காந்திஜி குறித்த எண்ணங்கள் சிறு வயது முதல் எப்படி எல்லாம் மாறி வந்துள்ளது!!!
ஒரு சிறுவனாக காந்திஜி குறித்த முதல் தகவல்.. " காந்தி தாத்தா.. நமக்கு சுதந்திரம் வாங்கி தந்தவர்.." என்பது தான்... ஒவ்வொரு ஆகஸ்ட் 15 அன்றும் பள்ளியில் இனிப்பு சாப்பிடும் போது காந்தி நினைவு வாராமல் போகாது.. மேலும் காந்தி பிறந்த அக்டோபர் 2 பள்ளிக்கு விடுமுறை என்பதனாலும் காந்தியை ரொம்ப பிடிக்கும்.இதற்கு மேல் வரலாற்று பாட புத்தகத்தில் அவரை பற்றி படித்த விஷயங்கள் எல்லாம் கூட அந்த வய்தில் அதிகம் பாதிக்க வில்லை.
கல்லூரி வந்த பிறகு காந்திஜி குறித்து நிறைய படிக்கவும் பேசவும் ,கேட்கவும் வாய்ப்பு கிடைத்தது. சட்ட கல்லூரியில் என்னுடன் படித்த, எனது roommate-ஆன சங்கர் ஒரு தீவிர காந்தி பக்தன். அவர் பிறந்த அதே அக்டோபர் 2 - (சரியாக நூற்றாண்டு தினத்தன்று) பிறந்தவன். காந்தி ஆஷ்ரம் உடன் நிறைய தொடர்பு வைத்து, All India Tour சென்று வந்தான்.
சங்கர், மறைந்த நண்பன் லக்ஷ்மன், நான் எல்லோரும் திருச்சி கல்லூரிகளில் நடக்கும் காந்தி பற்றிய quiz-ல் கலந்து கொள்வோம். காந்தி குறித்து நன்கு படித்து, ஓரளவு புரிய ஆரம்பித்தது இந்த கால கட்டத்தில் தான்.
படிப்பு முடிந்து, வேலை, திருமணம் என எவ்வளவோ காலம் கடந்த பின், இன்று காந்தியை ஒரு idol-ஆக பார்க்கிறேன். Idol - என்றதும், "அவர் போலவே " என்ற அர்த்தத்தில் இல்லை. சாதாரண மனிதன் ஆக, மிக சாதாரண வாழ்வில், காந்தியின் சில குணங்கள் எனக்கும், கூட எதோ ஒரு வகையில் உதவவே செய்கிறது.
காந்திஜியின் குணங்களில் என்னை கவர்ந்தவை என்ன என்பதுடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன்...
முதலில் அவரது பிடிவாத குணம். நல்ல விஷயங்களுக்காக அவர் கொண்ட உறுதி அசாத்தியமானது. இந்தியாவிற்கு சத்யாக்ரஹா போன்ற அற போராட்டம் மூலமே சுதந்திரம் கிடைக்க வேண்டும் என அவர் உறுதியாய் நம்பினார். அதனை நடத்தியும் காட்டினார்.
தான் சரி என எண்ணுவதை இந்த உலகம் முழுதும் எதிர்த்தாலும், தனது எண்ணத்தில் உறுதியாய் நின்று சாதிப்பவர்கள், சரித்திரத்தில் இடம் பிடிக்கிறார்கள். ஒரு காலத்தில் இவர்கள் சொன்னதை ஏளனம் செய்தவர்கள் கூட, பின் அந்த கருத்தை ஏற்று கொள்கிறார்கள். சமூக மாற்றம் நிகழ்த்தி காட்டிய பலரது வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடம் இது.
இந்த குணத்தை சாதாரண மனிதர்கள் தம் வாழ்வில் எட்ட எண்ணும் நல்ல விஷயங்களில், விடா முயற்சி உடன் எட்டுவதற்கு உபயோகிக்கலாம்.
அடுத்த குணம் : கடும் உழைப்பு. மிக பெரிய விஷயங்களை சாதிக்க எண்ணுபவர்கள் எவருக்கும் இது பொருந்தும். வள்ளுவர் வரிகளில் சொல்வதானால், "மெய் வருத்தம் பாரார். பசி நோக்கார்; கண் துஞ்சார். கருமமே கண் ஆகினார்".
எளிய மனிதர்கள் மீதும், ஏழைகள் மீதும் காந்தி கொண்ட அன்பு. ஏழைகளின் உடை என ஒரு முறை வேஷ்டி மட்டுமே அணிய ஆரம்பித்த காந்தி, இறுதி வரை அவ்வாறே இருந்தார். அடுத்த பிறவி என எனக்கு இருந்தால், அதில் scavenger-ஆக பிறந்து அவர்கள் படும் துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்றார் காந்தி !!
புன்னகை. எந்த சூழலிலும் அவரிடும் இருந்த சிரிப்பு. (காந்தி படத்தில் இதை மிக அழகாக capture-செய்திருந்தனர்).
புலன் அடக்கம். மிக கடுமை ஆன, சாதாரண மனிதர்களால் இயலாத அளவு புலன் அடக்கம். இது போன்ற சில குணங்கள் தான் அவரை மனிதன் என்ற நிலையில் இருந்து மகாத்மா என்ற நிலைக்கு எடுத்து சென்றது.
அடுத்ததாக பதவிக்கு ஆசை படாத தன்மை. இது இன்றளவும் எனக்கு ஆச்சரியம் ஆன ஒரு விஷயம். பொது பணி செய்வதற்கு நிறைய பேர் உள்ளனர். அவர்கள் அனைவருமே எதோ ஒரு விதத்தில் அங்கீகாரம் எதிர் பார்ப்பர். அது பல நேரம் ஒரு பதவி குறித்த எதிர் பார்ப்பாக தான் இருக்கும். ஆனால், பதவி வேண்டாம் என காந்தி இருந்தது ஆச்சரியமே!!
இறுதியாய்: காந்தி தனது சுய சரிதையை தானே எழுதியது ! சரித்திரம் படைப்பவர்களுக்கு, அதை பதிவு செய்ய நேரம் இருக்காது என்பர். ஆனால், காந்தி எவ்வளவோ போராட்டங்களுக்கு நடுவிலும், தனது சுய சரிதையில், கருப்பு பக்கங்களை கூட வெளி படையாக எழுதியது, அவர் மேல் உள்ள மதிப்பை மேலும் உயர்த்துகிறது.
காந்தியை குறித்து சில எதிர் மறையான கருத்தகள் முன் வைப்போரும் உண்டு. குறிப்பாக, அவர் ஒரு நல்ல கணவன் அல்லது தந்தை ஆக இல்லை என்பர். இது ஓரளவு உண்மை ஆக கூட இருக்கலாம். நாட்டுக்காக அவர் அதிக நேரம் ஒதுக்கியதால், குடும்ப கடமைகளில் ஓரளவு தவறி இருக்கலாம். இது எந்த ஒரு பெரிய சாதனையாளருக்கும் நடக்க கூடிய ஒன்றே.
நம் இந்தியா பற்றி பெருமை பட சில விஷயங்கள் என்றும் உண்டு. அதில் ஒன்று: காந்தி ஒரு இந்தியர் ஆக பிறந்தார் என்பது. இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என நம்பவே முடியாத அளவு சம்பவங்கள் கொண்டது காந்தி வாழ்வு. அவரது சுயசரிதை மற்றும் அவர் பற்றிய படம் மீண்டும் ஒரு முறை வாசியுங்கள்,, பாருங்கள்.. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம் தரும் அற்புதங்கள் இவை..
சுருக்கமான அதே சமயம் அழுத்தமான பதிவு. பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete//அடுத்ததாக பதவிக்கு ஆசை படாத தன்மை. இது இன்றளவும் எனக்கு ஆச்சரியம் ஆன ஒரு விஷயம்.//
ReplyDeleteஉண்மைதான் சார். அதனால்தான் அவர் மகாத்மா!
நல்ல பதிவு.
thanks(3) for the article. i am one among the millions who is deeply touched by gandhiji. i just want to document my views on Gandhi being a husband/father.He gave his wife and children, the same freedom& values what we cherish everyday..come on.. they too were living in INdia..right? what more could a "man" give his family..in terms of security.Security is the foundation for family system.If he has not given that to his family, no human being in the whole world has done that.ofcourse he did not make his children..prime ministers and millionaires,like other good father-politicians.I think it is highly an immature way of us indians, to think like tht about a man who has chosen to be a father for millions...who did not limit himself with petty thoughts like"myself..my wife..my children..my caste..my language..my countrymen"(only because of the love for humanity as a whole he chose non-violence against britishers). there is a book.."the betrayal of gandhi"abt, how indians have misunderstood gandhi in many ways,than the rest of the world.i was literally in tears after reading that.it is possible, that they-his family members, could nt have understood him and his unlimitedness.It takes a lifetime to understand him in the real sense.
ReplyDeleteenakkum bapuji pidikkume.
அருமையான, மனசை நெகிழ வைக்கும் பதிவு.
ReplyDeleteஉங்களது பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
http://onelanka.wordpress.com/2011/10/02/fool-gandhi/
ReplyDeleteread this
மிக நல்ல பதிவு.
ReplyDeleteமிக நல்ல பகிர்வு மோகன்...
ReplyDeleteகாந்தியை பற்றி ஓரளவு எல்லோரும் அறிந்திருந்தாலும் உங்கள் நடையில் அதை அழகாக எடுத்து வைத்துள்ளீர்கள்.
ReplyDelete//நம் இந்தியா பற்றி பெருமை பட சில விஷயங்கள் என்றும் உண்டு. அதில் ஒன்று: //
இந்த வரியை நான் படிக்கும் முன்பே நான் பின்னோட்டம் போட யோசித்த வரிகள் கீழே!
இந்தியா/இந்தியர்களை பற்றி பொதுவாக மேற்க்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அவ்வளவாக தெரியாது/தெரிந்து கொள்ள ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஆனால் அவர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் காந்தி ஒருவர் மட்டும் தான். அமெரிக்கர்கள், ஆப்ரிக்க நாட்டை சேர்ந்தவர்கள் கூட இந்தியர் என தெரிந்தால் ஏதாவது பேச வேண்டும் என தோன்றினால் "I like Ghandi" என்று தான் சொல்வார்கள். காந்தி ஒரு மாமனிதர்.
//காந்தியை குறித்து சில எதிர் மறையான கருத்தகள் முன் வைப்போரும் உண்டு//
இதில் நானும் ஒருவன். அவருடைய பிடிவாதம், இந்திய சுதந்திர போராட்டம் பல வகைகளில் வடிவம் பெற்றிருந்தாலும், தான் கூறிய சத்தியாகரக முறைதான் எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்றும், அதனால் சில பல நியாயமான பல போராட்ட வடிவங்களுக்கு அதரவு மறுக்கப்பட்டு, அத்தலைவர்கள்/போராட்டங்கள் வெற்றி பெற முடியாமல் போனது. அதே காரணத்திற்க்காக சில சமயம் அவர் வெள்ளையர்களை ஆதரித்தது கூட உண்டு(அதாவது, வெள்ளையர்களுக்கு நாம் துன்பம் தர கூடாது. ஆனால், அவர்கள் துன்பம் கொடுத்தால் அதை நாம் பொறுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். எப்படி சார்?) அதனால் தானோ என்னவோ இன்றும் நாம் ஆட்சி அதிகாரங்களுக்கு அடிமையாகவே வாழ்கிறோம் என எண்ணத்தோன்றுகிறது.
(போராடி) பெற்றால் தானே சுதந்திரம். நமக்கு கொடுத்துவிட்டு தானே போனார்கள். அதனால் தானோ என்னமோ இன்னமும் நாம் வாங்கிக்கொண்டே இருக்கிறோம்(....)
காந்தியைக் குறித்துச் சிறுவயதில் உங்களைப் போலத்தான் நினைத்திருந்தேன் நானும். மாற்றுக் கருத்துக்கள் அறிந்தது, பெரும்பாலும் பதிவுலகு வந்தபின்புதான்!!
ReplyDeleteதைரியசாலியான கவிக்குயில் சரோஜினி நாயுடு ஒருமுறை சொன்னாராம், “இவரை (காந்தியை) எளிமையானவராகக் காட்டுவதற்கு பல இலட்சங்கள் செலவழிக்க வேண்டியுள்ளது” என்று!!
என் ஞாபகம் சரியெனில் நான் வாசித்ததை சொல்கிறேன். நேதாஜியைப் பற்றிய கிழக்கு பதிப்பக புத்தகத்தில் வாசித்ததாக ஞாபகம்.
ReplyDeleteஒரு முறை காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒருவரை ஆதரித்தார் காந்தி. ஆனால் அந்த தேர்தலில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வென்று விட்டார். இதை காந்தியிடம் காங்கிரஸார் தெரிவித்தபோது, தான் ஆதரித்த நபர் தோற்றுவிட்டார் என்றால், தானே தோற்றதற்கு சமம் என்றாராம்.
இது நேதாஜிக்கு தெரியவந்தவுடன், உடனடியாக ராஜினாமா செய்துவிட்டார்.
காந்தி சில சமயங்களில் மகாத்மா, சில சமயங்களில் சாதாரண மனிதர். இன்னும் கூட ஒரு சில உதாரணங்கள் இருக்கிறது.....வீண் சர்ச்சையையோ, விவாதத்தையோ நான் விரும்பவில்லை, எனவே Dot
நன்றி பாலஹனுமான்
ReplyDelete**
அமைதி அப்பா: நன்றி
**
நன்றி டாக்டர் வடிவுக்கரசி. தங்கள் கருத்து மிக சரி
**
முக நூலில் பகிர்ந்தமைக்கு நன்றி ரத்னவேல் ஐயா
**
ராமலட்சுமி: நன்றி
**
வெங்கட்: நன்றி
**
விரிவான கருத்துக்கு நன்றி ஆதி மனிதன்
**
நன்றி ஹுசைனம்மா
**
ரகு: மாற்று கருத்துக்கு நன்றி
எனக்கெனாமோ காந்தி பொழைக்க தெரியாத மனிதராதான் தெரியரார். பின்ன நேரு குடும்பத்தோட தன் காந்தி குடும்பத்தை ஒப்பிட்டு பாருங்க..,
ReplyDeleteஇன்றும் காந்தி வாழ்ந்து கொண்டுருக்கிறார்.
ReplyDeleteதினந்தோறும் மூன்று முறை மாற்றி மூன்று வெள்ளை ஆடைகள் உடுத்தி நன்றாக தேய்த்த கறை படியாத வெள்ளை உடை அணிந்தவர்களிடம்.
ReplyDeleteமம்முட்டி நடித்து தேசிய விருது பெற்ற அம்பேத்கர் படத்தை பாருங்கள். டி.வி.டி. கிடைப்பது அரிதுதான். காந்தி மீதான எதிர்ப்பை அம்பேத்கர் ஆக்ரோஷமாக பதிவு செய்திருப்பார். நான் பார்த்த மிகச்சிறந்த படங்களில் ஒன்று.
காந்திஜியை பிடிக்குமா?----
ReplyDeleteஎனக்கு பிடிக்கவே பிடிக்காது......