பார்த்த படம் : Ghasi Attack
1971ல் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடலில் நடந்த ஒரு சண்டையை பற்றி சொல்லும் படம் தான் காசீ அட்டாக்.
இந்தியாவில் முதல் submarine story என்று பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் வெளியானது. பாகுபலி புகழ் ராணா ஹீரோவாக நடிக்க, இன்னும் சிலர் முக்கிய பாத்திரங்களில்..
உண்மையில் படம் என்னை பெரிதாக ஈர்க்க வில்லை; நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவங்கள் ஏதும் இல்லை; போர் படத்தில் எந்த காட்சியும் நம்மை சீட் நுனிக்கு கொண்டு செல்லவில்லை; ஜெயிக்க போவது இந்தியா தான் என முன்பே தெரியும் என்பதால் - பாத்திரங்களில் யார் உயிரோடு மிஞ்சுவர் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே இருக்கிறது. மேலும் படம் மிக மெதுவாக நகர்கிறது
காசீ அட்டாக் - Avoidable
ரசித்த பதிவு.. சாணை பிடிப்பவரின் பேட்டி
வீடுதிரும்பலில் முன்பெல்லாம் சாதாரண மனிதர்களின் பேட்டி இடம் பெறும். அத்தகைய ஓர் பேட்டியை விகடனில் வாசிக்க முடிந்தது. சாணை பிடிப்பவரின் பேட்டி ! நிச்சயம் நமது எழுத்தை விட பல மடங்கு அருமையாக எழுதியிருக்கிறார்கள்.. விகடனில்.. குறிப்பாக அந்த நிருபர் அதிகாலை துவங்கி நாள் முழுதும் அந்த சாணை பிடிப்பவருடன் பயணித்தது ஆச்சரியமாக உள்ளது.
வானவில்லில் சாணை பிடிப்பவருடன் பேசியதை ஒருமுறை குறிப்பிட்டிருந்தேன். இவர்களை காணும் போதல்லாம் எனக்கு வரும் ஆச்சரியம் எப்படி அவ்வளவு வெயிட் தூக்கி கொண்டு இவ்வளவு தூரம் நடக்கிறார்கள் என்பது தான். இப்பதிவு அதை பற்றி மிக முக்கியமாக பேசுகிறது.
பேட்டியின் முடிவில் இந்த தொழில் தான் எனக்கு சோறு போடுது; ஆனா எங்க காலத்து பிறகு இந்த தொழிலே இருக்க கூடாது என்று அவர் சொல்லுவதும் அதற்கான காரணமும் நெகிழ்ச்சி ..
பேட்டியை இங்கு வாசிக்கலாம்.
அழகு கார்னர்
Dubsmash புகழ் மிருணாளினி முதல் முறை தமிழ் படமொன்றில் நடிக்கிறார். பார்க்கலாம்.. அம்மணி பெரிய திரையில் சாதிக்கிறாரா என !
உணவகம்: ஆசிஃப் பிரியாணி
Demonetization துன்பம் உச்சத்தில் இருந்த நேரம்.. ஒரு மதிய நேரம் ஆசிஃபி பிரியாணி கடைக்கு சென்றோம். அந்த நேரம் எல்லா கடைகளிலும் டெபிட்/ கிரெடிட் கார்ட் கூட இயங்கவில்லை. இருப்பினும் கடை ஹவுஸ் புல் ஆக இருந்தது !
எல்லா உணவு வகையும் 250 முதல் 300 ரூபாய் ரேஞ்சிலேயே இருக்கிறது; விலை சற்று அதிகம் தான். இருப்பினும் அளவு கூடுதலாக உள்ளது; ஒரு பிரியாணி என்று ஆர்டர் செய்தால் - நிச்சயம் அதனை ஒரே ஆள் சாப்பிட முடியாது; 2 பிரியாணி வாங்கினால் 3 பேர் சாப்பிடலாம்.
அட்டகாசமான டேஸ்ட் .. பிற கடை பிரியாணிகளை விட கொஞ்சம் வித்யாசமாக இருந்தது; நெய் அடிச்சு விட்டிருந்தனர் ! நிச்சயம் கொஞ்சம் குறைக்கலாம் !
பிரியாணி பிரியர்கள் அவசியம் ஒரு முறை விசிட் அடிக்கலாம்.. !
ஆசிப் பிரியாணி கடைக்கு சென்னையில் 10க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.. நாங்கள் சாப்பிட்டது மடிப்பாக்கத்தில் !
கிரிக்கெட் கார்னர்
இந்திய ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்டில் இந்தியா இவ்வளவு மோசமாக உதை வாங்கும் என யாரும் நினைத்திருக்க முடியாது. கடைசி 2 பவுலர்கள் தவிர மற்ற எல்லாருமே பேட்டிங் செய்ய கூடிய இந்திய அணி 105 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது அநியாயம். போலவே கடைசி விக்கெட்டுக்கு அவர்களை 60 ரன் அடிக்க விட்டதும் ! இந்த பிட்சில் 350 போன்ற நான்காவது இன்னிங்ஸ் ஸ்கொர் அடிப்பதெல்லாம் நடக்காத காரியம். அடுத்தடுத்த மேட்சிலாவது இந்தியா நிமிரும் என நம்புவோம் !
என்னா பாட்டுடே : தந்திரா
அதே கண்கள் படத்தின் தந்திரா பாடல்.. நெகட்டிவ் பாத்திரத்தில் வரும் பெண்மணியை அடிப்படையாக கொண்டது. படத்தில் ஆங்காங்கு வரும் இப்பாட்டில் அதிசயிக்க வைப்பது ஒவ்வொரு முறை பாடல் வரும்போதும் அந்த பெண் பாத்திரம் தரும் ஆச்சரியம்..
கீச்சு கிளிகள் ..(From Twitter )
பெருங்காயம்™ @Perungayam
நானும் இந்த தமிழ்நாட்டுக்கு ஒரு நல்லது நடந்துடாதான்னு காத்துகிட்டு இருக்கேன் அத தவிர எல்லாம் நடக்குது
மதுரையான் @CitizenSaravana
சசிகலாவை ஒரு நாள் கூட முதல்வராக இருக்கவிடாமல் செய்ததே ஓபிஎஸ்’ன் முதல் வெற்றிதான். தமிழகமக்கள் இதை எப்போதும் மறக்கமாட்டார்கள்
ஆல்தோட்டபூபதி @thoatta
ஸ்டாலின் தன்னை பார்த்து சிரிக்காதவாறு இருக்க, சட்டசபையில் சோட்டா பீம் மாஸ்க் அணிந்து வர எடப்பாடியார் ஐடியா செய்துள்ளார்
டிமிட்ரி இவ்நோஸ்கி@karthekarna
எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவை எம்ஜிஆர் அம்மாவுக்கு ஏன்டா தீபா பேர வைக்கணும்?

மிருணாளினி |

No comments:
Post a Comment