    நன்றி விக்கி
    ***
    சித்ரா: நன்றி
    ***
    வாங்க துரோகி நன்றி.. பேரை மாத்த கூடாதா சார்?

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...