இந்த படத்திற்கு எவ்வளவு அருமையான பாடல்கள் ஹாரிஸ் ஜெயராஜ் போட்டு தந்தார் ! படம் வெளி வரும் முன்பே பாட்டெல்லாம் சூப்பர் ஹிட். ஆனால் படம்?
இந்த அளவு கூட லூசு தனமாக சினிமா எடுக்க முடியுமா ? ஹீரோ ஜெயம் ரவி- ஹீரோயின் ஹன்சிகா இவர்களை சுற்றியே தான் படம் செல்கிறது. பல பெண்களுடன் படுக்கை வரை செல்லும் ஹீரோவை பார்த்த அடுத்த நொடியில் மனதை பறி கொடுக்கிறார் ஹீரோயின் ! "மணந்தால் இவரை தான் மணப்பேன்" என உறுதி பூண்கிறார் (என்னே லட்சியம் !) ஹீரோவோ இவரையும் "யூஸ் அண்ட் த்ரோவாக" பயன்படுத்த நினைக்கிறார். இதில் தான் படமே நகர்கிறது. மாச கணக்கில் பழகியும் ஹீரோயின் பெயர் ஜெயம் ரவிக்கு தெரியாதாம் ! கடைசியில் ஹீரோ மனம் மாறி அவருக்கு "தெய்வீக காதல்" வரும் போது, நாம் பக்கத்தில் உட்கார்பவரை பிராண்டி கொண்டு இருக்கிறோம். இப்படி படம் முழுதும் ஹீரோ- ஹீரோயின் மட்டுமே வந்தும் அவர்கள் காதல் கொஞ்சம் கூட அழுத்தமில்லாமல் போவது கதாசிரியர் மட்டும் இயக்குனரின் தனி திறமையை காட்டுகிறது.
படத்தில் ரசித்தவை ரெண்டே விஷயங்கள் தான். ஒன்று பாடல்கள்/ அவற்றுக்கான நடனம். அடுத்தது ப்ரான்ஸ் (France ) லொகேஷன் . நாமெல்லாம் அங்கே போக போறோமா என்ன? இது மாதிரி படத்தில் அனைத்து இடங்களையும் பார்த்து ரசித்தால் தான் உண்டு !
சன் டிவி வெளியீடு என்பதால் மிக சீக்கிரம் டிவியில் வந்துடும் ! நீங்க சீடி கூட வாங்கி கஷ்டப்பட வேண்டாம் ! ஜஸ்ட் வெயிட் !
கிரிக்கெட் பக்கம்
சி.எல். டி டோர்னமென்ட் இனிதே முடிந்தது. எனக்கு ஐபிஎல் விட இந்த ஆட்டங்கள் பிடித்திருந்தது. இதற்கு காரணம் ஐபிஎல் ஒன்னரை மாதம் வரை இழுப்பார்கள். இது பத்து நாளில் முடிந்து விட்டது. போலவே ஐபிஎல் இரவு பன்னிரண்டு வரை கூட ஆகும் முடிய. ஆனால் சி.எல். டி ஆட்டங்கள் பதினோரு மணிக்குள் முடிந்து விட்டன. தூக்கம் பாதிக்கலை.
இந்த டோர்னமெண்டில் கடைசி பந்து வரை முடிவு என்ன ஆகுமோ என விறுவிறுப்பாக பல ஆட்டங்கள் இருந்தன சென்னை இவ்வளவு மோசமாக ஆடும் என நினைக்கவே இல்லை. மும்பை வென்றது (இந்திய அணி) சற்று ஆறுதல்.
ரசித்த கவிதை
இரவில் சூரியன்
பூதாகாரமாகத் தோன்றும்
எல்லாப் பிரச்சனைகளும்
கையோடு ஆறுதல் பரிசாக
அழகிய பூ ஒன்றை
ஏந்தியே வருகின்றன.
*
இடர்களைப் பொருட்படுத்தாமல்
இலக்கை நோக்கிப் பயணிப்பவனுக்கு
பகலில் நிலவும் இரவில் சூரியனும்
விழித்தே கிடக்கின்றன.
-ராமலக்ஷ்மி
வீட்டு வரி: சின்ன எச்சரிக்கை !
நீங்கள் சொந்த வீட்டில் இருந்தால், உங்கள் வீட்டுக்காக நீங்க கட்டிய வீட்டு வரி, தண்ணி வரி ரசீதுகளை பத்திரமாக வைத்திருங்கள். கடைசியாக கட்டிய ரசீதின் காப்பி எடுத்து சென்றால் தான், இந்த வருடத்திற்கான வரி கட்ட முடியும். பல நகராட்சி அலுலகங்கள் இன்னும் கணினி மயமாகவில்லை. எனவே நீங்கள் போன வருட ரசீது காண்பித்தால் தான் இந்த வருட வரி போடுவார்கள். இல்லையெனில் நீங்கள் எந்த ரசீது காட்டுகிறீர்களோ, அதன் பின் உள்ள அனைத்து வருடங்களுக்கும் வரி கட்டி தண்டம் அழணும் ! எனக்கு இப்படி ஒரு அனுபவம் ஆனது ! அதனால் தான் இங்கு பகிர்கிறேன் !!
அய்யாசாமி புலம்பல்
"நாம ஒரு கடையில் பூ வாங்கிட்டு, அடுத்த கடையை தாண்டி போகும் போது தான் அங்கே பூ மலராம, நல்ல மொட்டா இருக்கிறது கண்ணில படும். இது பூவுக்கு மட்டுமில்ல, பல தடவை ஏதோ ஒண்ணு வாங்கி முடிச்ச பிறகு தான் அதை விட பெட்டர் சமாசாரம் கண்ணில படுது. இது எனக்கு மட்டுமா? உங்களுக்கும் அதே மாதிரி கதை உண்டா?"
ஜஸ்ட் டயல்
ஜஸ்ட் டயல் சேவை பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்கு மட்டும் இந்த தகவல்.
ஜஸ்ட் டயல் என்கிற நிறுவனம் உங்கள் ஊரில் உங்களுக்கு எந்த நிறுவனம், கடை, தியேட்டர் ஆகியவற்றின் தொலை பேசி எண் மற்றும் முகவரி தேவை என்றாலும் இலவசமாக தகவல் தருகிறார்கள். நீங்கள் சென்னையிலிருந்தால் " 2888 8888" என்கிற எண்ணுக்கு தொலை பேசினால் போதும். உங்கள் மொபைல் எண்ணை பெற்று கொண்டு, உங்களுக்கு தேவையான தொலை பேசி எண் மற்றும் முகவரி அடுத்த ஒரு நிமிடத்திற்குள் அனுப்பி விடுவார்கள். உங்கள் மொபைல் எண் அவர்களிடம் ஸ்டோர் ஆன பின், நீங்கள் அதிலிருந்து கூப்பிட்டால், போனை எடுக்கும் போதே உங்கள் பெயர் சொல்லி அழைத்து, நீங்கள் கேட்ட தகவல் நேரே அனுப்பி விடுவார்கள். நான் அடிக்கடி உபயோகிக்கும் சேவை இது. இவர்கள் இதே தகவல் தங்கள் இணையம் மூலம் தந்தாலும் தொலைபேசியில் பெறுவது மிக எளிதாக உள்ளது.
நாட்டி கார்னர்
நாட்டிக்கு பறக்க வேண்டும் என்று ரொம்பவே ஆசை. ஆனால் தன் பயத்தால் மட்டுமே பறக்காமல் உள்ளது. கூண்டு பெரும்பாலான நேரம் திறந்தே தான் இருக்கும். வேண்டுகிற போது நாட்டி வெளியே வந்து உட்காரும். தனது கூண்டின் மேலே ஓரத்தில் அமர்ந்தவாறு, தனது சிறகுகளை "பட பட" வென அடித்து கொள்ளும். உடலை சற்று தாழ்த்தி கொண்டு இப்படி "பட பட" வென பலமுறை அடித்து பறக்கிற மாதிரி பாவ்லா செய்யும். ஆனால் உள்ளுக்குள் இருக்கும் பயத்தால் தான் பறக்காமல் இருக்கிறது. இது நம்மைத்தான் நினைவூட்டுகிறது. நாம் முன்னேறாமல், அடுத்த கட்டம் போகாமல் இருக்க காரணம் அதற்கான முயற்சிகள் எடுக்காத நாம் தானே?
அறிவிப்பு
சமீபத்தில் எங்க ஊர் நீடாமங்கலம் போய் விட்டு அப்படியே அருகில் நாகூர், வேளாங்கண்ணி சென்று வந்தோம். புகை படங்கள் & வீடியோ தயார் நிலையில் உள்ளது. "கதை வசனம்" தயார் ஆன பின் இரு வார பயண கட்டுரை வெளியாகும் ! எச்சரிக்கை!!
சொத்துவரி பற்றிய அப்டேட்ஸுக்கு நன்றி. ஜஸ்ட் டயலுக்கு போட்டியா இப்ப இண்ணொன்னு ஆரம்பிச்சிருக்காங்க அட்வடைர்ஸ்மெண்ட் பாத்தீங்களா. ஆனா ஜஸ்ட் டயல் பழகிய மேட்டர் என்பதால் இப்ப டெலிபோன் டைரக்டரியெல்லாம் புரட்டறதே இல்லை
ReplyDeleteஜஸ்ட் டயலில் மொபைல் நம்பர் கொடுத்தால் அடிக்கடி ஏதேனும் விளம்பர மேசேஜ் செய்வார்களே(இப்போது எப்படியோ). ஆகையால் லாண்ட் லைனில் நேரடியாகவே எண்ணை வாங்கி விடுவது வழக்கம்.
ReplyDeleteகவிதைப் பகிர்வுக்கு நன்றி.
கடைசியில் விடுத்திருக்கும் புயல் எச்சரிக்கைக்குக் காத்திருக்கிறோம்:)!
ஆஹா! பயணக் கட்டுரை ஆரம்பமாகப் போகுதா...விரைவில் வெளியிடுங்கள்.
ReplyDeleteசொத்து வரி மேட்டர் இங்கியும் அப்படித்தான். பொதுவாவே வீடு சம்பந்தப் பட்ட எல்லா காகிதங்களையும் பத்திரமா கோப்பில் வைத்துக் கொள்வது நல்லது.
ReplyDeleteபுயல் கரையைக் கடக்கக் காத்திருக்கோம். :-)
பூ கதைதான் இங்கேயும் .. நாம வாங்கிய பின்னாடிதான் நம்ம கண்ணுல படும்..:)
ReplyDeleteராமலெக்ஷ்மி கவிதைப் பகிர்வு அருமை:)
நல்ல அலசல்.
ReplyDeleteசொத்துவரி பற்றிய தகவலுக்கு நன்றி.
ஒரு நல்ல பயண கட்டுரையை விரைவில் எதிர்பார்க்கலாம்!
கதம்பம் சுவையாக இருந்தது..
ReplyDeleteசொத்து வரி விஷயம் ரொம்ப முக்கியம்..
எனக்கு அந்தக் கவலை இல்லை.. எனது தந்தையாரிடமிருந்து கற்றது, முக்கியமான எந்த ஒரு ரசீதையும் பத்திரமாக வைக்கும் வழக்கத்தை.
கிளி இயற்கையாக / சுதந்திரமாக வளர்ந்திருந்தால் தன்னால் ஆகக் கூடிய விஷயங்களை எளிதாக கற்றிருக்கும்..
// இது பூவுக்கு மட்டுமில்ல //
திருமணம் கூட இப்படித்தானோ ?
சொத்து வரி விஷயம் பற்றி மனதில் தோன்றியது....
ReplyDeleteஉங்களிடம் போன வருடம் பெற்ற பணத்திற்கான அத்தாட்சி அவர்களுடன் கட்டாயம் இருக்க வேண்டும்.. ஆடிட் செய்திருப்பார்கள்.. ரசீதின் எண் சொன்னால் அவர்கள் சரி பார்க்கலாம்.
அந்தோ பரிதாபம்.. இந்தியாவில் எவர்தான் தனது பணியினை சரிவரச் செய்கிறார்கள்.. !!
ஜஸ்ட் டயல் சேவை நன்றாகவே உள்ளது,
ReplyDeleteஅய்யாசாமி கதை தான் இங்கும்!! :-)
பயணக் கட்டுரைக்கு வெயிட்டிங்!
சொத்து வரி என்று தலைப்பைப் பார்த்ததும் wealth tax பற்றி எழுதி இருக்கிறீர்கள் என்று நினைத்துவிட்டேன். வீட்டு வரி என்று மாற்றிவிடுங்கள் (முடிந்தால் / தேவைப்பட்டால்)
ReplyDelete//சன் டிவி வெளியீடு என்பதால் மிக சீக்கிரம் டிவியில் வந்துடும் ! நீங்க சீடி கூட வாங்கி கஷ்டப்பட வேண்டாம் !//
ReplyDeleteநீங்க எழுதியிருக்கற கதையை படிச்சாலே இது ஒரு அமரகாவியம்னு தெரியுது. இதை டிவியில வேற பார்ப்போமா என்ன? ;))
மும்பை ஜெயிச்சதில் மகிழ்ச்சி..விடுங்க நாமளே எத்தனை தடவைதான் ஜெயிச்சிட்டிருக்கறது? ஒரு தோல்வி தேவைதான். அப்போதான் அடுத்து கிடைக்கும் வெற்றி சுவாரஸ்யத்தை தரும். இல்லன்னா போரடிச்சுடும்
kudos for the poem.
ReplyDelete(deep)condolences for watching engeyum kaadhal.
appreciate your views on naughty s lack of initiation.
to ayyasaamy:same here.
ஜஸ்ட் டயல்... நல்ல தகவல்...
ReplyDeleteபயணம் பற்றிய கட்டுரைகள் - எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்...
வீட்டு வரி பற்றிய தகவல், ஜஸ்ட் டயல், கவிதை, பூ, மற்றும் நாட்டி என்று அனைத்தும் நன்று.
ReplyDeleteஎங்கள் ஊரைப் பற்றி தாங்கள் சொல்ல வரும் செய்திக்காக காத்திருக்கிறேன். இருந்தும் அந்த 'எச்சரிக்கை' அங்கு செல்பவர்களுக்காக இருந்துவிடக்கூடாது என்று மனது நினைக்கிறது. ஏனெனில், எங்கள் ஊரைப் பற்றி நண்பர்களிடம் நான் அதிகளவில் பெருமை பேசியுள்ளேன். கொஞ்சம் கருனைக் காட்டுங்கள் சார்:-))))!
நன்றி புதுகை தென்றல். ஜஸ்ட் டயளுக்கு போட்டியாக மற்றொன்றா? தெரியலையே. முடிந்தால் எது என சொல்லுங்கள்
ReplyDelete**
நன்றிக்கு நன்றி ராமலட்சுமி. சென்னை ஜஸ்ட் டயலில் அப்படி விளம்பரம் ஏதும் வருவதில்லை
**
கோவை டு தில்லி மேடம்: வலை சர ஆசிரியரின் வருகைக்கு நன்றி
**
//அமைதிச்சாரல் said...
பொதுவாவே வீடு சம்பந்தப் பட்ட எல்லா காகிதங்களையும் பத்திரமா கோப்பில் வைத்துக் கொள்வது நல்லது.//
சரியா சொன்னீங்க. நன்றி
தேனம்மை லெக்ஷ்மணன் said...
ReplyDeleteபூ கதைதான் இங்கேயும் .. நாம வாங்கிய பின்னாடிதான் நம்ம கண்ணுல படும்..:)
அட அதிசயமா நம்ம ப்ளாக் பக்கம்! நன்றி !! பெரிய ஆளுங்களே பூவில் ஏமாருகிறார்களா? ரைட்டு
**
நன்றி ராம்வி
**
மாதவன். உங்கள் அப்பா நல்ல விஷயங்கள் கற்று தந்திருக்கார்
**
மிடில் கிளாஸ் மாதவி:நீங்களும் அதே போலவா? நிறைய பேர் இப்படி தான் போலருக்கு
**
கோபி:சாரி மாற்றி விடுகிறேன்
ReplyDelete**
கரக்டு தான். நன்றி ரகு
**
டாக்டர் வடிவுக்கரசி: பல பகுதிகளை பற்றி சுருக்கமாக கருத்து சொன்ன விதம் நன்று. நன்றி .
**
வெங்கட்: தொடர் வேலை நடுவே இங்கு வந்து எட்டி பார்த்தமைக்கு நன்றி
**
அமைதி அப்பா: நன்றி எழுதுகிறேன்.