தாம்பரம் கிறித்துவ கல்லூரி உள்ளே சென்றுள்ளீர்களா? சென்னையிலேயே இருந்தும் இன்னும் நீங்கள் செல்ல வில்லை என்றால், ஒரு வித்தியாச அனுபவத்தை தவற விடுகிறீர்கள். முழுக்க முழுக்க மரங்களும் பசுமையும் விரிந்து கிடக்க, வெய்யில் பெரும்பாலான இடங்களில் தரையை தொடாது. இரு புறமும் மரங்கள் சூழ, பூக்களும் இலைகளும் கொட்டியவாறே இருக்கும் அந்த சாலைகளில் நடப்பது அற்புதமான அனுபவம். செந்தில் குமார் என்கிற என் நண்பர் அங்கு படித்த போது அடிக்கடி செல்வேன். ஒரு முறை இருவரும் நடந்து கொண்டிருந்த போது, திடீரென என் கையை அழுத்தி பிடித்து நிறுத்தினார். அப்புறமாய் தான் காட்டினார்..பாம்பு ஒன்று ஓடி கொண்டிருந்தது.. இதற்கெல்லாம் பயப்படாதீர்கள். ஆயிரக்கணக்கான மாணவர்களும் ஆசிரியர்களும் அங்கு தான் உள்ளனர். அவசியம் ஒரு முறை செல்லுங்கள்.
ஒட்டு போடாத நம் பிரதமர்
நம் பிரதமர் மன்மோகன் சிங் அசாமிலிருந்து மேல் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த அஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் அவர் ஓட்டு போடாதது பிரச்னையை கிளப்பி உள்ளது. நம் தமிழ் நாட்டில் ரஜினி தேர்தல் அறிவித்ததும் வெளிநாடு சென்றாலும், தேர்தல் அன்று சரியாக வந்து ஓட்டு போட்டு விடுவார். இம்முறை வைகோ கூட தேர்தலில் போட்டி இல்லை என தெரிந்ததும் அமெரிக்கா சென்று விட்டார். ஆயினும் தேர்தல் அன்று வந்து ஓட்டு போட்டார். நமக்கெல்லாம் முன் மாதிரியாக இருக்க வேண்டிய பிரதமரே ஓட்டு போடாதது வருத்தமாக தான் உள்ளது. (நிற்க. என் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு ஓட்டு போட்டு விட்டேன். அடையாள அட்டை மட்டும் இன்னும் வரலை:((
பார்த்த படம்: கோல்மால் 2
அஜய் தேவ்கன் நடித்து நான் பார்த்த படம் இது ஒன்றே. கதையில் இரண்டு அண்ணன்-தம்பி குரூப் உள்ளனர். இரு குழுவுமே சின்ன சின்ன தில்லுமுல்லுகள் செய்யும் ஆட்கள் தான். இந்த இரண்டு குருப்புக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. அஜய் தேவ்கன் குருப்பில் தோழியாக கரீனா கபூர் உள்ளார் (இவர் தான் ஒரே ஆறுதல்.. நமக்கு!) மனைவி இல்லாத அஜய்யின் தந்தை, கணவர் இல்லாத எதிர் அணியினரின் அம்மாவை மணக்கிறார். இதனால் இரண்டு குழுவும் அண்ணன் தம்பியாக ஒரே வீட்டில் வாழ வேண்டிய சூழல். பிறகென்ன அடிதடி தான். இவர்கள் எப்படி ஒன்றாக ஆனார்கள் என்பதே கதை. சிரிப்பு படமென்று நினைத்து அவர்கள் எடுத்திருந்தாலும் நமக்கு சிரிப்பு வரலை; தூக்கம் தான் வந்தது. A film to avoid !
ஐ. பி. எல் கார்னர்
ஒவ்வொரு ஐ.பி. எல் லும் ஒரு சில புதிய வீரர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. அந்த வகையில் இம்முறை அசத்துபவர் வல்தாட்டி. மும்பையை சேர்ந்த இவர் பஞ்சாபிற்கு துவக்க ஆட்டக்காராக ஆடுகிறார். சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளை உரித்து தள்ளி விட்டார். சேவாக் ஆட்டத்தை நினைவு படுத்துகிற அதிரடி ஆட்டம் இவருடையது. டேல் ஸ்டெயின், இஷாந்த், மார்கல் போன்ற சர்வேதச ஆட்ட கார்ரர்களின் ஒவ்வொரு பந்தையும் பயமின்றி விளாசுகிறார். இதே போல் தொடர்ந்து consitent ஆக விளையாடினால், விரைவில் இந்திய அணியில் எதிர்பார்க்கலாம்.
கொல்கத்தா தற்போது நன்கு விளையாட ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. ஷாரூக் எத்தனை முறை தான் ஏமாறுவார்? செமி பைனலாவது வந்தால் மேற்கு வங்க மக்களுக்கு ஆறுதலாயிருக்கும்.
அனைத்து அணிகளும் ஒரு முறை வென்றும் ஒரு முறை தோற்றும் இருக்கிறார்கள்.சச்சின் 20-20-ல் முதல் செஞ்சுரி அடித்தும் அந்த மேட்சில் மும்பை தோற்றது சற்று வருத்தமே.
நீதி மன்ற அவமதிப்பு என்பது பல நேரங்களில் ஒரு கிரிமினல் குற்றமாக கருதப்படும். நீதிமன்றம் போட்ட உத்தரவை கீழ்படியாதது, நீதிமன்றம் நடக்கும் போது அந்த அறையில் அமர்ந்து பேசுவது, மொபைல் போன் அப்போது அலறுவது எல்லாமே இதில் அடங்கும். இதற்கான தண்டனையை சம்பந்தப்பட்ட நீதிபதியே தருவார். சிவில் வழக்குகளில் தங்களுக்கு சாதகமான ஆர்டர் வந்த பின்னும், எதிரணி அதன் படி நடக்கா விடில், நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தே வழிக்கு கொண்டு வருவார்கள்.
எஸ். எம். எஸ். கார்னர்:
If you are able to state a problem, it can be solved.
ரசிக்கும் விஷயம் : எஸ். ராமகிருஷ்ணன் எழுத்து
சுஜாதா இருக்கும் வரை அவர் மேல் இருந்த "கிரேஸ்" குறையவே இல்லை. அவர் மறைவுக்கு பின், வாழும் எழுத்தாளர்களில் என்னை அதிகம் கவர்வது எஸ். ராமகிருஷ்ணன் தான். கட்டுரை, கதை இந்த இரண்டிலுமே மிக மென்மையாகவும் செழுமையாகவும் உள்ளது அவர் எழுத்து. நாம் அனைவரும் சில விஷயங்களில் ஒரே மாதிரி உணர்வுகள் அல்லது அனுபவங்கள் பெறுவோம். ஆனால் சிலர் தான் அந்த உணர்வுகளை எழுத்தில் சரியான முறையில் கொண்டு வருவார்கள். எஸ். ராமகிருஷ்ணன் எழுத்து அத்தகையதே. இவரிடம் ஆச்சரியப்படும் இன்னொரு விஷயம் நன்றாக பேசவும் செய்வது ! சுஜாதா பேச்சு கூட எழுத்து போல சுவாரஸ்யமாக இருக்காது. சிறிது நகைச்சுவை இருந்தாலும் எழுத்தில் இருப்பது போன்ற தாக்கம் அவரது பேச்சில் எதிர் பார்க்க முடியாது. ஆனால் எஸ். ராமகிருஷ்ணன் எழுத்து போலவே தான் பேச்சும் உள்ளது. இது பெரிய விஷயம் என்று தான் சொல்ல வேண்டும் (எழுத்தாளர்கள் நல்ல பேச்சாளர்களாயும் இருப்பது அபூர்வம்) மேலும் இவர் தன் சக எழுத்தாளர்களின் நல்ல எழுத்துக்களை, புத்தகங்களை எப்போதும் பரிந்துரைக்கிறார். முழு நேர எழுத்தாளராகவும் முழுமையான எழுத்தாளராகவும் இருக்கும் எஸ். ரா ...உங்களை நினைத்து பெருமை கொள்கிறோம் !
வானவில் : பல்சுவை
ReplyDeleteஎஸ்.ரா : புனைவின் எல்லைகளை தாண்டிப் போகும் பயணம் அவரது எழுத்து. அவருடைய யாமமும், பதினெட்டாம் நூற்றாண்டின் மழையும் படித்திருக்கிறேன். அற்புதம்!
ஓட்டு போட்டாச்சா? சந்தோஷம்! :))
ReplyDeleteஐஐடி போயிருக்கேன் (சுத்திப் பாக்கத் தாங்க!) கிருஸ்துவ கல்லூரி போனதில்ல ஜி ஒரு நாள் விஸிட் போட்டுடலாம் :))
வானவில்லின் வண்ணங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி மோகன்.
ReplyDeleteகவித்தன்மையை உரைநடைக்குள் புகுத்தி பயணிப்பவர் "எஸ்.ரா"
ReplyDelete//நமக்கெல்லாம் முன் மாதிரியாக இருக்க வேண்டிய பிரதமரே ஓட்டு போடாதது வருத்தமாக தான் உள்ளது//
ReplyDeleteஇதே போல் நாமும் ஒட்டு போடாமல் இருந்திருந்தால் இவரால் எப்படி பிரதமர் ஆகி இருக்க முடியும்?
http://aathimanithan.blogspot.com/2011/04/blog-post_15.html
யாருக்கு ஒட்டு போட்டீங்க ?
ReplyDeleteஅதையும் சொன்னாத்தான் நம்புவோம்..
எஸ்.ரா : ம்ம்ம்ம்ம்ம்:))))
ReplyDeleteஎஸ்.ராவிற்கு :-)
ReplyDelete//சிரிப்பு படமென்று நினைத்து அவர்கள் எடுத்திருந்தாலும் நமக்கு சிரிப்பு வரலை//
ReplyDeleteஹிந்தியில் அடிக்கடி வரும் நகைச்சுவை படங்கள் நம்மை பெரிதாக கவர்வதில்லை. ஒரு சில படங்களை தவிர. காரணம் ஏகப்பட்ட நடிகர்கள் ஒரே படத்தில். மொக்கை ஜோக்குக்கு கூட அரங்கில் வேண்டுமென்றே சிரிக்கும் வடநாட்டு மக்கள். பீப்ளி லைவ் படம் பார்க்கையில் "எவ்வளவு சீரியஸ் சப்ஜெக்டை இப்படி நையாண்டி செய்துவிட்டார்களே" என்று எண்ணினேன். ஆனால் அரங்கில் அளவுக்கு மீறி சிரித்தார்கள். நான் ரசிக்கவில்லை. நகைச்சுவைக்கு என்றும் தமிழ் படம்தான் பெஸ்ட்.
அப்படினா, காலேஜ்களுக்குள்ளே வெளியாட்கள் இவ்வளவு ஈஸியா போய்வரலாமா? கெடுபிடிகள் கிடையாதா? ஆச்சர்யம். (தனியார் கல்லூரிகளில்தான் செக்யூரிட்டிகள் உண்டோ?)
ReplyDeleteசென்னை கல்லூரிகள் என்றால், ‘அந்தச்’ சம்பவம், சமீபத்திய பஸ் கலாட்டா சம்பவங்கள்தான் நினைவுக்கு வந்து கிலி தருகின்றன. ஆனாலும், இத்தகைய இயற்கைச் சூழல் என்றால் துணியலாம்!! :-))))
//நீதி மன்ற அவமதிப்பு என்பது பல நேரங்களில் ஒரு கிரிமினல் குற்றமாக //
வாசிக்க நல்லாத்தான் இருக்கு ஆனா, நடைமுறையில அப்படியொன்றும் எதிர்த்தரப்பினர் அசருவதாகத் தெரியவில்லை!! (எங்க குடும்பத்துல ஒருத்தரோட கடைக்கு வாடகை அதிகரித்து தீர்ப்பு வழங்கி 15 வருஷமாச்சு. ம்ஹும்.. ஒண்ணும் நடக்கலை!! ) ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டால் அதை செயல்படுத்த வைப்பதற்கு, இன்னொரு வழக்கு என்பது, சாமான்ய மக்களுக்குக் கூடுதல் செலவு/நேரவிரயம் தருவதோடு, நீதித்துறையின்மீதும் நம்பிக்கை தளர வைக்கிறது. கட்டப்பஞ்சாயத்துகள் பெருகவும்.
//எழுத்தாளர்கள் நல்ல பேச்சாளர்களாயும் இருப்பது அபூர்வம்//
ReplyDeleteஉண்மை.
//முழு நேர எழுத்தாளராகவும் முழுமையான எழுத்தாளராகவும்//
நல்லாருக்கே!! :-)))
எஸ் ரா-வின் எழுத்துக்கள் எனக்கும் பிடிக்கும். பகிர்வுகள் யாவும் நன்று.
ReplyDeleteஎனக்கும் கிறிஸ்துவ கல்லூரி ”மிகவும்” பிடிக்கும்.. எம்.சி.சிண்ணா சும்மாவா..
ReplyDeleteஎனக்கும் கிறிஸ்துவ கல்லூரி ”மிகவும்” பிடிக்கும்//
ReplyDeleteஅது ஒரு அழகிய கனாக் காலம் சார் :)
எஸ் ராமகிருஷ்ணன் பற்றிய வரிகள் சிறப்பாக இருந்தன... Great Writer!
ReplyDeleteநன்றி பாலாஜி. நீங்கள் சொன்ன புத்தகங்கள் நான் இனி தான் வாசிக்கணும். நன்றி
ReplyDelete**
ஷங்கர்: மகிழ்ச்சி. நிச்சயம் MCC-க்கு சேர்ந்து போகலாம். எப்ப போகலாம்னு சொல்லுங்க
**
நன்றி வெங்கட்
**
நாக சுப்பிரமணியன்: அழகாய் சொன்னீர்கள் நன்றி
**
ஆதி மனிதன்: நன்றி,. நீங்கள் எழுதிய பதிவை வாசித்தேன் . இருவருக்கும் இவ்விஷயத்தில் ஒரே கருத்து தான்
**
மாதவன்: நோ நோ அதெல்லாம் தப்பு
**
வித்யா: நன்றி
முரளி: வாங்க .. எஸ். ரா பத்தி எழுதினா தான் வருவீங்க போல :))
ReplyDelete**
நன்றி சிவகுமார். உங்கள் பின்னூட்டம் ரசித்தேன். இது மாதிரி பல புது தகவல் தெரிய வருவது தான் ப்ளாக் எழுதுவதன் நன்மை
**
ஹுசைனம்மா: யாராவது தெரிந்தவர்கள் பேரை சொல்லி தான் போக முடியும். எனக்கு தெரிந்த பேராசிரியர் ஒருவர் அங்குள்ளார். அவரை பார்க்க சொல்லி விட்டு சென்று வரலாம்
நீதி மன்ற அவமதிப்பு பற்றி நீங்கள் சொன்னது.. ம்ம் :((( அது ப்ராக்டிகல் சைட். நான் எழுதும் குட்டி பாராவில் அடக்க முடியாது
நன்றி ராம லட்சுமி
ReplyDelete**
கேபிள்: நீங்களும் அங்கே தான் படிசீங்களா? மகிழ்ச்சி
**
நேசமித்திரன்: வாங்க சார். ரொம்ப சந்தோசம். நீங்கள் அதே கல்லூரியா?
**
ஜனா சார்: நன்றி மகிழ்ச்சி