சாதாரண மனிதர்கள் வரிசையில் நாம் அடுத்து சந்திக்க இருப்பது செருப்பு தைக்கும் பெரியவர்.
எங்கள் வீட்டில் அனைவரும் செருப்பு தைப்பது இவரிடம் தான். காரணம் எந்நேரமும் இவரை கடையில் பார்க்க முடியும். கேட்கும் கூலி பெரும்பாலும் சரியாக, நாம் பார்கெயின் பண்ண தேவையில்லாத படி இருக்கும்.
இவரிடம் பேட்டி எடுக்கணும் என நினைத்தாலும், அது முடியுமா என மிக தயங்கினேன். இவர் எதுவும் பேசவே மாட்டார். செருப்பு தைக்க கேட்கும் பணம் மற்றும் எப்போது வந்து வாங்கிக்கணும் என்பது தவிர வேறு வார்த்தையும் இதுவரை எங்கள் யாரிடமும் பேசியது கிடையாது.
இம்முறை காலை அலுவலகம் செல்லும் நேரம் ஷூ தைக்க சொல்லி கேட்டேன். "தைக்க நேரம் ஆகும். நாளைக்கு வந்து வாங்கிக்குங்க" என்றார். "ஷூ போடாம எப்படி ஆபிஸ் போறது? ஒரு மணி நேரம் ஆனாலும் காத்திருந்து வாங்கிக்குறேன்" என அமர்ந்து விட்டேன்.
காத்திருக்கும் நேரத்தில் " கொஞ்ச நேரம் நாம பேசுவோமா? நீங்க பேசுறதை கம்பியூட்டரில் எழுத போறேன். அதை நிறைய பேர் படிப்பாங்க " என்று சொல்லி அவரை பேச வைத்தேன். கொஞ்சமாய் பேச ஆரம்பித்து, பின் நிறையவே பேசினோம்.
" என் பேரு பங்காரு அய்யா. வயசு அறுபத்தி நாலு ஆச்சு. நாப்பது வருஷமா இதே தொழில் தான். எனக்கு ஆறு பொண்ணு. ஒரு பையன். பையன் இதே தொழில் தான் செய்றான். பொண்ணுங்க ஆறு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சிடுச்சு. மாப்பிள்ளை ரெண்டு பேர் இதே தொழில் தான் செய்றாங்க. "
குறிப்பிட்ட சாதி பிரிவினர்தான் இந்த தொழிலை அதிகம் செய்வார்களா என்று கேட்க, " ஆமா. எங்களை அருந்ததியர்னு சொல்லுவாங்க. நாங்க தான் இந்த தொழில் அதிகம் செய்வோம். என் முப்பாட்டன், தாத்தா, அப்பா எல்லாரும் இதே தொழில் தான். பையனை படிக்க வைக்கணும்னு தான் நினைச்சேன். அவனுக்கு எட்டாவதுக்கு மேலே படிப்பு வரலை. அப்புறம் இதே தொழிலுக்கு வந்துட்டான். பொண்ணுங்க ரெண்டு பி. எஸ். சி வரை படிச்சிருக்கு"
" முதலில் மயிலாப்பூரில் தெருவில் கடை போட்டிருந்தேன். அப்புறம் கவர்ன்மன்ட் பங்க் கடை வச்சி குடுத்துது. ஆளுக்கு 7,500 ரூபா குடுத்து கடைக்கு தேவையான பொருள் வாங்கிக்க சொன்னுச்சு. அதுக்குன்னு எங்க சாதி மக்கள் பாராட்டு விழா எல்லாம் எடுத்தாங்க. அப்புறம் வந்த கவர்ன்மன்ட் ரோடை விரிவு பண்ணனும்னு எல்லா பங்க் கடையும் காலி பண்ண சொல்லிடுச்சு. மனசு வெறுத்து போச்சு. அப்புறம் தான் மடிப்பாக்கத்தில இந்த கடைக்கு வந்து சேர்ந்தேன்.
ஆறு வருஷமா இங்கே கடை வச்சிருக்கேன். ரெண்டாயிரம் ரூபா வாடகை. தெருவில் கடை போட்டா மழை, வெய்யில்னு கிடந்தது அல்லாடணும்; அதான் தனி கடை போட்டேன். சில நாள் நல்லா காசு கிடைக்கும். சில நாள் ஒண்ணும் கிடைக்காது. காசு கிடைச்சா வீட்டில கறி சாப்பாடு; இல்லாட்டி பழைய சோறு. இப்படியே தான் ஓடுது வாழ்க்கை
ஆறு பொண்ணு கல்யாணமும் இந்த கடையை வச்சே தான் செஞ்சேன். ஒவ்வொரு கல்யாணத்துக்கும் யாருகிட்டேயாவது கடன் வாங்குவேன். அப்புறம் திருப்பி குடுத்துடுவேன்.
என் கடையை பொருத்தவரைக்கும் நான் தான் ராஜா. கவர்னரே இங்கே வந்தாலும் நான் நினைச்சாதான் தைப்பேன். ஸ்கூல் பசங்க சிலது தைச்சிட்டு காசு இல்லை அப்புறம் தர்றேன்னா விட்டுடுவேன். யாராவது காசு கம்மியா இருக்கு; குறைச்சுக்கங்கன்னு ரிக்வஸ்டா கேட்டா குறைச்சுப்பேன். என்ன அதிகமா கேக்குறேன்னு என்கிட்டே ரூல்ஸ் பேசினா விட மாட்டேன். காசு கொண்டு வந்து குடுத்துட்டு செருப்பை எடுத்துட்டு போன்னு சொல்லிடுவேன் "
செருப்பு தைக்கும் மனிதர்களில் சிலர் தைத்து முடித்த பின்தான் பணம் எவ்வளவு என்று சொல்வதும், சாதாரண வேலைக்கே மிக அதிகம் பணம் கேட்பதும் பற்றி நான் சொல்ல, " ஆமா. அப்படி கேட்குறவங்க இருக்காங்க. ஆனா எவ்ளோ நாள் அந்த பொழைப்பு ஓடும்? ஒரு தடவை போனவங்க அந்த ஆள் கிட்டே மறுபடி போக மாட்டாங்க. நாலு பேருகிட்டே அந்த ஆள் கிட்டே போகாதே கொள்ளை அடிப்பான்னு வேற சொல்லிடுவாங்க"
பேச்சு அவர் மனைவி பற்றி திரும்புகிறது. " அவங்க இறந்து நாலு வருஷம் ஆகுது. ரொம்ப நாளா சுகர் இருந்தது, அப்புறம் கேன்சர் வந்துடுச்சு. ரெண்டு லட்சத்துக்கு மேலே செலவு பண்ணேன். காப்பாத்த முடியலை. இப்போ பையன் கூட இருக்கேன். மருமகள் கையால தான் சாப்புடுறேன். காலையில் எட்டு மணிக்கு கடை திறப்பேன். அதுக்குள்ள சாப்பாடு ரெடின்னா வீட்டு சாப்பாடு. இல்லாட்டி தொந்தரவு பண்ணாம கிளம்பி வந்துடுவேன். ஹோட்டல்ல சாப்பிட வேண்டியது தான்.
சம்பாதிக்கிற பணத்தில் கால்வாசி மருமகள் கிட்டே குடுத்துட்டு மிச்ச பணம் நானே சேர்த்து வச்சிப்பேன். ஆறு பொண்ணாச்சே. ஒண்ணு மாத்தி ஒண்ணு செலவுக்கு பணம் வேணும்னு வரும், இல்லாட்டி டெலிவரி செலவு செய்ய வேண்டியிருக்கும். இப்போ தான் ஒரு பொண்னு டெலிவரி ஆகி போச்சு "
அவர்கள் தங்கும் வீடு பற்றி கேட்க, " சொந்த வீடு தான். காசு குடுத்து நிலம் வாங்கினேன். டபிள் டாகுமென்ட் ஆகி போச்சு ! 1980-ல் அந்த இடத்தை ஒருத்தருக்கு வித்துருக்கான். அதே இடத்தை 1992-ல் எனக்கு வித்தான். தெரியாம நானும் வாங்கிட்டேன். அங்கே குடிசை போட்டுக்கிட்டு இருந்தேன். எனக்கு முன்னாடி அந்த நிலத்தை வாங்கினவங்க கேஸ் போட்டாங்க. 12 வருஷம் கேஸ் நடந்தது. அவங்க கிட்டே நிலம் வாங்கின பத்திரம் மட்டும் தான் இருந்தது. என்கிட்டே பத்திரம் மட்டும் இல்லாம, வீட்டு வரி, ஈ. பி பில் கட்டினது எல்லாம் இருந்துச்சு. அதனால் என் பக்கம் தீர்ப்பு ஆகிடுச்சு “
தெருவில் கடை இருந்த போது போலிஸ் தொந்தரவு இருக்குமா என்று கேட்டதற்கு " அனேகமா போலிஸ் எங்க கிட்டே வர மாட்டாங்க. ஒரு தடவை ஒரு போலிஸ் என்னை ரோடில் கடை வச்சிருக்கேன்னு பிடிச்சு மொபைல் கோர்டுக்கு கூட்டிட்டு போயிட்டார். ஜட்ஜு என்னன்னு கேட்டுட்டு போலிசை " உனக்கு வேற கேஸ் கிடைக்கலையா? இவரை போயி கூட்டி வந்திருக்கே"ன்னு அனுப்பிட்டார். அரசியல் மீட்டிங், ஆடி மாசம் கூழ் ஊத்துறதுன்னு அப்பப்போ டொனேஷன் கேட்டு வருவாங்க. காசு இல்லைன்னு சொன்னா நம்மளை தொந்தரவு செய்ய மாட்டாங்க போயிடுவாங்க "
கிழிந்த செருப்பு தைப்பது தவிர புது செருப்பும் இவர் விற்கிறார். " சும்மா இருக்க மாட்டேன். பழசு தைக்க எதுவும் இல்லாட்டி புது செருப்பு தைச்சு வைப்பேன். ஷூ மட்டும் கால் சைசுக்கு ஆர்டர் எடுத்து தான் தைச்சு குடுப்பேன். என் மாதிரி ஆள்கிட்டே ரெடிமேட் ஷூ யாரும் வாங்குறதில்லை. என்ன எதோ எழுதிக்குறே? நான் பேசுனதை சொல்லி போலீசில் மாட்டி விட போறியா? "
இதுவரை நான் வந்தபோதெல்லாம் அவர் எதுவுமே பேசாதது பற்றி கேட்க, " ஆமா. யார்கிட்டேயும் அனாவசியமா பேச மாட்டேன். வெளி நாட்டு ஆள் வந்தால், செருப்பு தைச்சு முடிச்சோன " ரொம்ப தேங்க்ஸ்"ன்னு என் கையை பிடிச்சி குலுக்கிட்டு போறான். நம்ம ஊர் ஆளுங்க யாரும் ஒரு வார்த்தை நல்ல விதமா பேசுனது கிடையாது "
இந்த தொழிலில் அவருக்கு வேறு ஏதும் வருத்தம் இருக்கா என கேட்க, " எந்த பேங்க்கும் எங்களை நம்பி கடன் குடுக்க மாட்டேங்குது. நீ செய்ற தொழிலுக்கு லோன் தர முடியாதுங்குது. லோன் குடுத்தா, இதே தொழிலை பெருசு படுத்தலாம். இல்லாட்டி இப்படியே ஓட்ட வேண்டியது தான்.
இன்னொரு விஷயம். இனிமே இந்த தொழில் செய்ற ஆளுங்க ரொம்ப குறைஞ்சுடுவாங்க. நீ சின்ன பையனா இருந்தப்போ ஒவ்வொரு தெருவிலும் செருப்பு தைக்கிறவங்களை பார்த்திருப்பே. இப்போ நாலு தெருவுக்கு ஒரு ஆள் தான் செருப்பு தைக்கிறாங்க. அடுத்த தலைமுறை ஆளுங்க இந்த தொழிலை செய்றது சந்தேகம் தான். என் பேரன் எல்லாம் இந்த தொழில் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டான். கட்டிட வேலை செஞ்சாலே ஒரு நாளுக்கு ஐநூறு ரூபாய்க்கு மேல் கிடைக்குது. எல்லாம் அந்த வேலைக்கு போயிடுறாங்க "
பேசிக்கொண்டே எனது ஷூவை தைத்து முடித்து விட்டார். " இன்னும் ஏதாவது கேக்கணுமா?" என்றார்
" ஏன் எழுதிக்குறேன்னு கேட்டீங்க இல்லை? நீங்க பேசும்போது ஒரு விஷயம் சொன்னீங்க. வெளி நாட்டுக்காரன் உங்க வேலையை மதிக்கிறான்; உள்ளூர் ஆளு யாரும் உங்க கூட அன்பா ஒரு வரி பேசுனதில்லைன்னு. இதை படிக்கிற ஆளுங்களில் நாலு பேரு உங்க மாதிரி செருப்பு தைக்கும் ஆளுங்க கிட்டே தேங்க்ஸ் சொல்லலாம். அன்பா பேசலாம். அதுக்கு தான் நாம எழுதறது" என்றேன்
இதை நான் சொல்லி முடித்ததும், தைத்து முடித்து, என் பக்கம் தள்ளி வைத்த ஷூவை மீண்டும் தன் வசம் இழுத்து கொண்டு, வேக வேகமாக அதை நன்கு பாலிஷ் செய்ய ஆரம்பித்தார் அந்த பெரியவர்.
எங்கள் வீட்டில் அனைவரும் செருப்பு தைப்பது இவரிடம் தான். காரணம் எந்நேரமும் இவரை கடையில் பார்க்க முடியும். கேட்கும் கூலி பெரும்பாலும் சரியாக, நாம் பார்கெயின் பண்ண தேவையில்லாத படி இருக்கும்.
இவரிடம் பேட்டி எடுக்கணும் என நினைத்தாலும், அது முடியுமா என மிக தயங்கினேன். இவர் எதுவும் பேசவே மாட்டார். செருப்பு தைக்க கேட்கும் பணம் மற்றும் எப்போது வந்து வாங்கிக்கணும் என்பது தவிர வேறு வார்த்தையும் இதுவரை எங்கள் யாரிடமும் பேசியது கிடையாது.
இம்முறை காலை அலுவலகம் செல்லும் நேரம் ஷூ தைக்க சொல்லி கேட்டேன். "தைக்க நேரம் ஆகும். நாளைக்கு வந்து வாங்கிக்குங்க" என்றார். "ஷூ போடாம எப்படி ஆபிஸ் போறது? ஒரு மணி நேரம் ஆனாலும் காத்திருந்து வாங்கிக்குறேன்" என அமர்ந்து விட்டேன்.
காத்திருக்கும் நேரத்தில் " கொஞ்ச நேரம் நாம பேசுவோமா? நீங்க பேசுறதை கம்பியூட்டரில் எழுத போறேன். அதை நிறைய பேர் படிப்பாங்க " என்று சொல்லி அவரை பேச வைத்தேன். கொஞ்சமாய் பேச ஆரம்பித்து, பின் நிறையவே பேசினோம்.
குறிப்பிட்ட சாதி பிரிவினர்தான் இந்த தொழிலை அதிகம் செய்வார்களா என்று கேட்க, " ஆமா. எங்களை அருந்ததியர்னு சொல்லுவாங்க. நாங்க தான் இந்த தொழில் அதிகம் செய்வோம். என் முப்பாட்டன், தாத்தா, அப்பா எல்லாரும் இதே தொழில் தான். பையனை படிக்க வைக்கணும்னு தான் நினைச்சேன். அவனுக்கு எட்டாவதுக்கு மேலே படிப்பு வரலை. அப்புறம் இதே தொழிலுக்கு வந்துட்டான். பொண்ணுங்க ரெண்டு பி. எஸ். சி வரை படிச்சிருக்கு"
" முதலில் மயிலாப்பூரில் தெருவில் கடை போட்டிருந்தேன். அப்புறம் கவர்ன்மன்ட் பங்க் கடை வச்சி குடுத்துது. ஆளுக்கு 7,500 ரூபா குடுத்து கடைக்கு தேவையான பொருள் வாங்கிக்க சொன்னுச்சு. அதுக்குன்னு எங்க சாதி மக்கள் பாராட்டு விழா எல்லாம் எடுத்தாங்க. அப்புறம் வந்த கவர்ன்மன்ட் ரோடை விரிவு பண்ணனும்னு எல்லா பங்க் கடையும் காலி பண்ண சொல்லிடுச்சு. மனசு வெறுத்து போச்சு. அப்புறம் தான் மடிப்பாக்கத்தில இந்த கடைக்கு வந்து சேர்ந்தேன்.
ஆறு வருஷமா இங்கே கடை வச்சிருக்கேன். ரெண்டாயிரம் ரூபா வாடகை. தெருவில் கடை போட்டா மழை, வெய்யில்னு கிடந்தது அல்லாடணும்; அதான் தனி கடை போட்டேன். சில நாள் நல்லா காசு கிடைக்கும். சில நாள் ஒண்ணும் கிடைக்காது. காசு கிடைச்சா வீட்டில கறி சாப்பாடு; இல்லாட்டி பழைய சோறு. இப்படியே தான் ஓடுது வாழ்க்கை
ஆறு பொண்ணு கல்யாணமும் இந்த கடையை வச்சே தான் செஞ்சேன். ஒவ்வொரு கல்யாணத்துக்கும் யாருகிட்டேயாவது கடன் வாங்குவேன். அப்புறம் திருப்பி குடுத்துடுவேன்.
என் கடையை பொருத்தவரைக்கும் நான் தான் ராஜா. கவர்னரே இங்கே வந்தாலும் நான் நினைச்சாதான் தைப்பேன். ஸ்கூல் பசங்க சிலது தைச்சிட்டு காசு இல்லை அப்புறம் தர்றேன்னா விட்டுடுவேன். யாராவது காசு கம்மியா இருக்கு; குறைச்சுக்கங்கன்னு ரிக்வஸ்டா கேட்டா குறைச்சுப்பேன். என்ன அதிகமா கேக்குறேன்னு என்கிட்டே ரூல்ஸ் பேசினா விட மாட்டேன். காசு கொண்டு வந்து குடுத்துட்டு செருப்பை எடுத்துட்டு போன்னு சொல்லிடுவேன் "
செருப்பு தைக்கும் மனிதர்களில் சிலர் தைத்து முடித்த பின்தான் பணம் எவ்வளவு என்று சொல்வதும், சாதாரண வேலைக்கே மிக அதிகம் பணம் கேட்பதும் பற்றி நான் சொல்ல, " ஆமா. அப்படி கேட்குறவங்க இருக்காங்க. ஆனா எவ்ளோ நாள் அந்த பொழைப்பு ஓடும்? ஒரு தடவை போனவங்க அந்த ஆள் கிட்டே மறுபடி போக மாட்டாங்க. நாலு பேருகிட்டே அந்த ஆள் கிட்டே போகாதே கொள்ளை அடிப்பான்னு வேற சொல்லிடுவாங்க"
பேச்சு அவர் மனைவி பற்றி திரும்புகிறது. " அவங்க இறந்து நாலு வருஷம் ஆகுது. ரொம்ப நாளா சுகர் இருந்தது, அப்புறம் கேன்சர் வந்துடுச்சு. ரெண்டு லட்சத்துக்கு மேலே செலவு பண்ணேன். காப்பாத்த முடியலை. இப்போ பையன் கூட இருக்கேன். மருமகள் கையால தான் சாப்புடுறேன். காலையில் எட்டு மணிக்கு கடை திறப்பேன். அதுக்குள்ள சாப்பாடு ரெடின்னா வீட்டு சாப்பாடு. இல்லாட்டி தொந்தரவு பண்ணாம கிளம்பி வந்துடுவேன். ஹோட்டல்ல சாப்பிட வேண்டியது தான்.
சம்பாதிக்கிற பணத்தில் கால்வாசி மருமகள் கிட்டே குடுத்துட்டு மிச்ச பணம் நானே சேர்த்து வச்சிப்பேன். ஆறு பொண்ணாச்சே. ஒண்ணு மாத்தி ஒண்ணு செலவுக்கு பணம் வேணும்னு வரும், இல்லாட்டி டெலிவரி செலவு செய்ய வேண்டியிருக்கும். இப்போ தான் ஒரு பொண்னு டெலிவரி ஆகி போச்சு "
அவர்கள் தங்கும் வீடு பற்றி கேட்க, " சொந்த வீடு தான். காசு குடுத்து நிலம் வாங்கினேன். டபிள் டாகுமென்ட் ஆகி போச்சு ! 1980-ல் அந்த இடத்தை ஒருத்தருக்கு வித்துருக்கான். அதே இடத்தை 1992-ல் எனக்கு வித்தான். தெரியாம நானும் வாங்கிட்டேன். அங்கே குடிசை போட்டுக்கிட்டு இருந்தேன். எனக்கு முன்னாடி அந்த நிலத்தை வாங்கினவங்க கேஸ் போட்டாங்க. 12 வருஷம் கேஸ் நடந்தது. அவங்க கிட்டே நிலம் வாங்கின பத்திரம் மட்டும் தான் இருந்தது. என்கிட்டே பத்திரம் மட்டும் இல்லாம, வீட்டு வரி, ஈ. பி பில் கட்டினது எல்லாம் இருந்துச்சு. அதனால் என் பக்கம் தீர்ப்பு ஆகிடுச்சு “
தெருவில் கடை இருந்த போது போலிஸ் தொந்தரவு இருக்குமா என்று கேட்டதற்கு " அனேகமா போலிஸ் எங்க கிட்டே வர மாட்டாங்க. ஒரு தடவை ஒரு போலிஸ் என்னை ரோடில் கடை வச்சிருக்கேன்னு பிடிச்சு மொபைல் கோர்டுக்கு கூட்டிட்டு போயிட்டார். ஜட்ஜு என்னன்னு கேட்டுட்டு போலிசை " உனக்கு வேற கேஸ் கிடைக்கலையா? இவரை போயி கூட்டி வந்திருக்கே"ன்னு அனுப்பிட்டார். அரசியல் மீட்டிங், ஆடி மாசம் கூழ் ஊத்துறதுன்னு அப்பப்போ டொனேஷன் கேட்டு வருவாங்க. காசு இல்லைன்னு சொன்னா நம்மளை தொந்தரவு செய்ய மாட்டாங்க போயிடுவாங்க "
அவரது பழையசைக்கிள், விற்கும் செருப்புகள் |
இதுவரை நான் வந்தபோதெல்லாம் அவர் எதுவுமே பேசாதது பற்றி கேட்க, " ஆமா. யார்கிட்டேயும் அனாவசியமா பேச மாட்டேன். வெளி நாட்டு ஆள் வந்தால், செருப்பு தைச்சு முடிச்சோன " ரொம்ப தேங்க்ஸ்"ன்னு என் கையை பிடிச்சி குலுக்கிட்டு போறான். நம்ம ஊர் ஆளுங்க யாரும் ஒரு வார்த்தை நல்ல விதமா பேசுனது கிடையாது "
இந்த தொழிலில் அவருக்கு வேறு ஏதும் வருத்தம் இருக்கா என கேட்க, " எந்த பேங்க்கும் எங்களை நம்பி கடன் குடுக்க மாட்டேங்குது. நீ செய்ற தொழிலுக்கு லோன் தர முடியாதுங்குது. லோன் குடுத்தா, இதே தொழிலை பெருசு படுத்தலாம். இல்லாட்டி இப்படியே ஓட்ட வேண்டியது தான்.
இன்னொரு விஷயம். இனிமே இந்த தொழில் செய்ற ஆளுங்க ரொம்ப குறைஞ்சுடுவாங்க. நீ சின்ன பையனா இருந்தப்போ ஒவ்வொரு தெருவிலும் செருப்பு தைக்கிறவங்களை பார்த்திருப்பே. இப்போ நாலு தெருவுக்கு ஒரு ஆள் தான் செருப்பு தைக்கிறாங்க. அடுத்த தலைமுறை ஆளுங்க இந்த தொழிலை செய்றது சந்தேகம் தான். என் பேரன் எல்லாம் இந்த தொழில் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டான். கட்டிட வேலை செஞ்சாலே ஒரு நாளுக்கு ஐநூறு ரூபாய்க்கு மேல் கிடைக்குது. எல்லாம் அந்த வேலைக்கு போயிடுறாங்க "
பேசிக்கொண்டே எனது ஷூவை தைத்து முடித்து விட்டார். " இன்னும் ஏதாவது கேக்கணுமா?" என்றார்
" ஏன் எழுதிக்குறேன்னு கேட்டீங்க இல்லை? நீங்க பேசும்போது ஒரு விஷயம் சொன்னீங்க. வெளி நாட்டுக்காரன் உங்க வேலையை மதிக்கிறான்; உள்ளூர் ஆளு யாரும் உங்க கூட அன்பா ஒரு வரி பேசுனதில்லைன்னு. இதை படிக்கிற ஆளுங்களில் நாலு பேரு உங்க மாதிரி செருப்பு தைக்கும் ஆளுங்க கிட்டே தேங்க்ஸ் சொல்லலாம். அன்பா பேசலாம். அதுக்கு தான் நாம எழுதறது" என்றேன்
இதை நான் சொல்லி முடித்ததும், தைத்து முடித்து, என் பக்கம் தள்ளி வைத்த ஷூவை மீண்டும் தன் வசம் இழுத்து கொண்டு, வேக வேகமாக அதை நன்கு பாலிஷ் செய்ய ஆரம்பித்தார் அந்த பெரியவர்.
அவரது அன்பை, மகிழ்ச்சியை, நெகிழ்வை அவரால் அப்படி தான் காட்ட முடியும் !
****
அதீதம் ஜூலை 16, 2012 இதழில் வெளியானது
****
அதீதம் ஜூலை 16, 2012 இதழில் வெளியானது
நல்ல பதிவு
ReplyDeleteநன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)
அருமை.... மோகன்.
ReplyDeleteஉங்களுடன் நானும் அமர்ந்து கேட்டது போன்ற உணர்வு. பாராட்டுகள்.
த.ம. 2
சிறப்பான பகிர்வு...
ReplyDeleteஇந்த மனிதர்களிடம் தான் உண்மையான பலவற்றை அறியலாம்...
பகிர்வுக்கு நன்றி.
(த.ம. 3)
Very nice interview.
ReplyDeleteIntha thozhilaLikaLidam vElai mudinthavudan paNaththai veesiyeripavarkaLai paarththu manam varunthiyirukkirEn. Naan ivarkaLidam pEram pesuvathillai; paNaththai kaiyil thaan tharuvEn!
நல்ல அனுபவம்...எனக்கொரு டவுட்டு...இந்த தொழில் செய்பவர்கள் குறிப்பிட்ட இனத்தை மட்டுமே சேர்ந்தவர்கள் செய்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார் பெரியவர்...வாணியம்பாடி, ஜோலார்பேட்,போன்ற இடங்களில் முஸ்லிம்கள் தானே இந்த பிசினெஸ் செய்கிறார்கள்..தைப்பது வேறு...விற்பது வேறா...?
ReplyDeleteGreat! இந்த சாதாரண மனிதர்கள் எல்லாம் அசாதாரண மனிதர்களே!!!!
ReplyDeleteஅடுத்தமுறை இவரை சந்திக்கும்போது எங்கள் அன்பைச் சொல்லுங்கள்.
இந்த நடை உங்களோடு கூட இருந்து பேசுவதுபோல் அழகா வந்துருக்கு.
இனிய பாராட்டுகள்!
கடைசி வரி மிகவும் அருமை. அருமையான பதிவு
ReplyDeleteஇதை நான் சொல்லி முடித்ததும், தைத்து முடித்து, என் பக்கம் தள்ளி வைத்த ஷூவை மீண்டும் தன் வசம் இழுத்து கொண்டு, வேக வேகமாக அதை நன்கு பாலிஷ் செய்ய ஆரம்பித்தார் அந்த பெரியவர்.
ReplyDeleteஅவரது அன்பை, மகிழ்ச்சியை, நெகிழ்வை அவரால் அப்படி தான் காட்ட முடியும் //
அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
குறிப்பாக முடித்தவிதம் மிக மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
!
பிரமாதம் சார்!
ReplyDeleteபிரமாதம் சார்!
ReplyDeleteஅருமையான பதிவு...உண்மைதான் நான் நிறைய டிசைன் செய்கிறேன் நம்ம ஊர்க்காரங்க..பணத்துக்குதானே செய்யறான் அப்படின்னு வாங்கிட்டு கிளம்பிருவாங்க அதுவே வெளிநாட்டுக்காரங்க என் பெயர் எத்தனை வருசம் செய்யறேன் எல்லாம் கேட்டுட்டு கைகுழுக்கி பாராட்டையும் தெரிவிச்சுட்டு போவான்...இதை நாமளும் கத்துக்கனும் என்று நினைப்பேன்.
ReplyDeleteகோவை நேரம் said//
ReplyDelete//இந்த தொழில் செய்பவர்கள் குறிப்பிட்ட இனத்தை மட்டுமே சேர்ந்தவர்கள் செய்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார் பெரியவர்...வாணியம்பாடி, ஜோலார்பேட்,போன்ற இடங்களில் முஸ்லிம்கள் தானே இந்த பிசினெஸ் செய்கிறார்கள்..தைப்பது வேறு...விற்பது வேறா...?//
ஆம். விற்பது மற்ற ஆட்களும் செய்கிறார்கள். செருப்பு தைப்பது 90 % இவர்கள் தான் என சொல்லலாம்; மேலும் மற்ற சாதி காரர்கள் இந்த தொழில் செய்தாலும் இவர்கள் இன மக்கள் தான் அவரகளிடம் வேலை செய்வார்கள்; மற்றவர்கள் பணம் போட்டு வியாபாரம் செய்வார்கள் என்று சொன்னார்.
நல்ல நயமான பேட்டி.
ReplyDeleteநன்றிகள்.
கடைசி வரி - அழகு
ReplyDeleteகவனத்துக்குறிய பதிவு...! பாராட்டுகள்!எங்க கிட்ட பாராட்டு வாங்கிய ஒரே பதிவர் நீர்தான் வோய்!
ReplyDeleteகடைசி வரிகளில் நெகிழ வைத்து விட்டீர்கள்.. அருமையான பதிவு... (த.ம.10)
ReplyDeleteமனதை நெகிழ வைக்கும் மிக அருமையான பதிவு மோகன்!
ReplyDeleteஇதைப்படித்ததும்தான் என்னிடமும் ஒரு நல்லபழக்கம் இருப்பதை உணரமுடிந்தது.எல்லோருக்குமே நானும் ஒரு thankyou சொல்லிவிடுவேன்.கடையில் பொருளை வாங்கி விட்டு புறப்படும் போது தேங்ஸூங்க.. ன்னு சொல்வது வாடிக்கையாகிவிட்டது.அம்மா கற்றுக்கொடுத்த பழக்கம். இப்போ என் மகளும் பழகிவிட்டாள்.
ஒரு ஜாணு வயித்துக்குத்தான் எல்லாத்தையும் விக்கிறேன் என தனது எல்லா செயல்களுக்கும் காரணம் சொல்லாமல் வாழ நினைத்தால் வாழலாம்,,,வழியா இல்லை பூமியில் என வாழ்ந்து காட்டும் மாமனிதருக்கு வாழ்த்துக்கள்
This comment has been removed by the author.
ReplyDelete\\எனக்கு ஆறு பொண்ணு. ஒரு பையன்.\\ அஞ்சு பொண்ணப் பெத்தா அரசனும் ஆண்டி....... கை நிறைய நிரந்தர சம்பளம் வாங்குபவர்கள், ரெண்டு பேரும் வேலைக்குச் செல்பவர்கள் கூட ஒரு குழந்தைக்கு மேல் போவதற்கு தயங்கும்போது, எப்படி இவர் போன்றவர்கள், எந்த வித கியரண்டீட் வருமானம் இல்லை என்றாலும் தைரியமாக இத்தனை குழந்தைகளை பெற்று அவர்களை வாழ்வில் வெற்றிகரமாக செட்டில் செய்தும் காண்பித்து சாதிக்கிறார்கள் என்பது வியப்பாகத்தான் இருக்கிறது. Hats off to this gentleman.
ReplyDelete//உங்க வேலையை மதிக்கிறான்; உள்ளூர் ஆளு யாரும் உங்க கூட அன்பா ஒரு வரி பேசுனதில்லைன்னு. இதை படிக்கிற ஆளுங்களில் நாலு பேரு உங்க மாதிரி செருப்பு தைக்கும் ஆளுங்க கிட்டே தேங்க்ஸ் சொல்லலாம். அன்பா பேசலாம்//
ReplyDeleteஉண்மை தான் அண்ணா...
எவர் ஒருவர் நீ செய்ய தயங்கும் வேலையை செய்கிறாரோ அவரை கடவுளுக்கு சமமாக நினை... ( செருப்பு தைத்தல், பாத்ரூம் கிளின் செய்பவர் என் பலர் உள்ளனர்...)
சிறப்பான பதிவு. உங்களுக்கு அன்பான பாராட்டுகள். அந்த முதியவருக்கும்.
ReplyDeletehttp://singleclicks.blogspot.in/2006/03/6-my-cobbler-friend.html
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteஇவரிடம்தான் நானும் செருப்பு தைப்பது, ஷூ ரிப்பேர் செய்வது போன்ற பணிகளை செய்துக் கொண்டிருக்கிறேன். மற்ற கடைகளை ஒப்பிடும்போது இவரிடம் கூலி கொஞ்சம் அதிகம்தான். ஆனாலும் வேலை சுத்தமாக இருக்கும்.
என்னுடைய பழமையான பேட்டா ஷூ ஒன்று செண்டிமெண்டோடு தொடர்புடையது என்று சொன்னதும், பெரும் சிரத்தை எடுத்து சரி செய்துக் கொடுத்தார்.
முன்பு என் அண்ணனின் கடையில் வாடகைக்கு இருந்தார். இப்போது பக்கத்துவீட்டில் தான் கடை வாடகைக்கு எடுத்திருக்கிறார் :-)
சினிமா, அரசியல், கிரிக்கட், டி.வி சீரியல், சாதி, மதம் போன்றவைகளை சுற்றி வளரும் இன்றைய தமிழ் உலகில் வித்தியாசமாக பெரியவர் பங்காரு அய்யாவை பேட்டி கண்டது இதயத்தில் ஈரமுள்ள உங்களது மனிதத்தை நன்றாகவே வெளிப்படுத்துகிறது மோகன் குமார்.
ReplyDeleteநாப்பது ஆண்டுகளாய் இதே தொழிலை செய்து வரும் இவரின் தைரியமும் வைராக்கியமும் நம் அனைவருக்கும் கிட்டினால் நன்றாகவே இருக்கும். போதாதற்கு, வருமானத்தில் கால் பங்கை மருமகளிடம் கொடுக்கும் இந்த பெரிய மனது வேறு!
இன்றைய காலங்களில், மேலை நாடுகளின் மோக வேகத்தில் வெள்ளைக்கார கலாச்சாரங்களை காப்பி அடித்து போற்றும் பெரும்பான்மையான மக்கள் அவர்களின் (சமூக-தொழில்-பொருளாதார ஏற்றம்-இறக்கம் பார்க்காமல் அனைவருக்கும்) நன்றி தெரிவிக்கும் கலாச்சாரத்தை கற்றால் நல்லதாக இருக்கும்.
பங்காரு அய்யா அவர்கள் தங்கள் தொழிலில் போதிய வெற்றி பெற வாழ்த்துகிறேன். தறிகெட்டு ஓடும் இன்றை இளைய சமுதாயத்திற்கு இவர் போன்றவர்களின் கடின உழைப்பும் வைராகியமும் நல்ல எடுத்துக்காட்டு. இவரும் இவரது குடும்பமும் அனைத்தும் வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துகிறேன்.
சமூக அக்கறை மற்றும் விழிப்புணர்வூட்டும் விடயங்கள் கொண்ட பதிவு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மோகன் குமார்.
நல்ல பதிவு.நிறையவே உழைக்கின்றீர்கள் பதிவுக்காக.வாழ்த்துகக்ள்.
ReplyDeleteபுல்லரிக்க வைக்கும் முடிவுரை மோகன் சார்! எந்த பதிவையும் மிகச் சரியாய் முடித்து வைப்பதில் நீங்க டாப் என்பதை நிருபித்து விடுகிறீர்கள்! (TM 17)
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteநிறைய விபரங்கள் அறிந்துக் கொண்டேன். மிக்க நன்றி!
ReplyDeleteநன்றி வெங்கட்
ReplyDeleteமாதவி மேடம் நன்றி ; நல்ல விஷயம் நீங்கள் செய்வது
ReplyDeleteதுளசி கோபால் said...
ReplyDeleteGreat! இந்த சாதாரண மனிதர்கள் எல்லாம் அசாதாரண மனிதர்களே!!!!
அடுத்தமுறை இவரை சந்திக்கும்போது எங்கள் அன்பைச் சொல்லுங்கள்.
உண்மை தான் மேடம். அவசியம் சொல்கிறேன்
நன்றி நாகராஜன்
ReplyDeleteரமணி சார்: நன்றி மகிழ்ச்சி
ReplyDeleteஜனா சார் : நன்றி
ReplyDeleteவீடு சுரேஷ்: உண்மை உங்கள் அனுபவத்திலிருந்து சொன்னது அருமை
ReplyDeleteதருமி சார் : நன்றி ; உங்கள் cobbler குறித்த ஆங்கில பதிவும் வாசித்தேன்
ReplyDeleteதமிழ்சேட்டுபையன் said...
ReplyDeleteகவனத்துக்குறிய பதிவு...! பாராட்டுகள்!எங்க கிட்ட பாராட்டு வாங்கிய ஒரே பதிவர் நீர்தான் வோய்!
அப்படியா? உங்கள் பின்னூட்டம் மிக மகிழ்ச்சி தந்தது சேட்டு பையன் !
நன்றி பால ஹனுமான் !
ReplyDeleteஉமா மேடம் : உண்மையான தங்கள் பாராட்டுக்கு நன்றிகள் பல
ReplyDeleteதாஸ்: மிக சரியாய் சொல்லி உள்ளீர்கள் நன்றி
ReplyDeleteசங்கவி said...
ReplyDeleteஎவர் ஒருவர் நீ செய்ய தயங்கும் வேலையை செய்கிறாரோ அவரை கடவுளுக்கு சமமாக நினை...
அருமை தம்பி. மிக ரசித்தேன்
நன்றி கோவி கண்ணன். கூகிள் பஸ்ஸில் இதை பகிர்ந்தமைக்கும் தான் !
ReplyDeleteயுவா: மிக மகிழ்ச்சி. இவரை ஏற்கனவே பார்த்த, அறிந்த நீங்கள் பின்னூட்டம் போட்டது அருமையாய் இருக்கு !
ReplyDeleteமாசிலா: மிக தெளிவான, அற்புதமான பின்னூட்டம் மிக நன்றி
ReplyDeleteஸாதிகா said...
ReplyDeleteநிறையவே உழைக்கின்றீர்கள் பதிவுக்காக.
சந்தோஷமா செய்வதால், கஷ்டமா தெரியலை
நன்றி ஸ்ரீராம்
ReplyDeleteநன்றி வரலாற்று சுவடுகள். மகிழ்ந்தேன்
ReplyDeleteநன்றி TVR சார்
ReplyDeleteநன்றி அமைதி அப்பா; நீங்கள் தந்த லிங்கில் நான் மட்டுமல்ல பலரும் நிகழ்ச்சியை பார்த்தனர்
ReplyDeleteநெகிழவைத்த வித்தியாசமான பகிர்வு.
ReplyDelete//// என் கடையை பொருத்தவரைக்கும் நான் தான் ராஜா. கவர்னரே இங்கே வந்தாலும் நான் நினைச்சாதான் தைப்பேன். ஸ்கூல் பசங்க சிலது தைச்சிட்டு காசு இல்லை அப்புறம் தர்றேன்னா விட்டுடுவேன். யாராவது காசு கம்மியா இருக்கு; குறைச்சுக்கங்கன்னு ரிக்வஸ்டா கேட்டா குறைச்சுப்பேன். என்ன அதிகமா கேக்குறேன்னு என்கிட்டே ரூல்ஸ் பேசினா விட மாட்டேன். காசு கொண்டு வந்து குடுத்துட்டு செருப்பை எடுத்துட்டு போன்னு சொல்லிடுவேன் "//
ReplyDeleteஅருமையான மனிதர்! அருமையான பேட்டி! பகிர்வுக்கு நன்றி!
//இதை நான் சொல்லி முடித்ததும், தைத்து முடித்து, என் பக்கம் தள்ளி வைத்த ஷூவை மீண்டும் தன் வசம் இழுத்து கொண்டு, வேக வேகமாக அதை நன்கு பாலிஷ் செய்ய ஆரம்பித்தார் அந்த பெரியவர்.
ReplyDeleteஅவரது அன்பை, மகிழ்ச்சியை, நெகிழ்வை அவரால் அப்படி தான் காட்ட முடியும் !//
கண்கலங்குகிறது!
நான் ஏற்கனவே சொன்னது போல வார இதழ் ஒன்றைப் படித்த உணர்வு ஏற்படுகிறது.
ReplyDeleteமிகவும் சிறப்பான பதிவு! செருப்பு தைப்பவரின் கஷ்ட நஷ்டங்களை இயல்பாக கொண்டு வந்தது சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம் அண்ணா...
ReplyDeleteசிறப்பான பதிவு..முடித்த விதம் மிகவும் அருமை அண்ணா...
பதிவு அருமை.
ReplyDelete//நாலு பேரு உங்க மாதிரி செருப்பு தைக்கும் ஆளுங்க கிட்டே தேங்க்ஸ் சொல்லலாம்// நீங்க தேங்க்ஸ் சொன்னீங்களா?
சார் நான் ரொம்ப நாலா உங்க ப்ளாக் படிகுறேன் ஆனா இனைக்கு தான் கமெண்ட் போட தோணுச்சி. இந்த செக்மென்ட் தொடைர்ஹு வரணும். வாழுத்துக்கள்.
ReplyDeleteநல்ல பதிவு, முடித்த விதமும் கிளாசிக்காக இருக்கிறது.
ReplyDeleteநம்மாளுக அன்னப்பறவை மாதிரி. வெள்ளைக்காரனிடமிருந்து வீணாய் போவதற்கான வழங்கங்களை மட்டும் எடுத்துகொண்டு நல்ல வழக்கங்களை விட்டுவிடுவார்கள்.
You have done a Wonderful thing. அருமையான பேட்டி. எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். நன்றி. வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம் சகோ
ReplyDeleteவாழ்த்துக்கள்.இப்பதிவுக்கு பாராட்ட வார்த்தைகள் இல்லை. பேட்டி கொடுத்த அய்யா அவர்களுக்கும் நமது மரியாதைகள்.
" உழைப்பவரே உயர்ந்தவர்"
நன்றி
நன்றி தணல். பெயரில் தணல் இருப்பதால் சூடாக மட்டுமே இருப்பீர்களோ என நினைத்தேன். அது தவறு. குளிர்வாயும் இருப்பீர்கள் என உணர முடிகிறது
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteT.N.MURALIDHARAN said...
ReplyDeleteநான் ஏற்கனவே சொன்னது போல வார இதழ் ஒன்றைப் படித்த உணர்வு ஏற்படுகிறது
நன்றி முரளி சார். வெவ்வேறு விதமான பதிவுகள் வருவதால் அப்படி தோன்றுகிறது என நினைக்கிறேன். இந்த வார்த்தைகள் நிச்சயம் சந்தோசம் தருகிறது
நன்றி சுரேஷ்
ReplyDeleteமிக மகிழ்ச்சி நன்றி உழவன் ராஜா
ReplyDeleteஅமரபாரதி: அருமையான கேள்வி கேட்டீர்கள். நான் நிச்சயம் நன்றி சொன்னேன். குறிப்பாய் வழக்கமாய் பேசாதவர் இவ்வளவு விஷயம் மனம் திறந்து பேசியமைக்கு மிக நன்றி தெரிவித்தேன். அவரை எடுத்த போட்டாக்கள் காட்டியதும் ரொம்ப சந்தோஷம் ஆனார். (மொபைலில் தான் போட்டோ எடுத்தேன்)
ReplyDeleteஇந்த பேட்டி எடுத்து ஒரு மாதம் ஆச்சு. அதன் பின் பலமுறை வேலை இல்லா விட்டாலும் அந்த வழியே போகும்போது அவரை சந்திப்பதும் பேசுவதும் வழக்கமாகி விட்டது. அவர் வழக்கமாய் வெத்திலை போடுபவர் என்பதால், அதன் பின் ஒரு நாள் எங்கள் வீட்டிலிருந்து வெற்றிலை பறித்து கொண்டு போய் அவருக்கு தந்தேன். " வெற்றிலை கொடி எங்க வீட்டில் வைக்கிறேன். வேரோடு கொடுக்க முடியுமா" என்றார். அதனை எடுத்து ஒரு முறை தந்தேன். இப்போதெல்லாம் என்னிடம் வழக்கமாய் வாங்கும் பணத்தை விட குறைவாக தான் வாங்குகிறார். நமக்கு பழக்கமானவர்கள், அன்பானவர்கள், தெரிந்தவர்கள் என்றால் விலை சற்று மாறத்தான் செய்யும் இல்லையா?
இவர் மட்டுமல்ல, இந்த வரிசையில் வரும் ஒவ்வொரு சாதாரண மனிதர்களுடனும் ஒரு நல்ல உறவும் அவர்களின் தொடர் அன்பும் எனக்கு கிடைக்க பெறுவது இந்த தொடர் எழுதுவதில் பெரும் நிறைவை தருகிறது. உங்கள் கேள்வியால் தான் இதை சொல்ல முடிந்தது மிக நன்றி !
Arun Kumar said...
ReplyDeleteசார் நான் ரொம்ப நாலா உங்க ப்ளாக் படிகுறேன் ஆனா இனைக்கு தான் கமெண்ட் போட தோணுச்சி. இந்த செக்மென்ட் தொடைர்ஹு வரணும். வாழுத்துக்கள்.
****
நன்றி அருண்குமார். மிக மகிழ்ச்சி. பார்க்கலாம். முயலுவோம் நன்றி
நந்தவனத்தான் said...
ReplyDeleteநம்மாளுக அன்னப்பறவை மாதிரி. வெள்ளைக்காரனிடமிருந்து வீணாய் போவதற்கான வழங்கங்களை மட்டும் எடுத்துகொண்டு நல்ல வழக்கங்களை விட்டுவிடுவார்கள்.
****
மிக சரியாக சொன்னீர்கள் நந்தவனத்தான். நல்லவற்றை அவர்களிடமிருந்து எடுத்து கொள்ளாமல் போனோமே?
மிக நன்றி மகிழ்ச்சி ரத்னவேல் ஐயா
ReplyDeleteசார்வாகன்: வாருங்கள் நன்றி
ReplyDeleteஅருமையானதோர் மனிதரை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteGood one. நானும் தவறாமல் இவர்களைப் போன்றவர்களிடம் தேங்ஸ் சொல்லிவிடுவதுண்டு.
ReplyDeleteவெளி நாட்டு ஆள் வந்தால், செருப்பு தைச்சு முடிச்சோன " ரொம்ப தேங்க்ஸ்"ன்னு என் கையை பிடிச்சி குலுக்கிட்டு போறான். நம்ம ஊர் ஆளுங்க யாரும் ஒரு வார்த்தை நல்ல விதமா பேசுனது கிடையாது "
ReplyDeleteநான் படித்ததிலேயே மிக அருமையான பதிவில் இது ஒன்றாகும் ... நன்றி மறப்பது நன்றன்று என்று வள்ளுவர் சொன்ன நாட்டில் ஒரு நன்றி கூட சொல்லத் தெரியவில்லை நம்மவர்களுக்கு. இப்படியான தொழில் செய்வோரிடம் பேரம் பேசும் நம்மவர்கள் தியேட்டரில் படம் பார்க்கவோ, லஞ்சம் கொடுப்பதிலோ பேரம் பேசுவதில்லை ... !!!
இந்த மாதிரியான உழைப்பாளிக்கு லோன் கொடுக்காத பேங்கை காறித் துப்பணும் .. ஏமாத்துக் காரன் டூப்பளிக்கேட் சர்டிஃபிகேட் கொடுத்தா லட்சம் லட்சமா லோன் சாங்கசன் பண்ணும் பேங்குகளுக்கு உழைப்பாளிக்கு லோன் கொடுக்க மறுக்குது.. பெரும் தொழிலதிபராக வேண்டிய ஒரு ஆளு இவர் .. !!! ஆனால் அவர் பேச்சில் இருக்கும் நேர்மையும் அன்பும் உண்மையும் என்னைக் கவர்ந்தது .. !!!
நண்பர்களே: ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நெகிழ்வான பக்கம் இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. சில நேரங்களில் அந்த நெகிழ்வான பகுதியை ஒருவரின் எழுத்து தொட்டால், எழுதியவருக்கு கிடைக்கும் அதே நெகிழ்வு வாசிப்பவருக்கும் கிட்டுகிறது.
ReplyDeleteஅந்த பெரியவர் எனது ஷூவை தன் பக்கம் இழுத்து பாலிஷ் போட்ட போது நான் எப்படி நெகிழ்ந்து போய் அதை பார்த்து கொண்டு நின்றேனோ அதே உணர்வை உங்களில் சிலரும் பெற்றதை, கடைசி வரியை நீங்கள் குறிப்பிட்டு சொல்லும்போது உணர முடிகிறது.
எழுதியவனுக்கும், வாசிக்கும் பலருக்கும் பிடித்த மாதிரி எழுத எப்போதோ ஒரு முறை தான் வாய்க்கிறது.
nalla pathivu valthukkal
ReplyDelete//அவரது அன்பை, மகிழ்ச்சியை, நெகிழ்வை அவரால் அப்படி தான் காட்ட முடியும் !//
ReplyDeleteஉண்மை :)
//
ReplyDeleteயுவகிருஷ்ணா said...
நல்ல பதிவு.
இவரிடம்தான் நானும் செருப்பு தைப்பது, ஷூ ரிப்பேர் செய்வது போன்ற பணிகளை செய்துக் கொண்டிருக்கிறேன். மற்ற கடைகளை ஒப்பிடும்போது இவரிடம் கூலி கொஞ்சம் அதிகம்தான். ஆனாலும் வேலை சுத்தமாக இருக்கும்.
என்னுடைய பழமையான பேட்டா ஷூ ஒன்று செண்டிமெண்டோடு தொடர்புடையது என்று சொன்னதும், பெரும் சிரத்தை எடுத்து சரி செய்துக் கொடுத்தார்.
//
பகுத்தறிவு பகலவனின் தொண்டனுக்கு பிஞ்ச செருப்புல செண்டிமெண்டா?... என்னா கொடும சார் இது
கம்மண்ட் பாக்ஸ் POP-UP ல வைக்கலாமே?
ReplyDelete"செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம் கையும் காலுமே நமக்கு உதவி கொண்ட கடமையே பதவி" மக்கள் கவி பட்டுக்கோட்டையின் வரிகள் இவை... என்னுடைய அப்பாவும் ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளிதான். இவரைப்போலத்தான் கிட்டத்தட்ட என்னுடைய அப்பாவும். மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்து விடுவார். அப்போது ஒரு முறை செருப்பு த்தைக்கப்போட்டவர் ஒருவர் எங்கள் வீட்டை விசாரித்து வந்து செருப்பைக்கேட்டார். என் அப்பா திருப்பிக்கேட்டார்: உன்னை எத்தனை மணிக்கு வர சொன்னே...ன் 12 மணிக்கு... இப்போ நேரம் என்ன... ரெண்டு மணி... போய்யா என் கடையில போய் ஒக்காரு நான் சாப்பிட்டு ஒய்வு எடுத்துட்டு மூணு மணிக்கு வருவேன் அப்போ வாங்கிட்டுப்போ... எனறு அவரை விரட்டி விட்டார்.விருது நகர் ஸ்டேட் பேங்க் மூலம் 1981 இல் ஒரு பெட்டிக்கடை வைத்தோம் கூட வே ஒரு தையல் மிஷினும் இருந்தது அதை ஆக்கிரமிப்பில் எடுக்கச்சொல்லிவிட்டார்கள். அப்புறம் முத்துராமன் பட்டி ரயில்வே கேட்தான் ஒரு பெட்டி இருக்கும் அதில் சாமான் கள், தைக்கப்பட வேண்டிய, தைத்த செருப்புகள் இருக்கும். எளிமையானவர்கள் வலிமையான மனம் படைத்தவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று எண்ணுபவர்கள் யாரிடமும் கையேந்த விரும்பாதவர்கள். மதுரை நத்தம் சாலையில் எஸ் பி அலுவலகத்தின் முன் ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளி இருக்கிறார். அவருடைய பேட்டி The Hindu பத்திரிகையில் வெளி வந்தது. எங்கள் பரம்பரையோட இந்தத்தொழில் முடிந்து போகும். எல்லாமே Use and Throw டெக்னாலஜி வந்து விட்டது. குதிரைகளோடு கிருஷ்ண தேவராயர் காலத்தில் அந்தப்பக்கம் தோல் போர்க்கருவிகள் செய்து கொடுத்துக்கொண்டிருந்த ஒரு சமூகம் பிறகு விவசாய உழவடைக்கருவிகள் செய்தது போய், இறுதியில் செருப்புத்தைக்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். சுய மரியாதை உள்ளவர்கள்... தங்களின் பதிவு எனது நினைவலைகளை ஒரு சொடுக்கு சொடுக்கி விட்டது... வாழ்த்துகள் என்றென்றும்..
ReplyDeleteஎனது வலைத்தளம்: http://sugadevnarayanan.blogspot.in.