ஐ. பி. எல் துவக்க விழா
நேற்று ஐ. பி. எல் துவக்க விழா கோலாகலமாய் நடந்தது. கரீனா மற்றும் பிரியங்கா சோப்ரா என்று நமது favourite அழகிகள் ஆடினர். (அப்போ காத்ரீனா கைபோட வாழ்க்கை??)
அமிதாப் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் உறுதிமொழி கூற, அணி தலைவர்கள் உறுதி மொழியில் கையெழுத்து போட்டனர். இந்த கையெழுத்து, கணினியில் அழகாய் தெரிகிற மாதிரி செய்திருந்தனர்.
ஐ.பி. எல் சேர்மன் பேசும்போது அமர்ந்திருந்த வீரர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். மனப்பாடம் செய்து ஒப்புவிக்கிறார் என்பது அப்பட்டமாய் தெரிந்தது.
சல்மான் நடனம் அதிக movements-உடன் இல்லை. ரொம்ப லைட்டா ஆடினார். உடம்பு எதுவும் சரியில்லையா தெரியலை.
கரீனா அழகு பற்றி சித்து டிவியில் விட்ட ஜொள்ளில் ஸ்டூடியோவில் இருப்பவர்கள் வழுக்கி விழு கிற அளவுக்கு இருந்தது !
எச்சரிக்கை: வானவில்லில் தொடர்ந்து ஐ. பி. எல் கார்னரும், ஐ. பி. எல் குறித்த வேறு சில பதிவுகளும் விரைவில் எதிர்பாருங்கள் (மாதவா.. நீ திட்டாட்டி நல்லாவே இல்லை; நல்லா திட்டுப்பா)
எச்சரிக்கை: வானவில்லில் தொடர்ந்து ஐ. பி. எல் கார்னரும், ஐ. பி. எல் குறித்த வேறு சில பதிவுகளும் விரைவில் எதிர்பாருங்கள் (மாதவா.. நீ திட்டாட்டி நல்லாவே இல்லை; நல்லா திட்டுப்பா)
சூப்பர் சிங்கர் கார்னர்
இரண்டு நாளாய் மனோ மற்றும் புஷ்பவனம் குப்புசாமிக்கு சண்டை வருகிற மாதிரியும் குப்புசாமி கோபித்து கொண்டு போகிற மாதிரியும் Promo காண்பித்தனர். அது ஏப்ரல் பூல் வேலை தான் என முதல் நாளே தெரிந்தது . குப்புசாமி கோபித்து கொண்டு போகும் போது மனோ ": நீங்க போறதுன்னா போங்க; நாங்க பாத்துக்குறோம் " என்பாராம். நிச்சயம் அப்படி சொல்லியிருக்க வாய்ப்பில்லை. அதை வைத்து தான் கண்டு பிடிக்க முடிந்தது !
இந்த வாரம் காவ்யா என்கிற பெண் ரொம்ப நல்லா பாடினாள். "செமையா பாடுறா; டாப் 5 வரை போயிடுவா" என பேசி கொண்டிருந்தோம் . ஜட்ஜ்கள் சில குறைகள் சொன்னாலும் நன்கு பாடினாள் என்று தான் கூறினர். அன்றைய முடிவில் வெளியேற்ற பட்டது அவள் தான் ! செம ஷாக் ! நாங்கள் பார்த்ததிலேயே சிலர் அவளை விட மோசமாய் பாடினர். அவர்கள் "டேஞ்சர் Zone" க்கு கூட வர வில்லை !! சூப்பர் சிங்கரில் என்ன அரசியல் நடக்குதுன்னு தெரியலை !
அக்கா - அக்கா - அக்காவ்
அம்மா சசியை சில மாதங்களுக்கு முன் வெளியே அனுப்பிய போது "வெளியேற்றியது சரி. ஆனால் எத்தனை நாளைக்கு என்றும் சொல்லி இருக்கலாம்" என வானவில்லில் கூறியிருந்தோம். (தமிழக அரசியல் நமக்கும் புரியவே செய்கிறது).
இம்முறை வெளியேற்றி சேர்த்து கொண்டது முழுவதும் நாடகமா, அல்லது அவர் இல்லாமல் மன அளவில் கஷ்டப்பட்டு, மீண்டும் சேர்த்து கொண்டாரா என தெரியவில்லை. இனி சொந்த காரர்களும் ஒவ்வொருவராய் சேர்வர். பின் சில வருடம் கழித்து "சதி நடக்கிறது" என மீண்டும் வெளியேற்றம் நடக்கும்.
"இப்படியே செத்து செத்து விளையாடலாமா?" காமெடிதான் இது! நாமெல்லாம் ஹாயா வேடிக்கை பார்க்கலாம்.
நம் வருத்தமெல்லாம் தொண்டர்களை நினைத்து தான். 3 மாதமாக அ.தி.மு.க தொண்டர்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் பேசினர் தெரியுமா? அவர்கள் முகத்தில் மீண்டும் கரி பூசப்பட்டது. "சசியை சேர்த்தாச்சு; ஆனா சொந்த காரர்கள் கூட டூ" என்றால் "யாருடன் பேசுவது; யாருடன் பேச கூடாது" என மண்டையை பிய்த்து கொள்வார்கள் கொஞ்ச நாளைக்கு.
"சசி வெளியேறினார்; இனி கட்சிக்கு நல்லது தான் நடக்கும்" என மொட்டை போட்டவர்கள் தலையில் முடி முளைக்கும் முன் மீண்டும் மொட்டை அடிக்கப்பட்டுள்ளது.
அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா !
பேஸ்புக் கிறுக்கல்கள்
வண்டியை சர்விஸ் குடுத்து வாங்கும் போது சும்மா தக தக தகன்னு மின்னும். "தினம் துடைக்கணும், வாரம் ஒரு முறை கழுவணும்; இப்படியே மெயின்டைன் பண்ணனும்" என்கிற உறுதி மொழியை ஒவ்வொரு முறையும் எடுக்கிறேன்.
ரெண்டு நாள் கூட பாலோ பண்ண முடியலை. :((
எனி சேம் பிளட்?
###########
காலைல இந்த IRCTC சைட் கூட போராடுறதுக்கு பதிலா, Unreserved -ல் நின்னுக்கிட்டே வந்துடலாம் போலருக்கு. வெறுப்புத்துறாங்க மை லார்ட்
###########
நண்பர்கள் கிட்டே நிறைய பேசலாம். மனைவி கிட்டே கொஞ்சமா பேசு !! இதை தான் இந்த ப்ளாக் போர்டு சொல்லுது
போர்டை (மட்டும்) Facebook-ல் ஷேர் செய்தமைக்கு நன்றி வெங்கட் நாகராஜ். (மட்டும் என அழுத்தி சொன்னதன் காரணம் வெங்கட் மனைவி கோவை2தில்லியும் நம்ம ப்ளாக் படிப்பதால் தான். போர்டுக்கு மேலே உள்ளதை அவர் சொல்லலீங்க அம்மணி :))
ஏப்ரல் பூல்
இந்த வருட ஏப்ரல் 1 எப்படி போனது என சிறு குறிப்பு:
மனைவியை சுவீட் பாக்சை காலி செய்து, அதில் கல் போட்டு மூடி வைத்து ஏமாற்றினேன். பெண்ணையும் இதே மாதிரி வேறு ஒரு ஸ்டைலில் ஏமாற்றியாச்சு ! நண்பர்களுக்கு " 3 படம் பார்த்தேன், அருமை அவசியம் பாருங்கள் " என எஸ்.எம்.எஸ் அனுப்ப, ஞாயிறானதால், " டேய் பாத்துட்டியா? நல்லா இருக்கா? இன்னிக்கு போகலாம்னு இருக்கேன்" என ரெண்டு மூணு போன் வந்துடுச்சு. கொஞ்ச நேரம் ஆமாம் படம் சூப்பர் என சொல்லிட்டு அப்புறமா ஏப்ரல் பூல் என சொல்லி, படம் பற்றி இணையத்தில் வந்த விமர்சனங்கள் சொன்னேன். போன் பண்ணாம எஸ்.எம்.எஸ் மட்டும் பார்த்துட்டு படத்துக்கு யாராவது போய் ஏமாந்தாங்களா தெரியலை !

பலரிடமும் தப்பி ஜாக்கிரதையாய் இருந்த போதும் பெண் தான் என்னை ஏப்ரல் பூல் ஆக்கி விட்டாள் .
கஸ்டமர் கேர் காமெடி
செல்போன் கஸ்டமர் கேர்களுக்கு கால் செய்து கலாய்க்கும் ஒரு கூட்டமே இருக்கு. அதில் செம சிரிப்பான சில பேச்சுகள் பல வடிவிலும் வெளி வருகிறது. இந்த ஏர்சல் காமெடி சில வருடங்களுக்கு முன் வந்தது. இது வரை கேட்கா விடில் கேட்டு மனம் விட்டு சிரியுங்கள் :
சில துளிகள் :
"சார் கொஞ்ச நாளா எனக்கு காலே வர மாட்டேங்குது. வர்ற காலையெல்லாம் எனக்கு மாத்தி விடுறீங்களா?"
"எவனோ லைன்ல ஏறி உக்காந்துருக்கான் .."
"இன்கமிங்க்னா? இன்கமிங்க்னு ஒருத்தன் இருக்கானா? அவன் தான் கால் வராம பிரச்சனை பண்றானா?"
"இது ஒரு விதமான செய்வினை மாதிரின்னு நினைக்கிறேன்"
"நேத்து போறா சரக்கு அடிச்சிட்டு .....போங்க சார் ஒரே சங்கடமா இருக்கு"
"கம்பிளைன்ட் வேண்டாம். கம்பிளைன்ட் வேண்டாம். நம்ம யாரையும் கஷ்டபடுத்த கூடாது"
விகடன் பெண்கள் தின கட்டுரை - After Effect - 1
பெண்கள் தினத்துக்கு விகடனில் கட்டுரை வந்த பின் நடந்த சில நிகழ்வுகளை உங்களுடன் பகிர தவறி விட்டேன். " Better late than never" என இப்போது....
இந்த கட்டுரையில் ACS Institute -ஐ சேர்ந்த திருமதி. சாரா அவர்கள் பற்றி இருந்தது அல்லவா? இது ACS நண்பர்கள் வட்டத்தில் தெரிந்து, இத்தகவலை எங்களுக்கென இருக்கும் ஒரு குருப் மெயிலில் போட்டு விட்டனர். இதனால் புத்தகம் வெளியான அன்று மட்டும் எழுபதுக்கும் மேற்பட்ட ACS நண்பர்கள் எனக்கு மெயில் அனுப்பி மகிழ்ச்சியை தெரிவித்தனர். அனைவருக்கும் திருமதி. சாரா பற்றி எழுதியதில் தான் மிக சந்தோஷம். அவர் எங்கள் அனைவருக்கும் பல ஆண்டுகளாக தெரிந்த ஆசிரியை போன்றவர். எனவே அனைவரும் தங்களை பற்றி எழுதிய மாதிரி மகிழ்ந்தனர். திருமதி. சாராவுக்கே ஐம்பதுக்கும் மேற்பட்டோர் போன் செய்து விட்டனராம். அன்று மாலை பேசியவர் "போன் பேசி மாளலை மோகன். இன்னிக்கு வேலையே செய்ய முடியலை" என சந்தோஷமாக அலுத்து கொண்டார்.
ACS நண்பர்களுக்கு நான் ப்ளாக் எழுதுவது இது வரை தெரியாது. ப்ளாக் பார்த்துவிட்டு அவர்களுக்கு செம ஆச்சரியம் !
ACS Institute நடத்தும் அனைத்து மீட்டிங்குகளுக்கும் வருபவன் என என்னை பல நண்பர்கள் கிண்டல் அடிப்பார்கள். மேலும் அங்கு நான் செமினாரெல்லாம் எடுக்கும் போது "எப்படிப்பா இதுக்கெல்லாம் நேரமிருக்கு?" என்பர்.அவர்களுக்கு நம்ம ப்ளாக் பார்த்ததும் தலை சுத்திடுச்சு ! மீண்டும் அதே கேள்வி தான்: "எப்படிப்பா இதுக்கெல்லாம் நேரமிருக்கு?"
என்னத்த சொல்ல ! "Interest makes the difference !!"அம்புட்டு தேன் !
விகடன் பெண்கள் தின கட்டுரை - After Effect - 2
நம்ம ஹவுஸ் பாஸ் செய்ததையும்/ சொன்னதையும் சொல்லணும். விகடன் கட்டுரை வந்த அன்று நான் செம குஷி மூடில் இருந்ததால், பெண்கள் தினம் -ஷாப்பிங் போகலாம் என அழைத்து போய் சில பல ஆயிரங்களை மனைவியும் மகளும் சூறையாடினர். விகடனில் கட்டுரை வந்ததுக்கு வருந்தியது அப்போது தான் :)) பின் தளப்பாகட்டியில் கட்டு கட்டினர்.
எல்லாம் முடிச்சிட்டு மேடம் கேட்டார்: " பெண்களை கிண்டல் பண்ணியும் எழுதுறீங்க. ஆஹா ஓஹோன்னு பாராட்டி, பெண்கள் மாதிரி வருமான்னு இன்னிக்கு எழுதுறீங்க . இது ரெண்டில் எது உண்மை?"
அடேங்கப்பா ! மனைவியை "மனசாட்சி"ன்னு சும்மாவா சொன்னாங்க? என யோசிக்கும் போதே
" என்ன பதிலை காணும்?"
"ரெண்டுமே உண்மை தான் "
"அதெப்படி ரெண்டும் உண்மையாகும்"
"கிண்டல் பண்ணுவது உரிமையில் சொல்றது. இப்போ எழுதினது சீரியஸா எழுதினது. இப்ப எழுதினது நிஜம் தான்"
பைனல் கிக் : " பெண்கள் தினம்னு நிறைய ladies பத்தி எழுதுனீங்க. என்னை பத்தி எதுவுமே எழுதலையே???"
மறுபடியும் முதல்லேந்தா? ஞே !!! :))
:-)
ReplyDelete/என்னை பத்தி எதுவுமே எழுதலையே???/
ReplyDeleteசரியாகதான் கேட்டிருக்கிறார்கள்:)!
! சிவகுமார் ! has left a new comment on your post "வானவில் 82: ஐ.பி. எல் துவக்க விழாவும் -ஜெ-சசியும்":
ReplyDeleteஎப்படியோ..ஏப்ரல் ஒன்றாம் தேதி நீங்கள் ஏமாந்ததில் சந்தோஷம்தான்!!
//மாதவா.. நீ திட்டாட்டி நல்லாவே இல்லை; நல்லா திட்டுப்பா) //
ReplyDeleteஇதோ இப்பவே.. கூகிலாண்டவருகிட்ட கேட்டு..
நாலஞ்சு பாஷையில திட்டுற வார்த்தைகள தெரிஞ்சிக்கறேன்..
பல வண்ணப்பதிவு!
ReplyDeleteஇப்படி எக்கச்சக்கமா எழுதினா ஒவ்வொன்றைப் படித்து முடிக்கும் நிலையிலும் அதைப் பற்றி தோன்றும் சிந்தனை அடுத்ததைப் படித்ததும் அடுத்த கருத்துக்குத் தாவி விடும் அதே நேரம் சில விஷயங்களுக்கு நமக்கு ஏதும் தோண மாட்டேங்குதா...அப்போ அடுத்த விசயத்துல எதாவது தேறும்னு நினைச்சு அதையும் படிஹ்ததும், இதற்கு பதில் சொல்லி கமெண்ட் போடறத்துக்கு பதிலா முதல் விஷயத்துக்கே கமெண்ட் செய்து விடலாம் என்று முடிவு செய்து மறுபடி முதல் விஷயத்தி ஆரம்பித்துப் படிக்கத் தொடங்கி இதற்கு கமெண்ட் போட நினைத்தோமா அடுத்ததர்கா என்று குழம்பி அடுத்ததை மறுபடிப் படிக்கத் தொடங்கும்போது தோன்றியது என்னவென்றால் 'இப்படி எக்கச்சக்கமா எழுதினா ஒவ்வொன்றைப் படித்து முடிக்கும் நிலையிலும் அதைப் பற்றி...
ReplyDeleteஐ.பி.எல் நிகழ்ச்சி பார்க்கலை...
ReplyDeleteசூப்பர் சிங்கர்ல நான் கூட நினைத்தேன். ஒரு வேளை சண்டையோன்னு கடைசில ஏமாந்துட்டேன்.....:(
//போர்டுக்கு மேலே உள்ளதை அவர் சொல்லலீங்க அம்மணி :))//
நம்பிட்டேன்.....நம்பிட்டேன்.....:))
கஸ்டமர்கேர் காமெடி தாங்கலை.......சிரிச்சு சிரிச்சு வயித்து வலியே வந்துடும் போல ஆயிடுச்சு.
//பெண்கள் தினம்னு நிறைய ladies பத்தி எழுதுனீங்க. என்னை பத்தி எதுவுமே எழுதலையே???"//
அதானே......அவங்க சொல்றது நியாயம் தானே...... அவங்கள பத்தி தானே முதல்ல எழுதியிருக்கணும்...
நல்லதொரு தொகுப்பு தான் வானவில்.
எல்லா செக்சனும் செம பாஸ். அந்த ஏர்டெல் வீடியோ செம காமெடி. நன்றி.
ReplyDeleteVery interesting rainbow!
ReplyDelete//சூப்பர் சிங்கரில் என்ன அரசியல் நடக்குதுன்னு தெரியலை !//
ReplyDeleteஅதுதான் சூப்பர் சிங்கர்!
சச்சின் பற்றி எழுதும்போது மாதவன் சார் வருவாருன்னா, சூப்பர் சிங்கர் பற்றி எழுதும்போது நான் :))
//அக்கா - அக்கா - அக்காவ் //
எதிர்பார்த்ததுதான் என்பதால் பெரியளவில் ஆச்சரியமில்லை.
இன்னொரு கஸ்டமர் கேர் காமெடி இருக்கு. ஒருத்தர், கஸ்டமர் கேர் அதிகாரியின், அட்ரஸ் கேட்பார். ஏனென்றால், அந்த அதிகாரி பேசும் விதம் இவருக்கு பிடித்துவிட்டதாம். வீட்டிற்கு பிரியாணி பார்சல் அனுப்புகிறேன் என்று சொல்வார் :)
// " பெண்கள் தினம்னு நிறைய ladies பத்தி எழுதுனீங்க. என்னை பத்தி எதுவுமே எழுதலையே???"//
மிஸஸ்.அய்யாசாமியின் கவனத்திற்கு :
அவர் அனுஷ்கா பற்றி எழுதுவார், அஞ்சலி பற்றி எழுதுவார், கத்ரினா கைஃப் பற்றி எழுதுவார், கரீனா கபூர் பற்றி எழுதுவார், அமலா பால் பற்றி எழுதுவார், பிந்து மாதவி பற்றி எழுதுவார்...அதெல்லாம் நீங்க கண்டுக்கப்படாது. #நாங்களும் பத்தவெப்போம்ல :))
நன்றி ஷர்புதீன்
ReplyDelete***
ராமலக்ஷ்மி said...
ReplyDelete/என்னை பத்தி எதுவுமே எழுதலையே???/
சரியாகதான் கேட்டிருக்கிறார்கள்:)!
**
நீங்க வேற ! என்னை பத்தி எதுவும் எழுத கூடாது என Standing instruction தந்ததே அவங்க தான். முழுக்க கடை பிடிக்காமல் அவ்வபோது மீறுவதுண்டு. Mrsஅய்யாசாமி என்கிற பார்வையில்
சிவா: நன்றி உங்களால் முடியாதது என் பெண் செய்துட்டாள் இல்லையா?
ReplyDeleteMadhavan Srinivasagopalan said...
ReplyDelete//மாதவா.. நீ திட்டாட்டி நல்லாவே இல்லை; நல்லா திட்டுப்பா) //
இதோ இப்பவே.. கூகிலாண்டவருகிட்ட கேட்டு..
நாலஞ்சு பாஷையில திட்டுற வார்த்தைகள தெரிஞ்சிக்கறேன்..
***
என்ன மாதவா.. வர்றேன் என சொல்லிட்டு அப்புறம் ஆளையே காணும் :))
சென்னை பித்தன் said...
ReplyDeleteபல வண்ணப்பதிவு!
***
நன்றி சார்
ஸ்ரீராம் உங்கள் கமன்ட் மிக ரசித்தேன். :))
ReplyDeleteOn a serious note, வெவ்வேறு பகுதி பற்றி விமர்சிப்போர் உண்டு. ரகு மற்றும் கோவை2தில்லி இதே பதிவுக்கு போட்டுள்ள கமண்டுகளை பாருங்கள்
கோவை2தில்லி Said:
ReplyDelete// கஸ்டமர்கேர் காமெடி தாங்கலை.......சிரிச்சு சிரிச்சு வயித்து வலியே வந்துடும் போல ஆயிடுச்சு.//
ஆமாங்க எனக்கும் எப்போ கேட்டாலும் செம சிரிப்பு வரும் !
பெண்கள் பெண்களை தான் சப்போர்ட் செய்றீங்க ரைட்டு !
ஹாலிவுட்ரசிகன் said...
ReplyDeleteஎல்லா செக்சனும் செம பாஸ். அந்த ஏர்டெல் வீடியோ செம காமெடி. நன்றி.
***
மிக மகிழ்ச்சி நன்றி ஹாலிவுட்ரசிகன்
middleclassmadhavi said...
ReplyDeleteVery interesting rainbow!
*******
நன்றி மாதவி
ரகு: ஒரு ஆளை சொன்னால் தான் பிரச்சனை. பொசசிவ் நெஸ்சால் கோபம் வரும். நீங்க சொன்னது பல பேரை. அதனால் "திருத்தவே முடியாது" என சொல்லிட்டு விட்டுடுவாங்க
ReplyDeleteவிரிவான கமண்ட்டுக்கு நன்றி
ம்ம்ம்.. நம்மள வைச்சு காமெடி.... நல்லது மோகன்! :))
ReplyDeleteஎன்ற அம்மணி கிட்ட போட்டுக் கொடுத்ததுக்கு ஒரு நன்றி! [அட ஆமாங்கறேன்!]
வானவில்... வண்ணமயமாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி மோகன்.
// ரகு மற்றும் கோவை2தில்லி இதே பதிவுக்கு போட்டுள்ள கமண்டுகளை பாருங்கள்//
ReplyDeleteமுன்னரே படித்து விட்டேன்... சும்மா ஒரு சுவாரஸ்யத்துக்குத்தான் அபபடி பின்னூட்டமிட்டேன்!!
சுவராசியமா வந்திருக்குங்கோ...
ReplyDelete