Monday, June 6, 2016

தொல்லைகாட்சி: ஐ லவ் யூ மெசேஜ்-கல்யாணம் முதல் காதல் வரை

சன் மியூசிக்கில் ஐ லவ் யூ மெசேஜ்-கள் 

சன் மியூசிக்கில் பாட்டு போடும்போது கீழே ஸ்க்ரோல் ஆகும் வரிகளைக் கவனித்துள்ளீர்களா?

ரமேஷ்... ஐ லவ் யூ; கவிதா யூ ஆர் மை செல்லம் என்கிற ரீதியில் இருக்கும்...

ரமேஷ், கவிதா என்கிற பெயர்கள் இருக்கட்டும். சற்று வித்யாசமான யாருக்கும் எளிதில் வைக்காத பெயர்கள் போட்டு இத்தகைய மெசேஜ்  வரும்போது வீட்டில் பார்த்தால் பிரச்சனை ஆகாதா?

காதலை நேரில் சொல்ல பயப்படுபவர்கள் இங்கு மெசேஜ் அனுப்பிவிட்டு " சன் மியூசிக் பாரு" என காதலிக்கு தகவல்  அனுப்ப மட்டுமே இது பயன்படும்... இதனை எதற்கு ஊக்குவிக்கிறார்களா தெரிய வில்லை !!

சீரியல் கார்னர்: கல்யாணம் முதல் காதல் வரை 

நம்ம ப்ரியா இருப்பதால் எப்பவாவது ஒரு முறை பார்ப்பதுண்டு. இந்த வாரம் ஏழெட்டு பேர் சேர்ந்து கொண்டு ப்ரியாவிடம் தவறாக நடக்க முயற்சிப்பதாக காட்சி (வில்லன் ஏற்பாடு)

இதனால் ப்ரியா ரொம்ப அப்செட்.. குடும்பத்தில் ஒவ்வொருவரும் அப்செட் ..இதனை வைத்து கொண்டே சில வாரம்   ஓட்டுவார்கள் ...



நான் கவனித்தவரை எந்த ஒரு சீரியலாய் இருந்தாலும் அதன்  கான்செப்ட் இது  தான் : நல்லவன்(ள்) - கெ ட்டவன்(ள்)- என 2 க்ரூப் எஸ்டாப்ளிஷ் செய்து  விடுகிறார்கள். பின் கெட்டவர்கள் - நல்லவர்களுக்கு ஏதேனும் சோதனை தர, நல்லவர்கள் முதலில் பிரச்சனையில் மாட்டி கொள்கிறார்கள். பின் நிச்சயம் ஓரிரு வாரத்தில் அந்த பிரச்சனை சரியாகிறது.. இப்படி நல்லவர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் வருவதும், தீர்வதும் தான் எந்த சீரியலிலும் திரைக்கதையாய் இருக்கிறது ! (டிவி சீரியலுக்கு ஸ்க்ரீன் ப்ளே எழுதும் கோஷ்டியில் சேர்ந்துடலாம் போலிருக்கு !)

ஆதித்யா டுப்ஸ்மாஷ்சில் நடிகர்கள்

டுப்ஸ்மாஷ் வந்த புதிதில் சில அட்டகாச நகைச்சுவைகள் காண முடிந்தது. தற்போது வருபவை பெரும்பாலும் ரசிக்கும்படியோ - சிரிக்கும் விதமோ இல்லை..

சினிமா நடிகர்கள் விஷால், K S ரவிக்குமார், சூரி, கார்த்திக், பாக்யராஜ், நாசர், மும்தாஜ் நடித்த டுப்ஸ்மாஷ் ஆதித்யாவில் ஒளிபரப்புகிறார்கள்.. எல்லோருமே பக்காவாக நடிக்கிறார்கள்.. நடிப்பு ஒரு பயிற்சி என்பதும், தொடர்ந்து அதை செய்பவர்களுக்கே  நன்கு வரும் என்பதும் உணர முடிகிறது..

கிரிக்கெட்

சரியோ தவறோ இந்தியர்களில் பெரும்பான்மை மக்களுக்கு பிடித்த விளையாட்டாக கிரிக்கெட் இருந்து வருகிறது. கிரிக்கெட் ஆட்டத்தின் பல்வேறு நுணுக்கங்களை விரிவாக அலசுகின்றனர் இந்நிகழ்ச்சியில்.

சிறந்த பழைய கிரிக்கெட் மேட்ச்கள், அற்புத படங்கள், வீடியோக்கள், பவுலிங் டெக்னிக், பேட்டிங் டெக்னிக் என பிரித்து மேய்கிறார்கள். லெக் ஸ்பின் எப்படி வீசுவது, சுவீப் ஷாட், ஸ்கொயர் டிரைவ் இப்படி பல விஷயங்களை பற்றி தங்கிலிஷில் பேசுகிறார் நிகழ்ச்சி தொகுப்பாளர்

சனிக்கிழமை மாலை 7.30 க்கு சன் நியூஸ் தொலை காட்சியில் வருகிறது இந்த நிகழ்ச்சி..

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி

அரவிந்த்சாமி நடத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி துவங்கி விட்டது; ஒரே ஒரு நாள் தான் பார்த்தோம். நிச்சயம் எதிர்பார்த்த அளவு இல்லை ! இந்த நிகழ்ச்சி நடத்த தேவையான சுறுசுறுப்பு, உற்சாகம் போன்றவை அரவிந்த்சாமியிடம் மிஸ்ஸிங்.

மட்டுமல்ல, எந்த சாமி வந்தாலும் விஜய் டிவியை திருத்த முடியாது. ஹாட் சீட்டில் அமர்ந்து பதில் தந்த இருவரை - ரோஸ் குடுத்து, முட்டி போட்டு ஐ லவ் யூ சொல்லுங்க என அரவிந்த்சாமி கெஞ்சு கெஞ்சென்று கெஞ்சியதை காண சகிக்க வில்லை !

நீயா நானா

+2 வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இரண்டு பக்கமும் இருந்து பேசினர்; ஒரு பக்கம் அரசு பள்ளி மாணவர்கள்; இன்னோர் பக்கம் தனியார் பள்ளி மாணவர்கள்.

தனியார் பள்ளி மாணவர்கள் - அவர்கள் பள்ளிகளில் எப்படி எல்லாம் பரீட்சைக்கு தயார் செய்வார்கள் என சொன்னது ஆச்சரியமாய் இருந்தது; அவர்கள் சொன்ன டெக்னிக்குகள் பரீட்சை எழுதும் பலரும் - தனியார் பள்ளி/ கல்லூரி நடத்தும் எவரும் பின்பற்றலாம். தேவைபட்டால் இணையத்தில் நேற்றைய நிகழ்ச்சி ( 5 ஜூன் 2016) தேடி பாருங்கள்..

அரசு பள்ளிகளில் மிக அதிக மதிப்பெண் வாங்கிய பெண் வந்திருந்தார். 195.5 கட் ஆப் வாங்கிய அந்த பெண்ணுக்கு அண்ணா யுனிவர்சிட்டியில் சீட் கிடைப்பது கஷ்டமாம் ! மாநில அளவில் அரசு பள்ளியில் முதல் இடம் பெற்ற பெண்ணுக்கே இந்த கதி என்றால்?? தலையை சுற்றுகிறது !

அரசு பள்ளிகளில் - அநேகமாய் ஒரு பாடத்திற்காவது ஆசிரியரே இன்றி மாணவர்கள் படித்த நிலை அதிகமாக இருப்பதை அறிய முடிந்தது. மேலும் அவர்கள் ஒவ்வொரின் பெற்றோரும் அநேகமாய் மிக சாதாரண வேலை செய்பவர்கள்.. 1130, 1150 என அவர்கள் மார்க் சொன்ன போதும் BC என்பதால் - தனியார் கல்லூரிகளில் மட்டும் தான் அவர்களுக்கு சீட் கிடைக்க கூடும் என்றனர் ..

சாதி சார்ந்த இட ஒதுக்கீடு ஒரு பக்கம் இருந்தாலும், பொருளாதாரம் சார்ந்த இட ஒதுக்கீடை - குறைந்த அளவிலாவது அறிமுகப்படுத்தினால் நலமாய் இருக்கும் என எண்ண வைத்தது இந்த நிகழ்ச்சி !

பிற்சேர்க்கை: 

இதே நிகழ்ச்சியை பார்த்த பத்ரி நாராயணன் என்கிற நண்பர் முகநூலில் பகிர்ந்தது இது:

Yesterday's Neeya Naana program in Star Vijay was one of the best san controversies. The way in which the entire episode was modulated deserves appreciation. The plight of corporation school students was brought to light. The determination with which those poor students, sons and daughters of weekly wage laborers of measly sums preparing for exams in not a good environment deserves lot of appreciation. The teachers of those schools helping poor students monetarily and otherwise are close to God. Wish and pray these students come up well in their life. May God bless all of them.

3 comments:

  1. சுவையான அலசல்! நன்றி!

    ReplyDelete
  2. அருமையான அலசல்
    நிகழ்சித் தயாரிப்பாளருக்கு
    உள்ளத்தில் மாற்றம் வந்தாலும்
    முதலீட்டாளர்கள் உள்ளத்தில் மாற்றம் வராதே!

    ReplyDelete
  3. சுப்பர் சிங்கருக்கு என்ன ஆச்சு? நிறுத்திவிட்டார்களா?

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...