Monday, May 27, 2013

தொல்லை காட்சி- TMS- ராதாமோகன் - அனுஷ்கா விளம்பரம்

சூர்ய வணக்கத்தில் ராதா மோகன்

இயக்குனர் ராதா மோகன் சிறப்பு விருந்தினராக சன் டிவியின் சூர்ய வணக்கத்தில் வந்தார். மொழி, அபியும் நானும் போன்ற அற்புத படங்கள் எடுத்தவரிடம் அவரது சமீபத்திய படமான கௌரவம் பற்றி மட்டுமே பேசினர். அவரும் ஆர்வமாய் பல விஷயங்கள் சொல்லி கொண்டிருந்தார். கண்டிப்பாக என்ற வார்த்தையை வரிக்கு வரி சொல்லி கொண்டிருந்தார் இயக்குனர்.

" இந்த படம் கண்டிப்பா இளைஞர்களுக்கு பிடிக்கும் "

" இந்தியாவின் எதோ ஒரு மூலையில் கண்டிப்பா இதை மாதிரி சம்பவம் நடந்துகிட்டிருக்கு "

"கண்டிப்பா படத்தை தியேட்டரில் பாருங்க "

என்று பேசி கொண்டே போனவரிடம்

" தியேட்டரை விட்டு படம் கண்டிப்பா ஓடிடுச்சுங்க " என்று நான் கத்தியது  அவருக்கு கண்டிப்பா கேட்டிருக்காது !

கேப்டன் டிவியில் "அசத்தல் அரங்கம் "

விசுவின் அரட்டை அரங்கம் பாணியில் அப்படியே உல்ட்டா அடித்து கேப்டன் டிவியில் "அசத்தல் அரங்கம் " நடத்துகிறார்கள். நடிகர் ரமேஷ் கண்ணா  ொகுத்து வழங்குகிறார். செலக்ஷன் துவங்கி நிகழ்ச்சி வரை அப்படியே அரட்டை அரங்கம் பாதிப்பு தான் !

10 வயது பெண் 25 வயது மாதிரி பேசுகிறார். கண்ணீர் கதைகள் சொல்லப்பட உடனடி உதவிகள் கிடைக்கின்றன. ரமேஷ் கண்ணா அதிகம் பேசாமல் அடக்கி வாசிப்பது மட்டுமே ஆறுதல்

நிகழ்ச்சியில் பேசுவோரும், பார்வையாளர் வரிசையில் வருவோரும் மட்டுமாவது தங்கள் முகம் டிவியில் வருது என்று இவற்றை பார்ப்பார்கள் ! அவ்ளோ தான் !

நேரம் - நஸ்ரியா 

நேரம் பட குழு விஜய் டிவி யில் பேசினர். நம்ம மக்கள் நஸ்ரியா, நஸ்ரியா என்று புலம்புகிறாரே - அவரும் வந்து பேசினார்.



அம்மணி இப்போ தான் பிளஸ் 2 எழுதிருக்காராம் ! (எல்லாரும் அதையே சொல்றீங்க ??) தமிழ் தெரியாதாம் (ஒரே பீட்டர் தான் !) படம் சூப்பர் ஹிட் ஆனதாலே தியேட்டரில் ஸ்க்ரீன் கீழே -- தரையில் உட்கார்ந்து அவங்க நண்பர்கள் படம் பாத்தாங்களாம் (அடேங்கப்பா !) இப்படி பல கதைகள் சொல்லிகிட்டே போனாங்க ...

முக்கியமான விஷயம். அம்மணி நேரில் பார்க்க ரொம்ப சுமார் தான்.. மேக் அப்-பில் தான் நிறைய பில்ட் அப் என்பது தெளிவாய் தெரிந்தது !

TMS க்கு அஞ்சலி

TMS மறைவு செய்தியை பல சானல்கள் கவர் செய்தாலும், சன் நியூசில் பல மணி நேரம் அவரது இல்லத்திலிருந்து தொடர்ந்து பலரிடம் பேட்டி எடுத்து ஒளிபரப்பினர். அவரது பல அற்புத பாடல்கள் ஒளிபரப்பி நெகிழ வைத்தனர். சிவாஜி மற்றும் எம். ஜி. யார் இருவருக்கும் பெரும்பாலான பாடல்களை பாடியது இவர் தான் என்பதும், அந்த பாடலை கேட்டாலே அது இருவரில் யாரின் பாடல் என்று தெரியுமளவு பாடியதும் தான் உடனடியாக TMS என்றதும் நினைவுக்கு வருகிறது. நூற்றுகணக்கான நினைவில் நிற்கும் பாடல்களை பாடிய TMS க்கு எமது அஞ்சலி !

பெஸ்ட் ஹவுஸ் - விஜய் டிவி நிகழ்ச்சி 

சிறந்த இல்லத்தை தேர்வு செய்யும் விஜய் டிவி நிகழ்ச்சி முடிவுகள் நேற்று ஒளிபரப்பானது. முடிவுகள் அறிவிக்கும் முன் போட்டியில் பங்கேற்ற பல்வேறு வீடுகளை காட்டினர். பின் விருது நிகழ்ச்சியை காட்டும்போது - ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த வீடு என தேர்ந்தெடுத்த வீட்டின் உரிமையாளரை அழைத்து பரிசு தந்தனரே ஒழிய - பரிசு பெற்ற வீடு எது என்பதை காட்டவே இல்லை ! இப்படி பரிசு பெற்ற வீட்டை கூட காட்டாமல், அந்த வீட்டின் உரிமையாளரை மட்டும் காட்டுவதில் என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும் ! இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாமல் நிகழ்ச்சி/ போட்டி நடத்தும் இவர்களை என்ன செய்வது ? ஹூம்

ரசித்த விளம்பரம்- சார் அனுஷ்கா சார் !

அனுஷ்கா சென்னை சில்க்ஸ்க்காக நடித்த இந்த விளம்பரத்தை நாம் பல முறை டிவி யில் பார்த்திருப்போம். அவையெல்லாம் 15 நொடி அல்லது 20 நொடியாக இருக்கும். ஒரு நிமிடத்துக்கு வரும் இந்த முழு விளம்பரம் + அதில் தலைவி தரிசனம் கண்டு மகிழுங்கள் !

5 comments:

  1. தியேட்டரை விட்டு படம் கண்டிப்பா ஓடிடுச்சுங்க " என்று நான் கத்தியது அவருக்கு கண்டிப்பா கேட்டிருக்காது !
    >>>
    இப்போ கேட்டிருக்கும் இந்த பதிவை (படிச்சால்...,)

    ReplyDelete
  2. Anonymous1:34:00 PM

    நஸ்ரியா நச்சுரியாவாத்தான் இருக்காங்க..அனுஷ்கா அனுஷ்காதான்..

    ReplyDelete
  3. TMS - என்ன ஒரு குரல்வளம்..... அவரது பாடல்கள் இருக்கும்வரை அவரது புகழ் மறையாது......

    அனுஷ்கா! - அது சரி..... :)

    ReplyDelete
  4. "தியேட்டரை விட்டு படம் கண்டிப்பா ஓடிடுச்சுங்க........" ஹா...ஹா.....

    விளம்பரம் அழகு.

    ReplyDelete
  5. வாங்க ராஜி ரொம்ப நாள் கழித்து இந்த பக்கம்

    கலியபெருமாள் நன்றி

    நன்றி வெங்கட் நலமா

    நன்றி மாதேவி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...