Monday, February 13, 2017

பத்தாம் வகுப்பில் அதிக மார்க் வாங்குவது எப்படி? மாநிலத்தில் முதல் மாணவன் ஸ்ரீநாத் - பேட்டி

மீபத்தில் தஞ்சை சென்ற போது அண்ணனும் நானும் பைக்கில் சென்று கொண்டிருக்கிறோம். வண்டியை திடீரென நிறுத்திவிட்டு " அங்கே பார்" என்றார் அண்ணன்.

ஒரு வீட்டின் காம்பவுண்டுக்குள் இரண்டு சிறுவர்கள் கிரிக்கெட் ஆடி கொண்டிருந்தனர். " ஸ்ரீ .. இங்கே வா " என்று கூப்பிட்டார். " என்ன அங்கிள்" என்ற படி கிரிக்கெட் பேட்டுடன் ஓடிவந்தான் அந்த சிறுவன்.

" அந்த 3 மார்க் என்ன ஆச்சு? ".

சற்று தயக்கத்துடன் " தமிழில் 97 தான் போடுவாங்க அங்கிள்; புல் மார்க் போட மாட்டாங்க " என்றபடி வெட்கத்தில் நெளிந்தான்.

அண்ணன் அந்த சிறுவனை எனக்கு அறிமுகபடுத்தினார் " இவன் பேரு ஸ்ரீநாத்; போன வருஷம் ஸ்டேட் பஸ்ட். 497 மார்க். 4 சப்ஜெக்டில் செண்டம். தமிழில் 97. இதுவரை 496 தான் அதிகபட்ச மார்க்கா இருந்தது. இவன் பண்ணது தான் தமிழக ரிக்கார்ட்" என்று என்னிடம் சொல்லிவிட்டு " இங்க்லீஷில் எப்படிப்பா நூறு மார்க் போட்டாங்க? ஆச்சரியம்தான்" என அவனிடம் பேச ஆரம்பித்திருந்தார் அண்ணன்.



மாநிலத்தில் முதல் மார்க் , இதுவரை யாரும் செய்யாத படி -497 மார்க் வாங்கியவன், ரொம்ப ஜாலியாக தன்னை விட 2 வயது இளையவனுடன், சுவற்றை ஸ்டம்ப் ஆக்கி கிரிக்கெட் ஆடிய விதத்தில் நிச்சயம் ஒரு பதிவுக்கான செய்தி இருந்தது.

" தம்பி நான் ஒரு Blog வச்சிருக்கேன். அதில் ஒரு ஆர்ட்டிகிள் எழுதணும். உன்கிட்டே பேசணுமே "

"சரி அங்கிள். நான் அப்புறம் உங்க வீட்டுக்கு வர்ரேன் "

இப்படி சொல்பவர்கள் அநேகமாய் டிமிக்கி கொடுப்பார்கள் என அவனது போன் நம்பர் வாங்கி கொண்டு விடைபெற்றேன்.

போகும்போது அண்ணன் சொன்னார் " நான்,  ஸ்ரீநாத் எல்லாம் ஏரியாவில் ஒண்ணா கிரிக்கெட் ஆடுவோம். ஸ்ரீநாத் ஸ்டேட் பஸ்ட் வந்த அன்னிக்கு குடும்பத்தோட அவன் வீட்டுக்கு போய்ட்டோம். ஒரே கொண்டாட்டமா இருந்தது. ஏரியா முழுக்க அங்க வந்துடுச்சு "

வெளியே சென்ற வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பின் ஸ்ரீநாத்தை தொலைபேசியில் " ஸ்ரீநாத் நாம மீட் பண்ணலாமா?" என அழைக்க, " அங்கிள் நான் கிளம்பி அங்க வரவா? " என்றான் " வேண்டாம் ஸ்ரீநாத்; நானே உங்க வீட்டுக்கு வர்ரேன்; உங்க வீடு தான் தெரியுமே "

மாநிலத்தில் முதல் மாணவன் என்கிற தலைக்கனம் சிறிதும் இல்லாமல் " நான் அங்கே வரட்டுமா அங்கிள்? " என்றதிலேயே ஸ்ரீநாத்தை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. நேரில் பேசிய பின் இன்னும் நிறையவே... !
********
ஸ்ரீநாத்தின் அப்பா பேங்கில் வேலை பார்க்கிறார். அம்மா ஹவுஸ் வைப். நான் சென்ற போது இருவருமே வீட்டில் தான் இருந்தனர். வீட்டு ஹாலில் அமர்ந்து நாங்கள் பேச துவங்க, " ரூமுக்குள் போய் உட்கார்ந்து பேசுங்க எங்க முன்னாடி பேசினா ஸ்ரீநாத் பேச தயக்க படலாம் " என ஸ்ரீநாத் அறைக்குள் அமர்ந்து பேச சொல்கிறார்கள்.

நாங்கள் பேசும்போது அவனோடு கிரிக்கெட் விளையாடிய சிறுவனும் உடன் இருந்தான். கேஷுவலாக பேச துவங்கினோம்

"உன்னோட சின்ன வயசு படிப்பெல்லாம் எப்படி இருந்தது? "

" ஏழாவது வரை நவபாரத் மெட்ரிகுலேஷனில் படிச்சேன். அப்போ முதல் ரேன்கேல்லாம் வரமாட்டேன். ஆனா மூணு ரேங்கிற்குள் நிச்சயம் வருவேன். எட்டாவது வரும்போது தான் பொன்னையா ராமஜெயம் பள்ளிக்கு வந்தேன். அப்பலேந்து +2 வரை அங்கு தான் படிக்கிறேன். பொன்னையா ராமஜெயம் காலேஜ் கூட இருக்கு; Prist University ன்னு சொல்லுவாங்களே அது தான் "

" ஸ்டேட் பஸ்ட் வாங்கனும்னு aim பண்ணி படிச்சியா?" 

" நிச்சயமா இல்லை. எங்க ஸ்கூலில் பாயிஸ் செக்ஷன் தனி. அடுத்த தெருவில் கேர்ள்ஸ் செக்ஷன் இருக்கு. எப்பவும் பாயிஸ் செக்ஷன் முதல் மார்க் வருதா இல்லை கேர்ள்ஸ் செக்ஷன் முதல் மார்க் வருதான்னு போட்டி இருக்கும். நாங்கல்லாம் பாயிஸ் செக்ஷன் தான் வரணும்னு நினைப்போம். அப்படி தான் ஆரம்பத்தில் நினைச்சேன்".

"நான் டென்த் படிச்ச வருஷம் தான் சமசீர் கல்வி முதல் முறையா அறிமுகம் ஆனது. எங்களுக்கு ஆகஸ்ட் மாசம் தான் புக் வந்தது. அதற்கு பிறகு தான் பாடங்கள் விரைவா நடத்தப்பட்டது"

டென்த் வந்த பிறகு தொடர்ந்து எல்லா பரிட்சையிலும் ஸ்கூல் பஸ்ட் வாங்கிட்டு இருந்தேன். கடைசி ரிவிஷனில் 490 மார்க்குக்கு மேல் வாங்கும்போது தான் " தஞ்சை மாவட்டத்தில் முதல் மார்க்" வாங்க வாய்ப்பு இருக்குமோ என தோணுச்சு. ஆனா ஸ்டேட் பஸ்ட் பத்தி எப்பவும் நினைக்கலை; எனக்கே ரொம்ப ஆச்சரியம் தான் அது "

ரிசல்ட் வந்த அன்னிக்கு என் நண்பன் வீட்டிலே கம்பியூட்டரில் எங்க மார்க் பாத்துக்கிட்டு இருந்தோம். அவன் மார்க் பார்த்துட்டு, அடுத்து என் மார்க் பார்த்தால் 4 செண்டம்; மொத்தம் 497 என தெரிந்தது. இவ்ளோ மார்க் இதுவரை யாரும் எடுத்ததில்லையே என நினைச்சிட்டு இருக்கும் போது அருகில் இருந்த அவன் வீட்டு டிவி யில் " மாநிலத்தில் முதல் மாணவன் தஞ்சையை சேர்ந்த ஸ்ரீநாத் " என்று அனவுன்ஸ் செய்தார்கள். மார்க் பார்த்த அடுத்த நிமிஷமே டிவி மூலம் நான் ஸ்டேட் பஸ்ட்டுன்னு தெரிய வந்தது

" உடனே ஸ்கூல்க்கு போயிட்டேன். நிறைய டிவி, பத்திரிக்கை எல்லாம் அங்கே வந்துட்டாங்க. ஸ்கூலில் எல்லாருக்கும் செம மகிழ்ச்சி. பசங்க என்னை அப்படியே தூக்கிட்டாங்க"


" அடுத்த ரெண்டு நாள் ரொம்ப excited -ஆ இருந்தது அங்கிள். அப்போ நடந்த விஷயங்களை இன்னும் நம்பவே முடியலை; நிறைய விஷயம் ஞாபகத்தில் கூட இல்லை ஒரு மாதிரி பாதி நினைவோட தான் இருந்தேன் "

ரெண்டு நாளில் நிறைய டிவி காரர்கள், பேப்பர் காரர்கள் வீட்டுக்கு வந்தாங்க போனில் பேசினாங்க.

"+2 விற்கு பின் நீ என்ன படிக்கணும்னு பிளான் பண்ணிருக்கே ? "

"+ 2 வில் மேக்ஸ் குரூப் எடுத்திருக்கேன். IIT போகணும்கிறது தான் முதல் பிளான். அது கிடைக்காட்டி N .I .T அல்லது பிட்ஸ் பிலானி இதில் ஏதாவது கிடைச்சா நல்லாருக்கும். அதுவும் இல்லாட்டி அண்ணா யூனிவர்சிட்டியில் எஞ்சினியரிங் எடுப்பேன்" 

"இப்போதைக்கு IIT உள்ளிட்ட இடங்களுக்கான என்ட்ரன்ஸ் தேர்வுக்கு தயார் செஞ்சுகிட்டு இருக்கேன். அம்மா அப்பாவுக்கு நான் CBSE -ல் படிச்சிருந்தா IIT மாதிரி கோர்ஸ் போக ஈசியா இருக்கும்னு சற்று வருத்தமா இருக்கு. ஸ்டேட் போர்ட் என்பதால் நான் மிக அதிக மார்க் எடுக்கணும் என்ட்ரன்சில் ".

"எனக்கு எப்பவும் பிசிக்ஸ் , கெமிஸ்ட்ரி தான் ரொம்ப பிடிக்கும். IIT -ல் படிச்சிட்டு ரிசர்ச் சயின்டிஸ்ட் ஆகணும்னு ஆசை.அதுக்கு அதிக பணம் கிடைக்காதுன்னு சில பேர் சொல்றாங்க அதை பத்தி கவலையில்லை எனக்கு பிடிச்ச வேலை செய்யணும் அதான் முக்கியம் "

"டென்த் படிக்கும் போது தினம் எவ்ளோ நேரம் படிப்பே ? "

"தினம் 3 மணி நேரம் படிப்பேன். பரீட்சை நேரம் என்றால் மட்டும் 6 மணி நேரம் படிப்பேன். பள்ளி நாட்களிலும் சரி, தேர்வின் போதும் சரி 6 மணி நேரம் தூங்குவேன்". 

"இப்போ + 1 வந்துட்டே; அடுத்த வருஷம் மறுபடி முதல் ரேன்க் வாங்கணும்னு பிரஷர் இருக்கா? "

"வீட்டில் நிச்சயமா கொஞ்சம் கூட இல்லை; பள்ளியிலும் வெளியிலும் தான் நிறைய பிரஷர் வருது. பாக்கிறவங்க எல்லாம் " +2 வில் பஸ்ட் வந்துடுவே தானே-ன்னு கேட்குறாங்க "

"பாடத்தை தாண்டி தவிர வேற ஏதும் படிப்பியா ?"

"அறிவியல் சம்பந்தமான புக்ஸ் (சில பேர்கள் சொல்கிறான்) படிப்பேன் அப்துல் கலாம் புக்ஸ் நிறைய படிச்சிருக்கேன்" (அவனது அறையில் படிப்பை தாண்டி நிறைய புத்தகங்கள் கிடக்கிறது)

"உனக்கு நண்பர்கள் உண்டா? நல்லா படிக்கும் ஸ்டூடண்ட்ஸ் கொஞ்சம் தனிமை விரும்பிகளா இருப்பாங்க இல்லியா ?"

"அப்படியெல்லாம் இல்லை, எனக்கு ஏகப்பட்ட நண்பர்கள் இருக்காங்க".

அதுவரை கூடவே இருந்து நாம் பேசுவதை உன்னிப்பாக கவனித்த மாணவனை அறிமுகம் செய்கிறான். " இவன் எனக்கு ரெண்டு வருஷம் ஜூனியர். எப்பவும் என் கூட தான் கிரிக்கெட் விளையாடிட்டு இருப்பான். என் வகுப்பிலேயே நிறைய நண்பர்களும் கூட உண்டு, 

இந்த பையனும் IIT படிக்க தான் பிளான் பண்றான். " IIT ல் சீட் கிடைப்பது ரொம்ப கஷ்டம்டா; கிடைக்காட்டா நீ என்ன பண்ணுவே ? " ன்னு ஒரு தடவை கேட்டேன். " அடுத்த வருஷம் இன்னும் நல்லா தயார் செஞ்சுட்டு மறுபடி எழுதுவேன் " அப்படிங்கறான். எவ்ளோ உறுதியா இருக்கான் பாருங்க
****
சம்பிரதாயமான கேள்விகள் முடிந்து, embarassing கேள்விகளுக்குள் அடுத்து நுழைந்தோம் ..

பதிவு பெரிதாக செல்வதால், இதன் தொடர்ச்சி ஓரிரு நாளில்  வெளிவரும்..



நாளைய பதிவில்....

டென்த்தில் முதல் மார்க் வாங்குவோர்,  +2 வில் முதல் மார்க் வாங்குவதில்லையே ஏன்?

டென்த் முழு ஆண்டுபரீட்சைக்கு முதல் நாள் கிரிக்கெட் ஆடி மாட்டி கொண்ட ஸ்ரீநாத்

வாலிபால் மற்றும் கிரிக்கெட் - தஞ்சை மாவட்டத்தை பத்தாவது படிக்கையிலும் represent செய்து ஆடிய ஸ்ரீநாத்

மாநிலத்தில் முதல் மார்க் வாங்கியோர், வாழ்க்கையில் பெயர் சொல்லும் பிரபலமாக வந்துள்ளனரா? இல்லையெனில் ஏன்?
***
பேட்டியின் 2-ஆம் பாகம் இக்கேள்விகளுக்கான விடையுடன் ஓரிரு நாளில்  வெளியாகும்

32 comments:

  1. நானும் திரும்ப எதுனா ஸ்கூல்ல சேர்ந்து எப்படியாவது ஃபர்ஸ்ட் வரலாம்னு பாக்குறேன் :)

    ReplyDelete
    Replies
    1. //புதுகை.அப்துல்லா8:44:00 AM

      நானும் திரும்ப எதுனா ஸ்கூல்ல சேர்ந்து எப்படியாவது ஃபர்ஸ்ட் வரலாம்னு பாக்குறேன் ://

      ஈவ்னிங் ஸ்கூல் விடும்போதாண்ணே?

      Delete
    2. மைக்கல் மதன காமராஜன் படத்தில் கமல் நாகேஷிற்கு ஒரு வாரம் டைம் தருவார். ஒரு வாரம் இல்லை சார், ஒரு வருஷம் கொடுத்தாலும் என்னாலே முடியாது சார் என்பார். அதை போலே இந்த படிக்கிற மாதிரி சமாசாரம் எல்லாம் நமக்கு ஒரு ஜென்மம் டைம் கொடுத்தாலும் ஆவறதில்லை

      Delete
  2. Looking forward to the second part.

    ReplyDelete
  3. நல்லா எழுதி இருக்கீங்க மோகன்.. உங்களுடைய பேட்டிகள் மெருகேறிக் கொண்டே வருகின்றன.. வாழ்த்துகள்!

    ***

    //மாநிலத்தில் முதல் மார்க் , இதுவரை யாரும் செய்யாத படி -497 மார்க் வாங்கியவன், ரொம்ப ஜாலியாக தன்னை விட 2 வயது இளையவனுடன், சுவற்றை ஸ்டம்ப் ஆக்கி கிரிக்கெட் ஆடிய விதத்தில் நிச்சயம் ஒரு பதிவுக்கான செய்தி இருந்தது. //

    ரசித்தேன்!! :)

    ***

    பார்ட் 2 - பேட்டிக்காக காத்திருக்கிறேன்!!

    ReplyDelete
    Replies
    1. மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி கார்த்தி; அடுத்த பகுதி நாளை வருகிறது

      Delete
  4. ஸ்ரீநாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... பதிவின் முடிவில் உள்ள கேள்விற்கான பதிலை நல்லதொரு அலசலுடன் எதிர்ப்பார்க்கிறேன்... (அதுவே மிக நீண்ட பதிவா வருமே...?)

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபால் சார்

      Delete
  5. நேர்காணல் ரொம்ப நல்லா இருக்குங்க. 2ஆவது பதிவிற்கு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வரதராஜலு ; தங்கள் நண்பர்களிடம் பதிவை பகிர்ந்தமைக்கும்

      Delete
  6. sir pl ask him to study with confident and he should have fire in his mind about iit jee exam he will won
    its my son experiance now he studied at iit madras btech mech final year ( he studied at plus 2 at b hyderabad up to 10 at madurai upto 7 at nagai
    for iit exam only i put at hyderabad
    fortunately our thiruthuraipoondi native nataran was pricipal at that school
    best of luck to him
    bye

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வேலழகன் சார்; நிச்சயம் ஸ்ரீநாத் இப்பதிவை வாசிப்பார் ; உங்கள் தகவல் அவருக்கு பயன்படும்

      Delete
  7. வாவ்! சூப்பர் மோகன். ஒரு பத்திரிகை நிருபர் கண்ட பேட்டியை வாசித்தது போலிருந்தது. வாழ்த்துகள்.

    //அதிக பணம் கிடைக்காதுன்னு சில பேர் சொல்றாங்க அதை பத்தி கவலையில்லை எனக்கு பிடிச்ச வேலை செய்யணும் அதான் முக்கியம்//

    இந்த மாதிரி இன்னுமொரு பத்து பசங்களை ஸ்ரீநாத் ரெடி பண்ணனும்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி ரகு ; ஸ்ரீநாத் செய்வார் என்றே நம்புகிறேன்

      Delete
  8. மிக சிறப்பான பதிவு.

    ஸ்ரீநாத்துக்கு வாழ்த்துக்கள்.

    //மாநிலத்தில் முதல் மாணவன் என்கிற தலைக்கனம் சிறிதும் இல்லாமல் " நான் அங்கே வரட்டுமா அங்கிள்? " என்றதிலேயே ஸ்ரீநாத்தை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது.//

    நிறை குடம்.

    அடுத்து படிக்க காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. நிறைகுடம் ..உண்மை !

      Delete
  9. நல்லதொரு பேட்டி. இம்முறை தேர்வு எழுதுபவர்களுக்கு ஸ்ரீநாத் தரும் தகவல்கள் உபயோகமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் நிறைய மார்க் வாங்க அவர் சொன்ன டிப்ஸ் நாளைய பேட்டியில் வருகிறது

      Delete
  10. மகிழ்ச்சி! நிறைய எழுதவேண்டும்... நாளை எழுதுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அவசியம் உங்கள் அனுபவம் மற்றும் கருத்துகள் எழுதுங்கள் சார்

      Delete
  11. அருமையானதொரு பகிர்வு.. வாழ்த்துகள் ஸ்ரீநாத்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி அமைதி சாரல்

      Delete
  12. ஸ்ரீகாந்த் பேட்டி விகடனில் ஒரு பக்கம் தான் வந்துச்சு! நீங்க கவர் ஸ்டோரி அளவுக்கு எடுத்திருக்கீங்க!!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? விகடனில் பேட்டி வந்ததா? நான் படிக்கலை

      தகவலுக்கு நன்றி

      Delete
  13. அருமையான பேட்டி. வாழ்த்துக்கள் ஸ்ரீநாத்.

    ReplyDelete
  14. வெகு அருமை.. வெகு சிறப்பு.... இன்றைய மாணவர்களுக்கு சத்தான ஊட்(க்)ட(க)ம் இந்த பதிவு...தொடரட்டும்....உமது..ஓட்டம்.....நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி செந்தில் குமார்

      Delete
  15. மாணவர்களுக்கு, (10th, 12th) தேர்வுகள் தொடங்கவுள்ள இந்த தருணத்தில்,
    தங்களின் இந்தப் பதிவு, மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பது உண்மை.

    பற்பல கேள்விகள் கேட்டு... நிறைய விளக்கங்கள் வாங்கியுள்ளீர்கள். அருமை.

    எனது இந்தப் பதிவும் படியுங்கள்:

    தினத்தந்திக்கு ஒரு கடிதம்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க நிஜாமுதீன் நன்றி

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...