Tuesday, October 4, 2011

வானவில்: எங்கேயும் எப்போதும்: வேலாயுதம் பாட்டு

பார்த்த படம்: எங்கேயும் எப்போதும் 

பலரும் பாராட்டி விட்டாலும் என் கருத்தை சுருக்கமாகவாவது பதிவு செய்ய வேண்டும். 

இந்த படம் ரொம்பவும் பிடிக்க முக்கிய காரணம் இதன் ஒரிஜினாலிட்டி. தெய்வ திருமகள், முரண் என திருடி படமெடுக்கும் இயக்குனர்களுக்கு நடுவில், நம் நாட்டில், வாழ்வில் அடிக்கடி நடக்கும் விஷயத்திலிருந்தே கதை அமைத்தமைக்கு இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

விபத்து என்பதை குறித்தே எல்லோரும் பேசுகிறார்கள். படத்தை முதல் இரு நாட்களுக்குள் பார்க்க நினைத்த நான் கூட அதனை தள்ளி போட காரணம் ஒரே அழுகையாய் இருக்குமோ என்று தான். ஆனால் அந்த கடைசி காட்சிகள் தவிர மற்றவற்றில் சோகம் இல்லை. செம செம சுவாரஸ்யமாக ரசிக்கும் படி உள்ளது படம்.

படத்தில் எனக்கு மிக பிடித்த கேரக்டர் ஜெய்யுடையது தான். அவர் உறுப்பு தானம் செய்கிறார் என்பதால் அல்ல. நிஜத்தில் இப்படி எத்தனையோ ஆண்கள் பெண்களுக்கு அடங்கி போகிறார்கள். (.க்கும்...) இதனை சுவாரஸ்யமாக
காட்சிப்படுத்தியதால் தான் அந்த கேரக்டர் மிக பிடித்தது.

ஹீரோயின்கள் அஞ்சலி மற்றும் அனன்யா: அழகிலும் சரி சொந்த குரலில் பேசி நடிப்பதிலும் சரி.. அட்டகாசம் !

புது இசை அமைப்பாளர் மூன்று பாட்டுகள் அற்புதமாக போட்டுள்ளார். பின்னணி இசையும் கூட அருமை. நிச்சயம் நல்வரவு.

இந்த வருடத்தின் சிறந்த தமிழ் படங்களில் முதல் சில இடங்களுக்குள்.. எங்கேயும்.. எப்போதும்.

சம்பவம்: ஆண்கள் ஸ்பெஷல்

ஆண்களுக்கு சில நேரம் எந்த இடத்தில் என்ன பேசுவதென்றே தெரிவதில்லை. சமீபத்தில் நண்பரொருவர் வீட்டு க்ரகப்ரவேசம் சென்றேன். அவரது இன்னொரு நண்பர் மனைவி, கை குழந்தையுடன் உள்ளே வந்தார். அவரை பார்த்ததும் நம் நண்பர் சொன்னது: "வாடா; ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் நீ வந்தது. நான் பத்திரிக்கையும் அனுப்பலை. போனும் பண்ணி பேசலை. மெயில் மட்டும் தான் அனுப்ப முடிஞ்சுது. ஆனா நீ கரக்டா வந்துட்ட" இதை கேட்கும் போது புது நண்பர் மனைவியின் முகத்தை பாக்கணுமே !" யோவ். .பத்திரிகை வராத பங்க்ஷனுக்கு தான் என்னையும், கை குழந்தையும் இழுத்துட்டு வந்தியா? " என்பது போல் இருந்தது. நண்பரிடம் தனியா சொன்னால் பரவாயில்லை ! அவர் மனைவி முன்பா சொல்லணும் ? இதில் இன்னொரு பியூட்டி. இப்படி சொன்னதை அவர் மனைவியும் கேட்டுட்டு தான் இருந்தார் "ஏன் தான் இப்படி விவஸ்தை இல்லாம பேசுறீங்களோ?" என அவருக்கும் அப்புறம் மொத்து விழுந்திருக்கும் ! இப்ப இந்த பாராவின் முதல் வரியை படிங்க. கரக்டு தானே?

ரசித்த கவிதை

மறுமுறை
நன்றி தெரிவிக்கும் பொருட்டு
நீட்டப்படும் கைகளை
நன்றாகவே பற்றிக்
குலுக்கலாம் நீங்கள்
மறுமுறை வாய்க்காமலே
மறுதலிக்கப்படலாம்
மலர்ந்த முகத்தோடு பிரியும்
மற்றொரு சந்திப்பு.

               - செல்வராஜ் ஜெகதீசன்

நாட்டி கார்னர்

ஒரு நாள் அனைவருக்கும் தும்மல் ஆக உள்ளதே..நாட்டி உடலில் இருந்து பறக்கும் இறகுகளால் இருக்குமோ என ஹாலில் இருந்து வேறு அறைக்கு மாற்றினோம். அங்கு மாற்றியதும், ஆட்கள் இல்லையே என கூண்டை விட்டும், அந்த அறையை விட்டும் வெளியே வந்து விட்டது. பொதுவாய் நாட்டி தரையில் நடந்து பார்க்காத எங்களுக்கு செம வேடிக்கையாக இருந்தது. அதோடு நாட்டி எங்களை தேடுவதை அறிந்தும் ஆச்சரியம் தான் !! மெதுவாய் எங்களை நோக்கி நடந்து வந்தது. அருகில் அமர்ந்து பார்த்தது. படுத்திருந்தவர் மேல் ஏறி நடந்தது. ஹால் முழுக்க நடந்து அதன் கூண்டு வழக்கமாய் இருக்கும் இடங்களை போய் போய் பார்த்தது. கூண்டை மறுபடி ஹாலுக்கே கொண்டு வந்தும் கூட இரவு தூங்கும் போது தான் கூண்டுக்குள் சென்றது !

வேலாயுதம் : ரத்தத்தின் ரத்தமே பாட்டு

வேலாயுதம் படத்தின் ரத்தத்தின் ரத்தமே பாடல் ஆரம்பத்தில் கேட்கும் போதெல்லாம் "வழக்கமான விஜய் ஸ்டைல் பாட்டு" என்று சற்று பிடிக்காமல் இருந்தது. ஆனால் அப்புறம் அந்த பாட்டுக்கு வேறு ஒரு கோணம் புரிந்தது. ஆரம்பத்தில் உள்ள சில வரிகளை ஒதுக்கி விட்டு பார்த்தால், அது தந்தை- மகள் உறவுக்கு கூட பொருந்துகிற பாடல் தான் ! இந்த கோணத்தில் கேட்க ஆரம்பித்த பிறகு, அந்த பாடல் பிடிக்க ஆரம்பித்து விட்டது. இது தவிர இப்போது  வேலாயுதத்தில் ஓரளவு பிடிக்கிற பாட்டு, டிபிக்கல் விஜய் பாட்டு என்றாலும் "சில்லாக்ஸ் ..சில்லாக்ஸ்" தான் ! மற்றவை கேட்க கேட்க ஒரு வேளை பிடிக்கலாம்!

ஆனந்த் எஸ்.எம்.எஸ் கார்னர் 

A seed while growing makes no sound. A tree when falling makes huge noise. Destruction shouts. Creation is quiet. Be quiet and achive great. 

தேன்குழலும் அய்யாசாமியும் 

ஒரு ரூபாய்க்கு கடைகளில் விற்கும் தேன்குழல் சாப்பிட்டிருக்கிறீர்களா? ரோஸ் கலரில் உருண்டையாக, உப்பலாக இருக்கும். எடுத்து வாய்க்குள் போட்டால் சாறு இனிப்பாக உள்ளிறங்கும். "ஒரு ரூபாய்க்கு என்ன குவாலிட்டியா இருக்கும்? பொண்ணுக்கு ஒத்துக்காது " என்ற லாஜிக்கில் அநேகமா வீட்டுக்கு தேன்குழல் வாங்க மாட்டார் அய்யாசாமி !ஆனாலும் ஒவ்வொரு முறை வீட்டுக்கருகிலுள்ள கடைக்கு செல்லும் போதும் தவறாமல் நடக்கும் சம்பவத்தை சொல்கிறேன்.

கடைக்காரர் பொருட்களை எடுத்து கொண்டிருப்பார். அய்யாசாமியோ அந்த நேரம் தேன்குழல் இருக்கும் பெரிய பாட்டிலினுள் நன்கு உற்று பார்த்து பெரிய தேன் குழலாக தேடி எடுப்பார். மேலே தூக்கி போட்டு வாய்க்குள் கேட்ச் பிடித்து, நின்று நிதானமாய் மென்று  சாப்பிடுவார். "என்னய்யா இந்த ஆளு சின்ன புள்ள மாதிரி இருக்கானே" என கடைக்காரர் நினைப்பாரே என அய்யாசாமி கவலைப்படுவதேயில்லை. :)) 

16 comments:

  1. இதில் பல விஷயங்கள் ரொம்ப யதார்த்தத்தோடு எழுதப்பட்டுள்ளது.
    நன்றி.

    ReplyDelete
  2. விஜய் பாட்டு வரும்போதெல்லாம் ஓரிரு முறை கேட்டுவிட்டு நல்லாஇல்லைன்னு சொல்வாங்க.. திரையில் விஜயோடு பார்த்து ஹிட் ஆனபின் நல்லா தான் இருக்குன்னு சொல்வாங்க. இதத்தான் நானும் ரொம்ப நாளா சொல்ரேன் :))

    இந்த படத்துல நீங்க சொன்ன 2 பாட்ட விட மாயம் செய்தாயோ தான் டாப் ஹிட் ஆகும்ன்னு நான் ஃபீல் பண்றேன்.. பார்ப்போம் :)

    ReplyDelete
  3. Super!

    We call that as 'ThEn mittai'!

    ReplyDelete
  4. \\நிஜத்தில் இப்படி எத்தனையோ ஆண்கள் பெண்களுக்கு அடங்கி போகிறார்கள்\\

    எல்லோருமே என்றே சொல்வேன்:-)

    அடங்கி எல்லாம் போகவில்லை. அஞ்சலி சொல்லும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்கிறார் என்றுதான் நான் இதைப் பார்க்கிறேன். யாருப்பா அது கீழே விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலைன்னு சொல்றது:-))

    \\புது இசை அமைப்பாளர் மூன்று பாட்டுகள் அற்புதமாக போட்டுள்ளார். பின்னணி இசையும் கூட அருமை. நிச்சயம் நல்வரவு.\\

    ஒரு பாட்டும் பாடி இருக்காரே (மாசமா). அதையும் சொல்லுங்க:-)

    உன் பேரே தெரியாது பாடல் வரிகளும், படமாக்கப்ட்ட விதமும் கூட எனக்கு நிறையப் பிடித்திருந்தன.

    \\இந்த வருடத்தின் சிறந்த தமிழ் படங்களில் முதல் சில இடங்களுக்குள்.. எங்கேயும்.. எப்போதும்.\\

    இந்தப் படத்துக்கும் ஆடுகளத்திற்கும் தான் போட்டி பலமாக இருக்கும்.

    \\ middleclassmadhavi said...
    Super!

    We call that as 'ThEn mittai'!\\

    நாங்களும் தேன் மிட்டாய்னுதான் சொல்வோம்:-)

    ReplyDelete
  5. //ஆண்களுக்கு சில நேரம் எந்த இடத்தில் என்ன பேசுவதென்றே தெரிவதில்லை//

    மிகக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்!! :-(((((










    ”சில நேரம்” மட்டுமே என்று கூறுவதைத்தான்.... :-))))

    ReplyDelete
  6. //ஆண்களுக்கு சில நேரம் எந்த இடத்தில் என்ன பேசுவதென்றே தெரிவதில்லை.//

    நான் அங்கு இருந்திருந்தால் பத்திரிக்கை மேட்டரை மேலும் பற்ற வைத்து ஆக்கபூர்வமாக எதையாவது செய்திருப்பேன்.

    ReplyDelete
  7. // "என்னய்யா இந்த ஆளு சின்ன புள்ள மாதிரி இருக்கானே" என கடைக்காரர் நினைப்பாரே என அய்யாசாமி கவலைப்படுவதேயில்லை. :)) //

    அவ்வப்போது பால்யம் திரும்பி வருவது இயல்புதானே.... :)

    ReplyDelete
  8. எனக்கும் "எங்கேயும் எப்போதும்..." பிடித்திருந்தது. மிக எளிமையாக, எதார்த்தமாக செல்கிறது கதை. மெகா ஸ்டார்கள் இல்லாததால் மிகவும் இயல்பாகவும் இருந்தது.

    //நிஜத்தில் இப்படி எத்தனையோ ஆண்கள் பெண்களுக்கு அடங்கி போகிறார்கள். (.க்கும்...) //

    -எத்தனையோ ஆண்கள் அல்ல - திருத்திக்கொள்ளுங்கள். "அத்தனை ஆண்களும்" பெண்களுக்கு அடங்கி போகிறார்கள்.

    ReplyDelete
  9. எங்கேயும் எப்போதும்..என‌க்கும் ரொம்ப‌ பிடித்திருந்த‌து. நீங்க‌ள் சொன்ன‌து போல் இவ்வ‌ருட‌த்தின் மிக‌ச்சிற‌ந்த‌ ப‌ட‌ங்க‌ளில் இதுவும் ஒன்று.

    // நிஜத்தில் இப்படி எத்தனையோ ஆண்கள் பெண்களுக்கு அடங்கி போகிறார்கள். (.க்கும்...) //

    ஹாஹ்ஹா, ர‌சித்து வாசித்தேன் :))

    ReplyDelete
  10. naughty s incident,once again a reminder of the intrinsic intelligence in all birds and animals. u people r lucky to witness that.
    thenmittai is my favourite too.when my parents applied for a house loan(for our present house,back in 89)seems i told them that i will also apply loan in bank to get thenmuttaai and kammarkattu...they did nt allow us to eat those items like how u do for your girl now.however,now i spend a lot(?) to get those itms here.

    ReplyDelete
  11. உருண்டையாக = Spherical shaped, குழல் = Cylindrical shaped

    something wrong, ....!!

    ReplyDelete
  12. பட விமர்சனம் அருமை.எஸ்.எம் எஸ். கார்னர் வரிகள் கலக்கலாக இருக்கு.

    ReplyDelete
  13. //தேன்குழலும்//

    முதலில் என்னவென்று தெரியாமல் முழித்தேன். பிறகு அது "தேன் மிட்டாய்" ஆகத்தான் இருக்கும் என தோன்றியது. தேன் மிட்டாயை விரும்பாத சிறு குழந்தைகள் யாரும் இருக்க முடியுமா?

    தேன் மிட்டாய் என்றவுடன் என் பள்ளித்தோழன் ஒருவனின் நியாபகம் வருகிறது. ஆம், அவன் தினமும் லஞ்ச முடிந்த பிறகு டிபன் பாக்ஸ் முழுவதும் தேன் மிட்டாய்களை நிரப்பி வாங்கி வந்து மாலை வரை காலி செய்து கொண்டிருப்பான்.

    ஆமா இப்ப தே. மி. ஒரு ரூபாயா? நான் ஐந்து காசுக்கு வாங்கி இருக்கிறேன்.

    ReplyDelete
  14. அந்த எஸ்.எம்.எஸ் வாசகம் ரொம்பவும் அருமை!

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. நண்பர்களே, ஒரு வாரம் வெளியூர் சென்றதால் அனைவருக்கும் தனித்தனியே பதில்/ நன்றி சொல்ல வில்லை. அனைவருக்கும் நன்றி !

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...