Wednesday, March 15, 2017

வானவில் : 5 மாநில தேர்தல் முடிவுகள் ஒரு அலசல்- சாக்ஸ் shocks !

பார்த்த படம்: Fan

ஷாரூக் இரு வேடத்தில் நடித்த Fan திரைப்படம் ..ஒரு வித்யாசமான அனுபவம்.

முதல் பாத்திரம் - ஷாரூக்கை ஒத்த ஹீரோ; மற்றொன்று அவரின் விசிறி. இந்த விசிறி அவரை போலவே தோற்றம் கொண்டவன். ஹீரோவை அவரது இல்லத்தில் காண வந்து - முடியாமல் ஏமாற்றமடைகிறான்.இன்னும் சில சம்பவங்களுக்கு பின் அந்த விசிறி - ஹீரோவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுவதே கதை.... கிட்டத்தட்ட ஹீரோவின் பெயரை நாசம் செயகிறான் .. அதிலிருந்து ஹீரோ எப்படி மீண்டார்.. அந்த விசிறி என்ன ஆனான் என்பது கிளை மாக்ஸ்..

விசிறி பாத்திரம் தான் கதையின் உயிர்நாடி. கல்லூரியில் படிக்கும் சின்ன வயது பையன் போல நடித்து அசத்தியிருக்கிறார் ஷாரூக். சிற்சில குறைகள் இருந்தாலும் நிச்சயம் ஒரு வித்தியாச அனுபவம் தரும் படம்.

ரசித்த பதிவு 

எங்க ஊருக்கருகே உள்ள திருவையாறு அசோகா அல்வாவிற்கு புகழ் பெற்றது. அல்வா பற்றிய சமஸ் அவர்களின் இந்த பதிவு நாவில் நீர் சொட்ட வைக்கும் அட்டகாசமான ஒன்று.. வாசிக்க தவறாதீர்கள் !

அழகு கார்னர் 

Image may contain: 1 person, smiling, closeup
ஜாக்குலின் 

நானே ஜிந்திச்சேன்

ஜாகிங் என்பது அண்ணன் மாதிரி; ஆரம்பத்தில் வெறுப்போம். நாள்பட நாள்பட தான் அருமை தெரியும்.

வாக்கிங் தம்பி போல. எப்பவும் ஜாலி .. Fun ! அண்ணனால் உதவ முடியாவிடினும், தம்பி நிச்சயம் உதவுவான் !

- இன்றைய நடை பயிற்சியில் தோன்றியது (நானே ஜிந்திச்சேன் )

சாக்ஸ் shocks !!

காலையில் அலுவலகம் கிளம்பும் போது சாக்ஸ் தேடுவதே ஒரு பெரும் பிரச்சனை; என்ன பிரச்சனை என்கிறீர்களா?

இந்த சாக்ஸ்கள் எப்போதும் தமது ஜோடிகளை விட்டு பிரிந்தே காலம் கழிக்கின்றன. பத்து சாக்ஸ் இருக்கும். ஆனால் அதில் சரியான ஒரு ஜோடியை தேடி கண்டு பிடிக்கணும்.பத்து சாக்சில் நிஜமாவே ஒன்று மட்டுமே இணையோடு இருக்கும். மற்றவை எல்லாம் ஒண்டி கட்டைகளாக திரு திரு என முழிக்கும்.

துவைக்கும் இடத்திலோ, காயும் இடத்திலோ எப்படியோ ஜோடியை தொலைத்து விடுகின்றன.

பேசாம - யூனிபார்ம் மாதிரி கரும்நீல நிறத்தில் மட்டும் சாக்ஸ் வாங்க யோசித்து வருகிறேன். அப்போ - நிச்சயம் 2 காலுக்கும் ஒரே மாதிரி சாக்ஸ் கிடைச்சுடும் இல்லையா !

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் நிச்சயம் எனக்கு அதிர்ச்சியை தந்தது. டீமானிடைசேஷனுக்கு பிறகு நடக்கும் பெரிய தேர்தல் இது; டீமானிடைசேஷனில் பெரும்பான்மை மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். இருந்தும் ஐந்தில் -நான்கு மாநிலம் பிஜேபி வசம் எப்படி வந்தது ! (கோவா மற்றும் மணிபூரில் இரண்டாம்  இடம் வந்தும் சாமர்த்தியமாக காயை நகர்த்தி பிஜேபி ஆட்சியை கைப்பற்றியது )

டீமானிடைசேஷன் துயரத்தை எதிர்த்து எதிர் காட்சிகள் போதிய பரப்புரை செய்ய வில்லை; மாற்றாக இது என்னவோ பணக்காரர்கள் பணத்தை வாங்கி ஏழைக்கு கொடுக்க வைக்க நடக்கும் நிகழ்வு என பிஜேபி செய்த பிரச்சாரம் எடுபட்டது என்றே தோன்றுகிறது

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பிஜேபியை அசைக்கவே முடியாது! இது நல்லதா கெட்டதா..தெரிய வில்லை !

1 comment:

  1. அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பிஜேபியை அசைக்கவே முடியாது! இது நல்லதா கெட்டதா..தெரிய வில்லை ! -- இது மிக நல்லதே.. ஏன் சந்தேகம்? டீமானிடைசேஷன் பற்றி பரவலாக ஒரு உற்சாகம்இருக்கிறது. இன்னும் கொஞ்சம் சரியாகத் திட்டமிட்டுருக்கலாம் என்பது உண்மையே. ஆனால், விமர்சனங்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலை கொள்ளாமல் ஒரு துணிச்சலான முடிவை எடுக்க மோடியால் மட்டுமே முடியும். போலி மதவாதிகளுக்குப் பயந்து நீங்களும் பொதுப்படையாக எழுத வேண்டாம். நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...