Monday, June 13, 2011

வானவில்- அவன் இவன்/ கிங் ஆப் காமெடி

அவன் இவன் பாட்டும் படமும்

அவன் இவன் படத்தில் " டிய்யோ டிய்யோ" என ஆரம்பிக்கும் பாட்டில் இசையும் மெட்டும் அட்டகாசம். பெண் குரலில் ஒலிக்கும் இந்த பாட்டில் "டிய்யோ டிய்யோ டோலே" என்பதை தவிர வேறு வார்த்தைகளே இல்லை. கிராமங்களில் ஒலிக்கும் வித்தியாசமான வாத்தியங்களை உபயோகித்துள்ளார் யுவன். கேட்பவர்களை ஆட வைக்கும் விதத்தில் உள்ள இந்த பாட்டும், படத்தின் டிரைலரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலாவிடமிருந்து முதன் முறையாக ஒரு காமெடி படம்!! வரும் வெள்ளியன்று ரிசல்ட் தெரிந்து விடும்.

சி.சி.எல் கிரிக்கெட்

சினிமா நட்சத்திரங்கள் ஆடும் சி.சி.எல் கிரிக்கெட் பார்க்க ஜாலியாக தான் உள்ளது. அதிக பயிற்சியின்றி விளையாடுபவர்கள் பந்தை ஸ்டம்ப்க்கு நேரே போடுவதே பெரிய விஷயம் தான். ரொம்ப நாள் கழித்து பந்து வீசினால் பந்து எங்கெங்கோ போகும். சென்னை டீமில் விஷ்ணு (வெண்ணிலா கபடி குழு நாயகன்) நன்கு பேட்டிங் செய்தார். விக்ராந்த் பவுலிங் & பேட்டிங்கில் பிரகாசித்தார். தமிழில் கமெண்டரி உடன் கிரிக்கட் பார்க்க ஜாலியாக இருந்தது. என்ன ஒன்று கமெண்டரி சொன்னவர்கள் "Having said that " என்று மறுபடி மறுபடி சொல்லி நம்மை ஒருவழியாக்கினார்கள். பைனலில் சென்னை அசத்தலான வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிந்ததும் என் பெண் சொன்னது: "இந்த சம்மர் லீவில் நம்ம டீம் எல்லாமே கிரிக்கெட்டில் ஜெயிச்சிடுச்சு. வேல்ட் கப் இந்தியா ஜெயிச்சுது. ஐ.பி.எல் சென்னை ஜெயிச்சுது. இப்போ சி.சி.எல் சென்னை டீம் ஜெயிச்சிடுச்சு !" அதானே ! எப்படி அத்தனை முறையும் நம்ம டீம்களே ஜெயித்தது ! அதிர்ஷ்டமா... என்ன?

பதிவர் கேள்வி பதில்

கேள்வி : நமது கல்வி முறையில் என்னென்ன மாறுதல்கள் வேண்டும் ?

பதில்: அமுதா கிருஷ்ணா

எனக்கு பிடிக்காதது இந்த மெட்ரிக்குலேஷன் முறைதான். ஆசிரியர்கள் மாணவர்களுடன் பேசி கொள்ள கூட நேரம் இன்றி தினம் பாடம் நடத்துதல்,அதை எழுதி போடுதல்,அதை திருத்துதல், உடனே மாதம் மாதம் வரும் பரீட்சைகள் அதன் மதீப்பீடு என்று ஒரே மெக்கானிக்கா ஒரு முறை தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பின்பற்றப்படுகிறது. தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மத்தளம் போல், ஒரு பக்கம் மேனேஜ்மெண்ட்,மறுபக்கம் பெற்றோர்கள். தன்னிச்சையாய் தான் நினைப்பதை நிறைவேற்றவே முடியாத நிலை தான் மெட்ரிக் ஆசிரியர்களுக்கு. குறிப்பிட்ட காலத்திற்குள் அதிக பாடங்களை நடத்தும் கட்டாயம்.

இந்தியா முழுவதும் ஒரே பயிற்றுவிக்கும் முறை அமுலுக்கு வரவேண்டும். சி.பி.எஸ்.ஈ முறையில் உள்ளது போல் உணர்ந்து படிக்கும் முறைக்கு மாற்ற வேண்டும். மனப்பாடம் செய்து மார்க் எடுப்பதை ஒழிக்க வேண்டும்.

ஒரு மொழியும் முழுமையாய் தெரிந்து கொள்ளாமல் தான் பெரும்பான்மையான மாணவர்கள் தங்கள் பள்ளிகளை விட்டு வெளியில் வருகின்றனர்.

ஒரு எம்.காம் படித்து ஆசிரியாராய் வேலை பார்க்கும் ஒரு ஆசிரியருக்கு பி.காம்,எம்.காம்-தவிர காமர்ஸ் படிக்கும் ஒரு மாணவன் என்னவெல்லாம் படிக்கலாம் என்று அவனின் பள்ளி இறுதியில் சரியான வழிக்காட்டல் கிடையாது. பள்ளிகளில் தேவையில்லாத சப்ஜெக்ட் வைத்து குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். எடுத்துக்காட்டாக..காமர்ஸ் குரூப்பில், காமர்ஸ்,எக்கனாமிக்ஸ்,அக்கவுண்டன்சி,பிசினஸ் மேத்ஸ் இருப்பின் கல்லூரியில் பி.காம் சேர அது பயன்படும்.நிறைய பள்ளிகள் இந்த பிசினஸ் மேத்ஸிற்கு பதிலாய் கம்ப்யூட்டர் வைத்து உள்ளனர். ஃபீஸ் நிறைய வாங்குவதற்கு மட்டுமே அந்த கம்ப்யூட்டர் பாடம் அந்த பள்ளிக்கு பயன்படுகிறது. இந்த குரூப் படித்தவர்களுக்கு பி.காம் சீட் கிடைப்பது என்பது மிக கஷ்டம்.அதுவுமில்லாமல்,அதன் பிறகு என்ன படிக்க வேண்டும் என்ற ஒரு அறிவுரை மெத்த படித்த அந்த ஆசிரியர்களுக்கே தெரிவதில்லை.

அனைத்து அரசு ஊழியர்களின் குழந்தைகளும் கட்டாயம் அரசு பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரவேண்டும். அப்போது தான் அரசு பள்ளிகளின் தரம் உயரும்.தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களின் ஊதியத்தினையும் அரசு நிர்ணயம் செய்யவேண்டும்.

முதல் குரூப் எடுத்தால் மட்டுமே வாழ்க்கை என்ற மக்களின் போக்கும் மாற வேண்டும்.இஞ்சினியரிங்,மருத்துவம் படித்தால் மட்டுமே வாழ்க்கை என்ற எண்ணமும் நமக்கு மாற வேண்டும்.

QUOTE HANGER

Hatred never ceases by hatred in this world. By love alone it ceases.

டிவி பக்கம்

விஜய் டிவியில் கிங்க்ஸ் ஆப் காமெடி என புது நிகழ்ச்சி துவங்கி உள்ளனர். கலக்க போவது யாரு டைப் நிகழ்ச்சி தான். (தற்போது அது சண் டிவியில் வருவதில்லை போலும்). கார்த்திகேயன் தொகுப்பாளராகவும் சின்னி ஜெயந்த் மற்றும் பேராசிரியர் ஞான சம்பந்தம் நடுவர்களாகவும் உள்ளனர். வழக்கம் போல் இன்னொரு சினிமா புள்ளியை நடுவராக அழைக்கிறார்கள். இரு அணிகள் (ஒவ்வொன்றிலும் நான்கைந்து பேர்கள்) அடுத்தடுத்து ஏதேனும் காமெடி செய்கிறார்கள். "இரு அணிக்கும் போட்டி, போட்டி" என அடிக்கடி அவர்கள் சொன்னாலும் இறுதியில் யாரும் வென்றதாய், அல்லது அன்று சிறந்த பெர்பாமன்ஸ் செய்ததாய் கூட யாருக்கும் சிறு பரிசு தராமல் திடீரென நிகழ்ச்சியை முடிக்கிறார்கள். இவையெல்லாம் இருந்தாலும் காமெடி செய்பவர்கள் வித்தியாச சிந்தனையால் சிரிக்க வைக்கிறார்கள். இந்த வாரம் ஒருவர் நடிகர்களை மிருகங்களாக மேஜிக் செய்து மாற்றி விட்டால், எப்படி பேசுவார்கள் என வார்த்தைகள் இன்றி, சத்தத்தை வைத்தே நடிகர்கள் போல் செய்து அசத்தினார். எம். ஜி.ஆர் மற்றும் நம்பியார் படத்தில் கவுண்ட மணி இருந்தால் எப்படி இருக்கும் என இன்னொரு கலக்கல். எம். ஜி.ஆர் , நம்பியார் இருவருக்கும் கவுண்ட மணி தரும் கவுண்டர்கள் செம சிரிப்பு வெள்ளி இரவு 10 முதல் 11 வரை வருகிறது. பார்த்து சிரியுங்கள் !

ஆல் டைம் பாபுலர் பதிவு

சென்ற வானவில் பதிவு அதிகம் மெனக்கெடாமல் ஒரு மணி நேரம் மட்டுமே செலவழித்து எழுதியது. அது "ஆல் டைம் பாபுலர்" பதிவாகி விட்டது ரொம்ப ஆச்சரியம் !! பொதுவாக, புதிதாய் எழுதும் பதிவுகள் அந்த மாதத்தின் டாப் - 5-ல் வருகிறதா என்று மட்டும் பார்ப்பேன். எழுதுவதில் சில பதிவுகள் மட்டும் ஐந்தாம் இடத்தில் நுழைந்து, பின் கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி செல்வதை பார்ப்பது ஒரு பொழுது போக்கு.  ஆனால் அவை எதுவும் அந்த மாத டாப் 5- ல் தான்   இருக்குமே ஒழிய, ஆல் டைம் பாபுலருக்குள் உள்ளே நுழைவதே கஷ்டம்!!

வெறும் ஒரு மணி நேரத்தில் எழுதிய பதிவு ஆல் டைம் பாபுலர் ஆனது ஆச்சரியமா தான் இருக்கு. மக்களுக்கு எது பிடிக்கும் என்பதை இன்னும் புரிஞ்சிக்க முடியலை !!

சென்னை ஸ்பெஷல் முருகன் ஜிகிர்தண்டா

தி. நகர் முருகன் இட்லி கடை கடை வழியே வரும்போது, நம்ம கேபிள் சங்கர், முருகன் இட்லி கடையில் இட்லி சரியில்லாத அனுபவம் எழுதியதை நினைத்தவாறே வர, கடைக்கு வெளியே செம கூட்டம். சற்று நிறுத்தி பார்க்க, ஜிகிர்தண்டா கடை வெளியே வைத்திருப்பதும் அதற்கு தான் இத்தனை கூட்டமென்றும் தெரிந்தது. ஜிகிர்தண்டா மதுரையில் புகழ் பெற்ற பானம். இதுவரை சாப்பிட்டதில்லை. சரி முயற்சித்து பார்க்கலாமே என சென்றேன். சாதா ஜிகிர்தண்டா 25 ரூபாய் என்றும், ஸ்பெஷல் ஜிகிர்தண்டா 35 ரூபாய் என்றும் சொன்னார்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என கேட்டபோது (எல்லாம் உங்களுக்கு இங்கே விளக்கி சொல்றதுக்குத்தான்) " ஸ்பெஷலில் பாசந்தி போடுவோம்" என்றார்கள். இருக்கிற வெயிட்டே போதும்; பாசந்தி வேற வேண்டாம் என சாதா வாங்கி சாப்பிட்டேன். ஜிகிர்தண்டா எதிலே செய்வது என அடுத்த கேள்வி கேட்க, என்னை வித்தியாச ஜந்து போல பார்த்து விட்டு பாலில் செய்வது என்றார். சொல்ல தெரியாத கலரில் ஜிகிர்தண்டா இருந்தது. மேலே ஐஸ் கிரீம் உருளை ( ஒரு skoop ) மிதந்தது. உள்ளே ஜெல்லி வடிவில் தண்ணீர் இருந்தது. அந்த ஐஸ் கிரீம் உடன் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீரை குடித்தால் தான் கடைசி வரை நன்றாக இருக்கும் என புரிந்தது. எவ்வளவோ ஜாக்கிரதை ஆக சாப்பிட்டாலும் பாதி வழியிலேயே ஐஸ் கிரீம் கரைந்தோ, காணாமலோ போய் விடுகிறது. அது வரை இருந்த டேஸ்ட் ஆஹா !! அந்த ஐஸ் கிரீம் காலி ஆன பின் வெறும் கலர் தண்ணீர் குடிக்கும் போது சற்று ஏமாற்றம். ஆயினும் கடைசி மிடக்கில் எங்கிருந்தோ ஒரு ஐஸ் கிரீம் கட்டி கீழே போய் கிடந்தது பேரானந்தம் தருகிறது. இன்னொன்று குடிக்கலாமா என்ற ஆவலை புறந்தள்ளியவாறு .. விடு ஜூட் ! முருகன் ஜிகிர்தண்டா ஒரு முறை குடித்து பாருங்கள் .. ஒரு வித்தியாச அனுபவத்திற்காக !

17 comments:

  1. \\முதல் குரூப் எடுத்தால் மட்டுமே வாழ்க்கை என்ற மக்களின் போக்கும் மாற வேண்டும். இஞ்சினியரிங், மருத்துவம் படித்தால் மட்டுமே வாழ்க்கை என்ற எண்ணமும் நமக்கு மாற வேண்டும்.\\

    நன்றாக சொல்லியுள்ளார்.

    ஜிகர்தண்டா கடல்பாசியில் செய்வார்கள் (என்று கேள்வி).

    ReplyDelete
  2. //அதிகம் மெனக்கெடாமல் ஒரு மணி நேரம் மட்டுமே செலவழித்து எழுதியது. அது "ஆல் டைம் பாபுலர்" பதிவாகி விட்டது ரொம்ப ஆச்சரியம் //

    இதிலென்ன ஆச்சர்யம்..:)))

    ReplyDelete
  3. //அதிகம் மெனக்கெடாமல் ஒரு மணி நேரம் மட்டுமே செலவழித்து எழுதியது. அது "ஆல் டைம் பாபுலர்" பதிவாகி விட்டது ரொம்ப ஆச்சரியம் //

    இதிலென்ன ஆச்சர்யம்..:)))

    ReplyDelete
  4. ஜிகிர்தண்டா குடிக்கவேண்டும் போல வெயில் காய்கிறது. எனக்கு இப்போ கிடைக்குமா? ;-))

    ReplyDelete
  5. // சாதா ஜிகிர்தண்டா 25 ரூபாய் என்றும், ஸ்பெஷல் ஜிகிர்தண்டா 35 ரூபாய் என்றும் சொன்னார்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம் //

    ஸ்பெஷல் ஜிகிர்தண்டா -- கிளாச கழுவிட்டு ஊத்தி கொடுப்பார்கள்..

    சாதா ஜிகிர்தண்டா ---- கிளாச கழுவாம.. அப்படியே... -------------

    ReplyDelete
  6. கோபி: கடல் பாசியா? ஏம்பா கிலிய கிளப்புறீங்க. கடல் பாசி நல்லதா கெட்டதான்னு கூட தெரியலையே :((
    **
    கேபிள்: நீங்க எழுதுற எல்லா பதிவுமே ஒரு மணி நேரத்திற்குள் எழுதுவது தான்; நீங்க செம ஸ்பீடு; நாங்கெல்லாம் பல மணி நேரம் ஆராய்ச்சி (!!??) எல்லாம் பண்ணி எழுதுவோமாக்கும் :)))
    **
    RVS அதனாலே என்ன ; குடிச்சா போகுது; உங்க "சிவப்பி" எடுத்துட்டு வாங்க ஜிகிர்தண்டா குடிச்சிடுவோம்
    **
    மாதவா பாவி மனுஷா நான் குடிச்சது சாதா ஜிகிர்தண்டா என தெரிந்தும் இப்படி சொல்றீரே! நல்லா இரும் !!
    நிற்க. அவங்க தர்றது டிஸ்போசபில் கப் தான் ஹிஹி

    ReplyDelete
  7. Anonymous10:44:00 AM

    எனக்கு பிடிக்காதது இந்த மெட்ரிக்குலேஷன் முறைதான். ஆசிரியர்கள் மாணவர்களுடன் பேசி கொள்ள கூட நேரம் இன்றி தினம் பாடம் நடத்துதல்,அதை எழுதி போடுதல்,அதை திருத்துதல், உடனே மாதம் மாதம் வரும் பரீட்சைகள் அதன் மதீப்பீடு என்று ஒரே மெக்கானிக்கா ஒரு முறை தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பின்பற்றப்படுகிறது//
    அருமையாக சொல்லியிருக்கிறார் அமுதா கிருஷ்ணா

    ReplyDelete
  8. //மாதவா பாவி மனுஷா நான் குடிச்சது சாதா ஜிகிர்தண்டா என தெரிந்தும் இப்படி சொல்றீரே!//

    அட... நான்சொன்னது சும்மா.. டமாசுக்குத்தான்..

    ReplyDelete
  9. அமுதாவின் பதில் அருமை.

    ரசிச்சுக் குடிச்ச மாதிரி ரசிச்சு ரசிச்சும் எழுதியிருக்கீங்க, ஜிகிர்தண்டா அனுபவத்தை:)!

    ReplyDelete
  10. என் பதிலை பதிவு செய்தமைக்கு நன்றி மோகன் சார்.

    கடற்பாசி எனப்படும் ஸ்பைருலினா தாது உப்பு, விட்டமின், புரதம் நிரம்பியது. ஸ்பைருலினா மசாஜ் செய்தால் முக சுருக்கம் மறையும்.இதை சாப்பிடுவதால் தான் கடல்மீன்கள் மிக புரதச்சத்துள்ளதாக உள்ளது. இதை கடலில் மட்டுமில்லாது விவசாயமாகவும் சில மாவட்டங்களில் வளர்க்கிறார்கள்.மிக குளிர்ச்சி தரக்கூடியது. திண்டுக்கல் பகுதிகளில் வெறும் 5 ரூபாய், 10 ரூபாய்க்கு ஐஸ் வண்டியில் இதை கலந்த ஐஸ்கள் கிடைக்கும்.
    பயப்படாமல் குடிக்கலாம் மோகன் சார்.

    ReplyDelete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  12. //பாலாவிடமிருந்து முதன் முறையாக ஒரு காமெடி படம்//

    ம்ம்..நம்பமுடியாது, தியேட்டரை விட்டு வெளியே வரும்போது கனத்த மனதுடன் வெளிவரச்செய்வார் என நினைக்கிறேன்

    //சிசிஎல்//

    இந்த Having said thatஐ கேட்கும்போது எனக்கும் எரிச்சலாகத்தான் இருந்தது. தமிழ் கமெண்ட்ரியில் மட்டுமின்றி ரோஹன் கவாஸ்கரும் இதை அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருந்தார்.

    ஜெயிச்சவுடனே அதிர்ஷ்டமாங்கறீங்களே :(

    நீங்க சொல்ற அதே இடத்துல நானும் ஜிகிர்தண்டா சாப்ட்டிருக்கேன். எனக்கும் புடிச்சிருந்தது :)

    ReplyDelete
  13. //இந்தியா முழுவதும் ஒரே பயிற்றுவிக்கும் முறை அமுலுக்கு வரவேண்டும்//
    அமுதாவின் பதில் கரெக்ட்.

    கடல்பாசி வேற; ஸ்பைருலீனா வேறன்னு நினைக்கிறேன். கடல்பாசியை Agar-Agar or China Grassனு சொல்வாங்க. வெள்ளை நிறத்தில் இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது. வெஜிடேரியன்தான். உடலுக்கு அதிகக் குளிர்ச்சி தரும்; வயிற்றுப் போக்கு, அஜீரணக் கோளாறுகளுக்குச் சிறந்த மருந்து. நல்ல ருசியாகவும் இருக்கும். (இனிப்பு சேர்த்தால்)

    //"ஆல் டைம் பாபுலர்"//
    அப்படின்னா என்ன? எப்படிப் பார்க்கணும் அதை?

    ReplyDelete
  14. சதீஷ் குமார்: நன்றி அதிசயமா இங்கு வருகை தந்துள்ளீர்கள், நன்றி
    **
    ஓகே மாதவா. ஆல் இன் தி கேம்
    **
    நன்றி ராமலட்சுமி

    ReplyDelete
  15. அமுதா நான் தான் நன்றி சொல்லணும். உங்கள் பதிலை எத்தனை பேர் பாராட்டுகிறார்கள் பாருங்கள்
    **
    ரகு: நீங்களும் ஜிகிர்தண்டா சாப்பிட்டுள்ளீர்களா? மகிழ்ச்சி.

    CCL :)))

    ReplyDelete
  16. ஹுசைனம்மா: உங்க Dashboard-ல் New post. Edit post எனபதற் கெல்லாம் அருகில் (last column), "Stats" என்று ஒன்று இருக்கும். அதை கிளிக் செய்து பாருங்கள். அந்தந்த மாதம், ஆள் டைம் பாப்புலர் பதிவுகளை அது காட்டும், வேண்டுமானால் அவை உங்கள் ப்ளாகில் தெரிகிற மாதிரியும் செய்யலாம். முயற்சி செய்து பாருங்கள்

    ReplyDelete
  17. ஜில் ஜில் ஜிகர்தண்டா....அருமை

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...