Saturday, June 29, 2013

உணவகம் அறிமுகம் - கார்த்திஸ் ஹாட் கிட்சன், தாம்பரம்

தாம்பரம் காந்தி ரோடில் இருக்கிறது கார்த்திக் ஹாட் கிட்சன் என்கிற இந்த சிறிய கடை. பிரபு என்கிற 24 வயது இளைஞர் கேட்டரிங் படித்து விட்டு துவங்கியிருக்கிறார். இள ரத்தம்.... புதிதாய் செய்து பார்க்கணும், படித்த நல்ல விஷயங்களை முயற்சிக்கணும் என்கிற ஆர்வம் நிறையவே இருக்கிறது.


ஓபன் கிச்சனில் எந்த உணவாயினும் சொன்ன பின் தான் செய்ய துவங்குகிறார்கள். "எந்த உணவும் 4 மணி நேரத்துக்கு மேல் வச்சிக்க கூடாது சார்; புட் பாய்சன் ஆக வாய்ப்பு இருக்கு அதான் அப்பப்போ தயார் செஞ்சு தர்றோம்" என்கிறார் பிரபு (எவ்வளவு நாள் இந்த வைராக்கியம் தாங்குமோ?)

20 ரூபாய்க்கு அருமையான பூரி - கிழங்கு தருகிறார்கள் .....! பெரிய சைஸ் ஸ்பெஷல் தோசை 25 ரூபாய்.. தேங்காய் சட்னி, கார சட்னி, சாம்பார் முட்டைக்கான மசாலா (இலவசம் பாஸ் !) என வெரைட்டியாக சைட் டிஷ் வைக்கிறார்

பரோட்டா பெரிதாக மிக மென்மையாக இருக்கிறது. " பரோட்டாவில் முட்டை போடணும் சார்; அப்ப தான் சாப்ட்நெஸ் வரும்" என தொழில் ரகசியம் பகிர்கிறார் பிரபு

முட்டைக்கான தொக்கு மற்றும் தேங்காய் சட்னி நன்றாகவே இருந்தது

மதியம் சாப்பாடு - 50 ரூபாய்க்கு அன் லிமிடட் தருகிறார்களாம்.. மீன் குழம்பு, சிக்கன் குழம்பு உட்பட.

விலை குறைவாய், அளவும் அதிகமாய் இருப்பது கடை புதிதாய் துவங்கப்பட்டதாலா என்று தெரியலை இப்போதைக்கு குட் !

மேலதிக தகவல்கள்

கடை: கார்த்திக் பாஸ்ட் புட்
காந்தி ரோடு, தாம்பரம்
வகை: வெஜ் மற்றும் நான் வெஜ்

12 comments:

  1. விலை குறைவாய், அளவும் அதிகமாய்
    >>
    இது தெரிஞ்சா தாம்பரம் வாழ் அம்மணிங்க சமைக்க மாட்டாங்களே!

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை ஆரணியில் திறக்கவில்லை

      Delete
    2. Anonymous7:51:00 PM

      ஆரணியில் மட்டும் திறந்திருந்தா ராஜி அக்கா வீட்ல மூணு வேளையும் ஹோட்டல் சாப்பாடு தான்

      Delete
  2. //விலை குறைவாய், அளவும் அதிகமாய் இருப்பது கடை புதிதாய் துவங்கப்பட்டதாலா என்று தெரியலை //

    F&B business gives 60% margin in general. Being generous in the beginning is to attract patrons. As business picks up, greed overtakes quality, quantity, hygiene and service. That is the reason for many well started restaurants go down the drain after 2/3 years.

    ReplyDelete
  3. நல்லது தலைவரே...
    அந்தப்பக்கம் போறதுமாதிரி இருந்தா கண்டிப்பாக ஒரு கை பார்த்துடுறோம்

    ReplyDelete
  4. ம்.... போகப்போக நிலைமை மாறாம இருந்தா சரி....

    ReplyDelete
  5. தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  6. mohan, the way you describe the eatable bring the lingering taste to my mind. great.

    ReplyDelete
  7. பகிர்வுக்கு நன்றி!!!!

    ReplyDelete
  8. //விலை குறைவாய், அளவும் அதிகமாய் இருப்பது கடை புதிதாய் துவங்கப்பட்டதாலா என்று தெரியலை//

    ஆரம்பகால ஜோராக இல்லாமல் இருந்தால் பெரிய அளவில் வர வாய்ப்பிருக்கிறதுன்னு சொல்லுங்க..

    ReplyDelete
  9. பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி !

    ReplyDelete
  10. அங்கு சாப்பிட்டேன்,,,சூப்பர்....அறிமுகம் செய்ததற்கு நன்றி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...