Monday, October 31, 2011

வானவில்: விப்ரோ பிரேம்ஜியும் நிலா ரசிகனும்

சென்னை ஸ்பெஷல் :வேளச்சேரி மெக் டொனால்ட்ஸ்

வேளச்சேரி விஜய நகர் பேருந்து நிலையத்திற்கு சற்று தள்ளி உள்ளது மெக் டொனால்ட்ஸ். எங்கள் பெண் ரொம்ப நாளாக போகணும் என சொல்லி வந்தாள். இப்போது தான் போக முடிந்தது. மெல்லிய சவுண்ட் சிஸ்டத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் ஒலிக்க, வித்யாசமான வடிவில் உள்ள இருக்கைகளில் அமர்ந்து சாப்பிடுவது இனிமையான அனுபவமாக இருந்தது. வெறும் பன், பிஸ்சா போன்ற சமாச்சாரங்கள் எப்படி வயிற்றை நிரப்பும் என தயக்கம் இருந்ததால் தான் இது வரை போகாமல் இருந்தேன். ஆனால் வயிறு நன்கு நிரம்பவே செய்தது. விலை சற்றே கூடுதல் தான் !! ஆனாலும் நாக்கு (இனிய உணவு), காது (ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள்), உடல் (சில்லென ஏசி) அப்புறம் கண் (எப்புடின்னு கேட்காதீங்க; ஹவுஸ் பாஸ் ப்ளாக் படிக்குறாங்க) என எல்லா அவயங்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் மெக் டொனால்ட்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு. இனி அவ்வப்போது போவோம் என நினைக்கிறேன் !

அசீம் பிரேம்ஜி துவங்கும் பள்ளிகள்


விப்ரோ சேர்மன் அசீம் பிரேம்ஜி ஏற்கனவே நிறைய நல்ல விஷயங்களில் ஈடுபட்டுள்ளார். இப்போது இந்தியா முழுதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு இலவச பள்ளிகள் துவக்க உள்ளார். மொத்தம் 1300 பள்ளிகள் !! முழுக்க முழுக்க அவரது சொந்த பணத்தில் துவங்க உள்ள பள்ளிகள் இவை ! அரசு பள்ளிகளுக்கு இவை நல்ல மாற்றாக இருக்கும் என கருதுகிறார்கள். மேலும் இந்த யோசனை வெற்றிகரமாக செயல் பட்டால் இன்னும் பல கார்பரேட் முதலாளிகளும் இவ்வழியை பின் தொடர்வார்கள் என்றும் நம்பலாம். இந்த நல்ல செயலுக்காக அசீம் பிரேம்ஜி அவர்களை மனதார வாழ்த்துவோம் !!

இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் டூர்


இந்தியா இங்கிலாந்தில் செம உதை வாங்கினாலும், இங்கு வந்த அவர்களை வறுத்து எடுத்து விட்டனர். 5 - ௦ 0 என்பது செம ரிசல்ட் இல்ல? ஒரே 20-20 -ல் தோற்றால் கூட, அது பெரிய விஷயம் இல்லை விடுங்க !! அடுத்து வெஸ்ட் இண்டீஸ் சீரிசுக்கு நிறைய இளைஞர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் ஓட்டை டீம் தான். எனவே சீரிஸ் அதிக சுவாரஸ்யமாக இல்லாமல் போகலாம். ஒரே எதிர்பார்ப்பு சச்சினின் நூறாவது செஞ்சுரி! தீபாவளிக்கு வாங்கிய சரங்களில் இன்னும் சில மிச்சமிருக்கு சச்சின் உங்களுக்காக !!

ரசித்த கவிதை


பொம்மைகள் குவித்திருக்கும் அறை

பொம்மைகள் குவித்திருக்கும்
அறைக்குள் அனுமதியின்றி நுழைகிறது
மெளனம்.

ஒவ்வொரு பொம்மையிடமும் ஏதோவொன்றை
தேடுகிறது.
அறையின் மூலையில் அமர்ந்து
சிறிதுநேரம் விசும்புகிறது.
பின்,
பெண்ணாகி வெளியேறுகிறது.

மரித்த குழந்தையின் பொம்மைகளை
வேறெப்படி அணுகுவாள் அவள்? - நிலா ரசிகன்

நாட்டி கார்னர்

நாட்டியின் பல்வேறு செல்ல பெயர்களில் ஒன்று "பச்சை". நாட்டி வெளியே கரும் பச்சையாக இருக்கும். சிறகுகளுக்கு உள்புறம் வெளிர் பச்சை நிறமாக இருக்கும். இந்த வெளிர் பச்சை நிறம் தான் பார்க்க ரொம்ப அழகாக இருக்கும். தன் சிறகுகளை அது நீவி விட்டு கொள்ளும் போது இந்த பச்சை நிறம் நன்றாக தெரியும் !

பார்த்த படம்: வெப்பம்


முடியலை. வலிக்குது. வேணாம். அழுதுடுவேன்

தப்பாய் SMS அனுப்பிய அய்யாசாமி

அய்யாசாமி தினம் மாலை தன் அலுவலகத்தில் ஜிம்முக்கு போவார். (க்கும்) எப்போதாவது போக முடியா விட்டால் ஜிம் மாஸ்டருக்கு "இன்று வரலை.." என மெசேஜ் அனுப்புவார். அப்படி ஒரு முறை மெசேஜ் அனுப்பும் போது ஜிம் மாஸ்டருக்கு அனுப்பாமல் பழக்க தோஷத்தில் தன் ஹவுஸ் பாசுக்கு அனுப்பிட்டார் !

"I am not coming today " என்று மாலை நேரத்தில் Mrs. அய்யா சாமி மெசேஜ் பார்த்ததும், "வழக்கம் போல தானே இன்னிக்கும் காலையில திட்டினோம்; கொஞ்சம் அதிகம் திட்டிடோமோ ? மனுஷன் அப்செட் ஆகிட்டார் போலருக்கே" என அய்யாசாமிக்கு போன் செய்து "ஏங்க கோபமா? வீட்டுக்கு வந்துடுங்க" என சொல்ல, அய்யாசாமி இது தான் சாக்குன்னு "போ... நீ ரொம்ப திட்டிட்டே" என செம பிகு பண்ணிக்கிட்டார். அப்புறம்? அப்புறமென்ன அப்புறம் ? கழுதை கெட்டால் குட்டி சுவரு. அய்யாசாமிக்கு ஆபிஸ் விட்டா வீடு!

14 comments:

  1. //மொத்தம் 130 பள்ளிகள் !! முழுக்க முழுக்க அவரது சொந்த பணத்தில் துவங்க உள்ள பள்ளிகள் இவை !//

    மொத்தம் 1300 பள்ளிகள். அவசரத்தில் ஒரு பூஜ்ஜியத்தை விட்டுவிட்டீர்கள் என்பதை அறிவேன்.

    வாழ்க அசீம் பிரேம்ஜி! இது குறித்து தனிப்பதிவு போடலாம் என்றிருந்தேன். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி.

    ******************


    //தப்பாய் SMS அனுப்பிய அய்யாசாமி//

    மிகவும் நன்று.

    ********************

    நண்பர்களுக்காக....


    பதிவை எழுதி டிராப்ட்-ல் வைத்திருப்போருக்கு - ஓர் எச்சரிக்கை!

    நன்றி.

    ReplyDelete
  2. ஆம் பிரேம்ஜியை கட்டாயம் வாழ்த்த வேண்டும்.


    //அப்புறம்? அப்புறமென்ன அப்புறம் ? கழுதை கெட்டால் குட்டி சுவரு. அய்யாசாமிக்கு ஆபிஸ் விட்டா வீடு!//

    ஹா..ஹா...ஹா...

    ReplyDelete
  3. அமைதி அப்பா: ஆம் மாற்றி விட்டேன் நன்றி

    ReplyDelete
  4. நான் வேளச்சேரியை விட்டு கிளம்புவதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் மெக்டி ஓப்பன் பண்ணாங்க. வீட்டிலிருந்து வாக்கபிள் டிஸ்டென்ஸ். எனக்கு அவர்களின் ஃப்ரைஸ், மெக்பஃப் & ஐஸ்க்ரீம் தவிர வேறெதுவும் பெரிதாக ஈர்க்கவில்லை.

    ஹவுஸ் பாஸ் படிக்கும்போதே இம்புட்டு தைகிரியமா? நல்லதுக்கில்லையே. போட்டுக்கொடுக்கனுமே:))))

    ReplyDelete
  5. அனைத்துப் பகிர்வும் நன்று.

    பச்சையில் ஒரு வகை கிளிப்பச்சை. கிளிப்பச்சைக்குள் பல வகை:)!

    ReplyDelete
  6. அசீம் ப்ரேம்ஜி அவர்களின் இந்த முயற்சி நல்லதோர் முயற்சி... இவரைப் போல பணம் படைத்தவர்கள் பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றை தொடங்கி மக்களுக்கு உதவினால் நல்லது.

    தப்பான எஸ்.எம்.எஸ். - அதன் பிறகு செய்த பிகு... :) ரசித்தேன்...

    நல்ல பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. >>அய்யாசாமி இது தான் சாக்குன்னு "போ... நீ ரொம்ப திட்டிட்டே" என செம பிகு பண்ணிக்கிட்டார்.

    அய்யாசாமியின் குறும்புக்கு ஒரு அளவே இல்லையா :-)

    ReplyDelete
  8. நானும் அதே மெக்டொனால்ட்ஸ் போயிருக்கேன். சில‌ நேர‌ம் வ‌ண்டி பார்க் ப‌ண்ற‌துதான் சிர‌ம‌ம். ம‌த்த‌ப‌டி எனக்கும் ரொம்ப‌ புடிச்சிருந்த‌து.


    விப்ரோ...இன்ஃபோசிஸ், டிசிஎஸ் போன்ற‌வ‌ர்க‌ளும் இதை தொட‌ர்ந்தால் ந‌ன்றாக‌யிருக்கும்

    ச‌ச்சின் 100 - என‌க்கு வேறுவித‌மான‌ எண்ண‌ம். இந்த‌ தொட‌ரில் சராச‌ரியாக‌ 70, 80 அடித்து ந‌ல்ல‌ ஃபார்முக்கு வ‌ந்துவிட‌வேண்டும். டிச‌ம்ப‌ர் ஜ‌ன‌வ‌ரியில் ஆஸ்ட்ரேலியா டூர். அங்கே அடிக்க‌ணும் நூறாவ‌து செஞ்சுரி...அதுல‌ இருக்குங்க‌ த‌னி கிக்!

    அய்யாசாமிகிட்ட‌யிருந்து நிறைய‌ க‌த்துக்க‌லாம் போல‌...மைண்ட்ல‌ வெச்சுக்க‌றேன் ;)

    ReplyDelete
  9. ராம்வி : நன்றி
    **
    வித்யா : ம்.. வீட்டில் பேசுறதை தான் எழுதுறோம் :))
    **
    நன்றி ராம லட்சுமி
    **
    வெங்கட்: ஆம் பிரேம்ஜி போல் பலரும் முன் வந்தால் நன்றாயிருக்கும்
    **

    ReplyDelete
  10. பால ஹனுமான்: இப்போதெல்லாம் (பின்னூட்டத்திலும்) நீங்கள் அடிக்கடி எட்டி பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது
    **
    ரகு: நன்றி ; மெக்டொனால்ட்ஸ் - டூ வீலருக்கு நிறையவே இடம் இருக்குமே? கார் தான் சற்று கஷ்டம் என நினைக்கிறேன். சச்சின் சீக்கிரம் செஞ்சுரி அடிக்கட்டும் நண்பா; ஆஸ்திரேலியா டூர் வரை வெயிட்டிங்கா? மக்கள் பாவம்

    ReplyDelete
  11. மெக் டொனால்ட் பிடிக்காத குழந்தைள் எங்கும் உண்டோ. ஆனால், அடிக்கடி அங்கு சாப்பிடுவது நல்லதல்ல. இங்கு அதை junk food என்று கூறுவார்கள். இருப்பினும் மாதம் ஒரு முறை கண்டிப்பாக மெக் டொனால்ட்ஸ் எங்கள் லிஸ்டில் உண்டு.

    ஒரு சிக்கன் சாட்விட்ச் மீல் (சாண்ட்விச்+பிரெஞ்சு பிரைஸ்+கோக்) சாப்பிட்டால் போதும். வயிறு நிறைந்து விடும். ஆபீசில் தூக்கமும் வராது. விலை 5 to 6 டாலர்கள் இருக்கும்.

    ReplyDelete
  12. pachchai..we want more photos.
    ayyaasaamy s sms:hahaha ohohoho
    our thanks and best wishes for wipro chairman. gud to pay back.
    cricket:sorry no idea.
    mcdonald s: not a big fan of pizzzaas,etc.,etc.,but the children would love them,i suppose. for me nothing like namma oor kuzhi-paniyaaram and dosai-our pizaas!!

    ReplyDelete
  13. அசீம் பிரேம்ஜி எதிலும் வித்தியாசமானவர் தான்...

    பெரும் பணக்காரரான விப்ரோ நிறுவனத் தலைவர் அசீம் பிரேம்ஜி, பகிரங்கமாக... அதுவும் தைரியமாக ஒரு விமர்சனத்தை பத்திரிகையாளர்களுக்கு முன்பாக பெங்களூருவில் வைத்துள்ளார்.

    'எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்க்கமாக ஆலோசித்து, உடனடியாக, துணிச்சலாக முடிவெடுக்கும் தலைமை இல்லாததுதான் மிகப்பெரிய பிரச்னை. அரசியல் தலைமை வலுவாக இருந்தால்தான் நாட்டின் அனைத்துத் துறைகளும் நம்பிக்கையுடன் செயல்பட முடியும். அது இப்போது இல்லை!’ என்கிறார் அசீம் பிரேம்ஜி!

    ReplyDelete
  14. nice premji sir god bless you

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...