Monday, July 19, 2010

வானவில் - நான்கு வகை மனிதர்கள்

ரசித்த சிறுகதை

விகடனில் இந்த வாரம் படித்த "மிஸ்டர் மார்க்" என்ற சிறுகதை மனதை கனக்க வைத்தது. (இதே விகடனில் ராஜாராம் கவிதை, கார்க்கி, யுவகிருஷ்ணா, பரிசல் ஆகியோரின் டுவிட்டுகளும் வந்துள்ளன.) "மிஸ்டர் மார்க்" ஒரே ஒரு சினிமா எடுத்த இயக்குனர். அதன் பின் எந்த படமும் எடுக்க முடியாமல் அல்லாடும் கதை. பள்ளிக்கு போகும் சிறு குழந்தை, குடி பழக்கம், கொஞ்சம் தெரிந்தவரிடம் பேசினால் பணம் கேட்கும் நிலை.. சீரியலுக்கு வசனம் எழுதுவது (" எல்லா கதைலயும் கண்ணாலயே ஒண்ணுக்கு போறாங்க") என மிக இயல்பாய் இருந்தது. பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க வைத்தது. முடிவு மனதை பிசைந்தது. படித்து முடிந்ததும் வேறு வாசிக்க பிடிக்காமல் புத்தகத்தை மூடினேன். இது தான் அந்த கதை தரும் பாதிப்பு. செழியன் எழுதிய இந்த கதையை முடிந்தால் வாசியுங்கள்.

குமுதத்தில் ஒரு கேள்வி பதில்

கேள்வி: அனுஷ்கா தமன்னாவை மிஞ்சி விடுவார் போலிருக்கிறதே?




பதில்: அணிகிற கைக்குட்டைகளை பார்த்தால் அப்படிதான் தெரிகிறது !!


ரசித்த SMS:

Three Golden rules from Vivekananada.

1. Who is helping you, don't forget them.
2. Who is loving you, don't hate them.
3. Who is hoping you, don't cheat them.


முதலிடத்தில் தமிழகம்

நல்ல செய்தி ஒன்று: உடல் உறுப்புகள் தானம் செய்வதில் பல வருடங்களாக ஆந்திரா முதல் இடத்தில இருந்து வந்துள்ளது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக தமிழகம் ஆந்திராவை விஞ்சி முதல் இடத்தில உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக தமிழகத்தில் தற்போது வந்துள்ள உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்ச்சி மற்றும் தமிழக அரசு இதற்காக எடுக்கும் முயற்சிகள் இரண்டும் தான் என நான் வாசிக்கும் "ஆங்கில தினத்தந்தி" ( Times Of India) சொல்கிறது. ம்ம்ம் அவ்வபோது இப்படி நல்ல விஷயமும் காதுக்கும் கண்ணுக்கும் எட்டுகிறது.

டிவி பக்கம்


zee தமிழ் தொலை காட்சியில் ஜான்சி ராணி என்ற சீரியல் வந்து கொண்டிருக்கிறது. டப்பிங் சீரியல் தான். இருந்தாலும் ஜான்சி ராணி என்ற வீர பெண்ணின் கதை என வீட்டிலுள்ள ரெண்டு வீர மங்கைகள் பார்த்து வருகிறார்கள். வாசிக்கும் புத்தகத்திலிருந்து நிமிர்ந்து அவ்வபோது நான் பார்த்த வரையில் செம செட்டுகள், நல்ல நடிப்பு என பிரம்மாண்டமாக தான் உள்ளது. முடிந்தால் பாருங்கள்.

நான்கு வகை ஜாதி - உங்கள் சிந்தனைக்கு

சமீபத்தில் ஒரு பெரியவருடன் பேசி கொண்டிருந்தேன். அவர் சொன்னார்:

" அலுவலகம், சமூகம் இப்படி எல்லாத்திலும் நான்கு வகை மனிதர்கள்  இருக்கு தெரியுமா?"

நான் பேசாதிருக்க, என் பதிலை அவர் மீண்டும் கேட்டார். " பிராமின், நான் பிராமின் ..." என நான் இழுக்க,
" இல்லை. ஒரு அலுவலகத்தை எடுத்துக்குங்க. பியூன், செக்கியூரிட்டி போன்றவர்கள் இருப்பார்கள். இவர்களை அரசு அலுவலகத்தில் கிளாஸ் போர் ( Class IV ) என்பார்கள். இதே போல் கிளார்க் போன்றவர்கள் கிளாஸ் த்ரீ (Class III ) என்பார்கள். இந்த கிளார்க்குகளின் மேனஜரை கிளாஸ் டூ ( Class II) என்றும், அலுவலக தலைமை அதிகாரியை கிளாஸ் ஒன் என்றும் சொல்வார்கள்.

இப்படி மக்களை நான்காக பிரிக்காமல் வேலை செய்ய முடியுமா? எல்லோரும் ஒரே கிளாசில் இருக்க முடியுமா? நான் ஜாதி பத்தி பேசலை. ஒரு பிராமணன் பியூன் வேலை கூட செய்யலாம். நான் அங்கே போகலை. அலுவலகமும் சமூகமும் இப்படி நான்காக பிரிஞ்சு இருக்குன்னு மட்டும் தான் சொல்றேன்”

அவரே மேலும் தொடர்ந்தார். " பணம் நிறைய சேர்ந்தா நினைச்சதை செய்யலாம்; ஹேப்பியா இருக்கலாம்னு நிறைய பேர் நினைக்கிறாங்க. ஆனா பணக்காரன் நிம்மதி இல்லாம தவிக்கிறான். தேவைக்கு மேல் பணம் வந்தாலே நிம்மதி போய்டும்; பணம் கம்மியா இருந்தாலும் பிரச்சனை; அதிகம் இருந்தாலும் நிம்மதி இல்லை. எவன்கிட்டே போதுமான அளவு பணம் இருக்கோ அவன் தான் நிம்மதியான ஆசாமி"

அய்யாசாமி அப்டேட்ஸ்

அய்யாசாமி சமீபத்தில் ஒரு திங்கள் கிழமை காலை கல்யாணத்திற்கு சென்றார். மனைவிக்கு வேண்டியவர்கள் வீட்டு கல்யாணம். நேரே மண்டபம் சென்றவர் மாப்பிள்ளையை பார்த்து கையில் மொய் கவர் தந்தார். பின் வந்த வேலையை பார்ப்போம் என சாப்பிட்டு முடித்தார். வெளியே வந்தவர் மாப்பிள்ளை -பெண் பெயர் பலகை பார்த்து அதிர்ந்து போனார். அது வேறு யாரோ வீட்டு கல்யாணம். அவர் செல்ல வேண்டியது அல்ல. சினிமா தியேட்டர் போல ஒரே காம்ப்ளக்சில் ரெண்டு மண்டபங்கள்!! மனுஷன் தப்பான கல்யாண மண்டபம் போய் மொய்யும் தந்து, சாப்பிட்டும் வந்துட்டார். நெக்ஸ்ட்டு?? அதே காம்ப்ளக்சில் இருந்த அடுத்த கல்யாணமும் போய் மொய் குடுத்து கை குலுக்கிட்டு கிளம்பிட்டார் (அங்கே சாப்பிடலை.. சாப்பிடலை.. சாப்பிடலை)

13 comments:

  1. //(அங்கே சாப்பிடலை.. சாப்பிடலை.. சாப்பிடலை)//

    நம்பறோம், நம்பறோம், நம்பறோம்

    கலர்ஃபுல் வானவில்.

    ReplyDelete
  2. //தேவைக்கு மேல் பணம் வந்தாலே நிம்மதி போய்டும்; பணம் கம்மியா இருந்தாலும் பிரச்சனை; அதிகம் இருந்தாலும் நிம்மதி இல்லை. எவன்கிட்டே போதுமான அளவு பணம் இருக்கோ அவன் தான் நிம்மதியான ஆசாமி"
    //

    கன்னா பின்னாவென்று வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  3. Being Central Govt. Employee I am aware of these 4 categories (Classes) of 'employees'. But never thought of the word 'ஜாதி' for this.

    காய்க்கிற காயில கூட ஜாதி இருக்குது.. 'ஜாதிக்காய்'.., தெரியும்களா.?

    ReplyDelete
  4. நல்ல வேளை அய்யா சாமியை அடுத்த முறையும் சாப்பிட சொல்லாம விட்டாங்களே..
    கேபிள் சங்கர்

    ReplyDelete
  5. அனுஷ்கா...ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    //பணம் நிறைய சேர்ந்தா நினைச்சதை செய்யலாம்; ஹேப்பியா இருக்கலாம்னு நிறைய பேர் நினைக்கிறாங்க. ஆனா பணக்காரன் நிம்மதி இல்லாம தவிக்கிறான். தேவைக்கு மேல் பணம் வந்தாலே நிம்மதி போய்டும்//

    ர‌ஜினிகிட்ட‌ பேசினீங்க‌ளா? சொல்ல‌வேல்ல்ல!

    //அங்கே சாப்பிடலை.. சாப்பிடலை.. சாப்பிடலை//

    இப்ப‌டி ப‌ண்ணிட்டீங்க‌ளே..அவ‌ங்க‌ ம‌ன‌சு என்ன‌ பாடுப‌டும் :))

    ReplyDelete
  6. //கலர்ஃபுல் வானவில்.//

    அதே. (ஹி..ஹி... என் கவிதை ஆ.வி.யில் வந்துருக்குன்னு பேசுவதை பார்க்கும் (பேசுவதை பார்ப்பது?) போது எனக்கு இப்படித்தான் தோணும்)

    jokes apart,

    செறிவான பகிர்வுகள் மோகன்.

    ReplyDelete
  7. //எவன்கிட்டே போதுமான அளவு பணம் இருக்கோ அவன் தான் நிம்மதியான ஆசாமி//

    நியாயமான ஆசை உள்ளவனே, நிம்மதியான ஆசாமி.
    சரியா, சார்?

    ReplyDelete
  8. வாங்க வரதராஜலு சார். நம்பினீங்களே நன்றி :))
    ***
    பெயர் சொல்ல: தேங்க்ஸ்ப்பா
    ***
    மாதவன்: வாங்க. அவர் சொன்னதை எழுதினேன். அவ்ளோ தான். நம்ம கருத்து இல்லீங்கோ
    ****
    ராஜாராம்: ஹா ஹா நன்றி
    ****
    ர‌கு : அனுஷ்கா ரசிகர் மன்ற வேளச்சேரி கிளையின் தலைவர் நீங்களா நானா? வாங்க போட்டி போடலாம்
    ***
    கேபிள்: ஆமாம்; சரியா சொன்னீங்க
    ****
    அமைதி அப்பா: நன்றி; என்கிட்டே போய் முடிவு கேட்குறீங்க சார்; நீங்க பெரியவங்க; நீங்க சொன்னா சரியாருக்கும்
    ***

    ReplyDelete
  9. (அங்கே சாப்பிடலை.. சாப்பிடலை.. சாப்பிடலை)

    ha ha ha :-))

    ReplyDelete
  10. எந்திரன் திரைக் கதை இதுதானா? மனிதர்களின் 4 / க்ளாஸ்களை எதிர்த்து ரொபோக்களின் போராட்டம். ::))

    --

    அய்யாசாமி இப்படியா ’ஙே’ ன்னு!! :))

    ReplyDelete
  11. பணம்!..பணம்!!...பணம்!!!

    USE VALUE என்று உண்டு. சஹாரா பாலைவனத்தில் மிலியன் டாலர் பணம் வைத்துக் கொண்டு யாது பயன்??

    ReplyDelete
  12. முரளி: வாங்க; ம்ம்ம் அய்யாசாமி காமெடி ஆளா மாறிட்டாரு இல்ல?
    ***
    ஷங்கர்: யப்பா என்னமா யோசிக்கிறீங்க? :))
    ****
    ராமமூர்த்தி சார்: சரியா சொன்னீங்க. கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  13. அந்த கதையை இன்னும் நான் படிக்கவில்லை .. படிக்க துண்டிடீங்க..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...