சுரேகா கவிதை நயத்துடனும், நகைச்சுவையாகவும் மிக அருமையாய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். (சுரேகா உங்க பேச்சு மட்டுமல்ல, சட்டையும் சூப்பர்)
பதிவர் கே. ஆர் பி செந்தில் வெளியிடும் முதல் புத்தகம் இது. எங்கள் அடுத்த வெளியீடு கே. ஆர் பி செந்திலின் " பணம்" என சினிமா பாணியில் கடைசி பக்கத்தில் சொல்கிறார்கள். வாழ்த்துகள் செந்தில்!
நான் சற்று தாமதமாய் சென்றதால் மோகன் பாலு என்ற நண்பர் பேச்சை கேட்க முடியவில்லை
அப்துல்லா பேசும் போது "கேபிளை மூன்று வருடங்களுக்கு முன் சந்தித்தேன். அவர் எழுதிய ஒரு கதையில் சுஜாதா சாயல் இருப்பதாக சட்டையை பிடித்தேன். அதற்கு அவர் நேர்மையான விளக்கம் தந்தார். அன்று முதல் இன்று வரை நாங்கள் நெருங்கிய நண்பர்களாக உள்ளோம். என்னை யாரும் பார்த்தால் கேபிள் பற்றி விசாரிப்பார்கள். அவரை பார்த்தாலும் என்னை பற்றி கேட்பார்கள். அவரை சட்டையை பிடித்தது இந்த அளவு கொண்டு வந்து விட்டுள்ளது" என்றார்.
அகநாழிகை பொன். வாசுதேவன் விழாவிற்கு வர முடியாமல் போனதால் அவர் உரையை சுரேகா வாசித்தார். கதைகள் மனிதர்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்தையும், கதை எழுதும் பாணி கேபிளுக்கு நன்றாகவே வருவதாகவும் வாசு கூறியிருந்தார். அவரும் சுஜாதா பாதிப்பை குறிப்பிட மறக்க வில்லை.
இயக்குனர் சீனு ராமசாமி தான் இலக்கியம் வாசிக்க துவங்கியது எப்படி என்பது பற்றியும் சினிமாவும் இலக்கியமும் எப்படி தூரமாய் உள்ளது என்றும் பேசினார். கேபிள் கதைகளை முழுதும் வாசித்து விட்டு கடிதம் எழுதுவேன் என்றார். (அப்படி எழுதினால் கேபிள் நிச்சயம் தன் பிளாகில் பகிர்வார். அப்போ படிச்சுக்குவோம்)
லக்கி ஜெர்கின் அணிந்தவாறு ஸ்டைலாக பேசினார். மைக்கில் அவர் குரல் ரொம்ப வித்யாசமாயிருந்தது (முதல் முறை அவர் குரலை மைக்கில் கேட்கிறேன்) சில கதைகளை சிலாகித்தும் சில கதைகளை கடுமையாய் விமர்சித்தும் பேசினார். தனக்கு கேபிள் ஒதுக்கிய மூன்று கதைகளிலும் எந்த பெண் கேரக்டரும் இல்லை என்றும் இது நண்பனின் சதி என்றும் சொன்னார். கேபிளுக்கு இணையத்தில் தான் முதல் நண்பன் என்றும் அடிக்கடி இருவரும் பல விஷயங்களுக்காக அடித்து கொண்டாலும் இன்றும் நட்பு தொடர்கிறது என்றார். இணையத்தில் தன் கதை ஒன்றை பார்த்து விட்டு கேபிள் முதல் முறை போன் செய்து பேசும் போது "கதை அருமை. சுஜாதாவுக்கு அடுத்து நீ தான்" என்றார். அதன் பிறகு நான் கதை எழுதுவதில்லை என பலத்த சிரிப்பொலிக்கிடையே கூறினார். கேபிள் முதல் முறை சந்தித்தது முதல் இன்று வரை " படம் எடுக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்" என்றே கூறுவ தாகவும் விரைவில் படம் எடுக்குமாறும் பேசி அமர்ந்தார்.
ஆதி மிக மென்மையான குரலில் மெதுவாக பேசினார். நண்பர் என்று பார்க்காமல் கதைகளை வெளிப்படையாக விமர்சனம் செய்தது நன்று.
சிறப்பு விருந்தினர் பர்வீன் சுல்தானா பேச்சு மிக சிறப்பாக இருந்தது. " இணைய எழுத்தாளர்களை பார்த்து நான் சற்று பயப்படுகிறேன். நாங்கள் மற்ற இடங்களில் பேசினால் அது பிரசுரம் ஆக சற்று தாமதம் ஆகும். ஆனால் இங்கு பேசியது உடனுக்குடன் பப்ளிஷ் ஆகிடும். மேலும் இணைய எழுத்தாளர்கள் எதற்கும் பயப்படாதவர்களாக உள்ளனர். இங்கு பேசியவர்கள் பேச்சே கூட ஆச்சரியமாக இருந்தது. எங்கள் மேடைகளில் இப்படி பேச நாங்கள் ரொம்ப யோசிப்போம். எவர் மனதும் புண்படுமோ என. ஆனால் இங்கு பேசியவர்கள் பயப்படாமல் பேசினர்.
முதலில் பேசிய மோகன் பாலு கதைகளின் உள்ளே ரொம்ப டிராவல் செய்து விட்டார். அவர் அதுனுள் ஒன்றி விட்டார். நான் அந்த அளவு உள்ளே செல்ல வில்லை. கேபிள் என்னை பார்த்த போது என் கதையில் இலக்கியம் இருக்காது; இருந்தால் சுட்டி காட்டுங்கள் என்றார். இலக்கியம் ஒரு வினாடி நம்மை சற்று நிறுத்தினால் போதும். அந்த ஸ்பார்க் தான் வெற்றி.
கேபிள் கதைகளில் பெண்கள் பற்றிய விவரணை நிறைய இருந்தாலும் அவர் மனைவி அல்லது காதலி அழகை பற்றி மட்டும் தான் விவரிக்கிறார். காதலியின் தோழி அருகில் இருந்தால் கூட அவளை பற்றி விவரிப்பதில்லை. இது அவரின் மனதை காட்டுகிறது.
குண்டம்மா பாட்டி என்ற கதை என்னை ரொம்ப கவர்ந்தது. ஒரு வயதான பெண்ணின் வலி அதில் சிறப்பாக பதிவு செய்ய பட்டுள்ளது. மீண்டும் ஒரு காதல் கதை மட்டுமல்லாது மேலும் பல கதைகள் சினிமா போல் உள்ளது. இவர் சினிமாவில் இருப்பதால் கதைகளை சினிமா போன்றே யோசிக்கிறார். (மேலும் தனக்கு பிடித்த வேறு சில கதைகளை பட்டியிலிட்டார்).
அப்துல்லா மூலம் நீங்கள் அனைவரும் எனக்கு நண்பர்களாகி உள்ளனர். இனி உங்கள் பதிவுகளில் என் பங்கீடும் இருக்கும் " என அவர் பேச்சை முடித்தார்.
இறுதியாய் இவர் சொன்ன "தனக்கு எல்லா காலத்திலும் பிடித்த கதை" ரொம்ப டச்சிங் ஆக இருந்தது. இக்கதையை வேறொரு சந்தர்ப்பத்தில் வானவில்லில் பகிர்கிறேன்.
கேபிள் அனைவருக்கும் நன்றி சொன்னார். விழாவில் பேசியவர்களுக்கு அவர் புத்தகம் பரிசாக தரப்பட்டது.
எனக்கு தெரிந்து வந்திருந்த பதிவர்கள்: உண்மை தமிழன், ஜாக்கி சேகர், மணிஜி, நரசிம், அப்துல்லா, லக்கிலுக், பட்டர்பிளை சூரியா, காவேரி கணேஷ், அதிஷா, ஆதி, கே.ஆர்.பி செந்தில், சங்கர் (ஜெட்லி), கார்க்கி, ரமேஷ் (சிரிப்பு போலிஸ்), பெஸ்கி, தராசு, எறும்பு ராஜ கோபால், நித்திய குமாரன், சுகுமார் சுவாமிநாதன், எல். கே, வெற்றி, பதிவர் அனு (தன் கணவருடன்), தன சேகர், மற்றும் பலர்.
காவேரி கணேஷ் மற்றும் கேபிள் பதிவுகளில் புகை படங்கள் வெளியாகும்.
புத்தக சந்தை நேற்று துவங்கி விட்டது. நண்பர்கள் நரசிம், வாசு, நிலாரசிகன், கேபிள் உள்ளிட்டோரின் புத்தகங்கள் நன்கு விற்பனை ஆக வாழ்த்துகள் !!
பகிர்விற்கு நன்றி . நானும் வந்திருந்தேன். மணிஜியின் அருகில் இருந்தேன்
ReplyDeleteசிறப்பான தொகுப்பு அண்ணா!
ReplyDeleteநன்றி தலைவரே.. புத்தகத்தை படித்துவிட்டு உங்கள் விமர்சனத்தை போடவும்..
ReplyDeleteநல்ல தொகுப்பு...
ReplyDeleteபகிர்விற்கு நன்றி
ReplyDeleteநன்றி எல். கே. இப்போ சேர்த்துட்டேன்
ReplyDelete**
பாலாஜி : நன்றி
**
சங்கவி: நன்றி
**
நன்றி வித்யா
**
கேபிள்: நீங்க என்ன பின்னூட்டம் போடுவீங்கன்னு நினைச்சேனோ அதையே எழுதிருக்கீங்க :))
புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட திருப்தியை ஏற்படுத்திவிட்டீர்கள்.
ReplyDeleteநன்றி சார்.
புத்தக விற்பனை சிறப்பாக அமைய வாழ்த்துகள் !!
மிக்க நன்றி தலைவரே ...
ReplyDeleteசென்னையில் இருப்பதில் உள்ள ஒரு வசதி இது போன்ற நிகழ்ச்சிகளில் சந்திப்பது...
ReplyDeleteவிழாவினைப் பற்றி உங்கள் பகிர்வுக்கு நன்றி மோகன்.
நல்ல பகிர்வு.
ReplyDeleteவிழா விமர்சனம் -- நன்று..
ReplyDeleteவராதவர்களின் பட்டியலில், எனது பெயர் இடம் பெறவில்லையே ஏன் ?
விழா வருகைக்கும், பதிவுக்கும் நன்றி மோகன்குமார்.
ReplyDeleteஅங்கு பேசியவர்களிலேயே, மிகவும் சிறப்பாகப் பேசி வரவேற்புரை வழங்கிய ஒ.ஆர்.பி.ராஜாவையும் குறிப்பிட்டு இருக்கலாம் :)
தொகுத்து வழங்கிய விதம் நன்று.
ReplyDeleteசிறப்பான தொகுப்பு...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete//அங்கு பேசியவர்களிலேயே, மிகவும் சிறப்பாகப் பேசி வரவேற்புரை வழங்கிய ஒ.ஆர்.பி.ராஜாவையும் குறிப்பிட்டு இருக்கலாம் //
ReplyDeleterepeatttuuu
//அங்கு பேசியவர்களிலேயே, மிகவும் சிறப்பாகப் பேசி வரவேற்புரை வழங்கிய ஒ.ஆர்.பி.ராஜாவையும் குறிப்பிட்டு இருக்கலாம் :)//
ReplyDeleteஇது தான் தஞ்சாவூரு குசும்பா..???
நன்றி அமைதி அப்பா
ReplyDelete**
செந்தில்: தொடர்ந்து புத்தகங்கள் வெளியிட்டு அசத்த வாழ்த்துகள்
**
ஆம் வெங்கட்; சென்னையில் உள்ளதில் உள்ள நன்மைகள் இவை.
**
மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா
**
மாதவன்: நற நற
**
தஞ்சாவூரான்: பேரே அசத்துதே. நம்ம ஊருங்க!!
ReplyDeleteலேட்டாய் வந்ததை முதலிலேயே சொல்லி விட்டேன். எனவே ORP ராஜா (நீங்க தானா அது!!) பேச்சை கேட்க வில்லை.
**
ராம லட்சுமி : நன்றி
**
வெற்றி: நன்றி
**
எல். கே: மீண்டும் நன்றி
அண்ணே உங்க எஸ்.எம்.எஸ்க்கு ரிப்ளை பண்ண முடியல...
ReplyDeleteமறந்துட்டேன்...மன்னிச்சுருங்க... வேலை பளு...
கலந்து கொள்ளாதது வருத்தமே....
நல்ல பகிர்வு. நன்றி மோகன்.
ReplyDeleteபகிர்விற்கு நன்றி
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றிங்க..
ReplyDeleteசிறப்பான தொகுப்பு பகிர்வு சூப்பர்..
ReplyDeleteபகிர்விற்கு நன்றி பாஸ். அருமை
ReplyDelete@எல்கே,
ReplyDeleteநன்றி - ஆதரவுக்கு :))
@வெற்றி,
எல்லாம் ஒரு வெளம்பரந்தான்...
@மோகன்குமார்,
நன்றிங்க. சும்மா ஒரு தமாசுக்கு.நீங்க தாமதமா வந்ததுனால, ஒரு அருமையான பேச்சை விட்டுட்டீங்க. பாருங்க, எல்கே கூட ரிப்பீட்டிருக்காரு!! மேடையில் தமிழில் பேசி ரொம்ப வருஷமாச்சு. ரொம்ப சுமாரா பேசினேன்னு தங்ஸ் அப்புறமா சொன்னாங்க. நெறய விட்டுப் போச்சு (வருக லிஸ்டில்).
எனக்கு கொஞ்ச பதிவர்கள்தான் அறிமுகம். அதனாலே, ரொம்ப பேருக்கு என்னைத் தெரியாது. தொடர்பில் இருப்போம். சந்திப்போம்.
பரவாயில்லை ஜெட்லி; புது மாப்பிள்ளை இல்லையா? குடும்ப பொறுப்பு கூடிருக்கும்
ReplyDelete**
நன்றி விக்னேஸ்வரி
**
மிக்க நன்றி:
ரமேஷ்
விக்கி உலகம்
ஜாக்கி சேகர்
அட நரசிம்; நன்றி
ReplyDelete**
தஞ்சாவூரான் : ரைட்டு; அடுத்த முறை புத்தக வெளியீட்டில் உங்க தமிழ் பேச்சை கேட்டா போச்சு.
விழாவிற்கு வராத குறையைத் தீர்த்தது!
ReplyDeleteநன்றிங்க மோகன்
@தஞ்சாவூரான்
ReplyDeleteசார் எனக்கும் நெறையப் பேரைத் தெரியாது. வந்ததால் சிலர் அறிமுகம் கிடைத்துள்ளது. உங்களை பற்றி அபி அப்பா சொல்லி இருக்கிறார்
பகிர்விற்கு நன்றி
ReplyDeleteஅருமையான பகிர்வு. நான் தான் வராம மிஸ் பண்ணிட்டேன். ஆனால் தம்பி எல்கே என்னிடம் நடந்த நிகழ்வுகளை விலாவாரியாக தொலைபேசி சொல்லியாச்சு. விட்ட குறை தொட்ட குறையை இந்த பதிவு போக்கிடுச்சு!
ReplyDeleteஅருமையான பகிர்வு. நான் தான் வராம மிஸ் பண்ணிட்டேன். ஆனால் தம்பி எல்கே என்னிடம் நடந்த நிகழ்வுகளை விலாவாரியாக தொலைபேசி சொல்லியாச்சு. விட்ட குறை தொட்ட குறையை இந்த பதிவு போக்கிடுச்சு!
ReplyDeleteநன்றி நண்பரே! ‘புத்தகக் காட்சியில் என் புத்தகமும் கிடைக்கும். :)
ReplyDeleteநீங்கதான் சாவி - சுரேகா.. ஸ்டால் எண்; 448
விளம்பர உதவி: அண்ணன் வீடுதிரும்பல்..! :)
பகிர்விற்கு நன்றி மோகன்!
ReplyDeleteகேபிள்ஜி, வாழ்த்துகள்! அடுத்த பயணத்தில் அதே கடையில், கல் தோசையும் மட்டன் சுக்காவும். சரியா?
அருமையான தொகுப்பு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநான் எடுத்த புகைப்படங்கள் கேபிளின் நாளைய பதிவில் இடம்பெறும்.
// கேபிள் கதைகளில் பெண்கள் பற்றிய விவரணை நிறைய இருந்தாலும் அவர் மனைவி அல்லது காதலி அழகை பற்றி மட்டும் தான் விவரிக்கிறார். காதலியின் தோழி அருகில் இருந்தால் கூட அவளை பற்றி விவரிப்பதில்லை. இது அவரின் மனதை காட்டுகிறது
ReplyDelete//
இது நான் சொன்னது. இதைக் குறிப்பிட்டு அவர் பேசினார் :((
நேரில் இருந்து நாங்கள் பார்த்த மாதிரி இருந்தது நீங்கள் பகிர்ந்த விதம் நண்பா!! நன்றி!!
ReplyDeleteநாங்களே வந்தாற்போல நல்ல வர்ணனை!
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி கதிர்
ReplyDelete**
நன்றி ராதா கிருஷ்ணன் ஐயா
**
முதல் வருகைக்கு நன்றி அபி அப்பா.
**
நன்றி சுரேகா. உங்கள் புத்தக விற்பனைக்கும் வாழ்த்துகள்
**
ராஜா ராம்: வாங்க. உங்களை மாதிரி வெளி நாட்டில் & வெளியூரில் இருப்போர் விழாவை பார்க்க முடியாதென்று தான் இந்த பதிவே எழுதினேன்
ReplyDelete**
நன்றி கணேஷ். பார்த்தேன். ரசித்தேன்
**
அப்துல்லா: நான் தான் சொன்னேனே உங்க பேச்சில் பாதியில் வந்தேன் என்று.. அதான் மிஸ் பண்ணிட்டேன் ..மன்னிக்க
**
நன்றி அப்துல் காதர்
**
மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி ஜனா சார்
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete