சென்னையில் ஏராள நண்பர்கள் ஓட காரணமான குழு சென்னை ரன்னர்ஸ். இவர்களின் கிளைகள் அண்ணா நகர், வேளச்சேரி, அம்பத்தூர், பெசன்ட் நகர், தி. நகர், மெரினா, நுங்கம்பாக்கம், அசோக் பில்லர் உள்ளிட்ட பல இடங்களில் உள்ளது. இப்படி தங்கள் இல்லம் அருகே இருக்கும் குழுவில் இணைந்து தான் பலரும் ஓட்டத்தை துவங்குகின்றனர்.
சென்னை ரன்னர்ஸ்சின் இன்றைய அனிவர்சரி ஓட்டம் மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஓட்டத்தில் கலந்து கொள்ள (காலை உணவு உட்பட) எந்த பணமும் செலுத்த தேவையில்லை .. மேலும் 3,5 மற்றும் 10 கி மீ ஓட்டங்கள் இருந்தன. எனவே முதலில் முயற்சித்து பார்க்கும் பலரும் 3 அல்லது 5 கி மீ ஓடினர்.
கிண்டி அண்ணா யுனிவர்சிட்டியில் இருந்து கிளம்பிய ஓட்டம் - முதல் ஒன்றரை கிலோ மீட்டர் வரை அங்கேயே தொடர்ந்தது. அழகான அண்ணா யூனிவர்சிட்டியை பார்க்க எங்களுக்கெல்லாம் ஒரு வாய்ப்பு. பின் கோட்டூர் புரம் வழியே அழகான இல்லங்களை கொண்ட போட் ஹவுஸ் உள்ளே ஒரு கிலோ மீட்டர் தொடர்ந்தோம்..
சரியாக இரண்டரை கிலோ மீட்டரில் முதல் பிட்ஸ்டாப் /எயிட் சென்டர் இருந்தது. கோட்டூர் புரம் மேம்பாலத்தை செல்லும்போது ஒரு முறையம், திரும்பும் போது மறுமுறையும் ஏறி இறங்க வேண்டியிருந்தது. இது தான் சற்று கடினமான வேலை..
வழக்கமாய் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் முக்கால்வாசி ஓட்டம் -கால்வாசி நடை என தொடர்பவன்..இம்முறை வைப்ரன்ட் வேளச்சேரி நண்பர்களுடன் ஓடி சற்று பழக்கமானதால் - ஆறரை கிலோ மீட்டர் வரை நடக்காமல் ஓடிவிட்டேன்.
ஐந்து கிலோ மீட்டரில் இரண்டாவது பிட்ஸ்டாப்.வாலன்டியர்கள் மிக அற்புதமாக சர்வீஸ் செய்தனர். எலக்ட்ரால் கலந்த நீர், ஆரஞ்சு, வாழைப்பழம், கடலை மிட்டாய் இவற்றை தந்த வண்ணம் இருந்தனர்.
5 கி மீ முடித்து விட்டு திரும்பும் போதே அடுத்த அரை கிலோ மீட்டர் தூரத்தில் பழனியப்பன், மற்றும் அவரது அலுவலக நண்பர் சிலர் மற்றும் இன்று முதல் முறை மரத்தானில் ஓடும் நண்பர் லட்சுமி நாராயணன் ஆகியோரை காண முடிந்தது.
ஆறரை கிலோ மீட்டருக்கு பின் சற்று நடந்தது தப்பாய் போனது. அப்புறம் ஆங்காங்கே நடக்க சொன்னது உடலும் கால்களும்... ஓடிக்கொண்டே இருந்தால் கூட ஓடி விடலாம் போல..
ஏழரை கிலோ மீட்டர் எயிட் சென்டரில் வைப்ரன்ட் வேளச்சேரி நண்பர் கார்த்திக்கை சந்தித்தேன். அவர் அதன்பின் அதிகம் நடக்க விடாமல் - மெதுவாக ஓட வைத்து அழைத்து சென்றார். இப்படி நல்ல கம்பெனி கிடைத்தால், அதிக நேரம் ஓட முடியும். நடுவில் மூச்சு வாங்குகிறது என நடந்தபோது கார்த்திக் எனக்காக சற்று நடந்தார்.
அண்ணா யூனிவர்சிட்டி உள்ளே நுழைந்ததும் மைதானங்களில் பலர் கிரிக்கெட் விளையாடுவதை காண முடிந்தது. அழகான கேம்பஸ் பார்த்து கொண்டு ஓடுவது சுவாரசியமாக - சிரமமான கடைசி பகுதியை இலகுவாக்கியது
67 நிமிடத்தில் 10 கி மீ ஓடி முடித்தேன். இம்முறை முக்கிய இலக்கு - முடிந்தால் 10 கி மீட்டரும் ஓடி விட வேண்டும். இல்லையேல் 90% ஓடணும் என்பது.. இரண்டாவது விஷயம் நடந்ததில் சற்று மகிழ்ச்சி. 10 கி மீ முழுதும் ஓடும் நாளுக்கான காத்திருப்பு தொடர்கிறது
சென்னை ரன்னர்ஸ் ஓடி முடித்ததும் அழகான சிறு துண்டு தந்தனர். பிரெஷ் ஆக கரும்பு சாறு - பிழிந்து தந்து கொண்டே இருந்தனர். சாப்பாடு.. சுவையாகவும், ஹைஜீனிக் ஆகவும் இருந்தது.
ஓடி முடித்தபின் கால்களுக்கு பிஸியோ தெரப்பி செய்தவர்களும் அருமையாக செய்தனர்.
பிசியோ செய்யும் இடத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவம்.. 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர்.. என்னை நெருங்கி " நீங்க தானே மோகன்? தமிழில் பிளாக் எழுதுறீங்க இல்லையா? தொடர்ந்து படிக்கிறேன். நல்லாருக்கு; விட்டுடாதீங்க. தொடர்ந்து எழுதுங்க " என்றார். எதிர்பாரா நேரம்/இடத்தில் இப்படி ஒரு வாழ்த்து கிடைத்தது ஒரு ஆனந்த அதிர்ச்சி.
நிறைய நண்பர்களை காண /பேச முடிந்தது.. குறிப்பாக 60 வயதை கடந்த ராஜதுரை என்கிற கம்பெனி செகரட்டரி நண்பர் 10 கி மீ ஓடி+ நடப்பதை கண்டு மிக மகிழ்ச்சியாய் இருந்தது.
நிறைய நண்பர்களை காண /பேச முடிந்தது.. குறிப்பாக 60 வயதை கடந்த ராஜதுரை என்கிற கம்பெனி செகரட்டரி நண்பர் 10 கி மீ ஓடி+ நடப்பதை கண்டு மிக மகிழ்ச்சியாய் இருந்தது.
போலவே 50 வயதை தாண்டிய வழக்கறிஞர் நண்பர் கேசவன் அவர்களும் மிக அட்டகாசமாக ஓடினார்.
ஓட்டத்தின் பக்கமும் பிட்னெஸ் பக்கமும் ஏராளமானோரை இழுக்கும் சென்னை ரன்னர்ஸ்சின் பணி என்றும் தொடரட்டும்!
ஓட்டத்தின் பக்கமும் பிட்னெஸ் பக்கமும் ஏராளமானோரை இழுக்கும் சென்னை ரன்னர்ஸ்சின் பணி என்றும் தொடரட்டும்!
***********
சென்னை ரன்னர்ஸ் இணைய தள முகவரி:
http://www.chennairunners.com/
***********
சென்னையில் அடுத்து நடக்கும் இரு இலவச ஓட்டங்கள் :
http://youtoocanrun.com/races/reebok-float-a-thon-chennai/
http://towertwisters.com/registration.html
வாழ்த்துகள்...... தொடர் ஓட்டம் தொடரட்டும்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteகூடிய விரைவில் முழு ஓட்டம் நடைபெற வாழ்த்துக்கள்