Friday, October 25, 2013

கறை நல்லது...........

காலை வழக்கம் போல மூவரும் வெளியே கிளம்பும் அவசரத்தில் - சண்டை. கோபமாய் வண்டியை உதைத்து கிளம்பினேன். சற்று நேரத்தில் கோபம் தணிந்து பள்ளிக்கரணை நூறடி ரோடை அடைய - காமாட்சி மருத்துவமனை சாலையில் ஒரு விபத்து அப்போது தான் நடந்து முடிந்திருந்தது.

வலது உள்ளங்கை முழுதும் ரத்தத்துடன் - உள்ளங்கையில் தோல் கிழிந்து கையைப்  பிடித்தவாறு ஒரு இளைஞன் நிற்க இன்னொரு இளைஞன் தனது கார் பின்னே பைக் மோதிய   கோபத்தில் நின்று கொண்டிருந்தான்

அருகிலுள்ள பெட்டிக்  கடையில் ஒருவர் மினரல் வாட்டர் வாங்கி அடிபட்டவன் கையை கழுவி கொண்டிருந்தார். இன்னொருவர் பைக்கை எடுத்து ஓரமாய் விட்டார். ஒரு மனிதர் ஓடி வந்து - தனது பைக் துடைக்கும் அழுக்கு துணியை தந்து " அவரது கையில் இதை கட்டுங்க " என்றார். அருகில் நின்றிருந்த எனக்கு அந்த துணியை அடிபட்டவர் கட்டினால் இன்னும் இன்பெ க்ஷன் ஆகும் என தோன்ற, எனது வெள்ளை கர்சீப் தந்து இதில் துடையுங்கள் என்றேன்;  ஒரு மனிதர் அந்த கர்சீப் கொண்டு கர்ம சிரத்தையாக அடிபட்டவர் கையை துடைத்து விட்டார் -

அவ்விடத்தில் 4 பேர் அடிபட்டவருக்கு உதவ, 20 பேருக்கும் மேல் நின்று சும்மா வேடிக்கை பார்த்துக்  கொண்டிருந்தனர்

கார் ஓட்டி - நின்று கொண்டிருந்த தன்  வாகனம் மீது பைக் மோதிய கோபத்தில் " பாஸ் என்ன இவ்ளோ வேகத்தில் வர்றீங்க? வாங்க போலிஸ் ஸ்டேஷன் போகலாம் ; ரொம்ப டேமேஜ் ஆகிடுச்சு - நீங்க பணம் தர வேண்டியிருக்கும் " என்ற ரீதியில் பேசலானார்

அருகிலிருந்த நான் " ஏன் சார்  இன்சூரன்ஸ் தான் வருமே; அப்புறம் எதுக்கு இவர் பணம் தரனும் ?" என்று கேட்க " முழு பணம் வாராது சார் ; மீதி இவர் தான் தரனும் " என்றார்

நான் சில நொடி தயக்கத்துக்கு பின் " முதலில் எங்கே போகணும் சார் ... ஆஸ்பத்திரிக்கா ? போலிஸ் ஸ்டேஷனுக்கா ?" என்று கேட்க

அடிபட்டவரின் கையை பார்த்தவாறே " ஆஸ்பத்திரிக்கு" என்றார் கார் ஓட்டி

"நீங்களே அவரை ஆஸ்பத்திரி கூட்டி போங்க; அவரால் இப்ப பைக் ஓட்ட முடியாது; அப்புறம் போலிஸ் ஸ்டேஷன் கூட்டி போங்க " என்றேன்

" காரை இங்கிருந்து எடுக்க கூடாதுங்க; Valuer  வந்து பார்க்கும் வரை இங்கு தான் இருக்கணும் " என்றார் கார் ஓட்டி .

இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும் என்று நான் கிளம்ப எத்தனிக்க - அடிபட்டவர் உரிமையாய் வந்து எனது வண்டி பின்னே அமர்ந்து " சார் காமாட்சி ஆஸ்பத்திரி வாசலில் என்னை இறக்கி விட்டுடுங்க " என்றார்

ஒரு வண்டியில் நானும், அடிபட்டவரும் - இன்னொரு பைக்கில் கார் ஓட்டியும்       பயணமானோம்.

அடிபட்டவரிடம் " என்ன சார் உங்க மேலே தான் தப்பு போல" என கேட்க

" சார் ஒரு Estilo கார் திடீர்னு ப்ரேக் அடிச்சான். அதான் நான் வண்டியை ரைட் லே திருப்புனேன். அவர் கார் மேலே மோதிடுச்சு. ப்ச் நேரமே சரியில்லை சார் " என்றார்

அவரை ஆஸ்பத்திரி வாசலில் இறக்கி விட்டேன். கார் ஓட்டி - பைக் ஓட்டுனருக்கு First aid  தர     உள்ளே கூட்டிச் செல்ல, நான் ஆபிஸ் கிளம்பினேன்

எனது புத்தம் புது பிங்க் சட்டை - வலது பக்க பின் புறத்தில் ஆங்காங்கு ரத்தக்கறை ஒட்டியிருந்தது.

வீட்டுக்கு போனதும் மனைவி மற்றும் மகள் சட்டை பார்த்து நிச்சயம் திட்டுவார்கள் என்று நினைத்தேன்.  வந்தவுடன் கவனித்து கேட்கவே செய்தார்கள். மேற்சொன்ன நிகழ்வை கேட்டதும் - வேறு எதுவும் சொல்ல வில்லை..

சட்டையை இப்போது பார்க்கும் போது தோன்றுகிறது .. "கறை படுறதால, நல்ல விஷயம் நடந்தா - கறை  நல்லது " :)

20 comments:

  1. Anonymous11:23:00 PM

    வணக்கம்

    கதை அருமையாக உள்ளது....தொடர எனது. வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரூபன் இது கதையல்ல நிஜம் :)

      Delete
  2. உண்மை.கறை நல்லது!

    ReplyDelete
  3. touching sir...enna oru kedu keta ennam andha car karanu-ku...

    ReplyDelete
  4. இப்போது தான் முகப்புத்தகத்தில் படித்தேன்.....

    கறை நல்லது!

    ReplyDelete
  5. உதவி செய்யும் பண்பு உங்களுக்குள் ஊறிக் கிடக்கிறது. அது கறை அல்ல முத்திரை

    ReplyDelete
  6. Karai ungalukku nalladhaa pochu! Udhavum ullaththukku vaazhththukkal!!

    ReplyDelete
  7. இந்தக் கறை மிகவும் நல்லது...

    ReplyDelete
  8. பிறர் மேல் காட்டிய அக்கறையால் வந்த கறை நல்லது !
    த.ம 6

    ReplyDelete
  9. காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்
    ஞாலத்தின் மாணப்பெரிது.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com
    www.wallposterwallposter.blogspot.in

    ReplyDelete
  10. நல்ல செயல்.இந்த கறை நல்லது தான்.

    ReplyDelete
  11. தொடரட்டும் நல்லெண்ண சேவைகள்.

    ReplyDelete
  12. //காலை வழக்கம் போல மூவரும் வெளியே கிளம்பும் அவசரத்தில் - சண்டை//
    சமாதானமாயிட்டீங்க போல இருக்கு.

    ReplyDelete
  13. கறை நல்லது தான்! நன்றி!

    ReplyDelete
  14. One second wrong decision in Motoring , will take away your time , pain staking, expensive. Claiming process will be for a month and you get half money from Insurance Co.

    It is always to start early to work and avoid speedy driving.

    ReplyDelete
  15. Dear All

    Avoid Speedy driving , even fault is on other side, we will suffer equally or more by way of expense, wounds, pains, legal process and claim process from Insurance Co.

    It is better to be slow and following traffic rules even opposite does not follow will reduce the above problems

    ReplyDelete
  16. நல்லுதவி வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. சரியான தருணத்தில் உதவி செய்த உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.
    நீங்களும் இனி கோபத்தோடு வண்டியில் ஏறாதீர்கள்.

    இந்தக் கறை நீங்கிவிடும். நீங்கள் உதவி செய்த இளைஞனின் நினைவில் நீங்களும் நீங்காமல் இருப்பீர்கள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...