Monday, June 4, 2012

சென்னை பஸ் கண்டக்டர் வாழ்வில் 1 நாள் -பேட்டி

ண்மையில் சென்னை மாநகர பேருந்தில் பயணிக்கும் சந்தர்ப்பம் அமைந்தது. மதிய நேரம் என்பதால் அதிக கூட்டமில்லை. அமர்ந்து விட்டேன். அருகில் இருந்த 45 - 50 வயது மதிக்கத்தக்க நபர் இயல்பாய் உரையாட ஆரம்பித்தார். பேச ஆரம்பித்ததும் தான் தெரிந்தது. அவர் மப்டியில் இருக்கும் ஒரு கண்டக்டர் என்று !

சென்னை பேருந்துகள் பற்றியும் டிரைவர் கண்டக்டர் வாழ்க்கை பற்றியும் என் சந்தேங்கள் பலவும் கேட்டு விட்டேன். கேட்கும் போது பதிவெழுத நினைக்கவே இல்லை. ஆனால் இறங்கிய பின் யோசித்தால் பஸ் வாழ்க்கை பற்றி அவர் நிறையவே சொன்னது புரிந்தது

இதோ உங்களுக்காக ஒரு பிரத்யேக சென்னை கண்டக்டர் பேட்டி:

கண்டக்டருங்க ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் வேலை பாக்கணும்? எத்தனை ஷிப்ட் இருக்கு? 

ஒவ்வொரு கண்டக்டருக்கும் எட்டு மணி நேரம் டியூட்டி. முதல் ஷிப்ட் காலை நாலு மணிக்கு ஆரம்பிக்கும். நான் போகும் தாம்பரம் டு டீ. நகர் ரூட்டை வச்சு சொல்றேன். இந்த ரூட்டில் முதல் பஸ் தாம்பரத்தில் நான்கு மணிக்கு கிளம்பும். நாலு மணிக்கு வண்டியில் ஏறும் கண்டக்டர், டிரைவர் மதியம் 12 வரை வேலை செய்துட்டு இறங்கிடுவாங்க. இதே ரூட்டில் அடுத்த பஸ் நாலரைக்கு கிளம்பும். இதில் ஏறும் பஸ் ஊழியர்கள் மதியம் 12 .30-க்கு இறங்குவாங்க. இப்படி வரிசையா கண்டக்டர்-டிரைவர் அடுத்தடுத்த அரை மணி கேப்பில் அடுத்தடுத்த வண்டிக்கு வருவாங்க. கடைசி ஷிப்ட் மாலை நான்கு மணிக்கு துவங்கும். இதில் ஏறுவோர் இரவு 12 மணி வரை வேலை செய்வாங்க. இரவு 12 முதல் காலை 4 வரை சென்னையில் பஸ் ஓடாது
இப்படி ஆறு நாள் டியூட்டி பார்த்தா ஒரு நாள் Off. பிரிட்டிஷ் காலத்தில் கொண்டு வந்த பழக்கம் இது. இன்னிக்கு வரை தொடருது

மதுரையில் மட்டும் இரவு நேர பஸ் எல்லாம் இருக்கே அது எப்படி ?

மதுரையில் ஒரு பஸ்ஸில் டிரைவர் கண்டக்டர் காலை ஆறு மணிக்கு ஏறினா மறு நாள் காலை நான்கு மணிக்கு தான் இறங்குவார்கள். இவர்களுக்கு அடுத்த நாள் ரெஸ்ட். ஒரு நாள் விட்டு ஒரு நாள் வண்டி ஓட்டுவாங்க

உங்க ஷிப்ட் நாலரைக்கு ஆரம்பம்னா ரொம்ப சீக்கிரம் எழணும் இல்லை. தினம் இப்படி எழ கஷ்டமா இல்லையா?

பழகிடுச்சுங்க. பொதுவா எல்லா வாரமும் ஒரே ஷிப்ட் இருக்காது. ஒரு வாரம் காலை 4 டு 12 எனில் அடுத்த வாரம் மதியம் 12 டு 8 என இருக்கும். ஆனால் மதியம் இதே பஸ்ஸில் வரும் கண்டக்டர் ஒரு விவசாயி. அவர் காலையில் வயல் வேலை பார்ப்பார். அவருக்கு மதிய ஷிப்ட் தான் தோது. அதனால் தினம் நான் காலை ஷிப்ட்டும் அவர் மதியம் டு இரவு ஷிப்ட்டும் செய்றோம். எங்களுக்குள்ளே இது ஒரு அண்டர் ஸ்டாண்டிங்

காலை 3 மணிக்கெல்லாம் நான் எழுந்திருக்கணும். நைட்டு ஏ. சி போட்டுட்டு தூங்கிடுவேன். பசங்க நைட்டு கண்ணு முழிச்சு படிச்சுட்டு லேட்டா தான் படுப்பாங்க.
அலாரம் வச்சி மூணு மணிக்கு எழுந்திருப்பேன். சீக்கிரமா பல் விளக்கிட்டு, குளிச்சுட்டு கிளம்பிடுவேன். அதுக்குள் என் மனைவி எழுந்து ரெண்டு தோசை ஊற்றி கொடுப்பார். நைட்டே சட்னி பண்ணி வச்சிடுவார். சில நேரம் தோசை அல்லது இட்லி கூட நைட் ஊற்றி வச்சிடுவார். அதையும், குடிக்க சுடு தண்ணியும் எடுத்துட்டு மூணரைக்கு வீட்டை விட்டு கிளம்பிடுவேன். நான் இருப்பது பெருங்களதூரில். வீட்டிலிருந்து மெயின் ரோடு வரை காலையில் ஓடி வருவேன். அது ஒரு எக்சர்சைஸ் மாதிரி.

மெயின் ரோடில் பஸ் பிடிச்சி தாம்பரம் வந்து எங்க ஸ்டாண்ட் வருவேன். ஆயிடுச்சு சார். இப்படியே 20 வருஷம் ஓடி போச்சு

உங்களுக்கு கலக்ஷன் வச்சு கமிஷன் உண்டா? 

பஸ் டிக்கெட் விலை ஏறும் வரை எங்களுக்கு எங்களுக்கு 2 % கமிஷன். டிக்கெட் விலை ஏறினா எங்க கமிஷனை கொஞ்சம் குறைச்சுடுவாங்க. முன்னாடி மூவாயிரம் தினம் வசூலாகும். அதில் 2 % கமிஷன் அப்படின்னா அறுபது ரூபாய் வரும். இப்போ தினம் ஐயாயிரம் கலக்சன் ஆகும். அதில் 1.90% கமிஷன். அதாவது 90 ரூபா. டிரைவர் கண்டக்டர் இதை பிரிச்சு எடுத்துக்கணும். டீ சாப்பாடு இதுக்கு ஆகும் செலவு போக ஆளுக்கு 25 ரூபா தான் தினம் நிக்கும்

இந்த கமிஷன் கிடைப்பதே எம். ஜி. ஆர் காலத்தில் இருத்த ஈரோடு முத்துசாமி அப்படிங்கற மந்திரியால் தான். அவர் போக்கு வரத்து துறை அமைச்சரா இருந்தப்ப தான் எங்களுக்கு கமிஷன் கொண்டுவரணும் என பேசி வாங்கி தந்தார். நல்ல மனுஷன் சார். இப்போ தி.மு.க வுக்கு மாறிட்டார். இந்த தேர்தலில் நின்னு தோத்துட்டார். 

சாப்பாட்டுக்கு செலவுன்னு சொல்றீங்க. உங்களுக்கு தான் பஸ் நிற்கும் இடங்களில் சாப்பாடு கிடைக்குமே?

அதெல்லாம் வெளியூர் போகும் பஸ்ஸில் தான் நடக்கும். கோயம்பேடு டு பாண்டிச்சேரி ஒரு பஸ் போகுதுன்னு வைங்க. அந்த பஸ் ECR ரோடு வழியா போகும். அங்கு ஒரு கடையில் சாப்பிடுவாங்க. பஸ்ஸில் வந்த ஜனம் சொல்லும் " பாருங்கையா இந்த டிரைவர் கண்டக்டருக்கு ஓசியில் சாப்பாடு கிடைக்குது"ன்னு. உண்மையில் அந்த சாப்பாடு நல்லா இருக்காது அத்தோட டிரைவரும் கண்டக்டரும் கம்மியா தான் சாப்பிடுவாங்க.

உங்க பசங்க என்ன செய்றாங்க? 

பொண்ணு +2  படிக்குது.1000 மார்க் வாங்கும்னு நினைக்கிறேன். பையன் எட்டாவது படிக்கிறான். நாங்க யாதவா சார். எங்க ஜனங்களில் பெரும்பாலும் ஆடு மாடு மேய்ச்சவங்க தான். எங்களை போய் BC -யில் வச்சிருக்காங்க. MBC -யில் சேர்க்கணும்னு இன்னைக்கு உண்ணாவிரதம் நடந்தது. அதில் நானும் கலந்து கிட்டு தான் இப்போ திரும்ப வர்றேன். 

லல்லு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், சரத் யாதவ் எல்லாரும் எங்க கம்மியூநிட்டி தான். அவங்க நினைச்சா, போராடினா எங்களை MBC -யில் சேர்க்க வாய்ப்பிருக்கு 
*************
இதற்குள் நான் இறங்கும் இடம் வந்து விட, அவரிடம் சொல்லி கொண்டு விடை பெற்றேன். 

அக்கறையுடன் விசாரித்ததில், மனம் விட்டு பேசியதில் மிக மகிழ்ச்சியாக என் கைகளை பிடித்து கொண்டு குலுக்கினார் அவர். 

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தான் எத்தனை எத்தனை விஷயங்கள் புதைந்து கிடக்கிறது !

47 comments:

  1. நல்ல பதிவு..கண்டக்டர்களின் வாழ்க்கையைப் பற்றி அறிய முடிந்தது.

    ReplyDelete
  2. 1. if they finish their duty at 12 and decided to do extra duty they have been paid by aditional 400 rupees for extra duty.

    2. for SETC conductors or drivers if they do aditional duty they are paid by Rs 190.

    Muthusamy has done many things to drivers and conductors

    1. College for employees (engineering, medical, ITI and polytechnic)
    a. In which engineering college has 300 seats and out of it 50% is for employees where in those 50% seats no reservation only merit based selection
    b. In medical seal out of 80 seats 20 is for employee

    ReplyDelete
  3. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தான் எத்தனை எத்தனை விஷயங்கள் புதைந்து கிடக்கிறது !

    ReplyDelete
  4. அருமையான பேட்டி
    காக்கிச் சட்டைக்குள் இருந்த நம் போன்ற மனிதரை
    மிக அழகாக அறிமுகம் செய்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  5. எங்கே போனாலும், யார்கிட்ட பேசினாலும் பதிவர் என்கிற கவனம் இருந்துகிட்டேயிருக்கும் போல!! (ஸேம் ப்ளட்.. :-)) ) நல்ல கவனிப்பு சக்தி.

    கண்டக்டர்கள் போல, கண்ட நேரமும் போய்வர வேண்டியிருக்கும் வேலையில் இருப்பவர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கும். அலைச்சல் என்றாலும் சம்பளமாவது ஒழுங்காக கிடைத்துவிடுகிறதே.. ஒரு நிம்மதி.

    வாய்ப்பு அமைந்தால், தனியார் பஸ் டிரைவர்-கண்டக்டரையும் பேட்டி எடுங்கள். ஒப்பிட்டுப் பார்க்கணும்.

    //நல்ல மனுஷன் சார். இப்போ தி.மு.க வுக்கு மாறிட்டார். இந்த தேர்தலில் நின்னு தோத்துட்டார்//
    ஆச்சர்யமான தகவல். ஒரு சில மந்திரிகள் நிஜமாகவே நல்லது செஞ்சிருக்காங்க என்று அறிய வரும்போது ஆச்சர்யமாகத்தான் இருக்கு. அதனாலத்தான் இப்போ தோத்துட்டாரோ என்னவோ..

    ReplyDelete
  6. மோகன்,

    நல்லப்பதிவு,

    //மதுரையில் மட்டும் இரவு நேர பஸ் எல்லாம் இருக்கே அது எப்படி ? //

    சென்னையிலும் இரவு பஸ் உண்டே, எந்த காலத்தில கண்டப்பேட்டி.

    இரவு 10-காலை முதல் ஷிப்ட் வரை ஒரே ஷிப்ட் அதில் ஓட்டினால் இரட்டிப்பு சம்பளம்.கட்டணமும் இரண்டு மடங்கு.

    இரவுப்பேருந்து எல்லாம் தாம்பரத்துடன் முடிந்து விடும்.

    பிராட்வே- தாம்பர்ம் 18ஏ வில் அதிக இரவு பேருந்து உண்டு.

    தாம்பரம்- கோயம்பேடு-70சி தடத்திலும் நிறைய இரவுப்பேருந்து உண்டு.

    வேளாச்சேரி- கோயம்பேடு மார்க்கத்திலும் உண்டு(60டி)

    பூந்தமல்லி-பிராட்வே,

    தி.நகர்- கோயம்பேடு-27சி,

    இரவில் பிராட்வேய் - கோயம்பேடு அதிக பேருந்துகள் உண்டு,ஏன் எனில் சென்ரல் ரயில் பயணிகளுக்காக.

    திருவான்மியூர்-திருவொற்றியூர்(1ஜே) என பல தடத்திலும் இரவுப்பேருந்து உண்டு.

    பகல் அளவுக்கு எல்லா தடத்திலும் இருக்காது, குறைவாக இருக்கும்.

    ஹி..ஹி நானும் பல நடத்துனர்கள்,டிரைவர்களிடமும் பேசி நிறைய விஷயங்கள் தெரிந்துக்கொண்டுள்ளேன்.

    மாநகர ஏசி பேருந்துகள் பின்புற எஞ்சின் கொண்டவை, அவற்றை ப்பற்றியும்,ஆட்டோமேடிக் கியர் என்பதெல்லாம் டிரைவர்களிடம் பேசி தான் தெரிந்துக்கொண்டேன்.

    ReplyDelete
  7. வசூலுக்கு கிடைக்கும் கமிஷன் மட்டுமில்லாமல், பயணிகளுக்கு கொடுக்காமல் விட்ட 50 பைசா, ஒரு ரூ என ஒரு நாளுக்கு குறைந்தது 100 ரூ ஆவது கூடுதலாக கிடைக்கும், அதையும் பிரித்துக்கொள்வார்கள்.

    லக்கேஜ் ஏற்றுவதிலும் காசு கிடைக்கும்.

    ReplyDelete
  8. நல்ல பதிவு !

    ReplyDelete
  9. சீரும் சிரமமும் அனைவருக்கும் பொது என்பதை எடுத்துக் காட்டும் சிறந்த பேட்டி!

    ReplyDelete
  10. A nice , heart to heart with a bus conductor, whom we see only for those minutes, we are on that bus. It also encourages us to see people from different angle.

    I keep talking to auto drivers, when I travel, here.They see a lot!

    ReplyDelete
  11. சமுத்ரா: நன்றி நீங்கள் சொல்வது மகிழ்ச்சியாக உள்ளது

    ReplyDelete
  12. தன்ஸ்: நிறைய தகவல் சொல்லி உள்ளீர்கள் நன்றி. நீங்கள் சொல்கிற பணம் அடுத்த எட்டு மணி நேரம் டியூட்டி பார்த்தால் தானே?

    ReplyDelete
  13. நன்றி ராஜ ராஜேஸ்வரி

    ReplyDelete
  14. நன்றியும் மகிழ்ச்சியும் ரமணி

    ReplyDelete
  15. ராமசாமி அண்ணே : நன்றி

    ReplyDelete
  16. ஹுசைனம்மா: ஒரு மந்திரி பற்றி அவர் நல்ல விதமாய் சொன்னது எனக்கும் ஆச்சரியமா இருந்தது. இவரிடம் பதிவுக்காக பேசலை. வாரா வாரம் எழுதும் பதிவில் ஓரிரு வரி எழுதலாம் என நினைதேன். பின் யோசிக்க நிறையவே விஷயம் சொன்னது புரிந்து பதிவாக்கினேன்

    ReplyDelete
  17. வவ்வால்: விரிவான தகவல்களுக்கு நன்றி, சென்னையில் நைட் செர்வீஸ் குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டும் குறைந்த அளவில் ஓடுவதால் ,
    அப்படி ஒரு செர்வீஸ் இருக்கிற நினைவே வருவதில்லை. மதுரையில் அணைத்து தடத்திலும் நிறைய வண்டிகள் ஓடும்

    ReplyDelete
  18. ஜனா சார்: நன்றி

    ReplyDelete
  19. வெற்றிமகள் மேடம் : எப்போது பின்னூட்டம் இட்டாலும் மனம் திறந்து பேசும் தங்கள் ஆசிகள் நிறைவை தருகிறது

    ReplyDelete
  20. ரிஷபன் சார்: நன்றியும் வணக்கமும்

    ReplyDelete
  21. வித்தியாசமான பதிவுக்கான ஐடியாக்கள் எங்கிருந்து கிடைக்கின்றன? ரசித்துப் படித்தேன். அறியாத விவரம். கண்டக்டர் போட்டோ போட்டு ஒரு plugin கொடுத்திருக்கலாமே?

    ReplyDelete
  22. விவரமணி வவ்வால்.

    ReplyDelete
  23. நன்றி அப்பாதுரை. நான் இது பற்றி எழுத போகிறேன் என்றால் அவர் இப்படி மனம் விட்டு பேசியிருப்பாரா தெரியாது. படம் எடுக்க தோணலை. அவரோடு பேசும்போது பதிவு பற்றி எண்ணமில்லை. புதுசாய் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே இருந்தது. பஸ்ஸில் இருந்து இறங்கிய பின் பதிவர் பல்பு எரிந்து விட்டது :))

    தினம் ஒவ்வொன்றாக பல விஷயங்களை கலந்து தருவது மட்டுமே வீடுதிரும்பலின் ஸ்பெஷாலிட்டி ஆக பலரும் சொல்கின்றனர். இந்த எதிர் பார்ப்பு தான் பல வித பதிவு எழுத காரணமும் !

    ReplyDelete
  24. நல்ல பேட்டி....

    சமீபத்தில் தில்லி திரும்பியபோது ஏசி மெக்கானிக் ஒருவரிடம் பேசிக் கொண்டு வந்தேன். அவரும் இதே மாதிரி அவரது பணியில் இருக்கும் பல பிரச்சனைகள் பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தார்.....

    ReplyDelete
  25. நல்ல முயற்சி. சிறப்பான பேட்டி. வாய்ப்பு கிடைக்கும் வேளைகளில் தொடருங்கள்.

    ReplyDelete
  26. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  27. சிறப்பான பேட்டி...! நேரில் உரையாடியதை போன்ற எழுத்து நடை மற்றொரு முறை படிக்க வைத்து விட்டது.

    இத்தனைநாளும் பதிவுகளை படித்து விட்டு மட்டும் போய்விடுவேன்...இந்த பேட்டியை படிச்ச உற்சாகத்தில் தடத்தை பதிய வைக்கணும் என்று பதித்துவிட்டேன்... :)

    வாழ்த்துகள்...தொடர்ந்து இது போன்ற அருமையான மனிதர்களின் பேட்டியை(எடுத்து)எழுதுங்கள்.

    ReplyDelete
  28. அருமையான பேட்டி.

    ReplyDelete
  29. //மனம் விட்டு பேசியதில் மிக மகிழ்ச்சியாக என் கைகளை பிடித்து கொண்டு குலுக்கினார் அவர்.//

    ஆமாம் சார், ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றி பிறர் கேட்க மாட்டார்களா என்று ஏங்குகிறார்கள். இந்த அவசர உலகத்தில் அடுத்தவர் பற்றி யார் கவலைப் படுகிறார்கள்?

    தொடருங்கள் இன்னும் பலரை எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

    ReplyDelete
  30. You asked only what the conductor told. You did not ask the following questions:

    1) Why do the conductors not stop the buses in few stops and give double whistles? (Especially, they do not stop when they see school going children as they do not get commission on free passes)
    2) Why do they not give proper change to passengers? How much they earn on account of this? I have not seen a conductor accepting Rs.5 for a ticket of Rs.6 when a passenger says he does not have a change.
    3) Why do some of the conductors use ugly words with passengers?
    4) At terminals, whey do they not reply when we ask about the departure time of a bus?
    5) Do the conductors & drivers, complete the number of trips in a shift? Certainly not.

    ReplyDelete
  31. நல்லா எழுதியிருக்கீங்க மோகன்.

    என்னதான் டிரைவரும் கண்டக்டரும் நெருங்கிய நண்பர்களா இருந்தாலும், நாம ஆபிஸ்ல இருக்கற மாதிரி பக்கத்து பக்கத்து சீட்ல உட்கார்ந்து பேசிகிட்டே வேலை பார்க்க முடியாது. இதுதான் அவர்கள் பயணிகளிடம் பேசுவதில் ஆர்வம் காட்டுவதற்கான காரணமாக இருக்கலாம்.

    ReplyDelete
  32. நன்றி வெங்கட். இத்தகைய மனிதர்கள் மூலம் நாம் நிறைய அறிய முடிகிறது

    ReplyDelete
  33. நன்றி ராமலட்சுமி. சாதாரண மனிதர்களிடம் இருக்கும் அசாதாரண விஷயங்கள் பற்றி ஒரு சீரிஸ் எழுதும் எண்ணம் தான். தையல் காரர், பிளம்பர் இப்படி பட்ட மனிதர்களிடம் பேசி... இந்த எண்ணம் நெடு நாளாய் உள்ளே உள்ளது. இந்த சந்திப்பு இயல்பாய் அமைந்து விட்டது

    ReplyDelete
  34. மிகுந்த மகிழ்ச்சி ரத்னவேல் ஐயா நன்றி

    ReplyDelete
  35. கௌசல்யா: மிக மகிழ்ச்சி. அவ்வப்போதாவது உங்கள் கருத்தை பகிரலாம். ஊக்கம் தான் இன்னும் நன்கு எழுத உதவும்

    ReplyDelete
  36. நன்றி உழவன்

    ReplyDelete
  37. அமைதி அப்பா: சரியாக சொன்னீர்கள் நன்றி

    ReplyDelete
  38. நாகராஜன்.. நீங்கள் சொல்லும் பல விஷயங்கள் தான் கண்டக்டர் பற்றி நாம் அனைவரும் மிக அதிகம் நினைக்கும், பேசும் விஷயங்கள். ஆனால் அவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களும் உண்டு, அவர்களும் கஷ்டங்கள் நிரம்பிய மனிதர்கள் என நாமும் அறிய ஒரு வாய்ப்பு தானே? என்னை பொறுத்தவரை ஒவ்வொரு மனிதருக்கும் நல்ல பக்கம், கெட்ட பக்கம் இரண்டும் உண்டு. நாம் அந்த நபரின் எந்த பக்கத்துடன் interact செய்கிறோம் என்பதை பொறுத்தே அவர் நம்முடன் நடந்து கொள்வதும் அமையும். மிக மோசமான மனிதர்கள் என்பர் நம்ப படுவோருடன் கூட நாம் " நீங்கள் நல்லவர்கள்" என்கிற உணர்வுடன் பழகினால், அந்த இமேஜை மெய்ப்பிக்கவோ என்னவோ, நம்மிடம் அவர்கள் நல்லவர்களாகவே நடந்து கொள்வார்கள்.

    எனக்கும் கண்டக்டர்கள் மீது நீங்கள் எழுதிய விஷயங்களே மனதில் இருந்தது இந்த சந்திப்பு நடக்கும் வரை. கமல் சொல்வார் " ஒரு ஓநாயாக இருந்து பார்த்தால் தான் ஓநாயின் கஷ்டம் தெரியும் " என.. கண்டர்க்டர்களிடம் சில தவறு இருக்கலாம். ஆனால் அவர்களும் மனிதர்களே. அவர்களை நம்பியும் குடும்பங்கள் இருக்கின்றன.

    ReplyDelete
  39. ரகு: உண்மை தான். டிரைவர்- கண்டக்டர் பேசும் இடம் வண்டி நின்ற பின் டி குடிக்கும் நேரம் தான் என நினைக்கிறேன்

    ReplyDelete
  40. என்ன தான் 50 பைசா , 1 ரூபா என கமிசன் அடித்தாலும் , கண்டக்டர் , டிரைவர் போன்றோரின் வாழ்க்கை கஷ்டங்கள் நிறைந்ததே .

    அருமையான பதிவு , வாழ்த்துக்கள் .

    இணையத் தமிழன்.
    http://www.inaya-tamilan.blogspot.com/

    ReplyDelete
  41. mohan let me check with my dad and confirm, i beleive that extra duty might be 8 hours or 6 hours.

    I'll write a post about transport corporation driver conductors & their facilities shortly.

    my dad was working as driver andnow retired, i was thinking about writing his job and real back ground about the free pass what others thinks.

    ReplyDelete
  42. நல்ல பேட்டி ! வாழ்த்துக்கள் sir !

    ReplyDelete
  43. அப்பாதுரை,

    வில்லங்க மணினு சொல்லாத வரையில் நன்றி!

    ---------

    மோகன்,

    நீங்க அதிகம் மாநகரப்பேருந்தில் சென்றதில்லை என நினைக்கிறேன், நாகராஜன் சொன்னது போல பல குறைபாடுகள் இருக்கு.

    90% சதம் நடத்துனர்கள், ஓட்டுநர்கள், ஏன் செக்கர்கள் மிக கடுமையாகவே நடந்துக்கொள்வார்கள்.

    அதுவும் இலவச பாஸ் மாணவர்களை விரட்டிவிடுவார்கள், ஏன் எனில் காசு கொடுத்து ஏறும் பயணிகள் இடம் குறைந்துவிடும், மேலும் கலக்‌ஷெண் குறையும் என்பதால்.

    ரொம்ப சின்னப்பையன் ஒருத்தன் ஏறும் முன்னர் பேருந்து எடுத்து கிழே விழுந்துவிட்டான் பயணிகள் எல்லாம் கத்துறாங்க ஒன்னும் ஆகலைல எடுனு வண்டிய எடுக்க சொல்லிட்டார் நடத்துனர், உங்க வீட்டுப்பசங்களா இருந்தா இப்படி சொல்லுவிங்களா என்ன பேருந்தில் இருப்பவர்கள் எல்லாம் சண்டையிட்டும் நடத்துன்ர் கல்லுளி மங்கனாக போய்க்கொண்டே இருக்கிறார். கடசியாக ஒன்று சொன்னார் பாருங்க, எல்லாம் இலவசமா கிடைக்குதுனு பெத்துவிட்டுறாங்க எங்க தாலிய அறுக்குதுங்கனு. அவர்களுக்கு பணிச்சுமை இருக்கு என்பது உண்மை, ஆனால் அதையும் தாண்டி அவர்களாகவே கடுமையானவர்களாக மாறிவிடுகிறார்கள்,கிட்டத்தட்ட எந்திரம் போல தான்.

    பணியில்லாத போது மென்மையாக பேசுவார்கள் , பணி நேரத்தில் அசுரத்தனமாக ஆகிவிடுகிறார்கள் என நினைக்கிறேன்.

    ஒன்றும் வேண்டாம் ஒரு ரூபாய் சில்லறையை திருப்பி கேட்டுப்பாருங்கள் ஏக வசனத்தில் தாளித்துவிடுவார்கள்.

    தமிழன் படத்தில் பூர்ணம் விசுவநாதன் 50 காசு சில்லரை கேட்கும் காட்சி நிஜமாகவே நடக்கும் :-))

    நடத்துனர்கள் அன்பாக சொல்லும் ஒரு டயலாக்" சாவு கிராக்கி" :-))

    --------

    நாகராஜ்,

    பேருந்தில் பல வகை யுண்டு ,வொயிட் போர்டு, எல்லோவ் போர்ட், கிரீன் போர்ட், எக்ஸ்பிரஸ்,டீலக்ஸ் என ,

    வொயிட் போர்ட் மட்டும் எல்லா நிறுத்தம் நிற்கும், மற்றவை அதன் நிறத்துக்கு ஏற்ப டபுள் விசில் தான்.

    மேலும் நேரம் ஆகிவிட்டால் டபுள் விசில் .

    ஷிப்ட்டில் குறிப்பிட்ட ட்ரிப் முடிக்கவில்லை எனில் கட் சர்வீஸ் போட்டு ஓட்டிவிடுவார்கள்.

    அதற்கு ஏற்ப மெமோ கிடைக்கும்.

    -----

    மாநகரப்பேருந்தில் நடத்துனர் உட்கார்ந்துக்கொண்டு டிக்கெட் கொடுப்பார், நாம் தான் போய் வாங்க வேண்டும், நான் டிக்கெட் வந்துக்கொடுத்தா தான் வாங்குவேன் என கலாய்ச்சு இருக்கேன்.செக்கிங் வந்து அவர்களிடமும் இதையே சொல்லி , ஒரு பெரிய கலாட்டாவே ஆச்சு :-))

    ReplyDelete
  44. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தான் எத்தனை எத்தனை விஷயங்கள் புதைந்து கிடக்கிறது- Exactly. we never know unless we speak.. good one

    ReplyDelete
  45. //ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தான் எத்தனை எத்தனை விஷயங்கள் புதைந்து கிடக்கிறது- //

    உண்மைதான் வவ்வால் என்ற இந்த தனிம்னிதன் மனதில்தான் எத்தனை துறை தொடர்பான விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன

    ReplyDelete
  46. நல்லதொரு பதிவு..


    அன்புடன்
    www.amarkkalam.net

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...