இந்த வருடம் வெளியான மற்றொரு அற்புதமான படம் ! ரொம்பவே ரசித்து பார்த்தேன். விமல் அப்பாவி ஆசிரியராக அசத்துகிறார். பழைய பாக்யராஜ் போலவே இவர் எப்போதும் பல்பு வாங்குவது சிரிக்கும் படி உள்ளது. (இதற்காகவே பாக்யராஜை இவருக்கு அப்பாவாக போட்டார்களோ?) ! நடிக்க தெரிந்த புது ஹீரோயின் இனியாவை பார்க்க ஆச்சரியமாக உள்ளது ! முகத்தில் பல்வேறு உணர்வுகளையும் அழகாய் காட்டுகிறார்.சின்மயி பாடிய "சாரை காத்து" பாட்டு மிக இனிமை. குட்டி பசங்க அனைவரும் சிரிக்கவும் நெகிழவும் வைக்கிறார்கள். படிப்பின் அவசியத்தை பொட்டில் அடித்த மாதிரி சொல்கிறது படம்.
இன்றைக்கு இந்த படம் relevant-ஆ என்றால். ஆம் இன்றும் relevant -தான். இன்னும் இந்தியாவில் எழுத படிக்க தெரிந்தோர் 60சதவீதம் பேர் தானே உள்ளனர்? மீதம் 40 சதவீதம் பேர் கல்வி அறிவு இல்லாதோர் தானே? அந்த மக்களுக்கு இந்த படம் சென்று சேர வேண்டும் ! படிப்பினால் உண்டாகும் மாறுதலை அழகாய் காட்டி படத்தை முடிக்கும் போது மிக நிறைவான படம் பார்த்த திருப்தி வருகிறது.
ஒரே நேரத்தில் மனம் விட்டு சிரிக்கவும் நெகிழவும் வைக்கிற படம் ! இந்த படம் நன்கு ஓடாதது நம் ரசனை குறைவையே காட்டுகிறது !
நாட்டி கார்னர்
நாட்டியின் கூண்டுக்குள் சின்னதாய் ஒரு மண் சட்டி உண்டு. இரு பறவைகள் கூண்டுக்குள் இருந்தால், பெண் பறவை சென்று முட்டை இட்டு வைக்க இது வைக்கப்பட்டிருக்கலாம். நம்ம நாட்டி தான் தனியாக உள்ளதே ! பயம் வந்து விட்டால் இந்த மண் பானை மேல் போய் ஏறி கொள்வதை வழக்கமாய் வைத்துள்ளது நாட்டி ! அதன் கூண்டுக்குள் நாம் கை விட்டாலே பானையில் போய் ஏறி கொள்ளும். போலவே பக்கத்து வீட்டு நாய் எங்கள் வீட்டுக்குள் வந்து விட்டால், அது வெளியே போகும் வரை பானை மேல் ஏறிக்கொண்டு இறங்காது . கூண்டிற்குள் உள்ள பானை தான் ரொம்ப பாதுகாப்பான இடம் என நினைத்து கொண்டிருக்கிறது நாட்டி ! (நிற்க. இப்போதெல்லாம் கூண்டின் உள்ளேயே அநேகமாய் போவதில்லை. கூண்டின் மேலேயே தான் அமர்ந்து கொண்டு இருக்கிறது)
ஜாலி போஸ்டர் (புது பகுதி)
ஆனந்த் எஸ்.எம்.எஸ் கார்னர்
If you look for good, you will find good. If you look for bad, you will find bad. In life, you always find what you look for.
ஹாப்பி பர்த்டே டு யு & Same to you
எனது பெண் மற்றும் நண்பன் தேவா இருவருக்கும் ஒரே நாள் பிறந்த நாள். தேவாவை ஏற்கனவே வீடுதிரும்பலில் எழுதிய பல கட்டுரைகள் மூலம் ( சில்க், அன்னா ஹசாரே உண்ணாவிரதம் -நேரடி அனுபவம்) நீங்கள் அறிந்திருப்பீர்கள். தேவா டில்லியில் இருப்பதால் எப்போதும் என் பெண்ணும் தேவாவும் "ஹாப்பி பர்த்டேடு யு" என்றும் " Same to you uncle" என்றும் சொல்லி கொள்வார்கள். அதிசயமாய் இந்த வருடம் பிறந்த நாளான அக்டோபர் 17-அன்று தேவா சென்னையில் இருந்தான் . நேரில் சந்தித்து இருவரையும் ஒன்றாக கேக் வெட்ட வைக்க திட்டமிட்டிருந்தோம். சில காரணங்களால் அது முடியாமல் போனது.
தேவா பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்னதாக (அக்டோபர் 16 ) நானும் தேவாவும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தோம். அது பற்றி தனி பதிவு பின்னர்...
பாடகிகளில் நம்ம தலைவி
பாடகிகளில் எனக்கு ரொம்ப பிடித்தமானவர் ஷ்ரேயா கோஷல். இவர் குரலுக்காக மட்டுமே இவரை பிடிக்கும் என்று சொன்னால் நம்பவா போறீங்க? "ஹீரோயினா நடிங்க" என எத்தனையோ பேர் கெஞ்சியும் கேட்காதவர் இப்போ விளம்பர படத்தில் நடிச்சிருக்கார். இதை பார்த்து ஆறுதல் அடைவோம்
புரட்டாசி மாதம்
ஒரு வழியா புரட்டாசி மாதம் முடிந்தது. புரட்டாசி மாதம் முழுதும் நான்வெஜ் சாப்பிட மாட்டோம். பொதுவா Nonveg வாரம் ஒரு நாள் சாப்பிடுகிற ஆள் தான். அதுவும் மிக விரும்பி எல்லாம் சாப்பிடுவதில்லை. ஆனால் வலுக்கட்டயமா ஒரு மாதம் தள்ளி வைக்கிறப்போ, அதுவும் அந்த ஒரு மாதம் முடிகிறப்போ மறுபடி நான் வெஜ் சாப்பிடும் ஆசை துளிர்க்கிறது. தலப்பாக்கட்டி... We are coming !!
"happy b day to u " this for your daughter. also our wishes for deva sir. when is his next post?
ReplyDeletewe saw your photo with S.Ra in Fb. awaiting the post.
soon naughty will come out of the fear. this is my wish.
awaiting your post on thalappakkatti- travel too. ha ha!
மோகன், என் பிறந்தநாளை குறித்து சொன்னதற்கு நன்றி. பிறந்த நாளுக்கு சந்திக்கமுடியாவிடாலும் முதல் நாள் சந்தித்ததில் மகிழ்ச்சி. நான்கு வருடம் பார்த்து கொள்ளவில்லை எனினும், நாம் சந்தித்தபோது அது தோன்றவேயில்லை, உண்மையில் அது தொலைதொடர்பு புரட்சியின் சாதனை.
ReplyDeleteவடிவுக்கரசி மேடம், வாழ்த்துக்கு நன்றி.
//ஆனந்த் எஸ்.எம்.எஸ் கார்னர்//
ReplyDeleteஅதுல சொல்லிருக்கதை நம்மூர்ல ஒரே வரில சொல்வாங்க: “காமாலைக் கண்ணனுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்”
”அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்”
தங்கள் பெண்ணுக்கும், நண்பருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)!
ReplyDeleteவாழ்த்துக்கள் - பிறந்த நாள் கொண்டாடியர்களுக்கு, பகிர்வுக்கு!
ReplyDeleteவாகை சூடவா விமர்சனம் சுருக்கமாக இருந்தாலும் சிறப்பாக இருந்தது. இங்கு இன்னும் வரவில்லை.
ReplyDeleteஅந்த பனியன் வாசகம் புன்னகையை வரவழைத்தது.
ஷ்ரேயாவின் குரல் ரொம்பவும் இனிமை தான். SAATHIYA என்ற ஹிந்தி படத்தில் அவரின் YE SAATHIYA என்ற பாடலைக் கேட்டதிலிருந்து அவரின் ரசிகை நான்!!
மிக அருமையான படம். சரியாக ஓடவில்லை என்பது வருத்தத்தை தருகிறது.
ReplyDeleteசுவிஸ்ஸிலும், ஆசியிலும் ஆடிப்பாடும் இன்றைய முன்னிலை நடிகர்/நடிகைகளின் காதலை விட செங்கல் சூளைக்கு மத்தியில் இவர்களின் காதல் உண்மையிலேயே உணர்வு பூர்வமாக இருந்தது.
ரோபோவில் ரஜினியின் 100 துப்பாக்கிகளின் அட்டகாசத்தை விட, சண்டையின் போது ஹீரோவை தாக்கும் வில்லனை செங்கல் கல்லால் தாக்கும் சிறுவனின் வீரம் எனக்கு பெரிதாக தெரிந்தது.
மிகவும் ரசித்து பார்த்த இன்னொமொரு படம். நிச்சயம் தேசிய விருதுக்கு தகுதியானது.
நன்றி டாக்டர் வடிவுக்கரசி. நாட்டிக்கு ஓரளவு பயம் குறைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்
ReplyDelete**
தேவா: ஆம் தொடர்ந்து போன் மட்டும் மெயிலில் தொடர்பில் இருப்பதால், அனைத்தையும் இருவரும் போனில் பேசி விடுவதால், நான்கு வருடங்கள் பார்க்காத மாதிரியே தெரிய வில்லை
**
ஹுசைனம்மா:ரைட்டு
**
நன்றி ராமலட்சுமி
**
மாதவி மேடம் :நன்றி
ReplyDelete**
நன்றி மனோ மேடம் ; ஷ்ரேயா உங்களுக்கும் பிடிக்கும் என்பதில் மகிழ்ச்சி
**
ஆதி மனிதன்: ஆம் விருதுக்கு தகுதியான படம் தான்; நம்ம ஊர் அருகில் எடுக்கப்பட்டது என்பதோடு நம்ம ஊர் இயக்குனர் என்பதிலும் படத்தின் மீது கூடுதல் ஒட்டுதல்