Monday, October 24, 2011

வானவில்: வந்தான் வென்றான்:செல்மா கவிதை: தீபாவளி

பார்த்த படம்: வந்தான் வென்றான்

ஜீவா மற்றும் இயக்குனர் கண்ணன் ஆகியோருக்காக பார்த்து நொந்த படம். என்னமோ ஒரு கதை !! திரைக்கதை..  ஒரு பக்கம் ஊசலாடுது. தாப்சி "One film wonder" தான் போலும். நடிப்பு வரவில்லை என்பதோடு வெள்ளையாக உள்ளதை தவிர லட்சணமாக இல்லை. இவரை வைத்து படத்தின் இறுதியில் உள்ள சஸ்பென்ஸ் மட்டுமே சற்று வித்யாசமான ஒரே விஷயம். காஞ்சன மாலா & அஞ்சனா ..  அஞ்சனா ..ரெண்டு பாடல்கள் கேட்க (மட்டும்) இனிமை. இந்த படம் வெளியான நாற்பது நாளில், இந்த தீபாவளிக்கு ஜெயாவில் போடுகிறார்கள். தப்பி தவறி பார்த்துடாதீங்க !!

ரசித்த கவிதை

யாரோடும் நின்று போவதே இல்லை இந்த உலகம்.

எவர் வாயிலும் இல்லை இவ்வுலகின் இறுதிச் சொல்.
உண்மையில் எந்த பாதையும் எங்கும் முடிவடைவதில்லை
உங்கள் பாதையிலிருந்து தப்புக
உங்கள் மந்தையிலிருந்து தப்புக

உலகம் அப்படியொன்றும் சிறியதல்ல

கூடவே
இன்னும் ஒரு துளி அதிகமாய் அன்பு செய்.
இன்னும் கொஞ்சம் இறுக்கமாய் அணைத்துக் கொள்.

இனி எல்லாம் நலமாகும். வாழ்வோம் இனி.
                                                 -செல்மா பிரியதர்ஷன்
ஜாலி போஸ்டர் ரசித்த டுவிட்டர்

டெலிபோன்,  EB என அரசு அலுவலகத்தில் பணி புரிபவர்கள் மத்தியான நேரத்தில் சாப்பிட போறாங்களா, சமைச்சு சாப்பிட போறாங்களா? எவ்ளோ நேரம் ஆகுது மை லார்ட் திரும்ப வர ?

தீபாவளிக்கு டிவி படங்கள்


உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். இருந்தாலும் ஒரே இடத்தில படிக்கலாம் என்பதால் தருகிறேன்

சன்- சிங்கம் (6 pm ); வேட்டைக்காரன் (காலை பத்து மணி) ஆயிரத்தில் ஒருவன் (மதியம்) 

கலைஞர் - பாஸ் என்கிற பாஸ்கரன் (காலை 10.30) கச்சேரி ஆரம்பம் (மதியம் 3 மணி)

ஜெயா - வந்தான் வென்றான் &180
ராஜ் - ராவணன் ( மாலை 7 மணி)
விஜய் - அவன் இவன் (காலை 11 மணி); பயணம் (மதியம் 3 மணி)

இவற்றில் பார்ப்பதற்கு நாம் பரிந்துரைப்பது

காலை : பாஸ் என்கிற பாஸ்கரன்;
மதியம் பயணம்

நீங்கள் பார்க்க போவது என்ன படம்?

அய்யாசாமி

அய்யாசாமிக்கு சின்ன வயது முதல் வெடி வெடிப்பதென்றால் பயம் ! சங்கு சக்கரம், புதவானம் இவை தான் அவர் அதிக பட்சம் கொளுத்துவது. ஆனால் திருமணத்துக்கு பின் அவர் மனைவி வெடிகளில் புகுந்து விளையாடுவது பார்த்து காம்பிளக்ஸ் ஆகிட்டார். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா வீட்டம்மா குடுத்த டிரைனிங்கில் தேறி இப்போல்லாம் வெடி வெடிக்க ஆரம்பிச்சுட்டார். இன்னிக்கும் அவர் வீடடில் தீபாவளியன்று காலையில் முதல் சரம் வெடிப்பது அவர் மனைவி தான். அய்யா சாமி ஆற்றில் முதல் முக்கு முழுங்க தயங்குவோமே அப்படி தயங்கி, தயங்கி கொஞ்ச நேரம் ஆனதும் வெடிக்க ஆரம்பிச்சிடுவார். ("ஏன்யா பயப்புடுறீர்?" என்றால் "வேற ஒண்ணும் இல்லை; ஒரு வருஷம் ஆச்சில்லையா? அதான் கொஞ்சம் டச் விட்டு போயிடுச்சு" என்பார்)

பலகாரம் (குறிப்பா முறுக்கு), டிவி நிகழ்ச்சிகள், தெருவிலிருக்கும் குட்டி பசங்களுடன் சேர்ந்து கொண்டு வெடி வெடிப்பது என அய்யா சாமி தீபாவளியன்று செம பிசி!

அய்யா சாமி சார்பாக உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!

21 comments:

 1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் மோகன்....

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
 2. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. தீபாவளி நல்வாழ்த்துகள்..

  இந்த தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளின் விமர்சனப் பதிவு வரும்தானே..

  ReplyDelete
 4. // நீங்கள் பார்க்க போவது என்ன படம்? //

  சிங்கம் மற்றும், வேட்டைக்காரன்..
  -- தலைவியாச்சே.... அதான்..

  ReplyDelete
 5. வழக்கம் போலவே நல்ல தொகுப்பு:)! தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 6. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 7. Anonymous12:22:00 PM

  Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 8. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. have a fantastic deepavali. same fear..same here!! this time i have decided to have a blast though!

  ReplyDelete
 11. தீபாவளி வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. எல்லா ப‌ட‌த்தையும் சேன‌ல் மாத்தி மாத்தி பாக்க‌லாம்னு இருக்கேன். இருந்தாலும் ஹை ப்ரியாரிட்டி...சிங்க‌ம். கார‌ண‌ம்லாம் சொல்ல‌ணுமா என்ன‌? ;))

  உங்க‌ளுக்கும் உங்க‌ள் குடும்ப‌த்தின‌ருக்கும் தீபாவ‌ளி வாழ்த்துக‌ள்!

  ReplyDelete
 13. உங்க‌ளுக்கும் உங்க‌ள் குடும்ப‌த்தின‌ருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
 14. நன்றி :
  வெங்கட்
  சித்ரா
  வித்யா (முயற்சி பண்றேன். நம்மளை டிவி சிறப்பு நிகழ்சிகளுக்காக ஞாபகம் வச்சிருக்கீங்க)
  ராமலட்சுமி

  ReplyDelete
 15. மாதவா: நீ தான் டிவியே பார்க்கதவராச்சே !! உனக்கும் தலைவி பாசமா?
  **
  ராகவன் சார்: மகிழ்ச்சி நன்றி
  **
  நன்றி சரவணா உங்களுக்கும் வாழ்த்துக்கள்
  **
  வடிவுக்கரசி மேடம் : நீங்களும் அய்யாசாமி மாதிரி பயப்படுவீங்களா? ரைட்டு !

  ReplyDelete
 16. நன்றி :

  ராம்வி மேடம்
  ஸ்ரீராம்
  பால ஹனுமான்
  ரகு ( ஹிஹி நானும் அதே காரணத்துக்காக சிங்கம் பார்ப்பேன்)

  ReplyDelete
 17. //
  எவர் வாயிலும் இல்லை இவ்வுலகின் இறுதிச் சொல்.
  உண்மையில் எந்த பாதையும் எங்கும் முடிவடைவதில்லை
  உங்கள் பாதையிலிருந்து தப்புக
  உங்கள் மந்தையிலிருந்து தப்புக

  உலகம் அப்படியொன்றும் சிறியதல்ல

  கூடவே
  இன்னும் ஒரு துளி அதிகமாய் அன்பு செய்.
  இன்னும் கொஞ்சம் இறுக்கமாய் அணைத்துக் கொள்.

  இனி எல்லாம் நலமாகும். வாழ்வோம் இனி.
  -செல்மா பிரியதர்ஷன்
  //

  கவிதை அருமை

  ReplyDelete
 18. வேட்டைக்காரன்..தி பெஸ்ட் சாய்ஸ். அதை பாத்தாதான் தீபாவளி முழுமை பெறும்.

  ReplyDelete
 19. எவர் வாயிலும் இல்லை இவ்வுலகின் இறுதிச் சொல்.
  உண்மையில் எந்த பாதையும் எங்கும் முடிவடைவதில்லை
  உங்கள் பாதையிலிருந்து தப்புக
  உங்கள் மந்தையிலிருந்து தப்புக/

  nice...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...