Thursday, May 9, 2013

ஐ.பி.எல்-லில் மேட்ச் பிக்சிங் உண்டா ? ஒரு அலசல்

வ்வொரு வருடமும் ஐ. பி. எல் நடக்கும் போதும் மேட்ச் பிக்சிங் குறித்த விவாதங்கள் கிளம்பி விடுகின்றன.

குறிப்பாக சென்னை வெல்லும் ஒவ்வொரு முறையும் " ஜெயிக்க வைத்த சீனு மாமாவுக்கு ஜே !" என்று முக நூல் மற்றும் கூகிள் பிளஸ்சில் குரல் கிளம்புவது சகஜம் ! மேட்ச் துவங்கும் முன்பே கூட " சீனு மாமா இன்னிக்கு என்ன செய்ய போறாரோ ?" என்று தான் இணையத்தில் பேசி கொள்கிறார்கள்

match fixing cartoons, match fixing cartoon, match fixing picture, match fixing pictures, match fixing image, match fixing images, match fixing illustration, match fixing illustrations

ஐ. பி. எல் லில் மேட்ச் பிக்சிங் சாத்தியம் தானா ? எனது சிற்றறிவுக்கு எட்டிய சில கருத்துகளை இங்கு பகிர்கிறேன்.

முதலில் பிக்சிங் நிச்சயம் இருக்கிறது என்று நினைப்போர் சொல்லும் காரணங்கள் :

1. கிரிக்கெட்டில் காம்ப்ளிங் இருக்கிறது என்பதில் யாருக்கும் சந்தேகமோ, மறுப்போ இல்லை. இந்த மேட்ச் யார் டாஸ் ஜெயிப்பார்கள், முதலில் பேட் செய்வது எந்த அணி, எவ்வளவு வித்தியாசத்தில் , யார் ஜெயிப்பார்கள், ஒரு ஓவரில் அடிப்பது எவ்வளவு ரன் என விரிவான கேம்ப்ளிங் சர்வ நிச்சயமாக நடக்கிறது

ஆனால் இந்த கேம்ப்ளிங் Group - விளையாடும் வீரர்களுடன் தொடர்பு கொண்டு தங்களுக்கு சாதகமான முடிவுக்காக பேரம் பேசி, அதுவும் படியும் போது தான் மேட்ச் பிக்சிங் ஆகிறது.

அசார், ஜடேஜா காலத்திலேயே இருந்த இந்த பிக்சிங் இப்போது காசு அதிகம் புரளும் போது நிறையவே நடப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை

2. கடைசி ஓவர்களில் தொடர்ந்து போடப்படும் புல் டாஸ்களை பாருங்கள். புல் டாசில் பவுண்டரி அடிப்பது எளிது என்று தெரிந்தும் எப்படி மீண்டும் மீண்டும் கடைசி ஓவரில் புல் டாஸ் போடணும்?



3. மிக எளிதான ஸ்கோர் கூட - கடைசி ஓவர் வரை இழுத்து யார் ஜெயிப்பார் என்ற டென்ஷன் வர வைத்து மேட்ச் முடிவதில் தெரியவில்லையா பிக்சிங் உண்டு என ?


4. நான்கு வெளிநாட்டு வீரர் தான் விளையாடுவார்கள் என்பதிலேயே பிக்சிங் துவங்கி விடுகிறது. இன்று ஆடும் அந்த 4 வெளி நாட்டு வீரர்கள் யார் என்பதிலேயே காம்ப்ளிங் மற்றும் பிக்சிங் நடக்க நிறையவே வாய்ப்ப்பு உண்டு.

5. சென்ற ஆண்டு ஐந்து இளம் வீரர்கள் ஸ்பாட் பிக்சிங் பிரச்சனையில் நீக்கப்பட்டதிலிருந்தே இங்கு பிக்சிங் எவ்வளவு ஆழமாக ஊடுருவி உள்ளது என்பது தெரியும்


6. பல நேரங்களின் அணியின் ஓனர் மற்றும் கேப்டன் மட்டுமே இதில் முழுதும் ஈடுபட வாய்ப்பு அதிகம். அதனால் ஒவ்வொரு பிரான்சைஸ்சும் தங்களுக்கு தோதுவான அணி தலைவரை நியமிக்க வாய்ப்புகள் அதிகம்.

கேப்டன் தான் பல முடிவுகள் எடுக்க போகிறவர். நன்கு பந்து வீசுபவரை முதலில் கொடுத்து முடித்து விட்டு, மிக சுமாராக பந்து வீசுபவரை கடைசி ஓவர்களில் அவர் வீச வைக்கலாம். பேட்டிங் ஆர்டர் மாற்றி இறக்கலாம். இப்படி அவர் ஒப்பு கொண்ட கேம்ப்ளிங்கிற்காக பல விஷயங்கள் செய்ய கூடும்

ஐ. பி. எல்லில் மேட்ச் பிக்சிங் இருக்காது என்று நினைப்போரின் எண்ணம் இப்படி இருக்கிறது

1. மேட்ச் பிக்சிங் ஓரளவு இருக்கும் என்பதை முழுதும் மறுக்க முடியாது. ஆனால் அது வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்யும் அளவிலும் - அல்லது மேட்சில் நடக்கும் ஒவ்வொரு செயலும் பிக்சிங் ஆனது என்பதை நம்ப முடியாது

ஒவ்வொரு செயலும் பிக்சிங் என்றால் - அதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை - விஷயம் பலருக்கும் தெரியும். நிச்சயம் வெளியிலும் இந்நேரம் வந்திருக்கும்.

2. சச்சின், திராவிட் போன்ற இதுவரை எந்த கருப்பு புள்ளியும் இல்லாத வீரர்கள் பிக்சிங் இருந்தால் இவ்வளவு ஆர்வத்துடன் தங்களை ஈடுபடுத்தி கொள்ள மாட்டார்கள். கஷ்டப்பட்டு எடுத்த நற்பெயரை அவ்வளவு எளிதாக இழக்க அவர்கள் ஒப்பு கொள்வார்களா என்ன?



3. சொல்லி வைத்து பந்து போடுவதும், சொல்லி வைத்து அதனை ஆறுக்கு அனுப்புவதும் நடப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். என்ன தான் அல்வா மாதிரி பந்து போட்டாலும் எல்லாராலும் அதனை சிக்சர் ஆக்கிட முடியாது.

4. உலகின் அனைத்து முன்னணி வெளிநாட்டு வீரர்களும் இதில் இருக்கும் போது அப்படி பிக்சிங் நடந்தால் நிச்சயம் அவர்கள் அதனை பற்றி ஒரு கட்டத்தில் பேச தான் செய்வார்கள். குறிப்பாக தங்களை எந்த அணியும் செலெக்ட் செய்யலை; அல்லது சரியான சம்பளம் வழங்கலை எனும்போது அவர்கள் பிக்சிங் சம்பவங்கள் பற்றி பேச வாய்ப்புகள் உண்டு. அப்படி யாரும் இதுவரை பேசவில்லை என்பது கவனிக்கத்தக்கது

5. உலகம் முழுதும் உற்று பார்க்கும் இந்த டோர்னமென்ட்டில் நன்கு ஆடி பெயர் எடுக்கணும், புகழ் பெறணும் என்று தான் எந்த வீரரும் நினைப்பார்களே ஒழிய, குறுகிய நோக்கில் இப்போது கிடைக்கும் பணத்துக்காக, மோசாக ஆடி தனது காரியரை இழக்க வீரர்கள் ஒப்பு கொள்வர் என்று தோன்ற வில்லை

6. நீங்களும் நானும் நம்புறோம் அல்லது நம்பவில்லை என்பது இருக்கட்டும்;  கிட்டத்தட்ட 2 மாசம் நடக்கும் அனைத்து மேட்ச்களுக்கும் மிக பெரும் கூட்டமாக ஸ்டேடியம் சென்று ஆதரிக்கிறார்கள் பாருங்கள். போலவே டிவியில் பார்ப்போரும் பல கோடி மக்கள் உண்டு. பிக்சிங் இருக்கிறது என்று முழுதும் நம்பினால் யாரும் தெரிந்தே இப்படி பார்த்து ஏமாற மாட்டார்கள். இத்தனை பேர் தொடர்ந்து பார்க்கிறார்கள் என்பதிலேயே அவர்கள் பிக்சிங் பற்றி நம்பவில்லை அல்லது கவலை கொள்ள வில்லை என்பதையே காட்டுகிறது. 

ஆமா.. இவ்விஷயத்தில் உங்கள் கருத்து என்ன .. பின்னூட்டத்தில் கருத்து சொல்லிட்டு போங்க சாரே !

********

18 comments:

  1. மே. ஃபி. இருக்கு. ஆனா இல்லை.

    நான் சொல்றது சரியா?
    :)

    ReplyDelete
  2. அண்ணே ஒரு சில ஆட்டத்த பார்க்கும் பொழுது அந்த எண்ணம் ஏற்படுகிறது நீங்க சொல்றது போல 22 பேரையும் நடிக்க வைக்கிறது கஷ்டம் தான் அதனால என்ன சொல்றதுன்னே தெரியல்ல ?????

    ReplyDelete
  3. எங்கு ஏராளமான பண வரவு இருக்கிறதோ அங்கு கரப்ஷன் இருந்தே தீரும்! இதில் 'நற்பெயர்' என்பதெல்லாம் கொஞ்சம் அதிகம் பணம் வாங்க உதவும். அவ்வளவுதான்!

    ReplyDelete
  4. Anonymous11:47:00 AM

    This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Anonymous11:48:00 AM

    மேட்ச் பிக்சிங் 100% நடக்கத்தான் செய்கிறது. அது குறித்த நுணுக்கமான தகவல்களை நீங்கள் அதிகம் படிக்கவில்லை என நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. நீங்கள் facebook ஐ முகநூல் என்று அழைப்பதை சரியல்ல என்று தோன்றுகிறது. அது trademark . அதனை தமிழ் படுத்த முடியாது. இப்படி நீங்கள் தமிழாக்கம் செய்வதானால் micorsoft ஐ 'நுண்மென்மை' என்றும் hotmail ஐ 'வென்அஞ்சல்' என்றும் தான் அழைக்க வேண்டும். அதே போல் Windows 7, office 2010 போன்றவற்றை 'யன்னல் 7', 'அலுவலகம் 2010' என்று அழைக்கவேண்டும். இது எப்படி நகைப்புக்கிடமாக இருக்கிறதோ அது போல தான் முகநூல் என அழைப்பதும் பார்க்க பட வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. .

    ReplyDelete
    Replies
    1. முகநூல் பொருத்தமாகவே இருக்கிறது.அதனால் அதன் பெயர் நிலைத்து விட்டது.ஆனால் you tube ஐ உன் குழாய் என்று சொல்வது பொருந்தவில்லை அதனால் அது வழக்கத்தில் வரவில்லை.மக்களுக்கு பிடிக்காத மொழி மாற்றம் தொடர்வதில்லை

      Delete
    2. Anonymous12:05:00 PM

      Kutraalam-ai vellai kaaran court aalam-nu sonnan.. ana namma facebook-ai tamil-la muga nool-nu sonna sirippa?? vellaikaaran sonna super.. namma translate pannina mokkai.. tamilan tamilan thaan :)

      Delete
  7. இந்த IPL போட்டிகளை கிரிக்கெட்டாகப் பார்க்காமல், சுவையான பொழுது போக்கும் நிகழ்ச்சியாகப் பாருங்கள், பிரச்சனையே இல்லை

    ReplyDelete
  8. Anonymous4:00:00 PM

    புதுமுக வீரர்கள் யாரேனும் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாம்..அதற்காக எல்லாரையும் பொத்தாம்பொதுவாக குறைசொல்ல முடியாது..பணம்தான் பிரதானம் என்றால் உலகின் பணக்காரர்களில் ஒருவரான ஓனரைக்கொண்டுள்ள மும்பை அணிதானே எல்லா கோப்பையையும் வென்றிருக்க வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. கோப்பை வெல்வது குறிக்கோளே இல்லை. போட்டியில் பெட் பணத்தை சுருட்டுவது தான் குறிக்கோள். சோப்ளாங்கி அணி பெரிய அணியை 'எதிர்பாராத விதமாக' ஜெயிப்பது எப்படி என நினைக்கிறீர்கள்?

      Delete
  9. சென்னை ஆடிய பெரும்பாலான ஆட்டங்கள் அனைத்தும் கடைசி ஓவரில் தான் முடிந்துள்ளது. இது கண்டிப்பாக மேட்ச் பிக்சிங் தான்.

    மேலும் அடிக்கும் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் டீமுடன் ஆடிய மேட்சில் 100-க்கும் குறைவாக அடித்ததும் மேட்ச் பிக்சிங் தான்.

    அம்பானி பிரஷர்.

    ReplyDelete
    Replies
    1. சென்னை ஆடிய பெரும்பாலான ஆட்டங்கள் அனைத்தும் கடைசி ஓவரில் தான் முடிந்துள்ளது. இது கண்டிப்பாக மேட்ச் பிக்சிங் தான்.

      180-200-க்கு மேலும் அடிக்கும் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் டீமுடன் ஆடிய மேட்சில் 100-க்கும் குறைவாக அடித்ததும் மேட்ச் பிக்சிங் தான்.

      அம்பானி பிரஷர்.

      Delete
  10. மேட்ச் பிக்சிங் நடக்கிறது என்றுதான் தோன்றுகிறது!

    ReplyDelete
  11. பின்னூட்டம் இட்ட நண்பர்கள் அனைவருக்கும் அன்பான நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...