Monday, January 10, 2011

"தீக்கடல்" - நர்சிம்மின் புத்தக விமர்சனம்

"தீக்கடல்" -  நர்சிம்மின் கவிதை தொகுப்பு உயிர்மை வெளியீடாக வந்துள்ளது.அழகான அட்டைபடம், அருமையான லே அவுட், "கவிஞர்" பற்றிய அறிமுகம், கவிஞர். ராஜ சுந்தர் ராஜன் முன்னுரை என சுவாரஸ்யங்களுக்கு குறைவில்லை. 

பொதுவாய் கவிஞர்கள் காதலில் தான் எழுத துவங்குவர். நர்சிம்மின் முதல் கவிதை தொகுப்பில் காதல் கவிதைகள் மிக குறைவாய் இருப்பது ஆச்சரியமாய் உள்ளது. 33 வயதில் முதல் தொகுப்பு வருவது தான் காரணமோ? (வயது எப்படி தெரியுமா?  புத்தகத்தில்  தான் போட்டிருக்காங்களே!!)
நர்சிம்மின் கவிதைகளை ஏற்கனவே வாசித்த போதே என்னை கவர்ந்தது அவர் எதையும் காட்சி படுத்தும் விதம். சில நேரங்களில் காட்சியை ஒரு ஓவியம் போல கண் முன்னே கொண்டு வருவார்.

மயானத்தில் பிணங்களை எரிப்பவன், அதனை எரித்தவாரே தன் கல்யாண தேதி முடிவு செய்யும் கவிதை (அகர முதல) வித்யாசமான களம்..நன்றாக காட்சி படுத்தப்பட்டுள்ளது. பிணங்களை எரிக்க உதவும் குச்சி மாட்டின் பிரசவத்துக்கு உபயோகம் ஆவதாக முடித்திருப்பது மனதை என்னவோ செய்கிறது. 

ரொம்ப அழகான மற்றொரு கவிதை பிறர் தர. 

உதிர்ந்திருந்த மலரொன்றை
எடுத்து மண் தட்டி செல்லும் தருணத்தில் 
என்னை தழுவி சூழ்ந்தது 
தீதும் நன்றும் 

இந்த கவிதை அனைவருக்கும் பொருந்தும் என்றாலும் நர்சிம் இதை எழுதிய மன நிலையும் சூழலும் பிளாக் வாசிக்கும்  நண்பர்களுக்கு  நினைவில்  வந்து போகும். 

கவிதை எழுதுவோர் அனைவரையும் அவரவர் மனைவி "என்னை பற்றி ஒரு கவிதை எழுத மாட்டேன் என்கிறீர்களே"  என்று கூறி இருப்பார்கள்.. அத்தகைய ஓர் சூழலில் ஆரம்பிக்கிறது "அவளுக்காகவேயான "  கவிதை. மனைவி அல்லது காதலி பற்றி எழுதப்பட்டது  என எண்ணி வாசிக்கும் போது " எவளென்றே தெரியாத இவள் எழுதி செல்லும் வார்த்தைகளின் வசீகரம்" என்ற வார்த்தைகள் சற்று குழப்புகிறது. (எனக்கு இன்னும் பயிற்சி தேவையோ?) 

அந்தரங்கம் கவிதை,  பூட்டப்பட்ட வீட்டை குறித்தது. ஒட்டடை, துருப்பிடித்த கைப்பிடி என நர்சிம்மின் பார்வையும் கற்பனையும் கலந்து வெளி வருகிறது. 

"கூடல் ஊடல்களின் பொருட்டல்ல 
அது ஒரு பொருட்டல்ல "

"காயும் காயம்" 

"நிழலில் எது நிழல்" 

"சொல்லின் என்ன இல்லை சொல்" 

"சகித்து கொள் சகி"

என ஒரே மாதிரியான வார்த்தைகளை வைத்து விளையாடுவது சற்று அதிகமாகவே தொடர்கிறது. (வாலியின் பாதிப்பு??) இதனை கொஞ்சம் குறைத்து கொள்ளலாமோ என்று தோன்றியது.  

பறவைகள், முதல் கவிதை தொடங்கி ஆங்காங்கு வந்து கொண்டே உள்ளது ரசிக்கும் படியே உள்ளது.

"தலையை ஆட்டி சிறகுலர்த்தும் பறவை" 

"அவ்வீட்டு 
டிஷ் ஆண்டெனா தவிர 
வேறெங்கும் அடைவதில்லை 
அவை " 

"பறவையின் இறகில் அழகை 
பார்க்குமென் கண்களில் விரிவது
அதன் சுதந்திரம் " 

"மின் விசிறியின் முனையில் 
வெட்டுப்பட்ட குருவியின் தலை "

காலை நேரம் நன்றாக இழுத்து போர்த்தி கொண்டு தூங்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இருக்கும். குருவிகள் &  பறவைகளை மற்ற நேரங்களில் ரசிக்க முடிந்தாலும் இந்த நேரத்தில் அவை கத்தினால் நமக்கு சிறு எரிச்சல் வரும். ஆனால் நர்சிம் அப்போதும் அதனை ரசிக்கிறார் போலும் 

"நாளை அதிகாலை 
எனக்கான 
பறவையின் குரல் 
என்னை திறக்கும்" 

இனி அதிகாலை பறவைகள் எழுப்பினால் "எனக்காக கேட்கும் குரல்" என ஒரு வேளை நான் சமாதான படுத்தி கொள்ளலாம். 

என் ரசனை/ புரிதல் பற்றி நீங்கள் எள்ளினாலும் சொல்ல தான் வேண்டும்:  சில கவிதைகள் புரிய வில்லை.  (எல்லாம் புரிந்து விட்டால் கவிதை இல்லை என்பார்களே அதனால் இருக்குமோ?)

எல்லா கவிதைக்கும் தலைப்பு இருப்பது ஆச்சரிய படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் அவசியம் தலைப்பு வைத்தாக வேண்டுமா என்ன? போலவே கவிதைகளின் தலைப்புகள் & பக்க எண்ணும் Index ஆக தந்தது...

பேருந்து பிரேக் டவுன் ஆகும் போது பல்வேறு மனிதர்களும் ஏதேதோ பேச, வண்டியின் சக்கரத்தில் சிக்கி இறந்து போன வண்ணத்து பூச்சியின்  இறகை தொட்டு பார்க்கும் மனம் நர்சிம்முக்கு வாய்த்திருக்கிறது. இந்த மனம் என்றும் தொடரட்டும். முன்னுரையில் கவிஞர் ராஜ சுந்தர் ராஜன் சொன்னது போல முதல் தொகுப்பு வந்த பின், வரக்கூடிய சோம்பல் இவரை வந்து ஆட்கொள்ளாமல்  இருக்கட்டும். 

கவிதா மனமும், வார்த்தைகளை வடிவமைக்கும் வித்தையும், நுணுக்கமான பார்வையும் வந்து விட்டது. இன்னும் நிறைய பாடு பொருள்களை பற்றி இவர் எழுத வேண்டும். நிறைய பரிட்சார்த்த முயற்சிகளை கவிதைகளில் செய்து பார்க்கலாம். பிளாக் அதற்கு நிச்சயம் உதவும்.       

முதல் கவிதை தொகுப்பிற்கு வாழ்த்துகள் நர்சிம்!!  உங்களிடமிருந்து  இன்னும் நிறைய வித்யாசமான படைப்புகளை எதிர் பார்க்கிறோம்!!
**
புத்தக விமர்சனத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு கேள்வி:

படத்தில் கிளிக்கு பின்னே ஒளிந்திருக்கும் பதிவர் யார்? கண்டு பிடியுங்கள் !! சரியான விடை: அடுத்த பதிவில்.

9 comments:

  1. நல்லா எழுதியிருக்கீங்க..

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி மோகன்குமார்.

    ReplyDelete
  3. நல்ல விமர்சனம். பகிர்வுக்கு நன்றி மோகன்.

    ReplyDelete
  4. பொறுமையா வாசிச்சு நிறைவா எழுதியிருக்கீங்க‌

    //கவிதா மனமும், வார்த்தைகளை வடிவமைக்கும் வித்தையும்//

    எச்சூஸ்மீ இதுல‌ க‌விதாங்க‌ற‌து யாரு? ;)

    ReplyDelete
  5. நன்றி :

    அமைதி அப்பா
    கேபிள்
    ராம லட்சுமி
    வெங்கட் நாகராஜ்
    ரகு

    ReplyDelete
  6. Anonymous7:36:00 PM

    நல்ல விமர்சனம் அண்ணா! "தல" யோட புத்தகம் சீக்கிரம் வாங்கிடுவேன் :)

    ReplyDelete
  7. நல்ல பார்வை/ பகிர்வு மோகன்! நன்றி மக்கா!

    ReplyDelete
  8. கிளிக்கு பின்னால இருக்கவர் வடிவேலுவை அடி பிண்ற சிங்க முத்து மாதிரி இருக்கார் சார் :)

    ReplyDelete
  9. கவிஞர் நர்சிம்முக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...