நான் வாழ்வில் கொஞ்சமேனும் வளர்ந்திருந்தால் அதற்கு முக்கிய காரணம் - இதோ இப்படத்திலிருப்போர் தான்.
அதிகம் படிக்காத அம்மா - அப்பா செல்லம் மட்டுமே கொடுத்து வளர்த்தனர். பெற்றோர் படிக்க சொன்னதும் இல்லை; அடித்ததும் திட்டியதும் இல்லை.
ஆனால் அவர்கள் பங்கையும் சேர்த்து - சிறு வயதில் என்னை ரவுண்டு கட்டி அடித்தவர்கள் இவர்கள் தான்.
சின்ன அண்ணன் (புகைப்படத்தில் எனக்கு இடப்புறம் அமர்ந்திருப்பவர்) அதிகம் அடிக்க மாட்டார். மொத்தம் 2 முறை தான் அடித்துள்ளார். அந்த இரு முறையும் தவறு என் மீது தான் என்று அவர் அடித்த பின் உணர்ந்திருக்கிறேன். அதனால் அவர் அடித்தால் - எனக்கு கோபம் வராது - நம் மேல் தான் தப்பு - அதான் அடிக்கிறார் என்று அந்த சின்ன வயதில் நினைப்பேன் (சின்ன அண்ணன் - தற்போது பெங்களூரில் ஒரு மருந்து கம்பனியில் ஜெனரல் மேனேஜர் ஆக உள்ளார் ); என்னை சட்டம் படிக்க சொன்னதும், பின் ACS படிக்க சொல்லி பணம் கட்டி சேர்த்து விட்டதும் இவரே. பொறுமையின் சிகரம். ஏ..........ராள நண்பர்கள் இவருக்கு.
அக்கா தற்போது திருச்சியில் அரசு துறையில் மருத்துவராக உள்ளார். எனக்கு முன்னர் அக்கா பிறந்ததால் - முதல் இருவர் (அண்ணன்கள்) மிக நெருக்கமாகவும், நானும் அக்காவும் ரொம்ப தோஸ்த் ஆகவும் இருப்போம். ஆயினும் அக்கா - மாலை நேரம் நான் விளையாட போய் விட்டு ஆறு மணிக்கு மேல் தாமதமாய் வந்தால் - ஒரு நிமிடத்துக்கு ஒரு அடி என ஸ்கேலால் கையில் அடிக்கும் ! மருந்து கடை வைத்திருந்த அப்பா -அண்ணன்கள் இருவரையும் மருத்துவர் ஆக்க ஆசைப்பட்டார். ஆனால் மருத்துவம் படித்தது அக்கா மட்டும் தான்.
வலது ஓரம் அமர்ந்திருக்கும் பெரிய அண்ணன் தான் எங்கள் மொத்த குடும்பத்தின் தலைவர். முன் ஏர் போகிற வழியே பின் ஏர் போகும் என்கிற மாதிரி குடும்பத்தில் இவர் முதலில் படித்ததால் தான் அதன் பின் உள்ள அனைவரும் படித்தோம். சின்ன வயதில் எங்களுக்கு இவரை கண்டால் டெர்ரர் ஆக இருக்கும். இவரிடம் நான் வாங்கிய அடிகள் கொஞ்ச நஞ்சமல்ல - விதம் விதமாய் அடி வாங்கியிருக்கிறேன். பள்ளி காலத்தில் இவரை மிக அதிகம் வெறுத்திருக்கிறேன்.
எங்கள் குடும்பத்தில் ஒரு பழக்கம் உண்டு. பள்ளி இறுதி ஆண்டு முடிக்கிற வரை தான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிசர் ஆக இருப்பார்கள். கல்லூரி சேர்ந்ததுமே " தோளுக்கு மிஞ்சினால் தோழன் " என்ற பழமொழியை உதிர்த்து விட்டு - ரொம்ப ப்ரீ ஆக விட்டு விடுவார்கள். அதன் பின் அண்ணன்களும் கூட சிறந்த நண்பர்கள் ஆகி போனார்கள்
சிறு வயதில் இவர்கள் என்னை அடித்தது கொஞ்சம் கூட சரியல்ல - இதனை வளர்ந்த பின்- அண்ணன்களுக்கு சொல்லி புரிய வைத்தேன். அவர்கள் தங்கள் குழந்தைகளை அடிக்காமல் தான் வளர்த்து வருகிறார்கள் :)
இன்று உடன் பிறந்தோர் அனை வரும் திருமணம் ஆகி ஒவ்வொரு பக்கம் இருக்கிறோம். எங்கள் பெற்றோர் பெரிய அண்ணன் குடும்பத்துடன் தஞ்சையில் இருக்கிறார்கள்
ஒரு காலத்தில் ஒவ்வொரு வருட தீபாவளி, பொங்கல், தமிழ் வருட பிறப்பு மூன்று பண்டிகைக்கும் எங்கள் குடும்பங்கள் அனைத்தும் ஒன்று கூடுவோம். எங்களுக்குள் பல கேம்ஸ் ஷோக்கள் நாங்களே நடத்துவோம்
காலப்போக்கில் பண்டிகைகள் அவரவர் இல்லத்தில் கொண்டாட துவங்கி விட்டோம்
பல ஆண்டுகள் கழித்து இந்த தீபாவளிக்கு மீண்டும் எல்லா குடும்பங்களும் ஒன்று கூடுகிறோம்.. நினைத்தாலே மகிழ்ச்சியாய் இருக்கிறது !
கடவுள் எப்போதும் எனது தகுதிக்கு மீறிய மகிழ்ச்சியையும், நல்ல குடும்பம் மற்றும் நண்பர்களையும் உடன் இருக்கும் படி பார்த்து கொள்கிறார் !

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்:)!
ReplyDeleteஎக்ஸ்டெண்டட் ஃபேமிலியுடன் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். வீட்டில் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்து(க்)கள்.
ReplyDeleteகுடும்ப ஒன்று கூடல் நிறைய கொசுவத்திகளை ஏத்திரும். இதுலே இருக்கும் சந்தோஷமே தனி!!!
வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎங்களுடைய வீட்டிலும் வருடம் ஒருமுறை பொங்கலுக்கு ஒன்று கூடுவோம். அந்த இனிமை வருடம் முழுதிற்கும் போதும் போல் தோன்றும். இன்றைய காலகட்டத்தில் இப்படியாக ஏதேனும் முறை வகுத்துக்கொண்டால்தான் உறவுகள் ஒன்று கூட முடியும்... வாழ்த்துக்கள்......
ReplyDeleteமுன் கூட்டியே வாழ்த்துகள் சொல்லி விடுகிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள்....
ReplyDeleteஅனைவரும் சேர்ந்து கொண்டாடுவது - அந்த சந்தோசமே தனி... வாழ்த்துக்கள் அனைவருக்கும்...
ReplyDeleteஎல்லாருக்கும் பின்னாடியும் இப்படி வெளியில் தெரியதா பல அன்பு கரங்கள் ஒளிந்துக்கொண்டு இருக்கிறது...
ReplyDeleteதீபாவளியை சிறப்பாக குடும்பத்துடன் கொண்டாடுங்கள்...
குடும்பத்துடன் கொண்டாடும் தீபாவளி சிறக்க வாழ்த்துகள்
ReplyDeleteகுடும்பத்துடன் தீபாவளியை இனிமையாக கொண்டாட மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteஇந்த தீபாவளி இனிதாய் நிறைவாய் அமைய வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய குடும்ப தீபாவளி நல்வாழ்த்துக்கள் மோகன்..
ReplyDeleteபின்னூட்டம் இட்ட நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி ; தங்களுக்கும் குடும்பத்தார்க்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்
ReplyDelete'சகோதரர்கள் ஒற்றுமையாக இருக்க என்ன வழி?' என்று ஒரு புத்தகம் அவசியம் எழுதவும் சார்.
ReplyDeleteஉங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!