Saturday, April 9, 2011

அன்னா ஹசாரே உண்ணா நோன்பு ஒரு நேரடி அனுபவம்



டில்லியில் இருக்கும் எனது நண்பன் தேவா தனியார் நிறுவனத்தில் சட்ட ஆலோசகர். அன்னா ஹசாரே உண்ணா நோன்பில் கலந்து கொண்ட அவரது நேரடி அனுபவமும், அது குறித்த எண்ணங்களும் இதோ: 

டெல்லியில் இருக்கும் "ஜந்தர் மந்தர்" அந்தக்கால காலம் காட்டும் கருவிகளை கொண்டது. கடந்த நான்கு நாட்களாய் அது இன்றைய கால கட்டம் எதை நோக்கி நகர்கிறது என்பதனை காட்டுகிற இடமாய் மாறிவிட்டது. அது அன்னா ஹசாரே அவர்களால் நிகழ்ந்த அதிசயம். நானும் அந்த அதிசயத்தில் கலந்து கொண்ட மகிழ்ச்சியில் இதை உங்களோடு பகிர்கிறேன்.

ஊழல் சாத்தானின் லஞ்ச பழத்தை இந்தியா விழுங்கும் வேளையில் அதை தொண்டையிலேயே நிறுத்த முயன்ற நீலகண்டனை போல, இன்று அன்னா ஹசாரே! அவர் அதற்கு சொல்லுகிற மருந்து லோக்-பால் சட்டம். அந்த சட்டத்தை எழுத அரசாங்கம் கமிட்டி அமைத்த பின் அன்னா ஹசாரே அவரது நான்கு நாள் உண்ணா விரதத்தை கைவிட்டு இருக்கிறார். இது சர்ச்சில் சொன்னது போல "Now this is not the end. It is not even the beginning of the end. But it is, perhaps, the end of the beginning."

அந்த உண்ணா விரத இடத்தில ஏறக்குறைய 10000 பேராவது, அன்னா ஹசாரே உண்ணா விரதம் முடித்த வேளையில் இருந்திருப்பார்கள். அது ஒரு திருவிழா இடமாய் இருந்தது. ஆங்கங்கே வெவ்வேறு குழுவினர் ஆடி கொண்டும், கோசம் எழுப்பிக்கொண்டும் இருந்தார்கள். ஒரு குழு குப்பை வண்டியை இழுத்துக்கொண்டு சுற்றிவந்தார்கள் - ஊழல்வாதிகளை இதில் போடுங்கள் என்ற கோஷத்துடன்! Eruption against corruption என்ற கோஷம் கவர்வதாய் இருந்தது. அதில் பாதி பேர் கல்லூரி மாணவர்கள். பள்ளி குழந்தைகள் அவர்களது பள்ளி சீருடையில் வந்திருந்தார்கள் (அல்லது அவர்களின் பள்ளி கொடி பிடித்து வந்தார்கள்). அன்னா -விற்காய் jail - இக்கு கூட போவேன் என ஒரு பள்ளிசெல்லும் பாப்பா சொன்னது அனைவரையும் நிமிர செய்தது.

முன்னால் இராணுவத்தினர் வந்த போது கைத்தட்டுகள் அந்த இடத்தில அதிர்ந்தது (இன்னும் நாம் ஊழல் இல்லா இடமாய் நம்புவது ராணுவதினரைதான் போலும்). சில பேர் அவர்களது பிள்ளைகளை கூட்டி வந்து இருந்தார்கள் (நம் பிள்ளைகளின் காலத்திலாவது....?). எல்லா வயதினரும் எல்லா வகுப்பினரும் ஒருமித்து எழுப்பிய குரல் அரசாங்கத்தை drafting committee - ஐ அமைக்க செய்திருக்கிறது.

இதையெல்லாம் பார்க்கையில் தோன்றுவது இதுதான்:

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?

இந்த லோக் பால் சட்டம் வந்து விட்டால் எல்லாம் சரியாகி விடுமா? இல்லை - அது ஒரு ஆயிரம் மைல் பயணம், இது அதன் முதல் தப்படி. அது தப்பான அடியாய் இல்லாமல் போனதில், அரசாங்கத்தின் கன்னத்தில் விழுந்த அடியாய் ஆனதில், மகிழ்ச்சியே! நாம் இந்த விஷயம் எப்படி பயணிக்க போகிறது என்பதை கவனிப்போம், எழுதுவோம்.

இந்த போராட்டம், முயற்சி வெற்றிபெற நாம் என்ன செய்யலாம்:

1. April 13 - இல் வாக்கு அளிக்கலாம்
2. நீங்களும் உங்கள் ஊரில் நடக்கும் அன்னா ஹசாரே ஊர்வலதிலோ அல்லது உண்ணாவிரத்திலோ கலந்து கொள்ளலாம்.
3. Traffic Light - ஐ jump பண்ணும்போது போலிசுக்கு லஞ்சம் கொடுக்காமல் Fine-ஐ கொடுத்து ரெசிப்ட் வாங்கிகொள்ளலாம்
4. லஞ்சம் கொடுக்கவோ வாங்கவோ மாட்டேன் என முடிவுக்கு வந்து விடலாம்.
5. கடைசி நிமிட அல்லாடல் இல்லாமல், சரியாய் திட்டமிட்டு செயல்படலாம். கடைசி நிமிடத்தில் அரசாங்க அதிகாரியிடம் போய் ஏதேனும் உதவியோ/ approval - ஓ கேட்டு போகும்போதுதான் உங்கள் நேரம் இன்மையை பயன்படுத்தி பணம் கேட்க அவர்களால் முடிகிறது (பெரும்பாலான நேரங்களில்)
6. இன்னும் என்ன செயலாம் என இந்த பதிவில் உங்கள் கருத்தை பதியலாம்!

எழுதியவர் : தேவ குமார்

11 comments:

  1. ம்ம்.. இந்தியாவிலும் புரட்சி எட்டிப்பார்க்கிறதுபோல. மகிழ்ச்சி.

    வக்கீல் சார், நீங்க லோக் பால் சட்டம் என்றால் என்ன, அதன் விளைவுகள் என்னன்னு ஒரு பதிவு எழுதுங்களேன்? (விரிவாப் படிச்சு தெரிஞ்சுக்க ஆசை; ஆனா நேரம் இல்லை இப்போ, அதான்)

    ReplyDelete
  2. RTI பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் கேட்டது கிடைக்க வில்லையென்றால் RTI மூலமாக அது ஏன் என்று சட்ட பூர்வமாக தெரிந்து கொள்ளலாம். சில நேரம் RTI மூலம் பதில் வரும் முன்பே அரசு (அதிகாரிகள்) பயந்து கொண்டு உங்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து விடுகிறது.

    ReplyDelete
  3. சிறப்பான தொகுப்பு. நாம் என்ன செய்யலாம்.. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  4. முத‌ன் முறையாக‌ ஹிந்தி நியூஸ் சேன‌ல்க‌ளை நினைத்து கொஞ்ச‌மாவ‌து ச‌ந்தோஷ‌ப்ப‌ட‌ முடிந்த‌து

    ReplyDelete
  5. இந்த பதிவிற்காக உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.

    ReplyDelete
  6. உங்கள் நண்பர் எழுதிய இந்த பகிர்வுக்கு மிக்க நன்றி. லோக்பல் இப்போது நோடிஃபை ஆகிவிட்டது. இன்னும் இது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். பார்க்கலாம் – அதற்குள் இந்த அரசியல்வாதிகள் சாக்கடை மனதில் இதை அழிக்க வேறு எதாவது குதர்க்க வழிகள் தோன்றாமல் இருக்கட்டும்.

    ReplyDelete
  7. பதிவு அருமை!
    என்னைப் பொறுத்தவரை நான் என் மனசாட்சிப்படி நேர்மையாக வாழ்கிறேன். இது இருந்தாலே நீங்கள் சொன்னவை தானாக வந்துவிடும்!!

    ReplyDelete
  8. //Traffic Light - ஐ jump பண்ணும்போது போலிசுக்கு லஞ்சம் கொடுக்காமல் Fine-ஐ கொடுத்து ரெசிப்ட் வாங்கிகொள்ளலாம்//

    ஆரஞ்சு சிக்னல் வரும்போதே வண்டியை வேகம் குறைத்து.. ரெட் சிக்னலை தாண்டாமல் இருப்போமே.. -- வருமுன் காப்போம்..

    ReplyDelete
  9. உனது நண்பனைப் பற்றி சொல், உன்னைப் பற்றி சொல்கிறேன் என்பார்கள். அது போலவே, உங்களைப்போல் உங்கள் நண்பரும் மிகச் சிறப்பாக சமூகச் சிந்தனையோடு எழுதுகிறார். பாராட்டுக்கள்.

    middleclassmadhavi said...
    //பதிவு அருமை!
    என்னைப் பொறுத்தவரை நான் என் மனசாட்சிப்படி நேர்மையாக வாழ்கிறேன். இது இருந்தாலே நீங்கள் சொன்னவை தானாக வந்துவிடும்!//

    இதுதான் நான் சொல்ல விரும்புவதும்.

    ReplyDelete
  10. பின்னூட்டமிட்ட, தமிழ் மணம் மற்றும் தமிழில் வாக்களித்த நண்பர்களுக்கு தேவ குமார் சார்பாக நன்றி

    ReplyDelete
  11. we can simplify registration procedures and rules in govt proceedings(consumer friendly like that of private)
    intensify punishment for bribing and being bribed
    let us stop our petty ways of bribing at ground level - at home level.. by adopting simple marriages and other celebrations.
    And pl cast upon us your knowledge of Lokpal, janpal bills

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...