Friday, October 18, 2013

யுவக்ரிஷ்ணா - அதிஷா

மோகன்குமாரின் டயரி குறிப்பு 

இன்று வாழ்வில் ஒரு மறக்க முடியாத நாள்.

புழுதிவாக்கம் பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் TN  முரளி தரன் - லட்சுமணன் பற்றி பேசிய போது மேடையில் அமர்ந்த படியே கண் கலங்கி விட்டேன். பல மாணவர்களும் அழுகிற என்னையே பார்ப்பதால் கூச்சத்தில் நெளிய, ஆசிரியர் ரவி  குடிதண்ணீர் தந்து அனுப்பி என்னை ஆசுவாசப்படுத்தினார் .

போலவே நான் பேசும்போது லட்சுமணன் பற்றி கொஞ்சம் பேசதுவங்கியதுமே - பேச முடியாமல் தொண்டை கமறி நின்று விட்டேன். பின் எப்படியோ பேசி சமாளித்தேன்.

விழாவில் பேசிய யுவகிருஷ்ணா (எமோஷனல் மற்றும் உண்மையான பேச்சு- அற்புதம்!) , முத்து குமாரசாமி (சிறிய சிறப்பான பேச்சு) , TN முரளி தரன் (சார்.. நீங்க இவ்ளோ நல்லா பேசுவீங்களா ?) பேசிய ஒவ்வொரு வரியையும் வீடியோ எடுத்து பகிர்ந்திருந்தால் பார்க்கும் பலரும் நெகிழ்ந்திருப்பர்.

எப்போதும் பப்ளிசிட்டிக்கு அலைகிறான் என்று சொல்லும் நல்லவர்களுக்கு பயந்தே இன்று காமிரா எடுத்து செல்ல வில்லை.. யுவகிருஷ்ணா மன்னிக்க !

இந்தியா என்றால் லஞ்சம், ஊழல் - அடுத்தவனுடன் ஓடி போன பொண்டாட்டி போன்ற நெகடிவ் செய்திகளை தவிர்த்து - நம் நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களையும் எழுத வேண்டும்; படிப்போருக்கு ஏழைகள் சில பேருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை விளைவிக்க வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே வீடுதிரும்பலில் எங்கள் நண்பர்கள் செய்யும் உதவிகள் பற்றி அவ்வப்போது எழுதுகிறோம்.. இங்கு எழுதுவதை தவிர்த்தும்  பல நல்ல விஷயங்களை - உங்களுக்கு பரிச்சயமான சில நண்பர்கள் குழுக்களுடன் இணைந்து செய்து வருகிறோம்.... காலப்போக்கில் அவையும் தெரிய வரும்போது உங்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன !

தூற்றுவோர் தூற்றினாலும், போற்றுவோர் போற்றா விட்டாலும் - வருடா வருடம் புழுதிவாக்கம் பள்ளியில் 10th, 11th, 12th - முதல் மூன்று மதிப்பெண் பெறுவோருக்கு இணைந்து பரிசுகள் வழங்க - திரு. முத்துக் குமாரசாமியும் நானும் முடிவு செய்துள்ளோம்...

மனமிருந்தால், நண்பர்கள் சேர்ந்து முயன்றால் -  நம்மால் சமூகத்தில் ஒரு சிறு நல்ல மாறுதலை விளைவிக்க முடியும்......

நாம் இணைந்து பணியாற்ற வேண்டிய ஒரே இடம் - ஏழை மாணவர்கள் கல்விக்காக மட்டுமே !

எப்போதெல்லாம் - தகுதி வாய்ந்த ஏழை மாணவர்களுக்கு உதவி வேண்டுமோ அப்போதெல்லாம் இனி வீடுதிரும்பலில் எழுதுவேன். விருப்பமும், மனமும் இருப்போர்   நேரடியாக அவர்களுக்கு உதவலாம்.
******************
இனி இன்றைய விழா பற்றி யுவக்ரிஷ்ணா மற்றும் மோகன் குமார் முகநூலில் எழுதியதன் சுருக்கம் இதோ

யுவகிருஷ்ணா எழுதியது : 



இன்று ஒரு நெகிழ்ச்சியான நாள்.

நான் படித்த பள்ளியில் நடந்த ஒரு பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டேன். பள்ளிக்காலத்தில் எனக்கு யூனிஃபார்ம் உடையாக இருந்த வெள்ளைச்சட்டை, காக்கி பேண்ட் அணிந்துச் சென்றேன்.

“இவரை மாதிரி நீங்களும் வரணும்” என்று தலைமையாசிரியர் சொல்லும்போது கூச்சத்தில் நெளிந்தேன்.

தொழிலதிபர் முத்துக்குமாரசாமி மற்றும் தோழர் வழக்கறிஞர் Mohan Kumar ஏற்பாட்டில் நடந்த விழா இது.

எங்கள் பகுதியில் எங்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாய் வளர்ந்து இன்று கல்வித்துறையில் உயரதிகாரியாய் பணியாற்றும் அண்ணன் டி.என்.முரளிதரன் அவர்களோடு மேடையில் அமர்ந்திருந்தேன்.

இருபது ஆண்டு காலத்தில் என்னுடைய பள்ளி பெற்றிருக்கும் சிறப்புகளை காணும்போது கிடைத்த உணர்வுகள் கலவையானது. நாங்கள் வைத்த மரங்கள் இன்று பெரிதாய் வளர்ந்து பள்ளி வளாகம் முழுமைக்கும் நிழல் தருகிறது. பள்ளியை ஒட்டி அச்சுறுத்திக்கொண்டிருந்த மரணக்குட்டை இப்போதில்லை. நானெல்லாம் எட்டாவது வரைக்கும் டவுசர்தான். இப்போது ஆறாம் வகுப்பு மாணவனே டீசண்டாக பேண்ட் போட்டு, டக் இன் செய்து ஐடி கார்ட் மாட்டி பளிச்சென்று இருக்கிறான். எல்லாருக்கும் பெஞ்ச், டேபிள் வசதி இருக்கிறது. நாங்களெல்லாம் தரையில் உட்கார்ந்து படித்தோம்.

ஆறாங்கிளாஸ் படிக்கும்போது என்னுடைய வகுப்பில் 106 பேர் இருந்தார்கள். இப்போது பள்ளியின் ஒட்டுமொத்த மாணவ மாணவிகளின் எண்ணிக்கையே 800க்குள்தான். அப்போதெல்லாம் இறுதித்தேர்வில் 300 தாண்டுவதற்குள் நாக்கு தள்ளிவிடும். இப்போது அசால்டாக 400 தாண்டுகிறார்கள். போன ஆண்டு முதல் மதிப்பெண் 490ஆம்.

நம்மை நமக்கு அடுத்தத்தடுத்த தலைமுறை தாண்டி புலிப்பாய்ச்சலாக ஓடிக்கொண்டிருப்பதை காண்பது எவ்வளவு மகிழ்ச்சியை தருகிறது. மீண்டும் இன்று என்னை தந்தை பெரியார் அரசினர் உயர்நிலைப்பள்ளியின் (இப்போது மேனிலை) வாண்டுப்பையனாக உணரச்செய்த தோழர் மோகன்குமாருக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.
*********
மோகன் குமார் எழுதியது 

முகம் பார்க்காமலே - சண்டை போட்டு விட்டு, நேரில் சந்தித்த பின் நட்பாவது இணையத்தில் மட்டும் தான் சாத்தியம் என நினைக்கிறேன்.

யுவகிருஷ்ணாவுடனான பழக்கம் முதலில் எனக்கு சண்டையில் தான் துவங்கியது - பின் சில காலம் கழித்து கேபிள் சங்கர் இல்ல விழா ஒன்றில் எனதருகருகில் அமர்ந்து பேசியவாறே யுவகிருஷ்ணா சாப்பிடும் போது அவரது பேச்சில் அவர் மனதை ஓரளவு புரிந்து கொள்ளமுடிந்தது. அதன் பின் துளசி மேடம் இல்ல திருமண விழா அல்லது வேறு எங்கு சந்தித்தாலும் ப்ளாகில் சீனியர் என்ற முறையில் நிறைய அறிவுரை சொல்வார்...

வழக்கறிஞர் நண்பன் லட்சுமணன் நினைவாக நடந்த இந்த விழாவிற்கு அதிஷாவையும் வரவைக்க முயன்றேன். காலை நேரம் என்பதால் - அவரால் வரமுடியவில்லை என்று நினைக்கிறேன்.

நட்பின் பெருமை சொன்ன இன்றைய விழாவிற்கு அதிஷா வந்திருந்தால் விழா முடிந்ததும் - நிச்சயம் லக்கியை கட்டியணைத்திருப்பார்.

இப்படிக்கு

லக்கி- அதிஷாவை மறுபடிவிழாக்களில் ஒன்றாக பார்க்க விரும்பும் ஒருவன். .....

16 comments:

  1. //நம்மை நமக்கு அடுத்தத்தடுத்த தலைமுறை தாண்டி புலிப்பாய்ச்சலாக ஓடிக்கொண்டிருப்பதை காண்பது எவ்வளவு மகிழ்ச்சியை தருகிறது. //

    ஆம். என் பெண்ணை பார்க்கும்போது இதனை உணர முடிகிறது

    ReplyDelete
  2. லக்கி: இன்று நீங்கள் பேசும்போது எங்கள் பள்ளியில் என்னை இப்படி சிறப்பு விருந்தினராக அழைக்க வில்லையே என்று நினைத்த படி அமர்ந்திருந்தேன்..

    ReplyDelete
  3. //லக்கி- அதிஷாவை மறுபடிவிழாக்களில் ஒன்றாக பார்க்க விரும்பும் ஒருவன்//

    ஏன் என்னாச்சு அந்த ஒட்டிப்பிறந்த ரெட்டையர்களுக்கு?

    பள்ளிக்கூட நாட்களை நினைக்கும்போது மனதில் ஒரு பரவசம் ஏற்படுவதை தவிர்க்கவே முடியாது!!!

    ReplyDelete
    Replies
    1. மனமிருந்தால், நண்பர்கள் சேர்ந்து முயன்றால் - நம்மால் சமூகத்தில் ஒரு சிறு நல்ல மாறுதலை விளைவிக்க முடியும்......///வெற்றிபெற வாழ்த்துக்கள்

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  4. Anonymous5:27:00 AM

    வணக்கம்
    நான் படித்த பள்ளியில் நடந்த ஒரு பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டேன். பள்ளிக்காலத்தில் எனக்கு யூனிஃபார்ம் உடையாக இருந்த வெள்ளைச்சட்டை, காக்கி பேண்ட் அணிந்துச் சென்றேன்.

    கடந்த கால நினைவுகளை ஒருகனம் மீட்டுப்பார்கவைத்த பதிவு .
    பதிவு நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. நண்பர்களுக்கு... நட்புக்கு... மனமார்ந்த வாழ்த்துக்கள்... தொடர்க...

    ReplyDelete
  6. எதிர்பாரா விதமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.வேடிக்கை பார்க்கத்தான் வந்தேன். அரசு பள்ளி என்றாலே அதன் குறைகள்தான் பெரிதாகத் தெரியும். அங்கு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உள்ள சவால்கள் அதிகம் என்பது வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு தெரியாது . பெரும்பாலும் வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருப்பவர்களின் குழந்தைகளே இங்கு பயில்கின்றன. பெற்றோரின் கவனிப்பு குறைவாகவே உள்ள நிலையில் இம் மாணவர்களைக் ஆசிரியர்கள் கையாள்வது எளிதல்ல.மாணவனின் கற்றல்,ஒழுக்கம் இன்ன பிற விஷயங்கள் பற்றி பெற்றோரை அழைத்து சொல்லி சரிசெய்து விட முடியாது.
    இந்த சூழலில் மாணவர்கள் இவ்வளவு மதிப்பெண் பெறுவது சாதாரண விஷயம் அல்ல .அந்த மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக தானாக முன்வது பரிசுகள் வழங்கி சிறப்பித்த உங்களையும் முத்துக்குமாரசாமி அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
    அரை டிராயர் போட்டுகொண்டு(நான் அப்போதுதான் பேண்டுக்கு மாறி இருந்தேன்) நாங்கள் விளையாடியபோது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த யுவ கிருஷ்ணாவை ஒரு பத்திரிகையாளராக ஒரே மேடையில் சந்திப்பேன் என்று இரண்டு நாட்களுக்கு முன்புவரைகூட நினைக்கவில்லை ,. என்னை அவரே அடையாளம் கண்டு கொண்டதில் மிக்க மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்தேன்.
    இந்த நிகச்சியைப் பற்றி நானும் எழுதலாம் என்றே இருக்கிறேன்.
    மேடையில் பேச வாய்ப்பளித்த தலைமை ஆசிரியருக்கும் உங்களுக்கும் நன்றி

    ReplyDelete
  7. முகநூல் போல ப்ளாகிலும் லைக் பட்டன் இருந்திருக்கலாம். இங்கு போடப்பட்ட சில காமன்டுகளுக்கு நிறைய லைக் விழுந்திருக்கும் :)

    ReplyDelete
  8. நெகிழ்ச்சியான பதிவு மீண்டும் பள்ளிக்கூடம் போகலாம் .

    ReplyDelete
  9. Anonymous6:16:00 PM

    முதல் விசயம் மற்றவர்கள் கலாய்க்கிறார்கள் என்பதற்காக படம் எடுக்காமல் இருப்பது நல்லதேயில்லை. நான் உட்பட மற்றவர்கள் உங்களை கழுவி ஊற்றினாலும் உங்கள் எழுத்துக்களை மதிக்கிறோம். அது கலாய்த்தல். அதற்காக புகைப்படம் எடுக்க மாட்டேன் என்பது தவறு. நீங்கள் பாட்டுக்கு படங்களாக எடுத்து பகிருங்கள். நாங்கள் மனதார பார்த்து ரசித்து விட்டு கொல்லைப்பக்கம வந்து கிண்டலடிக்கிறோம். அதனை ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்டு ரசியுங்கள். மறுபடியும் என்னைப் போன்ற உங்கள் ரசிகர்களுக்காக தொல்லைக்காட்சி மற்றும் வானவில்லை எழுத துவங்குங்கள்

    ReplyDelete
  10. நெகிழ வைத்த பகிர்வு! நல்ல காரியம்! தொடருங்கள்! வாய்ப்பு கிடைக்கையில் உங்கள் தொண்டில் சிறு அணிலாய் பங்கு பெற காத்திருக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  11. ஆசிரியர் என்ற முறையில் உங்கள் சேவை தொடர வாழ்துத்துக்கள்.

    ReplyDelete
  12. நண்பரே,
    நீங்கள் செய்யும் நல்ல காரியங்களுக்கு என்னையும் கணக்கில் கொள்ளவும்,


    அந்த் பள்ளி பற்றி தகவல் தந்த நண்பர் முரளி அவர்களுக்கு நன்றி
    அன்புள்ள

    சந்தான க்ரிஷ்ணன்

    ReplyDelete
  13. அழகிய நினைவலைகள்!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...