Wednesday, May 8, 2013

வானவில்: ரன் பேபி ரன்- RJ பாலாஜி - பூனம் பாஜ்வா

பார்த்த படம்- ரன் பேபி ரன்

மோகன்லால் மற்றும் அமலா பால் நடித்த மலையாள படம் ரன் பேபி ரன். மீடியா - (தொலை காட்சி சானல்) என்கிற களத்தில் நிகழும் ஒரு சஸ்பென்ஸ் கதை.

மோகன்லால் மற்றும் அமலா பால் புகைப்பட காரர் மற்றும் ரிப்போர்டர். காதலித்து திருமணம் செய்யும் நிலையில், ரிப்போர்ட் எடுக்க செல்லும்போது வரும் சண்டையால் பிரிகிறார்கள். பல வருடங்களுக்கு பிறகு அவர்கள் சேர்ந்து பணியாற்ற வேண்டிய சூழல். இப்போது மோசமான அரசியல்வாதியால் அவர்கள் இருவரும் ஓடி ஒளிய வேண்டிய நிலை ( அதான் பட தலைப்பு ) ; எப்படி தப்பினார்கள் என்பதே படத்தின் இரண்டாம் பகுதி .

ரொம்ப சூப்பர் எல்லாம் இல்லை. ஜஸ்ட் டைம் பாஸ் படம். மோகன் லாலுக்கு ரொம்ப நாள் கழித்து ஒரு வெற்றி படமாய் இது அமைந்தது

அழகு கார்னர்

பூனம் பாஜ்வா- கண், மூக்கு, உதடு, சிரிப்பு, உடல் வாகு என அனைத்தும் சரியாய் இருந்தும் ஏனோ தமிழில் அதிகம் ஸ்கோர் செய்யாமல் போனது வருத்தமே. நம்ம ஜீவா கூட அடுத்தடுத்து தன் படங்களுக்கு இவரையே ஹீரோயினாக்கி முன்னுக்கு கொண்டு வர முயற்சி செய்தார். 

வரணும். அம்மணி மீண்டும் ஒரு ரவுண்டு வரணும்


                        
பதிவு திருட்டு

முகநூலில் தன்னம்பிக்கை என்ற பெயரில் இயங்கி வரும் நபர் எனது அனுமதி இன்றி- சாதாரண மனிதர்கள் வரிசையில் எழுதிய பேட்டிகள் பலவற்றை தனது தளத்தில் பகிர்ந்துள்ளார். எனது பெயரோ, ப்ளாக் லிங்கோ இன்றி தான் எழுதியது போலவே பகிர்ந்துள்ளார். பதிவுகள் ஒவ்வொன்றும் - 50 க்கும் மேல் ஷேர் செய்யப்பட்டுள்ளன. ஏராள காமன்ட்கள் அவரை வாழ்த்தி போடும்போதும் - எழுதியது வேறு நபர் என்று சொல்லாமல் திருட்டு சந்தோஷம் அனுபவித்துள்ளார் இந்த நல்லவர் !

http://www.facebook.com/ThannambikkaiFans?fref=ts

அவர் திருடி பகிர்ந்துள்ள ஒவ்வொரு பதிவிலும் எனது எதிர்ப்பை பதிவு செய்தேன். முகநூளில் இந்த செய்தியை பகிர்ந்ததும், நண்பர்கள் அவர் தளத்துக்கு சென்று அவரது இந்த செயலை கண்டிக்க உடனே நமது பதிவுகள் அனைத்தையும் அகற்றி விட்டார். நண்பர்கள் அவர் திருட்டை கண்டித்து போட்ட 20-க்கும் மேற்பட்ட பின்னூட்டங்களையும் அகற்றி விட்டு நல்லவர் போல் தன் "பணி "யை தொடர்கிறார்.

பதிவர் நண்பர் பிரபு கிருஷ்ணா தனது பதிவுகளையும் இவர் எடுத்து கையாண்டுள்ளதாக கூறுகிறார். இவரது பக்கத்தில் உங்கள் பதிவுகள் கூட எடுத்து ஷேர் செய்திருக்க கூடும். ஒரு முறை எட்டி பாருங்கள்

போஸ்டர் கார்னர் 

இந்த போஸ்டரில் உள்ள உண்மை சுடுகிறது !



RJ பாலாஜியின் அசத்தல் காமெடி

ரேடியோவில் கலக்கி கொண்டிருக்கும் ஒரு மனிதர் RJ பாலாஜி. மனிதருக்கு என்னா ஹியூமர் சென்ஸ் ! (எதிர் நீச்சல் படம் பார்த்திருந்தால் கிளை மாக்சில் - மாரத்தான் போது காம்பியராக வருவாரே.. அவர் தான் பாலாஜி)

இவரது பேச்சை ஆயிரகணக்கான இளைஞர்கள் கூட்டம் ரசிக்கிறது. விகடன் சென்ற ஆண்டின் சிறந்த ரேடியோ ஜாக்கி விருது இவருக்கு தான் தந்தது

இவரின் சில காமெடிகள் அவ்வப்போது இங்கு பகிர எண்ணம்..

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் ஆடும் தமிழக வீரர்களை அழைத்து இவர் கலாய்ப்பதை கேட்டு சிரியுங்கள் ! அஷ்வின், ஸ்ரீகாந்த் , அபராஜித் என எல்லாரையும் நாசம் பண்றார்.



பஸ்கள் எரிப்பு......

பா. ம. க நிறுவனர் ராமதாஸ் கைதும் அதை தொடர்ந்து நடக்கும் பஸ் எரிப்புகளும் அரசியல் வாதிகள் மீதான வெறுப்பை அதிகமாக்குகின்றன

ஒரு வழக்கில் கைதானார் ...சரி. அடுத்து பல வழக்குகள் போட வேண்டிய அவசியம் என்ன? இது ஒரு பக்கம் என்றால், இதுவரை 500 க்கும் மேற்பட்ட பஸ்களை எரித்தது கொடுமையிலும் கொடுமை ! மரம் வெட்டிகள் என்ற பெயரோடு பஸ் எரித்தோர் என்ற நற்பெயரும் சேர போகிறது. பா. ம. க விற்கு ஆதரவு இருப்பதே மிக சில மாவட்டங்களில் மட்டும் தான். அங்கும் கூட அவர்கள் சாதியை தவிர்த்த மற்றவர்கள் அக்கட்சியை முழுவதும் வெறுக்க ஆரம்பித்து விடுவர்.

குறிப்பிட்ட மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இதனால் அநேகமாய் நிறுத்தப்பட்டு, தனியார் பேருந்துகள் தான் இயங்குகின்றன போலும். அவர்களும் மிக அதிக கட்டணம் வசூலிப்பதாக டிவி செய்தியில் கண்டேன்.

எதிர்ப்பை காட்ட - இதுவா வழி? ஹூம் :((

மகிழ்ச்சியான செய்தி

சேவை இல்லம் குறித்த நேற்றைய பதிவை வாசித்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் - சேவை இல்லத்துக்கு பென்ச் உள்ளிட்ட உதவிகள் தர முன் வந்துள்ளது.

நல்ல பதிவுகள் அதிகம் கவனிக்கபடாமல் போகிறதே என நானும் ஆதி மனிதனும் நேற்று பேசிய போது சற்று வருத்தப்பட்டோம். ஆனால் யார் கண்ணில் பட வேண்டுமோ, அவர்களுக்கு அது சரியாக சென்று சேர்ந்துள்ளது அறிந்து மிகவும் மகிழ்ச்சி !

அவர்கள் யார் என்ற விபரம் - சேவை இல்லத்துக்கான உதவி முழுவதும் நடந்து முடிந்த பின் பகிர்கிறேன்.

12 comments:

  1. /சேவை இல்லம் குறித்த நேற்றைய பதிவை வாசித்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் - சேவை இல்லத்துக்கு பென்ச் உள்ளிட்ட உதவிகள் தர முன் வந்துள்ளது./

    மனமார்ந்த வாழ்த்துகள்! தொடரட்டும் பணி.

    ---

    இணையத்தில் பதிவுத் திருட்டு தடுக்க முடியாத ஒன்றாகிவிட்டது. நீக்கிய வரையில் திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியதாகிறது.

    ReplyDelete
    Replies
    1. சமூகத்திற்கு பயனுள்ள பதிவுகளின் போதெல்லாம் ஊக்குவிக்கிறீர்கள் மேடம் நன்றி

      Delete
  2. பொழுது போகாத சமயம் RJ பாலாஜியின் பேச்சை ,கேட்க மிகவும் பிடிக்கும் இவரது ஆகோபித்த ஏகோபித்த ஓகோபித்த ரசிகன் நான்

    ReplyDelete
    Replies
    1. நான் கூட பேன் ஆகிட்டேன் சீனு; மனம் விட்டு சிரிக்க முடியது

      Delete
  3. Anonymous10:05:00 AM

    அம்மணியின் தீவிர ரசிகரோ..சேவை இல்லத்தின் சேவைக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. அப்படி எல்லாம் இல்லீங்கோ நன்றி

      Delete
  4. உங்கள் பதிவுகளை திருடி பதிவிடும் ஆசாமியின் 'தன்னம்பிக்கை' நன்கு புலனாகிறது. அவர் முழு விலாசமும் அங்கு கொடுத்திருப்பதால் இலகுவாக ஒரு வக்கீல் நோடீஸ் தட்டி விட்டு அதன் பிரதியை 'facebook ' தளத்திற்கு அனுப்புங்கள். இழுத்து மூடி விடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நிஷா முகநூலுக்கு தகவல் மட்டும் அனுப்பி உள்ளேன்

      Delete
  5. போஸ்டர் கார்னர் அருமை! பாமகவினரின் அட்டகாசம் சமீபத்தில் 2 நாட்களுக்கு முன் ராணிப்பேட்டை போனபோது தெரியவந்தது. மீடியாவில் பெயரை வரவைப்பதற்கு என்னவெல்லாம் படுத்துகிறார்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க உமா ; நடப்பதை காண சற்று வருத்தமா தான் இருக்கு

      Delete
  6. மகிழ்ச்சியான செய்தி : உண்மையிலேயே எங்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான் மோகன்.'சேவை' இல்லத்தின் 'தேவை' அறிந்து உதவ வந்த அந்த தொண்டு நிறுவனத்திற்கு எங்கள் (என், அம்மா சார்பில்) நன்றியை தெரிவிக்கவும்.

    மேலும் 'வீடு திரும்பல்' வாசகர்களில் ஒருவராக, ரூபாய் 1001 என் சார்பாக தங்களுக்கு DD அல்லது தங்கள் வங்கி A/C நம்பர் கொடுத்தால் அனுப்பி வைக்கிறேன். சேவை இல்ல மாணவிகளுக்கு ஏதேனும் சிறு உதவிகள் தேவைபட்டால் (எழுது பொருள்/நோட்டு, புத்தகங்கள்) அதற்க்கு உதவும்படியான என்னால் ஆன ஒரு சிறு தொகை.

    மீண்டும் அம்மா மற்றும் சேவை இல்ல பொறுப்பாளர் திரு. அசோகன் சார்பாக தங்களின் தொடர் முயற்சிக்கு என் நன்றிகள் பல.

    சேவை இல்லம் பற்றிய என் முந்தைய பதிவு...

    http://aathimanithan.blogspot.in/2011/12/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆதி; இரு பக்கமும் (School & NGO) பேசியுள்ளேன்; பள்ளிக்கு நல்லது விரைவில் நடக்கட்டும்

      உங்களின் பங்களிப்பும் (Rs. 1001) அதில் சேரட்டும்

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...