Sunday, March 5, 2017

முதல் அரை மாரத்தான் -கற்றதும் பெற்றதும்

ந்து மாதம் தான் ஆகிறது. ..ஓட துவங்கி ! 10 கிலோ மீட்டர்  முதலில் ஓடியது நவம்பர் 2016ல் !

ஓட துவங்கி கொஞ்ச நாள் ஆன பின்பு அடுத்த இலக்கான  21கி. மீ பற்றிய யோசனை வந்து விட்டது; நண்பர்கள் சிலர் அவசரம் வேண்டாம் என்றனர். குறிப்பாக அனைத்து மாரத்தன்களிலும் என்னுடன் ஓடிய பழனியப்பன்..இன்னும் ஒரு வருஷம் போகட்டும் என்றே சொல்லி கொண்டிருந்தார்.

இன்னும் சில நண்பர்கள் சொன்ன லாஜிக்...... பத்து கிலோ மீட்டர் 60 நிமிடத்திற்குள் ஓடி முடித்த பின் - 21 கிலோ மீட்டர் ஓடலாம் என்பது ! இது ஓரளவு சரிதான் என தோன்றியது. ஏழெட்டு முறை ஓடியும் 10 கி.மீ - 62 முதல் 67 நிமிட ரேஞ்சில் தான் ஓட முடிந்ததே தவிர 60க்குள் முடிக்க முடியவில்லை.

ஏனோ மீண்டும் 21 கி.மீ மேல் ஆர்வம். மெப்ஸ் மராத்தான் அனவுன்ஸ் செய்து இறுதி வாரமும் வந்து விட்டது;ரிஜிஸ்டர் செய்யலாமா என யோசனையாகவே இருந்தது

15 கி.மீ வரை முயற்சி பண்ணி பார்த்துட்டு அது முடிந்தால் 21 ஓடலாம் என முடிவு செய்தேன் .இரு நாள் அடுத்தடுத்து 12 மற்றும் 15 கிலோ மீட்டர் ஓடிய  பின் நிச்சயம் 21 ஓட முடியும் என நம்பிக்கை வந்தது; கடைசி நேரத்தில் மெப்ஸில் இருக்கும் நண்பர் தினகர் உதவியுடன் ரிஜிஸ்டர் செயதேன்



Preparation 

போன பாராவில் சொன்னது போல் 12 மற்றும் 15 ஓடி பார்த்தது முதல் வேலை ( ஓட்டம் பற்றி நன்கு  தெரிந்த நண்பர்கள் 15வரை கூட ஓடி பார்க்க வேண்டாம். 10 அல்லது 12 கிமீ ஓட முடிந்தால் போதும் என்றனர்)

ரேஸுக்கு முந்தைய  2 நாள் நடை மற்றும் சைக்கிளிங் மட்டுமே செய்தேன். ஓடவில்லை.

10 கி.மீ ஓடும்போதெல்லாம் நேரம் பார்த்தே ஓடுவது வழக்கம். இம்முறை நேரத்திலோ விரைவாக முடிப்பதிலோ அதிகம் concentrate செய்ய வேண்டாம் என நிச்சயம் மனதுக்குள் உறுதி செய்து கொண்டேன்.

21 கி. மீ என்பது சற்று அதிகமான தூரம். எனவே நம்மை exhaust /burn out ஆகாமல் பார்த்து கொள்வது மிக முக்கியம். முதலில் அதிக வேகம் ஓடி சோர்வானால் இறுதியில் ரொம்ப சிரமம் ஆகும் வாய்ப்பு உண்டு.

எனது நண்பர் ஒருவர் 17 கிலோ மீட்டர் வரை நிற்காமல் ஓடியவர் அதன் பின் சுத்தமாய் ஓட முடியாமல் நிறுத்தி விட்டார்.இந்த அனுபவம்- ஓட்டத்தை சற்று திட்டமிட்டு தான் அணுக வேண்டும் என்பதையும் 10கிலோ மீட்டர் போல் எந்த பிளானிங்கும் இல்லாமல் ஓட முடியாது என்றும் புரிந்தது

எனது strategy மிக எளிது: துவக்கம் முதலே தொடர்ந்து போதிய ரெஸ்ட் (அதாவது நடை) உடன் ஓட வேண்டும் என்பது தான் அது !

ஆரம்பத்தில் முடிந்த வரை ஓடுவது. சிறிது சிரமம் என்றாலும் push செய்யாமல் நடக்க துவங்கி விட வேண்டும். இறுதி 5 கிலோ மீட்டர் push செய்து ஓடி பார்க்கலாம்.

மேலும் மொபைலில் full சார்ஜ் இருக்கிற மாதிரி பார்த்து கொண்டேன். பாட்டு கேட்டு கொண்டே ஓடினால் வழக்கத்தை விட சற்று அதிகம் ஓடலாம்.அது ஒரு டைவெர்ஷன் ஆக இருக்கும்.

மொத்த aid station எத்தனை -அது எங்கெங்கு உள்ளது என்பதை பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டேன். ஓடும் போது பார்க்க வில்லை; ஆயினும் துவக்கத்தில் 2 அல்லது ரெண்டரை கிலோ மீட்டருக்கு ஒரு aid station ; கடைசி 5கிலோ மீட்டர் - ஒவ்வொரு கிலோ மீட்டரிலும் aid station இருக்கும். இதை தெளிவாக மனதில் இருத்தி கொண்டேன்.

இவ்வளவு தூரம் ஓட எனர்ஜி தேவை;எனவே காலை ஒரு ஆப்பிள் சாப்பிட்டு விட்டு தான் ஓட்டத்திற்கு கிளம்பினேன்

இரவு சரியான உறக்கம் இல்லை; உறங்கவே பத்தரை ஆனது.ரெண்டரைக்கெல்லாம் எங்கள் செல்லப்பிராணி கூக்ளி அழுது எழுப்பி விட்டான். பின் உறக்கமில்லை; 3 மணிக்கு படுக்கையை விட்டு எழுந்து கிளம்பி விட்டேன்

****
Race Day

ஞாயிறு காலை 4 மணிக்கு சென்னையில் சிற்சில கடைகள் திறந்திருப்பது ஆச்சரியம் தந்தது (அநேகமாய் டீ கடை அல்லது பெட்டி கடை) ;பெட்ரோல் பங்கு திறந்திருக்க - செக்கியூரிட்டி அங்கேயே உட்கார்ந்த படி தூங்கி கொண்டிருந்தார்.  எப்போது வரும் என தெரியாத பஸ்ஸுக்கு அந்த நேரத்திலும் பொது மக்கள் காத்திருந்தார்கள்.

மெப்ஸ் வந்து விட்டது.

5.05க்கு ஓட்டம் துவங்கியது. நண்பர் ஷான் உடன் முதல் ஒரு கிலோ மீட்டர் ஒடினேன்.நண்பர் ராஜ்குமார் தாமதமாக வந்தவர்.. சரியாக ஓட்டம் துவங்கும் நிமிடம் வந்து இணைந்தார்.

முதல் 3 கிலோ மீட்டர் விரைவாக கடந்து விட்டேன். திடீரென முதுகு பிடிப்பு போல் உணர்ந்தேன். ஆஹா இத்துடன் ஓட முடியாதே என பயம்.. பின் நடந்தபடி முதுகிற்கான சில stretches செய்ய வலி சரியாகி விட்டது. துவக்கத்தில் ஆறு நிமிடத்திலும் பின் ஆறரை அல்லது 7 நிமிடத்தில் ஒவ்வொரு கிலோ மீட்டரும் கடந்து கொண்டிருந்தேன்

ஓடிய 21 கிலோ மீட்டரில் 90 % இதுவரை நாம் பார்க்காத ஏரியா. இதுவே ஒரு சுவாரஸ்யம் தந்தது.

முதல் மூன்றரை கிலோ மீட்டர் மெப்ஸின் உள்ளே ஓட்டம். அங்குள்ள நிறுவனங்களை பார்த்த வண்ணம் ஓடி கொண்டிருந்தேன்.

பின் கிராமம் துவங்கியது ... முதலில் திருமுடி வாக்கம்.. அப்புறம்.. மேற்கு தாம்பரம்.. குன்றத்தூர், திரு நீர் மலை போன்ற ஏரியாக்கள்.. பை பாஸ் சாலையின் சர்வீஸ் ரோடு மற்றும் கிராமத்தில் மக்கள் வசிக்கும் தெருக்கள் இவற்றில் தான் ஓட்டம் நிகழ்ந்தது. 



Aid station சப்போர்ட் மிக சுமார் தான். அதிக தூர ஓட்டத்திற்கு எலெக்ட்ரால் போன்றவை மிக முக்கியம். முதல் இரண்டு Aid station ல் தண்ணீர் மற்றும் உப்பு உள்ளிட்ட வெகு சில தான் இருந்தது.போகப்போக ..பின்னால் வந்த Aid station களில் வாழைப்பழம், ஆரஞ்சு போன்றவை கிடைத்தன 

10-11கிலோ மீட்டர் அதிக சிரமம் இல்லாமல் கடந்து விட்டேன்.11 கிலோ மீட்டர் 75 நிமிடத்தில் தாண்டியாச்சு. மீதம் உள்ள 10 கிலோ மீட்டர் 75 நிமிடத்தில் போனாலே இரண்டரை மணி நேரத்தில் போயிடலாம். ஆனால் அவ்வளவு விரைவில் போக வேண்டாம்.. அடுத்தடுத்து வரும் ஓட்டங்களில்  இந்த குறைவான நேரம் ஒரு ப்ரெஷர் தரும்  என அதன் பின் ஓட்டத்தை குறைக்க ஆரம்பித்து விட்டேன். 

வழியில் ஒரு 55 வயது மதிக்க தக்க வெளி மாநிலத்தவரை கண்டு பேசினேன். பம்பாயிலிருந்து வருகிறாராம். ஒவ்வொரு வருடமும் மெப்ஸ் மாரத்தான் வந்து விடுவேன்.. அழகான ரூட்..அதற்காகவே என்றார்.

திருநீர் மலை கோயில் அருகே மலை மேல் உள்ள கோயிலும் அருகில் பசுமையான வயல் வெளிகளும் கண்ணை கவர்ந்தன.



17 கிலோ மீட்டரில் மீண்டும் மெப்சுக்குள் நுழைந்ததும் ஆகா மெப்ஸ் வந்துவிட்டது..சீக்கிரம் முடியும் என நினைத்தால் அதன் பின் 4 கிலோ மீட்டர் கொஞ்சம் தண்ணி காட்டுது 

கடைசி 3-4 கிலோ மீட்டர் நன்கு ஓடலாம் என முதலில் நினைத்தேன்.. ஆனால் அந்த நேரம் அதிக பட்சம் 200 மீட்டர் தான் ஓட முடிந்தது. அப்புறம் இன்னொரு 200 மீட்டர் நடை..பின் ஓட்டம்..இப்படித்தான் சென்றது;அதற்கு மேல் push செய்ய முடியலை. 



21 கி.மீ முடித்த போது 2 மணி நேரம் 33 நிமிடம் ஆகியிருந்தது ! எனது துவக்க ஊகம் 2 மணி 45 நிமிடம் ஆகும் என்பது. அதை விட குறைவான நேரத்தில் முடிந்தது பெரும் மகிழ்ச்சி.

***

ஓட்டத்திற்கான எனது திட்டமிடலில் 90% நேரடியே பயன் பட்டது ! ஒரு சில..... அந்த நேரத்திற்கு ஏற்றார் போல் மாற்றி கொள்வதும் அவசியம். 

முடித்து விட்டு பிசியோதெரப்பி - ஸ்ட்ரெட்சஸ் செய்து கொண்டேன்.செய்தவர்கள் இறுதி ஆண்டு Physiotherapy படிக்கும் மாணவர்கள்


நண்பர்கள் ராஜ்குமார், ஷான் மற்றும் சந்திர மோஹனுடன் புகைப்படம் எடுத்து கொண்டு சாப்பிட்டு விட்டு விடை பெற்றோம். ஒவ்வொருவர் ஒவ்வொரு நேரத்தில் வந்திருந்தனர். ஷான் 2 மணி 14 நிமிடம்; ராஜ்குமாருக்கு காலில் காயம். இல்லாவிடில் 2 மணிக்குள் ஓடி முடிக்கும் அவர் எடுத்து கொண்டது 2 மணி மற்றும் 40 நிமிடங்கள் 


21 கிலோ மீட்டர் ஓடி முடித்த இந்த நாள் முழுக்க மிக மகிழ்ச்சியாய் உணர்கிறேன்.

இத்தகைய சாலஞ்கள் நம்மை நாமே இன்னும் நன்றாக உணர வைக்கின்றன 

மாரத்தானுக்கு வந்தனம் !

7 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...