Thursday, April 7, 2011

ஐ.பி. எல் - புது விதிகளும் அணிகளும்

ஐ.பி. எல் இப்போது தான் துவங்கிய மாதிரி இருக்கு. அதற்குள், மூன்று சீசன் முடிந்து, ஐ.பி. எல் - 4 வந்து விட்டது!! இதுவரை எட்டு அணிகள் ஆடின. இப்போது கொச்சின், புனே இவையும் சேர்த்து பத்து அணிகள் !! நாளை முதல் கோலாகலமாக துவங்குகிறது ஐ.பி. எல் - 4 !

உலக கோப்பைக்கு அடுத்து உடனே வருவதால் இண்டரஸ்ட் குறையும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் சிலர். எனக்கு அப்படி தோன்ற வில்லை. இந்தியா தோற்றிருந்தால் ஒரு வேளை விருப்பம் குறைந்திருக்கலாம். ஆனால் இந்தியா உலக கோப்பை வென்றதால் ஆர்வத்துடன் மக்கள் ஐ. பி. எல் பார்ப்பர். மேலும் பள்ளி, கல்லூரி விடுமுறை நேரம் வேறு. இந்த ஐ. பி. எல் பெரிய அளவில் ஹிட் ஆகி விடும் என்றே தோன்றுகிறது !

முன்பு ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் இரு முறை விளையாடின. இம்முறை சற்று மாற்றம். இதை முழுதாய் புரிந்து கொள்வதும், புரிய வைப்பதும் சற்று சிரமம் எனினும், முடிந்த வரை முயல்கிறேன்.
 
இம்முறை அணிகள் இரு குருப்பாக இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளன.
 
Group A                                    Group B


Deccan Chargers                      Kolkata Knight Riders

Delhi Daredevils                       Kochi Tuskers Kerala

Kings XI Punjab                       Royal Challengers Bangalore

Mumbai Indians                      Rajasthan Royals

Pune Warriors India                Chennai Super Kings

மேலே உள்ள அட்டவணை படி, ஒவ்வொரு அணியும் அதே குருப்பில் உள்ள மற்ற அணிகளுடன் இருமுறை விளையாடும். அடுத்த குருப்பில் அதற்கு நேர் எதிரே குறிப்பிடப்பட்டுள்ள அணியுடன் மட்டும் இரு முறையும் மற்ற அணிகளுடன் ஒரு முறையும் விளையாடும்.

உதாரணமாய் Deccan chargers அணியை எடுத்து கொண்டால், அதே குருப்பை சேர்ந்த Delhi Daredevils, Kings Xi, Mumbai Indians, Pune Warriors ஆகியற்றுடன் இரு முறை விளையாடும். B Group-ல் நேர் எதிரே குறிப்பிடப்பட்டுள்ள Kolkatta Knight riders உடன் மட்டும் இரு முறையும் , B குருப்பில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறையும் விளையாடும். (ஸ்ஸ்..அப்பா இதுக்கே கண்ணை கட்டுதே!)

இப்படி மொத்தம் 74 மேட்சுகள் நடந்து முடிந்த பின் (அடேங்கப்பா.. ரொம்ப கொஞ்சமா இருக்கு!) செமி பைனல்/ பைனல் "மாதிரி" நாலு மேட்ச் நடக்கும். மேலே உள்ள லீகில் முதல் நாலு இடம் பெற்ற அணிகள் மட்டும் இதற்கு தகுதி பெறும். இவற்றை No 1 , No 2 என்று கொள்வோம் (ஒவ்வொரு குருப்பில் இருந்து இரண்டு அல்ல, முதல் நான்கு என்பதை கவனிக்க)

முதல் மேட்ச்: (கிட்டத்தட்ட செமி பைனல் மாதிரி)

No. 1 அணி Vs No. 2 அணி . இதில் ஜெயிக்கிற அணி பைனல் சென்று விடும்.

இரண்டாம் மேட்ச்: (கால் இறுதி மாதிரி)

No. 3 அணி Vs No. 4 அணி . இதில் தோற்ற அணிக்கு டாட்டா பை பை .. ஜெயித்த அணி அடுத்த மேட்ச் செல்லும்

மூன்றாம் மேட்ச்:

முதல் மேட்சில் தோற்ற அணியும், இரண்டாம் மேட்சில் ஜெயித்த அணியும் விளையாடும். (அடேங்கப்பா !!)

இதில் ஜெயித்த அணி பைனல் செல்லும். தோற்ற அணிக்கு டாட்டா பை பை ..

பைனல் :

முதல் மற்றும் மூன்றாம் மேட்சில் ஜெயித்த அணிகள் மோதும்.

இனி மற்ற (பழைய) விதிகள்:

1. ஒவ்வொரு அணியின் ஸ்குவாடிலும் வெளி நாட்டு வீரர்கள் பத்து பேருக்கு மேல் இருக்க கூடாது. விளையாடும் பதினோரு வீரர்களில் நான்கு பேருக்கு மேல் வெளி நாட்டு வீரர்கள் இருக்க கூடாது.

2. ஒவ்வொரு இன்னிங்க்சிலும் ஒன்பது மற்றும் பதினாறாவது ஓவரின் முடிவில் "டைம் அவுட்" என இரண்டு நிமிடம் பிரேக் தரப்படும்.

3. ஒவ்வொரு அணியும் இருபது ஓவர்களை "இவ்வளவு நேரத்திற்குள்" போட்டு முடிக்க வேண்டுமென எந்த நேர நிபந்தனையும் இல்லை !!

4. இரு முறை விளையாடும் போட்டிகளில் ஒரு  போட்டி  தன் ஊரிலும், மற்ற போட்டி பிற அணியின் ஊரிலும் நடக்கும்.
 
ஐ.பி. எல் லில் எனக்கு பிடிக்காத விஷயம் ஜவ்வு மாதிரி ரொம்பவே இழுப்பது தான். ஆரமபத்தில் சற்று சுவாரஸ்யமாய் பார்ப்போம். பின் போர் அடிச்சிடும். மீண்டும் இறுதி சுற்றுகளின் போது தான் மறுபடி பார்ப்போம். இவ்வளவு மேட்ச் நடத்த அவர்களுக்கு ஒரே காரணம் : அப்போது தான் இத்தனை வீரர்களுக்கு அவ்வளவு பணம் தர முடியும்.  நடத்துபவர்களும் காசு பார்க்க முடியும்.
 
இம்முறை அணிகள் எல்லாம் கண்டபடி மாறிடுச்சு. யார் யார் எந்த அணி என புரிவதே சற்று சிரமம் தான். அணிகள் விவரம் இதோ:

Chennai Super Kings: Dhoni (Captain), Suresh Raina, Murali Vijay, Wriddhiman Saha, Ashwin, S Badrinath, Joginder Sharma, Sudeep Tyagi, Abhinav Mukund, Aniruddha Shrikant, Ganapathi Vignesh, K Vasudevdas, Shadb Jakati, Vijaykumar Yomahesh.

Foreign Players : Albie Morkel, Michael Hussey, Dwayne Bravo, Doug Bollinger, Scott Styris, Ben Hilfenhaus, Nuwan Kulasekera, Suraj Randiv, George Bailey, Faf Du Plessis

Mumbai Indians: Sachin Tendulkar, Harbhajan Singh, Rohit Sharma, Munaf Patel, Abu Nechim Ahmed, Aditya Tare, Ali Murtuza, Ambati Rayudu, Dhawal Kulkarni, Pawan Suyal, Rajagopal Sathish, Surul Kanwar, Surya Kumar Yadav, T Suman, Yazvendra Singh Chahal

Foreign Players: Kieron Pollard, Lasith Malinga, Andrew Symonds, Davy Jacobs, James Franklin, Moises Henriques, Alden Blizzard, Dilhara Fernando

Royal Challengers Bangalore: Virat Kohli, Zaheer Khan, Saurabh Tiwary, Cheteshwar Pujara, Abhimanyu Mithun, Mohammed Kaif, Arun Karthik, CM Gautham, Abrar Kazi, Mayank Agarwal, Bharath Narayan, Raju Bhatkal, Sreenath Aravind, Ryan Ninan, Asad Khan Pathan

Foreign Players: Daniel Vettori (Captain), Tillekratne Dilshan, AB de Villiers, Dirk Nannes, Charl Langeveldt, Luke Pomersbach, Johan van der Wath, Rilee Rossouw, Nuwan Pradeep, Jonathan Vandiar

Team Kochi: VVS Laxman, S Sreesanth, R P Singh, Parthiv Patel, Ravindra Jadeja, Ramesh Powar, R Vinay Kumar, B Akhil, Chandan Madan, Deepak Chowghule, Kedar Jadhav, Raiphi Gomez, Sushant Marathe, Tanmay Srivastava, Y Gnanswara Rao, Yashpal Singh, Prashant Padmanabahan,

Foreign Players: Jayawardene (Captain), Brendon McCullum, Steven Smith, Muralitharan, Brad Hodge, Thisara Perera, Steve O'Keefe, Owais Shah, Michael Klinger, John Hastings

Team Pune: Yuvraj Singh (Captain), Uthappa, Ashish Nehra, Murali Kartik, Abhishek Jhunjhunwala, Bhuvenshwar Kumar, Dheeraj Jadhav, Ekalavya Dwivedi, Ganesh Gaikwad, Harpreet Singh Bhatia, Harshad Khadiwale, Kamran Khan, Manish Pandey, Mithun Manhas, Mohnish Mishra, Rahul Sharma, Sachin Rana, Shrikant Wagh, Shrikant Mundhe, Imtiyaz Ahmed.

Foreign Players: Graeme Smith, Tim Paine, Angelo Mathews, Nathan McCullum, Callum Ferguson, Wayne Parnell, Mitchell Marsh, Jerome Taylor, Alfonso Thomas, Jesse Ryder

King XI Punjab: Dinesh Karthik, Abhishek Nayar, Praveen Kumar, Piyush Chawla, Bhargav Bhatt, Bipul Sharma, Love Ablish, Mandeep Singh, Nitin Saini, Paras Dogra, Paul Valthaty,Shalabh Srivastava, Siddharth Chitnis, Sunny Singh, Vikramjeet Malik, Amit Yadav,

Foreign Players: Adam Gilchrist (Captain), Shaun Marsh, David Hussey, Stuart Broad, Ryan Harris, Dimitri Masceranhas, Nathan Remington.

Kolkara Knight Riders: Gautam Gambhir(Captain), Yusuf Pathan, Manoj Tiwary, L Balaji, Jaidev Unadkat, Iqbal Abdulla, Laxmi Ratan Shukla, Manvinder Singh Bisla, Pradeep Sangwan, Rajat Bhatia, Sarabjit Ladda, Shami Ahmed, Shreevats Goswami,

Foreign Players: Kallis, Brad Haddin, Shakib Al Hassan, Brett Lee, Morgan, Ryan ten Doeschate, James Pattinson

Deccan Chargers: Shikhar Dhawan, Ishant Sharma, Pragyan Ojha, Amit Mishra, Manpreet Gony, Akash Bhandari, Anand Rajan, Ankit Nagendra, Arjun Yadav, Ashish Reddy, Bharat Chipli, DB Ravi Teja, Harmeet Singh Bansal, Ishank Jaggi, Ishan Malhotra, Jaydev Shah, Kedar Devdhar, Sunny Sohal

Foreign Players : Kumar Sangakkara (Captain), Pietersen (Injured), Cameron White, JP Duminy, Dale Steyn, Daniel Christian, Chris Lynn, Juan Theron, Michael Lumb

Delhi Daredevils: Sehwag (Captain), Irfan Pathan, Naman Ojha, Agarkar, Ashok Dinda, Umesh Yadav, Venugopal Rao, Aavishkar Salvi, Prashant Naik, Rajesh Pawar, Robin Bist, S Sriram, Tejashwi , Yadav, Unmukt Chand, Varun Aaron, Vikash Mishra, Vivek Yadav, Yogesh Nagar, Shahbaz, Nadeem

Foreign Players: David Warner, James Hopes, Morne Morkel, Aaron Finch, Mathew Wade, Roloef van der Merwe, Andrew McDonald, Travis Birt, Collin Ingram, Robert Frylinck

Rajasthan Royals: Rahul Dravid, Pankaj Singh, Deepak Chahar, Aakash Chopra, Abhishek Raut, Aditya Dole, Ajinkya Rahane, Amit Paunikar, Ashok Menaria, Deepak Chahar, Dishant Yagnik, Faiz Fazal, Nayan Doshi, Pinal Shah, Samad Fallah, Siddharth Trivedi, Stuart Binny, Amit Singh, Dinesh Salunkhe, Swapnil Asnodkar, Sumit Narwal, Ankeet Chavan

Foreign Players: Shane Warne(Captain), Shane Watson, Ross Taylor, Johan Botha, Collingwood (Injured), Shaun Tait

**
இதுவரை கிரிக்கெட்டில் விருப்பமில்லாத, என்னை கிரிக்கெட் பார்க்க விடாத  என் பெண்ணும் மனைவியும் உலக கோப்பை முதல் கிரிக்கெட் விரும்பிகளாகி விட்டார்கள் ! இப்போது அவர்கள் முழு மேட்சும் பார்க்க, நான் கணினி அல்லது புத்தகத்தில் பாதியும், டிவியில் மீதியுமாய் கழிக்கிறேன். இப்படியும் மாற்றங்கள் நிகழுமென நினைத்ததே இல்லை. 

இம்முறை ஆளுக்கு ஒரு அணி தங்கள் favourite ஆக தேர்ந்தெடுத்துள்ளோம். சுவாரஸ்யதிற்காக தான் ! "என் டீம் தான் சூப்பர்" என பந்தா விடலாம், மற்றவரை கிண்டல் செய்யலாம் ..!  சண்டையில் அய்யாசாமிக்கு அடி விழாமல் இருந்தால் சரி :))

நான் ஏதேனும் விதிகள் தவற விட்டிருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே..!

13 comments:

  1. இதுவரை கிரிக்கெட்டில் விருப்பமில்லாத, என்னை கிரிக்கெட் பார்க்க விடாத என் பெண்ணும் மனைவியும் உலக கோப்பை முதல் கிரிக்கெட் விரும்பிகளாகி விட்டார்கள் ! இப்போது அவர்கள் முழு மேட்சும் பார்க்க, நான் கணினி அல்லது புத்தகத்தில் பாதியும், டிவியில் மீதியுமாய் கழிக்கிறேன். இப்படியும் மாற்றங்கள் நிகழுமென நினைத்ததே இல்லை.


    ......How sweet! :-)

    ReplyDelete
  2. ம்ம்ம் அசத்துங்க அசத்துங்க....

    ReplyDelete
  3. //ஐ.பி. எல் - 4
    உலக கோப்பைக்கு அடுத்து உடனே வருவதால் இண்டரஸ்ட் குறையும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் சிலர்//

    சார், அதில் நானும் ஒருவன். நான் ஒரு கோணத்தில் யோசித்தேன். தாங்கள் மறு கோணத்தில் யோசித்துள்ளீர்கள்.

    விதிகளையும் அணி வீரர்களின் பட்டியலையும் விவரமாக வெளியிட்டுள்ளீர்கள்.

    ****************

    //என் பெண்ணும் மனைவியும் உலக கோப்பை முதல் கிரிக்கெட் விரும்பிகளாகி விட்டார்கள்!//

    எறும்பூர கல்லும் தேயும் என்பார்கள்.
    எப்படியோ,அவர்களையும் மாற்றி விட்டீர்கள்:-))))!

    *****************

    //இந்த ஐ. பி. எல் பெரிய அளவில் ஹிட் ஆகி விடும் என்றே தோன்றுகிறது!//

    உங்கள் எண்ணம் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. // இம்முறை ஆளுக்கு ஒரு அணி தங்கள் favourite ஆக தேர்ந்தெடுத்துள்ளோம். //

    ஆனா.. அந்த மூணுமே சி.எஸ்.கே தானாமே ?

    ReplyDelete
  5. நன்றி சித்ரா
    **
    நன்றி மனோ
    **
    நன்றி அமைதி அப்பா. உங்கள் பதிவு வாசிச்சேன். மாற்று கருத்து இருந்ததால் தான் அங்கு பின்னூட்டம் இடலை.

    நிச்சயம் குடும்பத்தாரை நான் மாற்றலை. அவர்களாவே மாறிட்டாங்க. (நம்புங்க சார்!!)
    **
    மாதவா: ஆளுக்கு தனி தனி அணி தான் favourite. ஆயினும் சென்னை ஜெயித்தால் எல்லாரும் மகிழ்வது இயற்கை தானே !! நீங்க ஆந்திராவில் இருப்பதால் டெக்கன் சார்ஜர்ஸ் சப்போர்ட் செய்யறீங்களோ ?

    ReplyDelete
  6. @ Mohankumar

    அப்படி இல்லை.. இது வரைக்கு CSK சப்போர்ட்டு பண்ணினேன்..
    டோனி இருக்குற வரைக்கும் CSK தான்..

    ReplyDelete
  7. இப்போது அவர்கள் அவ்வப்போது மேட்சும் பார்க்க, நான் கணினி அல்லது புத்தகத்தில் பாதியும், கழிக்கிறேன்.

    சேம் சேம் பப்பி சேம்.

    ReplyDelete
  8. Anonymous6:44:00 AM

    நல்ல தகவல் தான், ஆனால் ஐபிஎல் வருவாய் எல்லாம் வருமான வரி செலுத்தப்படாமல் போய்விடுகின்றதே என்றொரு தகவல் மனதை வருத்தமடையச் செய்கின்றது.

    ReplyDelete
  9. நல்ல தகவல் அருமையான பதிவு

    இதையும் பாருங்கள் live Watch Online TV-RADIO

    ReplyDelete
  10. Only 8 players in Rajasthan Royals ?

    ReplyDelete
  11. ”அய்யாசாமிக்கு அடி விழாமல் இருந்தால் சரி!” அச்சச்சோ இது தான் கொஞ்சம் பயமா இருக்கு மோகன்.

    ReplyDelete
  12. எனக்கு கொஞ்சம் திகட்டுவது போல்தானிருக்கிறது. But CSK விளையாடும் மேட்ச்களை மட்டும் பார்ப்பேன்:)))

    Go CSK go:)))

    ReplyDelete
  13. மாதவா: என்னது நீங்க சொல்றத பார்த்தா தோனிக்காக சென்னையை சப்போர்ட் பண்ற மாதிரி தெரியுது. சென்னையை தோனி இல்லாட்டி கூட சப்போர்ட் பண்ண வேணாமா? (நம்ம ஊரு என்பதால்)
    **
    ஜோதிஜி: நீங்களுமா? மகிழ்ச்சி
    **
    இக்பால்: அப்படியா? புது தகவலாக உள்ளது. இது பற்றி படிக்கணும். நன்றி
    **
    சரவணன் : நன்றி
    **
    வெங்கட்: நன்றி
    **
    வித்யா: ஆமாம். சென்னை மேட்ச் மட்டும் பார்ப்பது நல்லது தான். நம்மளை மாதிரி இருக்காதீங்க. (நானும் கொஞ்ச நாளில் வெறுத்து போய் பாக்க மாட்டேன். பின் நாக் அவுட்டில் பார்க்க ஆரம்பிப்பேன்)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...