* மாலை ஆறு -ஆறறை மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி முடிக்க இரவு ஒரு மணிக்கு மேல் ஆகி விட்டது. லைவ் என்று சொல்வதெல்லாம் சுத்த பம்மாத்து. ஒரு முறை பாட்டு பாடும் சாய் சரண் கையில் நேரம் தெளிவாக 9.25 என்று தெரிந்தது. அப்போது நம் வீட்டில் நேரம் 10.45. கிட்டத்தட்ட ஒண்ணரை மணி நேரம் தாமதமாக ஒளி பரப்பி கொண்டிருந்தனர்.
* நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் சிவ கார்த்திகேயன் & திவ்யா . சிவ கார்த்திகேயன் வழக்கம் போல் சிரிக்க வைத்து கொண்டிருந்தார். திவ்யா ஒரு ரவுண்ட் எக்ஸ்ட்ரா மேக் அப் போட்டிருந்தாலும் ரோஸ் கலர் புடவையில் நன்றாகவே இருந்தார்.
*அய்யாசாமிக்கு பிடித்த பாடகிகளான மதுமிதா, மாளவிகா, ராகினிஸ்ரீ அனைவரும் சேர்ந்து ஒரு பாட்டு பாட, யாரை பார்ப்பது யாரை விடுவது என தடுமாறி விட்டார் அய்யாசாமி. அந்த பாடலை பத்துக்கும் மேற்பட்டோர் பாடினர். அய்யாசாமிக்கு வேண்டிய ஆட்களை (மேலே சொன்ன மூவர் தான்) கேமராமேன் அதிக நேரம் காட்டலை என குறை பட்டுக்கொண்டே இருந்தார்.
* உங்க ஓட்டுகளை "அமிச்சு விடுங்க. அமிச்சு விடுங்க" என மறுபடி மறுபடி சொல்லி கொண்டிருந்தார் திவ்யா. இன்றைய ஓட்டுகளில் அல்ல, ஏற்கனவே போட்ட ஓட்டுகள் வைத்தே யார் ஜெயிப்பார்கள் என முடிவாகியிருக்கும் என்று தோன்றியது.
* நடுவர்கள் சுஜாதா, சீனிவாஸ், உன்னி கிருஷ்ணன் ஆகியோர் தங்கள் குழந்தைகளுடன சேர்ந்து பாடியது அருமையாக இருந்தது. குறிப்பாக உன்னி கிருஷ்ணனின் குட்டி பெண் பாடியது கியூட்
* நடுவர்கள் சுஜாதா, சீனிவாஸ், உன்னி கிருஷ்ணன் ஆகியோர் தங்கள் குழந்தைகளுடன சேர்ந்து பாடியது அருமையாக இருந்தது. குறிப்பாக உன்னி கிருஷ்ணனின் குட்டி பெண் பாடியது கியூட்
* சென்ற சீசன்களில் வெற்றி பெற்ற அஜீஸ், கிருஷ்ணமூர்த்தி, அல்கா ஆகியோர் சேர்ந்து ஆளுக்கு ஒரு பாடல் அடுத்தடுத்து பாடினர்.
* நிகழ்ச்சியில் பாடிய அனைவரிலும் மிக நன்றாக பாடியது சந்தேகமே இன்றி அல்கா தான் !! அவருக்கு அடுத்து தான் பட்டம் வென்ற சாய் சரண் கூட என்று தான் சொல்ல வேண்டும் !
* இந்த வருட போட்டியாளர்கள் பாட ஆரம்பிக்கும் போது மணி ஒன்பது. பதினோரு மணிபோல் அவர்கள் அனைவரும் பாடி முடித்து விட்டனர். அதற்கு பின் சுசித்ரா, ரஞ்சித் போன்றோர் பாடி செமையாக மொக்கை போட்டனர்.
* 12 மணிக்கு மேல் வெறுத்து போய் ஆப் செய்ய நினைத்து ப்ளாக் அல்லது டுவிட்டரில் யாராவது நேரில் பார்த்தவர்கள் யார் ஜெயித்தார் என்ற தகவல் சொல்லியிருப்பார்கள் என தேடினால் யாரும் அதை சொல்லலை. ஆனால் பா.ராகவன், இட்லி வடை போன்ற பெரிய ஆட்கள் பலரும் இதே நிகழ்ச்சி டிவியில் பார்த்து கொண்டு டுவிட்டரில் கமென்ட் அடித்து கொண்டிருந்தார்கள் !
சரி யார் என்ன இடம் பெற்றார்கள் என்பது பற்றியும் அது குறித்து நம் கருத்தும் பார்ப்போம் :
* இந்த வருட போட்டியாளர்கள் பாட ஆரம்பிக்கும் போது மணி ஒன்பது. பதினோரு மணிபோல் அவர்கள் அனைவரும் பாடி முடித்து விட்டனர். அதற்கு பின் சுசித்ரா, ரஞ்சித் போன்றோர் பாடி செமையாக மொக்கை போட்டனர்.
* 12 மணிக்கு மேல் வெறுத்து போய் ஆப் செய்ய நினைத்து ப்ளாக் அல்லது டுவிட்டரில் யாராவது நேரில் பார்த்தவர்கள் யார் ஜெயித்தார் என்ற தகவல் சொல்லியிருப்பார்கள் என தேடினால் யாரும் அதை சொல்லலை. ஆனால் பா.ராகவன், இட்லி வடை போன்ற பெரிய ஆட்கள் பலரும் இதே நிகழ்ச்சி டிவியில் பார்த்து கொண்டு டுவிட்டரில் கமென்ட் அடித்து கொண்டிருந்தார்கள் !
சரி யார் என்ன இடம் பெற்றார்கள் என்பது பற்றியும் அது குறித்து நம் கருத்தும் பார்ப்போம் :
சிறந்த வெளிநாட்டு பாடகர்: பிரவீன்:
இவருக்கு ஹீரோ ஹோண்டா பேஷன் ப்ரோ பைக் பரிசாக தரப்பட்டது (அட என் பைக்கு!) சிறந்த வெளிநாட்டு பாடகர் இவர் தான் என்பதில் சந்தேகமில்லை. அது ஏன் பைக் பரிசாக தரணும்? அவர் அங்கு எடுத்து செல்வதற்கு எவ்வளவு டூட்டி கட்ட வேண்டும்? அநேகமாய் இங்கு யாரிடமாவது குடுத்து விடுவார் என நினைக்கிறேன்
பைனல் வராதவர்களில் சிறப்பு பரிசு : சீனிவாஸ்:
ஒரு லட்சம் ரூபாய் இவருக்கு பரிசாக கிடைத்தது. உண்மையில் ஒய்ல்ட் கார்டில் மிக மிக சிறப்பாக பாடியது இவர் தான். குறிப்பாக ஆரோமலே பாடல் மறக்க முடியாத rendition. இந்த பரிசு இவருக்கு கிடைத்தது மிக சரியே.
முதல் பரிசு: சாய் சரண்
இந்த பரிசுக்கு தகுதியானவர் சாய் சரண். எங்கள் வீட்டில் மூவரும் இவர் தான் வாங்குவார் என சொல்லி கொண்டிருந்தோம். பைனலுக்கு நால்வர் தேர்வான போதே வானவில்லில் "பைனல் சாய் சரண் வெல்வார் " என எழுதி இருந்தது நினைவிருக்கலாம். பைனலில் நால்வரில் நன்கு பாடியது இவர் தான். (அன்று பாடியதை வைத்து முடிவு செய்ய படவில்லை என்றாலும் கூட..) வாழ்த்துகள் சாய் சரண். இனி தலை கனம் வராமல் தன் திரை இசை வாழ்க்கையை துவக்க வேண்டும்.
இரண்டாம் பரிசு: சந்தோஷ்
மூன்றாம் பரிசு: சத்ய பிரகாஷ்
நான்காம் இடம்: பூஜா
இந்த வரிசையில் எனக்கு நிச்சயம் உடன்பாடு இல்லை. சந்தோஷ் கூட "சத்யா தான் இரண்டாம் இடம் என நினைத்தேன். நானா இரண்டாம் இடம்?" என நம்ப முடியாமல் கேட்டார். (சந்தோஷுக்கு கார் பரிசாக கிடைத்தது. சத்யாவிற்கு மூன்று லட்சம். பூஜாவிற்கு ஒரு லட்சம் பரிசு தொகை !) பைனலில் சந்தோஷ் ஆரோமலே பாட்டை மிக சுமாராக பாடினார். அவர் பாடும் போது இதே பாட்டை சீனிவாஸ் அற்புதமாக பாடியது நினைவு நிச்சயம் வந்தது.
இந்த வரிசையில் எனக்கு நிச்சயம் உடன்பாடு இல்லை. சந்தோஷ் கூட "சத்யா தான் இரண்டாம் இடம் என நினைத்தேன். நானா இரண்டாம் இடம்?" என நம்ப முடியாமல் கேட்டார். (சந்தோஷுக்கு கார் பரிசாக கிடைத்தது. சத்யாவிற்கு மூன்று லட்சம். பூஜாவிற்கு ஒரு லட்சம் பரிசு தொகை !) பைனலில் சந்தோஷ் ஆரோமலே பாட்டை மிக சுமாராக பாடினார். அவர் பாடும் போது இதே பாட்டை சீனிவாஸ் அற்புதமாக பாடியது நினைவு நிச்சயம் வந்தது.
விடுங்கள். எல்லாம் நாம் நினைக்கிற படி நடந்து விடுமா என்ன? இதில் இன்னொரு விஷயம் அவசியம் சொல்ல வேண்டும். மூன்று மற்றும் நான்காம் இடம் பெற்ற சத்யா & பூஜா தான் நடுவர்களால் பைனலுக்கு நேரே தேர்வு செய்யப்பட்டவர்கள். அதாவது சூப்பர் சிங்கின் சிறந்த முதல் இரு பாடகர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களால் வெளியேற்றப்பட்ட சாய் சரண் & சந்தோஷ் தான், பைனலில் முதல் இரு இடம் பெற்றனர். இது வேறு எதையும் உணர்த்துகிறதா?
இறுதியாக சில வார்த்தைகள்: விஜய் டிவி ஒரே நாளில் விளம்பரம் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்க நினைத்து நிகழ்ச்சியை இவ்வளவு தூரம் இழுவை ஆக்குவது பலரையும் வெறுப்படைய வைக்கிறது. சென்ற முறை சூப்பர் சிங்கர் பைனல் இரவு பன்னிரண்டு மணிக்கு முடிந்தது. இந்த முறை இன்னும் ஒரு மணி நேரம் கழித்து ஒண்ணே காலுக்கு முடிந்தது. அடுத்த முறை நள்ளிரவு ரெண்டு மணிக்கு முடிப்பார்களோ? வருகிற பைனல்களில் குறைந்தது பதினோரு மணி போலாவது டிவி ஒளி பரப்பை முடிக்கிற மாதிரி செய்ய வேண்டும் விஜய் டிவி.!
இல்லா விட்டால்? இல்லா விட்டால்?
வேறென்ன? திட்டி கொண்டே பார்த்து தொலைப்போம் !
மிக தெளிவான விமர்சனம். எங்கள் குடும்பத்தில் விவாதித்த பல விஷயங்களை தாங்கள் குறிப்பிட்டிருப்பது மகிழ்ச்சியே!
ReplyDelete*******************
நேரம் கிடைத்தால் இதையும் படித்துப் பாருங்களேன்.
பொறுமையை சோதித்த விஜய் டிவி!
நன்றி.
//கிட்டத்தட்ட ஒண்ணரை மணி நேரம் தாமதமாக ஒளி பரப்பி கொண்டிருந்தனர். //
ReplyDeleteஇரவு 7.30 மணிக்கு டாலடிக்கிற வெயில்ல லைவ்வா சிவகார்த்திகேயன் கேரவேன்ல பூஜாவ பேட்டி எடுத்தாரே பார்க்கலையா? :))
//இதில் இன்னொரு விஷயம் அவசியம் சொல்ல வேண்டும்? மூன்று மற்றும் நான்காம் இடம் பெற்ற சத்யா & பூஜா தான் நடுவர்களால் பைனலுக்கு நேரே தேர்வு செய்யப்பட்டவர்கள். அதாவது சூப்பர் சிங்கின் சிறந்த முதல் இரு பாடகர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களால் வெளியேற்றப்பட்ட சாய் சரண் & சந்தோஷ் தான், பைனலில் முதல் இரு இடம் பெற்றனர். இது வேறு எதையும் உணர்த்துகிறதா? //
என்னமோ போங்க அடுத்தமுறை பூஜாவும் சத்யப்ரகாஷும் போட்டியிட்டா கண்டிப்பா பைனல் வருவாங்க ஒருத்தர் டைட்டில் அடிப்பாங்கன்னு புரியிது. :))
அய்யாசாமிக்கு பிடித்த பாடகிகளான மதுமிதா, மாளவிகா, ராகினிஸ்ரீ //
சேம் ப்ளட் :))
//உண்மையில் ஒய்ல்ட் கார்டில் மிக மிக சிறப்பாக பாடியது இவர் தான். குறிப்பாக ஆரோமலே பாடல் மறக்க முடியாத rendition. இந்த பரிசு இவருக்கு கிடைத்தது மிக சரியே. //
ஆமாங்க ஸ்ரீனி பாடியது எக்ஸலண்டா இருந்தது.
//இவ்வளவு தூரம் இழுவை ஆக்குவது பலரையும் வெறுப்படைய வைக்கிறது. //
கடுப்போ கடுப்பு. அதவிடக் கடுப்பு ப்ரைஸ் எல்லாம் குடுத்து முடிஞ்சதுக்கப்புறமும் இன்னும் சில நிமிடங்களில் யார் அந்த டைட்டில் வின் பண்ணப் போறாங்கன்னு தெரியறதுக்கு முன்னாடி இதோ ஒரு சூப்பர் பர்பார்மென்ஸ்னு செவப்பு ட்ரெஸ் போட்டு யாரையோ ஆடவிட்டாய்ங்க.. :(( கொடுமடா சாமி!
//லைவ் என்று சொல்வதெல்லாம் சுத்த பம்மாத்து. //
ReplyDeleteஆமாம் 2 மணி,நேர ஷோவுக்கு,12 மணி நேரம் விளம்பரம் போடுவதால் இந்த கஷ்டம்.
In my perception, once again it turns as number game. Sai's voice not have the originality. He may be a good singer.But the aim of the show is not achieved - finding the new voice texture. Sreeni can not be neglected.
ReplyDeleteம்ம்ம்.... மொத்தத்தில் விஜய் டிவி நிறுவனத்திற்கு விளம்பரத்தின் மூலம் நல்ல வருமானம்....
ReplyDeleteஅய்யாசாமிக்கு அவரது மனைவி பிளாக் படிப்பது மறந்து விட்டதா! :) அடுத்த பதிவு எழுதும்போது நினைவிருக்கட்டும்.....
தப்பா நெனைக்க வேணாம்.. மனசுல பட்ட சொல்லுறேன்.
ReplyDeleteஇந்த மாதிரி நிகழ்ச்சி கலைய வளர்க்கவோ.. ரசிகர்கள்(பாக்குறவங்க) ஆனந்த படுத்தவோ இல்ல..
டப்பு.. டப்பு.. டப்பத் தவிர வேற இல்ல.............
பொழுது போக்கு நிகழ்ச்சி ராத்திரி பத்து மணிக்கு மேல எதுக்கு தேவை.. (சோ, இது பொழுது போக்கு அம்சமில்ல)
மக்களை அடிக்ட் பண்ணிட்டு.. விளம்பரம் போட்டு காசு பாக்குற கூட்டம் அது.
அதையும் பாத்து.. தேவையில்லாம அதுக்கு பில்ட் அப் கொடுத்து.... நீங்களும் பதிவா எழுதி..
எந்த ஒரு விஷயமும் நமக்காக இருக்க வேண்டும்.. 'நாம்' அதற்காக இருக்கக் கூடாது.
பின்னிரவு வரை ஒரு நிகழ்ச்சியை தூங்காமல் நாம் பார்த்தோமென்றால் நாம் அதற்கு எந்தளவிற்கு அடிமையாகி விட்டோம் என்பதே உண்மை.
எஸ்.எம்.எஸ் மூலம் ஒட்டு போடுறதால நமக்கு கொஞ்சமா காசு போகலாம் .. ஆனா அவங்க ஃபோன் கம்பெனியோட டை-அப் வெச்சிருப்பாங்க.. ஒவ்வொரு 'எம்.எம்.எஸ்' க்கும் ஒரு குறிப்பிட்ட கமிஷன் தொகை அவங்க கல்லா கட்டுவாங்க.. (பொதுவாச் சொன்னேன்)
வர வர ஒரே போருப்பா.
ReplyDeleteஆண்களே ,பெண்களே : நீங்கள் "அந்த" விசயத்தில் கில்லாடி ஆகணுமா?
// Madhavan Srinivasagopalan said...
ReplyDeleteதப்பா நெனைக்க வேணாம்.. மனசுல பட்ட சொல்லுறேன்.
இந்த மாதிரி நிகழ்ச்சி கலைய வளர்க்கவோ.. ரசிகர்கள்(பாக்குறவங்க) ஆனந்த படுத்தவோ இல்ல..
டப்பு.. டப்பு.. டப்பத் தவிர வேற இல்ல.............
பொழுது போக்கு நிகழ்ச்சி ராத்திரி பத்து மணிக்கு மேல எதுக்கு தேவை.. (சோ, இது பொழுது போக்கு அம்சமில்ல)
மக்களை அடிக்ட் பண்ணிட்டு.. விளம்பரம் போட்டு காசு பாக்குற கூட்டம் அது.
அதையும் பாத்து.. தேவையில்லாம அதுக்கு பில்ட் அப் கொடுத்து.... நீங்களும் பதிவா எழுதி..
எந்த ஒரு விஷயமும் நமக்காக இருக்க வேண்டும்.. 'நாம்' அதற்காக இருக்கக் கூடாது.
பின்னிரவு வரை ஒரு நிகழ்ச்சியை தூங்காமல் நாம் பார்த்தோமென்றால் நாம் அதற்கு எந்தளவிற்கு அடிமையாகி விட்டோம் என்பதே உண்மை.
எஸ்.எம்.எஸ் மூலம் ஒட்டு போடுறதால நமக்கு கொஞ்சமா காசு போகலாம் .. ஆனா அவங்க ஃபோன் கம்பெனியோட டை-அப் வெச்சிருப்பாங்க.. ஒவ்வொரு 'எம்.எம்.எஸ்' க்கும் ஒரு குறிப்பிட்ட கமிஷன் தொகை அவங்க கல்லா கட்டுவாங்க.. (பொதுவாச் சொன்னேன்)
24 September, 2011 //
100% accept
நம்மளை சுற்றி ஆயிரம் பிரச்சனைகள் பேச எழுத இருக்கும் போது இவ்வளவு டீப்பா டிவி க்கு அடிமையாகலாமா . இதுல வேற சாய்சரண் வாட்சில 9 . 25 விஜய் டிவி யில 10 . 25 மணின்னு இவ்வளவு நுட்பமா கவனித்து விட்டு அதை சிலாகித்து பதிவு வேற . இதைத்தான் விளக்கை பிடித்து கொண்டு கிணத்தில் விழுவது என்பது .
அருமையான அலசல்.
ReplyDeleteநாங்களும் இதைத்தான் பேசினோம்.
நல்ல விமர்சனம் நண்பரே
ReplyDeleteமாதவன் said:
ReplyDelete//பின்னிரவு வரை ஒரு நிகழ்ச்சியை தூங்காமல் நாம் பார்த்தோமென்றால் நாம் அதற்கு எந்தளவிற்கு அடிமையாகி விட்டோம் என்பதே உண்மை.//
மாதவா. உலக கோப்பை பைனல் எத்தனை மணிக்கு முடிந்தது? அதை நாம் பார்க்க வில்லையா என்ன? கிரிக்கெட் பிடிக்காதோர், இப்படி ஒவ்வொரு மேட்சையும் ஏழு அல்லது எட்டு மணி நேரம் பார்ப்பதை கிண்டல் செய்திருப்பார்கள். கிரிக்கெட் பிடித்தவர்களுக்கு அது சுவாரஸ்யம். இல்லையா? அதே போல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிடிப்பதால் தான் பார்த்தோம். முடிவென்ன என தெரிந்து கொள்ளும் ஆவலே மற்ற கொடுமையை பொறுத்து கொண்டு நேற்று நிகழ்ச்சி பார்க்க வைத்தது.
நீங்களும், ப்ரோபைல் கூட பகிர விரும்பாத மற்றொரு நண்பரும் இதே கருத்தில் எழுதினாலும், நிகழ்ச்சி பார்த்த பலர் என் கருத்தை பிரதி பலித்துள்ளனர். இதனை ப்ளாகில் பகிர வேறு காரணம் உண்டு. நானும் இதனை பற்றி எழுதுவதா வேண்டாமா என சற்று தயக்கத்துடன் இருந்தேன்.ப்ளாக் உலகில் எனக்கு தெரிந்து யாரும் இது பற்றி விரிவாய் எழுத வில்லை. எனவே தான் எழுதினேன். வெளி நாட்டில் உள்ளோர், தமிழகம் பற்றி அறிய மிக விரும்புவார்கள். அது ஒரு முக்கிய காரணம். விருப்பமோ, வெறுப்போ இந்த பதிவு மிக மிக அதிகம் பேரால் வாசிக்கப்படும் என தெரியும். வெளியிட்டு சில மணி நேரங்களில் மாதாந்திர டாப் டெண்னிற்குள் வந்து விட்டது (குறைந்தது 800 பேர் வாசிக்கணும்; அப்போ தான் அப்படி வரும் ! ). கருத்துகளுக்கு நன்றி
எனக்கும் இம்மாதிரி டி.வியில் வரும் கிரிகெட், சினிமா/மற்றும் ஒரு கட்டத்திற்கு மேல் போர் அடிக்கும் ஒரே மாதிரியான ஆடல் பாடல் நிகழ்சிகளை அதே சினிமா சம்பத்தப்பட்ட நபர்களை வைத்து மக்களின் (அடிமையாக்கி) நேரத்தை வீணாக்குவதில் உடன்பாடு இல்லை. அதே நேரத்தில் என்ன மாதிரியான பதிவு போடுவது என்பது பதிவர்களின் விருப்பம். என்னிடம் கிரிகெட் பற்றி பதிவு போட சொன்னால் நான்கு வரிகளுக்கு மேல் எழுத என்னிடம் சரக்கு இருக்காது. எனக்கு உள்ள ஒரே ஏமாற்றம் என்னவென்றால் இம்மாதிரி சினிமாவிற்கும் கிரிக்கெட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியர்கள், அரசியல் நிகழ்வுகளுக்கு ஏன் அந்த முக்கியத்துவத்தை தருவதில்லை என்பது தான். அரசியல் பேசினாலோ எழுதினாலோ "சீ" எனப்பார்க்கும் நிலைமை மாற வேண்டும். அரசியல் ஆர்வமும் அறிவும் இல்லாத நாடு முன்னேற்றம் காண்பது என்பது நத்தை வேகம் தான்.
ReplyDeleteசரி விசயத்திற்கு வருவோம். மாதவன் கருத்துக்கும், மோகன் கருத்துக்கும் என் ஆதரவு 50/50. இன்னொரு நல்ல விஷயம், இம்மாதிரி மாற்று கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு இப் பதிவு ஒரு நல்ல வைப்பை தந்தது. சோ, அதற்காக இப்பதிவுக்கு என் வோட்டும் கூட.
இந்தப் பதிவுக்கு கிடைத்த விமர்சனங்களும் அதற்கு மோகன் சாரின் விளக்கமும் சரியே! ஆனால், ஒருவரை இப்படித்தான் நீ எழுத வேண்டும் என்று சொல்வது எப்படி சரியாகும்?
ReplyDeleteஒவ்வொருவரும் ஒவ்வொரு அடையாளத்தோடு எழுதி வருவது உண்மையே. மோகன் சார் எழுதுவதும் அப்படித்தான். மோட்டார் விகடனில் படிக்க வேண்டியதை ஆனந்த விகடனில் எதிர்பார்க்கக் கூடாது.
சமூக அக்கறையுடன் எத்தனையோ பதிவுகள் வீடு திரும்பலில் இடம் பெற்றுள்ளதை தொடர்ந்து வாசிப்பவர்கள் அறிவார்கள்.
இந்த நிகழ்ச்சி குறித்து, நிச்சயம் ஒரு விரிவான பதிவு வீடு திரும்பலில் வருமென்று எதிர்பார்த்தவர்களில் நானும் ஒருவன். அது, எப்படி இருக்குமென்றும் தெரியும். அப்படியே இருந்தது. அதுதான் ஒரு எழுத்தாளரின் அடையாளம். அந்த வகையில் 'மோகன் சார்' இந்த மாதிரியான விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் 'அவருடைய பாணி'யில் தொடர வேண்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் விருப்பமாகும்.
இன்னும் நிறைய எழுதலாம். ஆனால், அவைகள் தேவையற்ற விவாதத்தை துவக்கும் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
இது 'வீடு திரும்பல்' ஐ தொடர்ந்து படிப்பவர்களின் குரலாக இருக்குமென்று நம்புகிறேன்.
This comment has been removed by the author.
ReplyDeleteஅமைதி அப்பா :தங்களின் சரியான புரிதலுக்கு மிக்க நன்றி
ReplyDelete***
தமிழ் சினிமாவில் பல விஷயங்களும் கலந்து தரும் மசாலா போல தான் இத்தகைய பதிவுகளும். இதன் மூலம் முதன் முறை இந்த ப்ளாக் உள்ளே வருவோர் ஏராளம். அவர்களில் சிலர் வீடுதிரும்பலை தொடருவர். பின் இதில் வரும் பல விஷயங்களும் வாசிப்பர்.
இத்தகைய பதிவை எதிர்ப்போர்ற்கு இன்னோர் தகவல்: வீடு திரும்பலில் எவ்வளவோ குறிப்புகள் எடுத்து சிரமப்பட்டு எழுதும் புத்தக விமர்சனங்களை எத்தனை பேர் வாசிக்கிறார்கள்? எத்தனை பேர் பின்னூட்டம் இடுகிறார்கள்? அத்தகைய பதிவுகள் உண்மையில் ஈ ஆடும். ஆயினும் அவற்றை தொடர்ந்து கொண்டு தான் இருப்பேன்.
அதிசயமாய் நம் ப்ளாகில் சற்று வாக்கு வாதம் நடக்கிறது. அனைவருக்கும் நன்றி
ஆதி மனிதன் said:
ReplyDelete//சினிமாவிற்கும் கிரிக்கெட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியர்கள், அரசியல் நிகழ்வுகளுக்கு ஏன் அந்த முக்கியத்துவத்தை தருவதில்லை என்பது தான். //
ஆதி மனிதன்: சினிமா கிரிக்கெட் வீரர்கள் பற்றி எழுதினால் வீட்டுக்கு ஆட்டோ வராது. அரசியல் வாதிகள் குறித்து எனது பார்வையை எழுதினால் நான் உயிரோடு இருக்க முடியாது.
அரசியல் குறித்து இன்றைக்கு அரசியல் பதிவுகள் எழுதும் பலரை விட எனக்கு ஆழமான அறிவும் பார்வையும் உண்டு. ஆனால் எனக்கென்று ஒரு குடும்பமும் வேலையும் கூட உண்டு.அவை பாதிக்க கூடாது என்பதால் தான் எனது அரசியல் ஆர்வத்தை தேர்தலில் வாக்களிப்பதுடன் நிறுத்தி கொள்கிறேன். ஒரு வேளை பிற்காலத்தில் எனது அடையாளம் வெளிப்படுத்தாமல் ஒரு ப்ளாக் ஆரம்பித்தால் என்னால் மிக சுதந்திரமாக எழுத முடியும். எதை எழுதுவது என்பதை விட எதை எழுத கூடாது என எனக்கு நானே விதித்துள்ள தடைகள் மிக அதிகம். என்னை "பயப்படும் ஆசாமி" என நீங்கள் நினைக்கலாம். ஆனால் ப்ளாக் பொழுது போக்கு மட்டுமே என்பதில் தெளிவாக இருக்கிறேன்
இன்று தான் உங்கள் பதிவினால்/அதில் வந்த மாற்றுக்கருத்துகளால் உந்தப்பட்டு சூப்பர் சிங்கர் பைனல் நிகழ்ச்சியை (recorded) பார்த்தேன். எப்படி, எப்படி சார் உங்களுக்கு இவ்வளவு பொறுமை? அப்பா பத்து தடவையாவது பார்வர்ட் செய்திருப்பேன். வழ வழா கமெண்ட்டுகள், கொழா கொழா நிகழ்ச்சி அமைப்புகள்(இது முற்றிலும் எனது கருத்துக்கள்). இத்தனைக்கும் எனக்கு இசை மேலும், இசை நிகழ்சிகள் மீதும் ஆர்வம் உண்டு.
ReplyDelete//என்னை "பயப்படும் ஆசாமி" என நீங்கள் நினைக்கலாம்//
நான் அந்த எண்ணத்தில் கூறவில்லை. பொதுவாக அரசியல் நிகழ்வுகள் மீது மக்களுக்கு அவ்வளவு நாட்டமில்லை என்பதை கூற விரும்பினேன்.
//வேறென்ன? திட்டி கொண்டே பார்த்து தொலைப்போம் !//
ரிபீட்டூ
வந்திருக்கும் பல மாற்றுக் கருத்துகள் எனது கருத்தையும் ஒத்திருக்கின்றன என்பதைவிட, இந்நிகழ்ச்சிகள் பார்ப்போரின் பொறுமைதான் என்னை வியக்க வைக்கீறது. இருப்பினும், நீங்கள் சொன்னதுபோல, ஒவ்வொருவரின் விருப்பங்களும் வேறுபடுமல்லவா. பின்னிரவு வரை நீளும் கிரிக்கெட் மேட்ச்களின்போது என் வீட்டிலும் விவாதங்கள் நடக்கும்!! :-))))
ReplyDeleteஎனினும் ஒரு விஷயம் கண்கூடு: (சில) பெண்களுக்கு சீரியல்கள் என்றால், (சில) ஆண்களுக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள்!! :-)))))
விமர்சனம் மிக அருமை! நிறைய பேருடைய கருத்துக்கும் ஒத்துப்போனது.
ReplyDeleteவிளம்பரங்கள் மட்டும் தான் அதிகம்.
இல்லா விட்டால்? இல்லா விட்டால்?
ReplyDeleteவேறென்ன? திட்டி கொண்டே பார்த்து தொலைப்போம் !/
வேறென்ன செய்வோம்!
க்ரிக்கெட்டின் மேட்ச் ஃபிக்ஸிங்கிற்கு சற்றும் சளைத்ததல்ல இந்த ரியாலிட்டி(!) ஷோக்கள்.
ReplyDeleteஐ ஸிம்ப்ளி ஹேட் தீஸ் ப்ரொக்ராம்ஸ்
எனக்கும் இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் எழுதும்போது சிறிது வருத்தம் இருக்கும், இந்த நிகழ்ச்சிக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டுமா என்று?
ஆனால் இந்த காரணத்தால், உங்களையோ உங்கள் எழுத்தையோ நான் வெறுத்துவிடவில்லை. எத்தனை முறை நீங்கள் இந்த நிகழ்ச்சியைப் பற்றி எழுதினாலும் (எதிர்காலத்திலும்), எனக்கு பிடித்த மிகச்சில பதிவர்களில் நீங்களும் ஒருவர்.
ஷங்கர்: விரிவான (ஒத்த) கருத்துகளுக்கு நன்றி
ReplyDelete**
நன்றி ராம்வி மேடம்
**
சாகம்பரி: நன்றி சீனிவாஸ் ஒய்ல்ட் கார்டில் பாடிய அளவு அருமையாய் முதலில் பாடவில்லை என்பது என் கருத்து. He lacked consistency
**
வெங்கட்: நினைவிருக்கு. இவை எல்லாம் வீட்டிலும் பேசுபவை தான். Aiyasamy is transparent
நன்றி குமார்.
ReplyDelete**
ஷீ நிசி: நன்றி
**
ஹுசைனம்மா said
//பெண்களுக்கு சீரியல்கள் என்றால், (சில) ஆண்களுக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள்!! :-)))))
முழுதும் ஒத்து கொள்கிறேன்
**
மனோ மேடம்: நன்றி
**
ரகு: நீங்கள் அவ்வப்போது சொன்ன கருத்து தான். ஆயினும் உங்களுக்கு மாற்று கருத்து உள்ள இந்த பதிவில் சொன்னதில் மகிழ்ச்சி
நேரடி ஒளி பரப்பெல்லாம் கிடையாது.அங்க நிகழ்ச்சி ஆரம்பிச்சு
ReplyDeleteரொம்ப நேரம் கழிச்சுதான் டிவி ல காமிக்க ஆரம்பிச்சாங்க.அதை விட கொடுமை என்னன்னா நிகழ்ச்சி முடிஞ்சப்பறம் முடிவை அறிவிக்க மாட்டேனுட்டாங்க.டிவி ல அறிவிக்கற டைம் ல தான் இங்கயும் அறிவிப்போம்னு அதை மட்டும் லைவ் வா ஆக்கிட்டாங்க.நேரா பாக்கப் போனவங்கலாம் நொந்து போறாப்புல இருந்தது.
raji said...
ReplyDelete//டிவி ல அறிவிக்கற டைம் ல தான் இங்கயும் அறிவிப்போம்னு அதை மட்டும் லைவ் வா ஆக்கிட்டாங்க.நேரா பாக்கப் போனவங்கலாம் நொந்து போறாப்புல இருந்தது.//
அட.. இந்தக் கொடுமை எனக்குத் தெரியாமல் போச்சே!
i appreciate ur blogging on this material.i am one who have watched this program, a few years back, when i was "well" settled and relaxed.. by which i mean when i was in chennai.now even if i have a choice, here, i would nt because, i would prefer cooking/reading in my free time. i think watching a particular programme depends on one s mindset at that particular time.one need not go on to define a person by what they write/ what they watch.. as you said u might have extensive knowledge in a particular subject and you might prefer not to share them with others.I understand all of it. please go ahead with whatever you choose to do.and ofcourse, i enjoyed reading tht particular post... as i dont watch tv anymore,myself,but to be frank.,had a little bit of eager to know wht was happening.. on those tv shows.
ReplyDeleteand, yes this is all abt blogging/sharing.
ராஜி: இந்த கொடுமை வேறு நடந்ததா? நீங்கள் சொல்லி தான் தெரிந்தது!!
ReplyDelete**
அமைதி அப்பா: நன்றி
**
நன்றி டாக்டர் வடிவுக்கரசி
நண்பரே.. இந்தப் பதிவில் கருத்து சொன்னதை மறந்தே விட்டேன்..
ReplyDeleteஅலுவல் பணி நிமித்தமாக வெளியூர் சென்றதே அதற்கு காரணம்.
தற்போது மற்ற கருத்துக்களையும் படித்தேன்.
உங்கள் மனது புண்படும் என்று எனது கருத்துக்கள் எழுதப் படவில்லை.
அவரவர் பில்லாகில் தங்களுக்குப் பிடித்ததை எழுதுவதை நான் எதிர்க்கவில்லை.
குறிப்பாக அந்த நிகழ்ச்சியைப் பற்றி எனது கருத்தினை தெருவித்தேன்.
நான் சொல்ல வந்தது.. இது போல நீண்ட நேரம் நாம் தொலைக் காட்சி முன்னால் உட்கார்ந்து, நமது பிள்ளைகளுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாகக் கூடாது என்பதே. மற்றபடி அவரவர் விருப்பம்.