இரு மாதங்களுக்கு முன் வீட்டில் LG டிவி ரிப்பேர் ஆனது. LG டிவி ஆதரைஸ்ட் செர்விஸ் டீலர் கேட்டு ஜஸ்ட் டயல்க்கு போன் செய்தோம். அவர்கள் சில எண் தந்தனர் அப்புறம் பேசிக்கொள்ளலாம் என்று நாம் இருக்க - நமது தேவையை வேறு ஒரு நிறுவனத்துக்கு தந்து விட்டனர் ஜஸ்ட் டயல் காரர்கள்.
பின் போரூர் ஜீ எலக்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனத்திலிருந்து தாங்களே போன் செய்து " உங்க டிவி நாங்க சரி செய்து தருகிறோம் " என்று கூறினர். சரி என்றதும் அன்றே வந்து பார்த்து விட்டு "பிக்ச்சர் டியூப் மாற்ற வேண்டும்" என்று கூற ஒரு சில நாள் யோசனைக்கு பின் "சரி மாற்றிடுங்க " என்று சொன்னோம்.
ஒரு நாள் மாலை வந்து பிக்ச்சர் டியூப் மாற்றி விட்டு சில ஆயிரம் பணம் வாங்கி கொண்டு கிளம்பினார் அந்த நிறுவனத்தை சேர்ந்த அராபத் என்கிற இளைஞர்
அடுத்த சில மாதங்களில் மீண்டும் டிவி ரிப்பேர். இப்போது அவருக்கு போன் செய்தால் " சனிக்கிழமை வருகிறோம் " என்றார். சனிக்கிழமை காலை, மதியம் மாலை என மருந்து சாப்பிடுற மாதிரி 3 வேளை போன் செய்தால் " அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கிருப்போம் " என்றார். வரவில்லை
ஞாயிறு காலை - மீண்டும் படையெடுப்பு. காலை, மதியம், மாலை " அங்கே தான் சார் வந்து கிட்டே இருக்கேன் ; பெரிய கேட் இருக்குமே அந்த வீடு தானே? நீங்க வீட்டுலே தான் இருக்கீங்க ?"
சனி, ஞாயிறு - இரண்டு நாள் எங்கும் போகாமல் காத்திருந்தால் வரவே இல்லை.
மீண்டும் திங்கள் மதியத்துக்கு மேல் போன் செய்தால் " சார் உங்களுக்கு டைம் நமக்கு செட் ஆவாது ; நீங்க வேலைக்கு போறீங்க வேற ஆள் வச்சு பாத்துக்குங்க" என்றார்
"கண்டிப்பா வர்றீங்கன்னா வார நாளா இருந்தா கூட போன் செய்யுங்க; எனக்கு வீட்டுக்கும் ஆபிசுக்கும் பக்கம் தான்; நான் ஆபிசில் இருந்து கிளம்பி வந்துடுறேன் "
" இல்லீங்க; நீங்க வேற ஆள் வச்சு பாத்துக்குங்க "
"தம்பி நீங்க பார்த்த வேலை - இப்போ மறுபடி ரிப்பேர். " என்றால்
" டிவி சுத்தமா ஆப் ஆகுதுன்னா போர்ட் ப்ராப்ளம் சார் ; பிக்ச்சர் டியூப் ப்ராப்ளம் இல்லை; அது என் பிரச்சனை இல்லை; என்னால வர முடியாது" என்றார்
" ஏம்பா இதை சனிக்கிழமை காலையிலே நான் முதல்லே சொல்லும்போதே சொல்ல வேண்டியது தானே ? 2 நாளு இதோ வர்றேன் ; அதோ வர்ரேன்னு சொல்லிட்டு இப்ப இப்படி சொன்னா என்ன அர்த்தம் ? " என்றால் - படக்கென்று போனை கட் செய்தார்
கடை எண்ணை பிடித்து அவர் ஓனருக்கு போன் செய்தால் " நான் டெக்னிசியன் கிட்டே பேசிட்டு சொல்றேன் " என்றவர்
மறுநாள் போன் செய்து " சார் அது எங்க ப்ராப்ளம் இல்லை ; நாங்க வர முடியாது ; நீங்க வேற ஆள் வச்சு பாத்துக்குங்க " என்றார்
" சார் நீங்க பார்த்த வேலை- இன்னொரு ஆள் கிட்டே ஏன் சார் போகணும் ? " என்றால் பதிலே இல்லை.
" சார் பிசினஸ் செய்றீங்க ; ஒரு வேலையை ஒத்துகிட்டு ஏன் சார் பாதியில் மாட்டேன்னு சொல்லணும் ? நீங்க பண்ண வேலை - இப்ப ஏன் வேற ஆள் கிட்டே போகணும்? போர்ட் பிரச்சனைன்னா நான் பணம் தர்றேன்னு சொல்றேனே "
ஊஹூம் .. நோ ரெஸ்பான்ஸ்
எனது கேள்விகள் :
1. தானாகவே போன் செய்து " நாங்க செர்விஸ் செய்து தருகிறோம் " என்று வந்து விட்டு, பல ஆயிரங்கள் கறந்து எதோ ஒரு மாதிரி செட் செய்து விட்டு - பின் மறுபடி ரிப்பேர் என்றதும் " இதோ வர்றேன் - அதோ வர்றேன் " என இழுத்தடித்து பின் வரவே மாட்டேன் என்று சொல்லும் இத்தகைய மனிதர்களை (??) என்ன செய்வது ?
2. ஒரு கமிட்மென்ட் என்று சொன்னால் - அதை செய்ய முடியாதவர்கள் - குறைந்த பட்சம் " சார் இன்னிக்கு வர முடியலை - நாளை வருகிறேன் " என்று சொல்ல முடியாதவர்கள் பிசினசில் எப்படி வெற்றியடைய முடியும் ?
3. வீட்டுக்கு வராமலே - மறுபடி எங்கள் டிவியை பார்க்காமலே - உங்கள் டிவி யில் உள்ள பிரச்சனை எங்களால் வந்தது அல்ல என்று சொல்லும் வித்தை எப்படி சாத்தியமாகிறது ?
4. முதலில் பிக்சர் டியூப் பிரச்சனை என்றபோது அன்றே ஓடி வந்தவர்கள் (காசு வருதுல்லே !) - ரிப்பேர் என்றதும் இழுத்தடிக்கும் நிலையை எந்த கன்சியூமர் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்து, எத்தனை நாள் கோர்ட் பின்னே அலைவது ?
கேட்டால் கிடைக்கும் குழும நபர் போல போராடி போராடி அலுத்து விட்டேன்
இனி நான் செய்ய கூடியது -
டிவி யை லோக்கல் மெக்கானிக் மூலம் சரி பார்க்கலாம்
ஜீ எலக்ட்ரானிக்ஸ் போரூர் - உடன் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களிடம் புலம்பி - உங்களையாவது இத்தகைய நிறுவனங்களுடன் எச்சரிக்கையாக இருக்க சொல்லலாம்
அவ்ளோ தான் !

உங்கக்கிட்ட எவ்வளவு கறக்கமுடியுமோ கறந்தாச்சி. அடுத்த ஆட்டை பாக்கதான் அவங்களுக்கு நேரம் இருக்கும். என்ன செய்யறது
ReplyDeleteஎனக்கென்னமோ ஜஸ்ட் டயல்காரர்களிடம் கூட்டணி இருக்கும் போல... ஜஸ்ட் விசாரிக்கவும்...!
ReplyDeleteகன்ஸ்யூமர் கோர்ட்க்கு இழுக்க முடியாதா!?
ReplyDeleteபிரபல டி.வி. மட்டும் அல்ல, மற்றவை வாங்கினாலும் இது போன்ற பிரச்னைகள் ஏராளம் .
ReplyDeleteஎன்னுடைய சோனி டி.வி.ரூபாய் 43000 வாங்கிய இரண்டே வருஷங்களில் பழுது ஆகிவிட்டது. அதற்கு வாரண்டி காலம் ஒரு வருடம் தான்.
என்னுடைய நண் பர் ஆலோசனை பேரில் அவர்க்குத் தெரிந்ந்த ஒரு டி.வி. எஞ்சினீர் வந்தார்.
அவர் தாமும் சோனி நிறுவனந்தான் என்று அடையாள அட்டையை காண்பித்தார். செக் செய்து பார்த்து விட்டு பிரிண்ட் சர்கூட் பானலில் ஒரு பானல் மட்டும் பழுது என்று நினைக்கிறேன். என்து வொர்க் ஷாப்பில் செக் செய்து பார்த்து விட்டு எத்தனை ஆகும் என்று சொல்கிறேன் என்றார். மேலும் நீங்கள் சோனி கம்பெனிக்கு போன் செய்தாலும் நான் தான் வருவேன். அப்போது , இந்த ஸ்பேர் பார்ட் தனியாக கிடையாது, முழு மானிடரையும் மாற்றவேண்ண்டும் என்று எழுதி கொடுத்துவிட்டு போய்விடுவேன். அப்பொழுது உங்களுக்கு குறைந்த பட்சம் ரூபாய் 12000 ஆகும்.
இப்பொழுது எத்தனனை என்றேன். ஒரு பானல் மிஸ்டேக் என்றால் ரூபாய் 2500 ஆகும். அதற்கு மேல் என்றால் 4500 ஆகும். அதற்கு மேலும் ஆகலாம். ஷாப்பில் செக் பண்ணிய பிறகு தான் சொல்லமுடியும் என்றார்.
இரண் டு நாட்களில் நான் எதிர்பார்த்தபடியே 4500 ஆகும் என்று செல் பேசினார்.
வேறு வழியில்லை.
எந்த பொருள் வாங்கினாலும் ஆப்டர் சேல்ஸ் சர்வீஸ் எப்படி இருக்கும் என்று கணித்தபின்பு தான் வாங்கவேண்டும்.
சுப்பு தாத்தா.
எங்கள் வீட்டில் எலெக்ட்ரானிக்ஸ் பொருள் பிரச்சினை வந்தால் பள்ளிக்கரணையில் ஒரு மெக்கானிக் இருக்கிறார். அவருக்கு போன் செய்தால் போதும். வீட்டுக்கு வந்து ‘பக்கா’வாக ரெடி செய்துவிடுவார். ஸ்பேர்பார்ட்ஸ் வாங்கவெல்லாம் நம்மை அலைய வைக்க மாட்டார். மீண்டும் பிரச்சினை வரும் பட்சத்தில் ஏற்கனவே சரிசெய்த பிராப்ளமாக இருந்தால் காசு கூட வாங்கமாட்டார். சன் டி.டி.எச். இன்ஸ்டால் செய்தபோது யதேச்சையாக அறிமுகமானவர் இவர். அடுத்தமுறை ஏதேனும் பிரச்சினை என்றால் இவரை தொடர்புகொள்ளுங்கள். நம்பர் நான் தருகிறேன்.
ReplyDeleteNumber please
Deleteபடக்குழாய் உள்ள பழைய தொலைகாட்சி பெட்டிகளை எந்த பழுதாக இருந்தாலும் பழுது பார்க்க முடியும்.LCD,LED தற்போது வரும் தொலைகாட்சி எல்லா சாதரணமாக எல்லோரும் பழுது பார்க்க முடியாது.எந்த நிறுவனமோ அதில் போய் தான் பழுது பார்க்க முடியும்.அதில் தான் வருமானமே !
ReplyDeleteDear Mohan,
ReplyDeleteI just searched for Authorized LG service provider and came up with just one service provider in Chennai. Please refer the link - http://www.lg.com/in/support/repair-service/find-repair-provider
Looks like, the Gee Electronics is NOT an authorized LG service provider.
Regards,
Palaniappan VS
Dear Mohan,
ReplyDeleteI just searched for Authorized LG service provider in LG website and came up with just one service provider in Anna Nagar! Please refer the link - http://www.lg.com/in/support/repair-service/find-repair-provider
Looks like the Gee electronics is not an authorized service provider.
யுவகிருஷ்ணா அந்த பள்ளிக்கரணை நம்பரை கொடுங்கள்..
ReplyDeleteJust dial kku call panni onga experience a sollunga, At least they will not connect this people to next customer.
ReplyDeleteJust dial kku call panni onga experiece a solllunga, at least next time they will not connect this vendor to other customer :-)
ReplyDeleteஉடனடியா ஜஸ்ட் டயல் மற்றும் ஜி ஏலேக்ட்ரோநிக்ஸ் மீது நுகர்வோர் புகர் கொடுக்கலாமே
ReplyDeleteஉங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்திற்க்கு வருத்த படும் அதே சமயம்,
ReplyDelete//முதலில் பிக்சர் டியூப் பிரச்சனை என்றபோது அன்றே ஓடி வந்தவர்கள் (காசு வருதுல்லே !) - ரிப்பேர் என்றதும் இழுத்தடிக்கும் நிலையை ""எந்த கன்சியூமர் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்து, எத்தனை நாள் கோர்ட் பின்னே அலைவது ?"" //
இதை உங்களிடம் எதிர்பார்க்கவில்லை.சட்டம் படித்த நீங்களே இவ்வளவு யோசிக்கும் போது மற்றவர்களை என்ன சொல்வது?
I had a very bad experience from even authorized Whirlpool service guy. I registered a complaint at whrilpool customer care for changing my fridge thermosat. They gave me a ref no and told me that a service person will attend the call in next 24hrs. He came as they promised and he said the Thermosat cost is Rs 1200 and service charge is extra. I have a basic idea on electronic goods so I felt it is very expensive and thought whirlpool is making huge profit on service parts. When he was fixing the thermosat, I casually checked the box and the price is mentioned as rs 350. I asked him about this and he tries to convince me saying that it's a different box / it's a old piece but we can charge only as per the revised list, blah blah. I said finally that if he is not billing only Rs 350 then I will speak to the customer care again. Then he spoke to somebody and agreed to bill only for the amount.
ReplyDeleteBut in mose cases the customer care support is really good and even Whirlpool give a customer satisfaction code which we can give to the service person only if we satisfied with his service. I also made an another call to order the fridge legs and it was delivered within few hours. So the in general, these (MNC) companies have good system in place but anyway the work should be carried out by the Indian hands. In my opinion, we are we poor at servicing the customers, that's the problem.
Even one time, I made a complaint at Samsung customer care to fix a television issue which got solved in the same day.
So based on my experience, I suggest you to always approach the customer care or visit the direct service center. If your problem is not solved then you can always get back to the customer care with your reference number. DO NOT ask any local guy to service your appliances.
I serviced my micro oven at LG customer care at Adambakkam ( changed the keys) and highly satisfied with their service. If you take your TV personally there you can save the additional transportation charges asked by the service center.
Address:
old no 10, new no 19,
city link rd, near ngo colony bus stop, adambakkam. 044-64540910
இப்போது வரும் டி.வி.கள் மட்டுமல்ல, எல்லா கன்ஸ்யூமர் ஐட்டங்களும் வாரண்டி காலம் முடியும் வரையோ, அல்லது அதற்கடுத்த சில மாதங்களோ மட்டுமே வேலை செய்கிறது. பின்னர் சின்னச் சின்ன பிரச்சனைகள் - After Sales Service ரொம்பவே மட்டம்.... என அலைக்கழிக்கிறார்கள்.
ReplyDeleteபுரிந்துக் கொண்டோம். முடிந்தவரையில் இது மாதிரியான ஆட்களிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க முயற்சிப்போம்!
ReplyDeleteநண்பர்களே - வழக்கு போட்டு விட்டு அதில் வருகிற 10 ஹியரிங்-குக்கும் வேலையை விட்டு விட்டு அலைய எனக்கு விருப்பம் இல்லை ; அந்த வழக்கு நடக்கும் நேரம் நாம் படும் stress -ம் மிக அதிகமாய் இருக்கும் என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம்
ReplyDeleteஉங்கள் அனைவரின் அன்பிற்கும் கருத்துக்கும் நன்றி
யுவகிருஷ்ணா - வீட்டில் இன்னும் டிவி சரியாகவில்லை; பள்ளிக்கரணை மெக்கானிக் நம்பர் இங்கோ - தனி மெயிலிலோ அனுப்பினால் மிக உதவியாக இருக்கும் நன்றி
தமிழ்மனம் பிளஸ் +1 வோட்டு போட்டு விட்டேன்!
ReplyDeleteThanks!
ஜஸ்ட் டயலிடம் ஜி எலெக்ட்ரானிக்ஸ் பற்றி - எழுத்து பூரவர்மாக புகார் தந்துள்ளேன் ; விசாரிப்பதாக உறுதி அளித்துள்ளனர்
ReplyDeleteபணம் பணம் பணம்! நம்மூரில் எப்படி எல்லாம் பணம் கறக்க முடியுமோ அப்படி கறந்துவிட்டு கம்பி நீட்டுவது தான் வாடிக்கை. வாடிக்கையாளர்களை அலையவிட்டு கழட்டி விடுவது அவருக்கு வேடிக்கை. வியாபாரம் செய்வோர் வாடிக்கையாளர்களை தங்க முட்டை இடும் வாத்தாய் போற்றினால் தான் நீண்ட நாள் வர்த்தகம் நடக்கும், ஆனால் அவர்கள் அதிக ஆசைப்பட்டு வாடிக்கையாளர் என்னும் தங்க முட்டையிடும் வாத்தின் வயிற்றை கிழித்துவிடுகின்றனர். வாடிக்கையாளர்களே விழிப்பாய் இருக்க வேண்டும் அது கல்விச்சாலையோ, மருத்துவமனையோ , அங்காடிகளோ, கடைகளோ எதுவானாலும்.
ReplyDeleteவிழிப்புப்பகிர்வு.
ReplyDeleteஏமாற்றுவோர் உலகம்தான். :(
Nice information, thank you for sharing it. Termites Control Service Coimbatore
ReplyDelete