நீயா நானாவில் நான்
இரண்டாவது முறையாக நீயா நானாவில் பங்கு பெரும் வாய்ப்பு. இம்முறை வீடு திரும்பல் பிளாகை வாசித்து விட்டு "எழுத்தாளர்" என்ற ரீதியில் அவர்களாகவே கூப்பிட்டிருந்தார்கள். முதல் வரிசையில் (சிறு) எழுத்தாளர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர். அதில் நமக்கும் ஓர் இடம்.. ஐந்து முறை பேச வாய்ப்பு வந்தது. அதில் நான்கு ஒளி பரப்பாக ஒன்று எடிட்டிங்கில் காணாமல் போனது. (நான்கு மணி நேரம் எடுத்த ஷூட் ஒன்னரை மணி நேரமாக சுருக்கப்பட்டு ஒளிபரப்பாக, நாம் பேசியதில் ஒன்று எடிட் ஆவதில் ஆச்சரியமில்லை) . டிடி யில் வந்த கார சாரம் நிகழ்ச்சியின் போதும், இந்த முறையும் போட்டோ எடுத்து நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். அவருக்கு நன்றி.
நீயா நானாவில்
கார சாரத்தில்
நீயா நானா நிகழ்ச்சி முழுவதும் கீழே உள்ள லிங்கில் உள்ளது. நேரம் இருக்கும் போது பாருங்கள். " கதை புத்தகம் வாசிப்பது தேவையா இல்லையா" என்ற பதிவர்களுக்கு சம்பந்தம் உள்ள தலைப்பு என்பதால் நீங்கள் ரசிப்பீர்கள் என நம்புகிறேன். இந்த லிங்கை சுட்டி காட்டிய அமைதி அப்பாவிற்கு நன்றி.
"முழுவதும் பார்க்க நேரமிருக்காது; நீ எங்கே ஐயா பேசினாய்" என்று கேட்கும் நண்பர்களுக்கு மட்டும் கீழே உள்ள விவரம்:
1&2. "neeya part 1" என்ற தலைப்பில் உள்ள முதல் வீடியோவில் நான்கு நிமிடத்திலிருந்து ஆறு நிமிடத்திற்குள் இரண்டு முறை வருகிறது.
3. "neeya part 1 0" என்ற தலைப்பிடப்பட்ட, முதலாவதற்கு அடுத்து உள்ள வீடியோவில் முதல் நிமிடத்தில் மட்டும் வருகிறது. (கோபிநாத் "I appreciate this point" என்று தட்டி குடுத்து பாராட்டியது இங்கு தான்).
4. ஐந்தாவதாக உள்ள வீடியோவில் (neeya part 4 0 ) மூன்றாவது & ஏழாவது நிமிடதிற்கருகே வருகிறது. (இதில் ரெண்டாவது மேட்டர் "அடுத்து வருவது" என ஹைலைட் செய்து பேச்சை காட்டினார்கள்)
பார்க்க முடிந்தால் தங்கள் மேலான கருத்துகளை பகிரவும். (நேரடியே லிங்க் தந்து இங்கேயே வீடியோவை ஓட விடும் வித்தை தெரிய வில்லை)
பார்த்த படம்: த்ரீ இடியட்ஸ்
த்ரீ இடியட்ஸ் ஹிந்தி படம் இப்போது தான் (புத்தாண்டில் முதலாவதாய்) பார்த்தேன். எவ்வளவு அற்புதமாய் உள்ளது! அமீர் கான் பற்றி பாராட்டி கொண்டே போகலாம். அவர் பற்றி ஒரு தனி பதிவே எழுத வேண்டும் என நினைக்கிறேன். (கொஞ்சம் கொஞ்சமாய் அமீர் கான் ரசிகன் ஆகி விட்டேன் என்றே சொல்ல வேண்டும்!) தமிழில் இந்த படம் எப்படி வருமோ தெரிய வில்லை. ஹிந்தியில் சப் டைட்டில்களுடன் (ஹிந்தி நஹி மாலும்) பார்த்தாலும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தவே செய்தது. நீங்கள் அவசியம் பார்க்க பரிந்துரை செய்கிறேன்.
ரசித்த கவிதை
உன்னருகே நானிருந்து
சொன்ன கதையெல்லாம்
சுவையற்று போனதென்ன?
என்னை எதிர் நோக்கி
வீதியின் கோடி வரை
விழிக்கிடையில் சிறைப்படுத்தி
நிலைப்படியே நீயாக
நின்றிருப்பாய்
இன்று? இல்லை!
காரணமோ
ஆணொன்றும், பெண்ணென்றும்
குழந்தைகள்.. காரியங்கள்
அடுப்பில் புளிக்குழம்பு - கி. கஸ்தூரி ரங்கன்
சென்னை ஸ்பெஷல் மூன்று செய்திகள்
சென்னை கார்பரேஷன் பெரிதாகிறது. ஏற்கனவே 174 ஸ்கொயர் கிலோ மீட்டர் அளவு இருந்த சென்னை 430 ஸ்கொயர் கிலோ மீட்டர்அளவிற்கு பெரிதாகிறது. 9 புது முனிசிபாளிடிகளும், 8 டவுன் பஞ்சாயத்துகளும், 25 பஞ்சாயத்துகளும் சென்னை கார்பரேஷனுடன் இணைக்கபடுகின்றன. இதற்கான மசோதா பாஸ் ஆகி விட்டது.
சென்னையில் புதிதாக வேளச்சேரி என்று புது சட்ட மன்ற தொகுதி இந்த தேர்தல் முதல் வருகிறது.
புத்தக கண்காட்சியில் சுய முன்னேற்ற புத்தகங்கள் மிக நன்றாக விற்பனை ஆனதாக ஆங்கில தினத்தந்தி (Times of India) சொல்கிறது. அப்படின்னா " வாங்க முன்னேறி பாக்கலாம்" கூட வெளியிடலாம்"னு உசுப்பி விடுறார் ஐயா சாமி :))
தமிழ் மணம் : வீடு திரும்பல் நூறாவது இடம்
சற்று பழைய செய்தி தான். ரொம்ப நாளாக வானவில் எழுதாததால் இப்போது பகிர்கிறேன். தமிழ் மணத்தில் முதல் நூறு பதிவுகள் என்ற அறிவிப்பு கேள்வி பட்டு, வீட்டுக்கு வந்ததும் நம்மோட பதிவும் இருக்குமா என நப்பாசை உடன் பார்த்தேன். கடைசி கட்டம் வரும் போது நம்பிக்கை போய் விட்டது. கடைசியில் நூறாவது பதிவாய் வீடு திரும்பல் பார்த்து செம மகிழ்ச்சி ஆகி விட்டது. 98 ஆவது இடம் என்று சொன்னால், உடனே "அடுத்த ரெண்டு பேர் யார்?" என கேட்பார்கள். இப்போ அந்த பிரச்சனை இல்லை பாருங்க..:))
தமிழ் மணம் சிறந்த பதிவுகளில் எனது மூன்று பதிவுமே கடைசி பத்துக்குள் வந்தாலும் இறுதி கட்ட முதல் மூன்றுக்குள் எதுவும் தேர்வாகலை.. ம்ம்ம் வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம்...
வேல்ட் காப் டீம்
வேல்ட் காப் டீம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் நீங்கள்? எனக்கென்னவோ சில சொதப்பல்கள் இருப்பதாக படுகிறது.
இறுதியில் ஆடும் 11 பேரில் ஆறு பேட்ஸ்மன், ஒரு கீப்பர், நாலு பவுலர்கள் இருப்பார்கள். நாலு பவுலர்கள் தான் ஒவ்வொரு மேட்சிலும் ஆட போகிறார்கள். (யுவராஜ், சேவாக், பதான், ரைனா இவர்களில் மூவராவது ஆடுவார்கள். அவர்கள் சேர்ந்து ஐந்தாவது பவுலர் வேலையை செய்து விடுவார்கள்). தேவையான நாலு பவுலர்கலுக்கு எதற்கு ஏழு பேர் எடுக்கணும்?? இன்னொரு பக்கமோ ஆறு பேட்ஸ்மன்களுக்கு மொத்தம் ஏழு பேர் மட்டுமே ஸ்குவாடில் உள்ளனர். ஒரு சிலர் அவுட் ஆப் பார்ம் என்றாலும் அவரையே வச்சு தான் ஆடி ஆகணும்.
மேலே சொன்ன சேவாக், யுவராஜ், பதான் போன்ற ஸ்பின் பவுலர்கள் உள்ள ஸ்குவாடில் எதற்கு மூன்று ஸ்பின்னர் என புரியலை. பியுஷ் சாவ்லா சமீபத்தில் பெருசா ஏதும் சாதிக்கலை. இவரும் முனாப் படேலும் பெரும்பாலான மேட்ச்களில் விளையாடும் பதினொரு பேரில் இருக்க போவதில்லை..
ஸ்ரீ காந்த் , தோனி ரெண்டு பேருக்குமே நிறைய லக் உள்ளது. அதை தான் நம்பணும்.. ம்ம்ம்
ஸ்ரீ காந்த் , தோனி ரெண்டு பேருக்குமே நிறைய லக் உள்ளது. அதை தான் நம்பணும்.. ம்ம்ம்
ரசிக்கும் விஷயம்: பயணத்தில் முகத்தில் முத்தமிடும் காற்று
பைக், பஸ், கார், ரயில் என எதில் சென்றாலும் பயணத்தில் முகத்தில் படும் காற்று சொல்லவொண்ணா மகிழ்வை தருகிறது. குறிப்பாய் பஸ் அல்லது ரயிலில் செல்லும் போது இறங்கும் இடத்திற்கு ஒரு நிறுத்தம் முன் எழுந்து படியருகே வந்து நின்று அந்த சில நிமிடம் தென்றலை முழுமையாய் உள் வாங்குவது என் பழக்கம். பல வருடங்கள் ஆனாலும் இன்னும் சின்ன பையன் போல இதை செய்து கொண்டு தான் இருக்கிறேன்...
//(நேரடியே லிங்க் தந்து இங்கேயே வீடியோவை ஓட விடும் வித்தை தெரிய வில்லை) //
ReplyDeleteபிளாக்கில் வீடியோ லிங்கை (Insert a video) கிளிக் செய்து அங்கிருந்தே From Youtube ல் search செய்து இணைக்கலாம்/youtube லிங்கை டைரக்டாக search videos பாக்ஸ்யில் காப்பி பேஸ்ட் செய்தும் இணைக்கலாம்.
பகிர்ந்தமைக்கு நன்றிகள்
ReplyDeleteகலக்கி கட்டி இருக்கீங்க.... வாழ்த்துக்கள்!
ReplyDelete.."எழுத்தாளர்" என்ற ரீதியில் அவர்களாகவே கூப்பிட்டிருந்தார்கள்...
ReplyDeleteஎழுத்தாளருக்கு என் வாழ்த்துக்கள்... இன்னும் நிறைய நிகழ்ச்சியில் பங்கேற்று உங்கள் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துறைக்க என் வாழ்த்துக்கள்...
//இம்முறை வீடு திரும்பல் பிளாகை வாசித்து விட்டு "எலுத்தாளர்" என்ற ரீதியில் அவர்களாகவே கூப்பிட்டிருந்தார்கள்//
ReplyDeleteயானைக்கு(ம்) அடி சரிக்கிடுச்சோ.
வாழ்த்துகள். கண்டிப்பாக பார்க்கிறேன்.
ReplyDeleteஅப்புறம் த்ரீ இடியட்ஸ் சூப்பரான மெசேஜை சுவைபட சொன்ன படம். பத்து தடவையாவது பார்த்திருப்பேன்:)
:))
ReplyDeletecongrats
ஓகே படிச்சாச்சு.... ஓட்டும் போட்டாச்சு..
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணே!
ReplyDelete//தமிழில் இந்த படம் எப்படி வருமோ தெரிய வில்லை//
அதே டவுட்டு தான் எனக்கும் :)
இந்த லிங்கை சுட்டி காட்டிய அமைதி அப்பாவிற்கு நன்றி.//
ReplyDeleteநன்றிக்கு நன்றி!
//இரண்டாவது முறையாக நீயா நானாவில் பங்கு பெரும் வாய்ப்பு. இம்முறை வீடு திரும்பல் பிளாகை வாசித்து விட்டு "எலுத்தாளர்" என்ற ரீதியில் அவர்களாகவே கூப்பிட்டிருந்தார்கள்//
நீங்கள் முழு எழுத்தாளர்தான். இனி வரும் காலங்களில் "எலுத்தாளர்"- ஐ எடுத்து விடலாம். தேவையற்ற குழப்பம் தவிர்க்கலாமே?!
//ஸ்ரீ காந்த் , தோனி ரெண்டு பேருக்குமே நிறைய லக் உள்ளது. அதை தான் நம்பணும்.. ம்ம்ம் //
நிச்சயம் நம்பலாம்.
//ரசிக்கும் விஷயம்: பயணத்தில் முகத்தில் முத்தமிடும் காற்று//
புறநகர் தொடர் வண்டியில், ஏறுவோர் இறந்குவோருக்கு இடைஞ்சலாக வாசலில் நிற்பவர்கள் மீது எனக்கு கோபம் வரும். இனி கோபம் கொள்ள மாட்டேன். ஏனெனில்,அதில் ஒரு 'மோகன் சார்' நிற்கக் கூடும்!
"அமைதி அப்பாவிற்கு கோபமா?!"
என்று யாரோ கேட்பது எனக்கு புரிகிறது!
இரண்டு நிகழ்ச்சிகளிலும் நன்றாகப் பேசியிருந்தீர்கள். தொடர்ந்து பலவற்றில் பங்கேற்க வாழ்த்துக்கள்! ஐயாசாமி தரும் ஊக்கம் சரியான பாதையில்தான்:)! நூறுக்கும் நூலாகவிருக்கும் தொடருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்ல பகிர்வு. ஒளிபரப்பான அன்றே திரு ரேகா ராகவன் அவர்கள் சொன்னதால் பார்த்தேன். உங்கள் கருத்துக்களை அழகாய் எடுத்து உரைத்தீர்கள்.
ReplyDeleteநட்புடன்
வெங்கட் நாகராஜ்
http://venkatnagaraj.blogspot.com/2011/01/blog-post_17.html
பல விஷயங்களை பற்றிய கலக்கலான பகிர்வுக்கு நன்றி. ”நீயா நானா” ஒளிபரப்பான அன்றே பார்த்தோம்.
ReplyDeleteநேர்ல பார்த்ததைவிட போட்டோல அழகா இருக்கீங்க சார்.
ReplyDeleteவாழ்த்துகள்.
ஆதி மனிதன் said...
ReplyDelete//பிளாக்கில் வீடியோ லிங்கை (Insert a video) கிளிக் செய்து அங்கிருந்தே From Youtube ல் search செய்து இணைக்கலாம்// முயற்சித்தேன். அந்த வீடியோ ஏற்கனவே இருக்கணும் போலும். இல்லாததால் முடியலை.
//youtube லிங்கை டைரக்டாக search videos பாக்ஸ்யில் காப்பி பேஸ்ட் செய்தும் இணைக்கலாம்//.
இது தான் முயற்சி செய்யணும்,
தெளிவான அறிவுரைக்கு மிக்க நன்றி
**
நன்றி ராம்ஜி
**
சித்ரா: நன்றி
**
நன்றி சங்கவி
ஆதி மனிதன் said...
ReplyDelete//இம்முறை வீடு திரும்பல் பிளாகை வாசித்து விட்டு "எலுத்தாளர்" என்ற ரீதியில் அவர்களாகவே கூப்பிட்டிருந்தார்கள்// யானைக்கு(ம்) அடி சரிக்கிடுச்சோ.
எதை சொல்றீங்க நண்பா? "எலுத்தாளர்" என தவறாய் எழுதியதையா? அது வேண்டுமென்றே சுய கிண்டலுக்காக எழுதினேன். அடுத்த வரியில் மற்றவர்களை பற்றி சொல்லும் போது சரியாக எழுத்தாளர் என்றே எழுதினேன்.
**
வித்யா: நன்றி. பார்த்தால் எப்படி இருந்தது என சொல்லுங்க. த்ரீ இடியட்ஸ் உங்களுக்கும் பிடிச்ச படமா? ரைட்டு
**
வாங்க கார்க்கி நன்றி
**
வாங்க மாதவன்; நீங்க தான் நீயா நானா ஒளி பரப்பாகும் போதே பாத்துடீன்களே; நன்றி
**
பாலாஜி சரவணா : நன்றி
அமைதி அப்பா said:
ReplyDelete//நீங்கள் முழு எழுத்தாளர்தான். இனி வரும் காலங்களில் "எலுத்தாளர்"- ஐ எடுத்து விடலாம். தேவையற்ற குழப்பம் தவிர்க்கலாமே?! //
என்னை இன்னும் முழுதாய் எழுத்தாளர் என்று நம்ப வில்லை; என்றாலும் தங்கள் பேச்சுக்கு மதிப்பு தந்து அதனை மாற்றி விட்டேன்
//இனி கோபம் கொள்ள மாட்டேன். ஏனெனில்,அதில் ஒரு 'மோகன் சார்' நிற்கக் கூடும்! //
உங்கள் அன்பில் நெகிழ்கிறேன். நான் படி அருகே நின்றாலும், இறங்கும் நிறுத்தம் முன் மட்டும் தான் அப்படி நிற்பேன்; அப்போதும் ஓரமாக தான் நிற்பேன்.
நன்றி அமைதி அப்பா
**
ராம லட்சுமி: தொடர் ஊக்கத்திற்கு மிக்க நன்றி
**
நன்றி வெங்கட்; ரேகா ராகவன் சாருக்கும் நன்றி
**
சரவண குமார் : இது எனக்கான காம்ப்ளிமெண்டா, போட்டோகிராபருக்கான பாராட்டான்னு தெரியலை.. :)) நன்றி நண்பா !!
**
இந்தியாவில் சில பிட்ச்களில் ஸ்பின் எடுக்கும்..
ReplyDeleteஅங்கு லெக் ஸ்பின்னர் வைத்து இருந்தால்தான் வேலைக்காகும்..
அதற்குதான் சாவ்லா
முனாப் தற்போதைய பார்மில் நல்ல தேர்வு. சாவ்லா முதல் கட்ட போட்டிகளை மனதில் வைத்து தேர்வு செய்யப் பட்டுள்ளார். இங்கிலாந்து,மேற்கிந்திய அணிகள் லெக் ஸ்பின் ஆட மாட்டார்கள். மேலும், தோள்பட்டை பிரச்சனையால் பந்து வீசுவது இல்லை தற்பொழுது. மேலும் பகுதி நேர பந்துவீச்சாளர்களை விட முழு நேர பந்துவீச்சாளர்கள் எப்பொழுதும் நல்ல தேர்வுதான்
ReplyDeleteஇணையத்தில் இந்நிகழ்ச்சி பார்க்கும் நேரம் மிகுந்த கவலையுறுகிறேன். இத்தனை பேருக்கு வாசிப்பைப் பற்றிய முரண் கருத்தும், அறியாமையுமிருக்கா... இனி என்னால் முடிஞ்சவரைக்கும் குழந்தைகளுக்கு புத்தகங்கள் குடுத்து வாசிப்புப் பழக்கத்தை உண்டாக்குவேன்.
ReplyDeleteபை த வே, கொஞ்சம் பேசினாலும் நச்சுன்னு நல்லாப் பேசியிருக்கீங்க மோகன். உங்களுக்கு மைக்கே தேவையில்லை போல. லாயர் வாய்ஸ் சொல்லியா தெரியணும் :)
ரெண்டு ஃபோட்டோக்கள்லேயுமே மைக்க வெச்சிக்கிட்டு கையை நீட்டிப் பேசிக்கிட்டு, எழுத்தாளர் தாண்டி பெரிய பேச்சாளராகிட்டீங்க மோகன்.
அமீர்கானோட மத்த படங்களும் தேடிப் பாருங்க மோகன். உங்களுக்குப் பிடிக்கும்.
ReplyDeleteநிலைப்படியே நீயாக
நின்றிருப்பாய் //
வாவ், என்னவொரு ரசனையான கணவன்.
ஓ, பதிவரிலிருந்து எழுத்தாளர் அவதாரமா சீக்கிரமே... சூப்பர்.
கிரிக்கெட் பற்றி யாரும் எழுதலையே என நினைத்தேன்.எழுதியதற்கு நன்றி தமிழ் சினிமா செய்திகள் & எல் கே
ReplyDelete**
விரிவான அலசலுக்கு நன்றி விக்கி. மிகுந்த மகிழ்ச்சி.
நிகழ்ச்சியை முழுமையாக பார்த்து முடித்த பிறகு கமென்ட் போடலாம் என இருந்தேன். வழக்கம் போல் தாமதமாகிவிட்டது.
ReplyDeleteதங்கள் கருத்துக்களை ஆணித்தரமாகவும் அறிவுப்பூர்வமாகவும் எடுத்து வைத்தீர்கள். மைக் முன்னாடி நிற்பதற்கே ஒரு தைரியம் வேண்டும். இவ்வாறு ஒரு கருத்து மோதலில் பேசுவதற்கு மேலும் திறைமை வேண்டும். ஆனால் உங்கள் அருகில் கட்டம் போட்ட சட்டை போட்டவர் இவ்வளவு ஆத்திரப்பட வேண்டியதில்லை.
படிக்கும் பழக்கம் பற்றி நான் ஒரு பதிவு போடவேண்டும் என பல நாட்களாய் எண்ணிக்கொண்டிருந்தேன். தங்கள் நிகழ்ச்சி பார்த்தபிறகு மேலும் ஆவல் ஏற்பட்டுள்ளது...
நிகழ்ச்சி முழுதும் பார்த்து விட்டு தாங்கள் எழுதியது மிக மகிழ்ச்சி தருகிறது ஆதி மனிதன்
ReplyDelete