சார்டர்ட் அக்கவுண்டன்சி படிப்பை பற்றி கேள்விப்படாதோர் இருக்கவே மாட்டார்கள்.. !
இந்தியாவில் 66 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த படிப்பு குறித்த சில தகவல்கள் ....
CA படிப்பை முடிக்க எத்தனை வருடங்களாகும்? எவ்வளவு செலவாகும்?
முதல் கேள்வியே பவுன்சரா?? இந்த கேள்வியை C A படிக்கும் மாணவனிடம் கேட்டு பாருங்கள்.. ஒவ்வொருவரிடமிருந்து ஒவ்வொரு பதில் வரும் .. !!
மிக சிறந்த அறிவாளி + மிக மிக கடுமையான உழைப்பாளி என்றால் 4 வருடத்திற்குள் முடிக்கலாம். ஆவரேஜ் ஆக 5 வருடமாவது ஆகும்.
7 வருடம், 8 வருடம் எடுத்து கொள்வோரும் உண்டு... கோர்சை முடிக்காமல் விட்டு விடுவோரும் உண்டு..
துவக்கம் முதல் இறுதி வரை இன்ஸ்டிடியூட்டுக்கு கட்ட வேண்டிய பணம் 50,000 ஆகும் என இவர்கள் இணைய தளம் கூறுகிறது. செல்ல வேண்டிய டியூஷன் வகுப்புகள், இன்ஸ்டிடியூட்டு தருவதை தவிர வாங்கும் புத்தகங்கள் ஆகியவை தனியான செலவாகும்
எத்தனை நிலைகள் உள்ளன?
+ 2 படித்த மாணவர்கள் CPT என்கிற துவக்க நிலையில் சேரலாம். இது 4 பேப்பர்களை கொண்டது. தற்சமயம் இது ஒரு மார்க் வினாக்களை மட்டுமே கொண்ட (Objective Type/ Multiple Choice Questions) தேர்வாக இருக்கிறது. விரைவில் பாதி மட்டும் ஒரு மார்க் கேள்விகள் மீதம் - கேள்வி பதில் பாணியில் எழுதும் தேர்வாக மாற்றப்பட உள்ளது என்கிறார்கள்..
CPT பாஸ் செய்தவர்களும், டிகிரி அல்லது ACS/ ICWA முடித்தவர்கள் இன்டர் மீடியட் என்கிற இரண்டாம் நிலைக்கு செல்லலாம்.
இது 2 க்ரூப்களை கொண்டது. ஒரு க்ரூப்பில் 4 பேப்பர்கள், இன்னொரு க்ரூப்பில் 3 பேப்பர்கள். மொத்தம் இந்த நிலையில் 7 பேப்பர்கள்.
ஒரு க்ரூபில் ஒவ்வொரு பேப்பரிலும் 40 மார்க்கும் மொத்தமாக - நான்கிலும் சேர்த்து 200 மார்க்கும் எடுக்க வேண்டும். (50 %)
இதுவே 7 பேப்பர்களும் சேர்த்து எழுதினால், ஒவ்வொரு பேப்பரிலும் 40 மார்க்கும் மொத்தமாக - சேர்த்து 350 மார்க்கும் எடுக்கவேண்டும்.
இன்டெர் மீடியட் பாஸ் செய்தவர்கள் பைனல் - எனும் இறுதி நிலைக்கு செல்லலாம். அங்கு மொத்தம் 8 பேப்பர்கள் உள்ளன. பாஸ் செய்ய தேவையான மார்க்குகளும் மேற் சொன்னவாறே.
வெவ்வேறு தேர்வுகளில் பாஸ் பெர்சண்டேஜ் எவ்வளவு? சேருவோரில் எத்தனை பேர் படிப்பை முடிக்கிறார்கள்?
பவுண்டேஷனை பொறுத்த வரை தேர்வு எழுதுவோரில் சுமார் 12 முதல் 15 சதவீதம் பேர் தேர்வு பெறுகிறார்கள்.
அடுத்த நிலையான இண்டர்மீடியட்டில் தேர்வு எழுதும் மாணவர்களில் 10% க்கும் குறைவாய் தேர்ச்சி பெறுகிறார்கள். இதுவே இறுதி தேர்வில் 5 % க்கும் குறைவாக இருக்கிறது..
இப்படி ஒவ்வொரு நிலையிலும் குறைந்த பெர்செண்டேஜ் மாணவர்கள் பாஸ் செய்வதால் - கடினமான கோர்ஸ் என மனதை தளர விடுவோர், வேறு பக்கம் சென்று விடுவோர் ஏராளம்..
எத்தகைய மாணவர்கள் இந்த படிப்பில் ஜொலிக்கிறார்கள்?
பொதுவாக CBSE பாட திட்டத்தில் படித்த மாணவர்கள் இந்த படிப்பில் நன்கு சோபிப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. இது ஓரளவு உண்மை தான். அந்த பாட திட்டத்தில் வெறுமனே மனனம் செய்யாமல் படிக்கவும், பாட புத்தகத்தை தாண்டி வெளியில் நிறைய படிக்க வாய்ப்பும் உள்ளது. இத்தகைய அடிப்படை C A போன்ற படிப்பை படிக்க பெரிதும் உதவுகிறது.
அதே நேரம் ஸ்டேட் போர்டில் படித்தோரும் ஏராளம் பேர் தேர்ச்சி பெறுகிறார்கள். இவர்கள் இன்னும் கொஞ்சம் அதிகம் உழைக்க வேண்டும். ஓரிரு ஆண்டுகளில் எந்த விதமாய் படிக்க வேண்டும் என்பதை இவர்களும் புரிந்து கொள்கிறார்கள்
தேர்ச்சி சதவீதம் மிக குறைவாக இருப்பதால் நன்கு படிக்கும் மாணவர்களை - C A படிக்க ஊக்குவியுங்கள். ஒரு வகுப்பில் முதல் நான்கைந்து இடம் வரும் மாணவர்களை படிக்க சொல்லலாம். இவர்கள் தொடர்ச்சியாக கடின உழைப்பை தர தயாரானாவர்கள் என்பதால் - சிரமப்பட்டாவது முடிப்பார்கள். பிறரால் முடிக்க முடியாது என்றில்லை; முதல் சில ரேன்க் மாணவர்கள் என்றால் - கோர்ஸ் முடிக்க வாய்ப்புகள் அதிகம் அவ்வளவு தான்.
மற்றபடி மாணவனுக்கு எப்போது வேண்டுமானாலும் படிப்பு திடீர் சூடு பிடிக்கும்.. பள்ளி வரை சாதரணமாய் படித்து விட்டு கல்லூரி அல்லது மேற்படிப்பில் பிய்ச்சு உதறிய பலரை எனக்கு தெரியும் (ஹீ ஹீ.. இதை எழுதுபவரும் அந்த வர்க்கம் தான் )
ஆர்டிக்கில்ஸ்ஷிப் என்கிறார்களே .. அது என்ன ?
பாடங்கள் படித்து பாஸ் செய்வது முக்கியம் என்பது ஒரு புறம் என்றாலும், ப்ராக்டிகல் விஷயங்களில் இவர்களுக்கு அறிவு அவசியம் என்பதை உணர்ந்து ஆர்டிக்கில்ஸ்ஷிப் என்கிற முறையை இவர்கள் கடை பிடிக்கிறார்கள். 3 வருடம் ஒரு ஆடிட்டரிடம் சேர்ந்து பணியாற்ற வேண்டும். இன்டெர் மீடியட் படிப்பு படிக்கும் போதே இந்த ஆர்டிக்கில்ஸ்ஷிப் வேலையும் செய்யலாம். இந்த பயிற்சி ஆடிட்டரிடம் மட்டும் தான் எடுக்க முடியும். கம்பனியில் எடுக்க முடியாது. எந்த விதமான முன் அனுபவம் இருந்தாலும் - எத்தனை வயது ஆயினும் ஆர்டிக்கில்ஸ்ஷிப் அவசியம் ! இதில் எந்த வித விலக்கும் கிடையாது !
ACS , ICWA போன்ற படிப்பை முடித்தோருக்கு தேர்வுகளில் ஏதேனும் Exemption உண்டா?
இல்லை !! ACS முடித்தோருக்கு ICWA தேர்வில் பாதி பேப்பர்கள் Exemption தந்து விடுவர். போலவே ICWA முடித்தோருக்கு ACS தேர்வில் Exemptionகள் ஏராளம் உண்டு. ஆனால் CA இன்ஸ்டிடியூட் வேறு எந்த படிப்புக்கும் Exemption தருவது இல்லை.
ACS / ICWA முடித்தோர் நேரடியாக இண்டர்மீடியட் எழுதலாம் என்கிறார்கள். இதே சலுகை எந்த டிகிரி முடித்தோருக்கும் வழங்கப்படுகிறது ! அவ்வளவு தான் !
CA முடித்தவர்கள் என்ன விதமான வேலைகள் செய்கிறார்கள்?
சிறு கம்பனி துவங்கி பெரிய நிறுவனம் வரை - எந்த ஓர் நிறுவனத்திலும் அக்கவுண்ட்ஸ் / பைனான்ஸ் டிப்பார்ட்மெண்ட் இருக்கும். இதன் தலைமை அதிகாரி அநேகமாய் ஒரு CA படித்த நபராய் இருப்பார். பெரிய நிறுவனம் எனில் அவருக்கு கீழ் அதே டிப்பார்ட்மெண்ட்டில் CA படித்த இன்னும் சில இளைஞர்கள் வேலை பார்ப்பர்.
ஆடிட் செய்யும் நிறுவனங்களும் C A படித்தவர்களை அவசியம் வேலைக்கு வைத்து கொள்கின்றன..
ஒரு சில நாடுகள் தவிர்த்து பெரும்பாலான வெளிநாடுகளில் C A படித்தவர்களை வேலைக்கு எடுத்து கொள்கிறார்கள்.
மேலும் இவர்கள் தனியாக ஆடிட், கன்சல்டன்சி வேலையும் செய்யலாம் ! சுயமாய் தொழில் செய்யும் போது துவக்கம் சற்று சிரமமாய் இருந்தாலும் - சில ஆண்டுகளில் நல்ல நிலைக்கு வந்து விடுவர்...
தேவை கவனம் !!
நிச்சயம் C A ஒரு அற்புதமான படிப்பு தான். இதனை முடித்து ஒருவர் கூட வேலை இல்லாமல் இருக்கிறார் என சொல்ல முடியாது. முடித்த அனைவரும் தங்கள் திறமைக்கேற்ப ஊதியம் ஈட்டுகின்றனர்.. எல்லாம் சரி தான்..
ஆனால் சினிமா துறைக்கு வந்து ஷைன் செய்தோர் சில நூறு பேர்.. சிறு வாய்ப்பு கூட இன்றி சிரமப்படுவோர் ஏராளம் என்கிற மாதிரி.. இந்த கோர்ஸ் முடிக்க முடியாமல் விட்டு விட்டோர் எண்ணிக்கை பல லட்சம் தாண்டும்..
எனவே எந்த ஒரு மாணவனும் இந்த கோர்ஸ் பற்றி முழுதாக அறிந்து கொண்டு , பாட திட்டம், பாஸ் பெர்சண்டேஜ் உள்ளிட்டவை பற்றி அறிந்து கொண்டு அப்புறம் சேர்வது தான் நல்லது..
மேலும் ஆர்வமில்லாத எந்த ஒரு மாணவரையும் இதற்குள் தள்ளுவது நல்லதல்ல..
இணைய தள முகவரி: http://www.icai.org/
சென்னை அலுவலகம் :
‘ICAI Bhawan’, 122 MG Road, Post Box No. 3314
Nungambakkam, Chennai - 600 034
Phone 044-39893989, 30210300
தொடர்புடைய பதிவுகள்:
கம்பனி செக்ரட்டரி படிப்பும் வேலை வாய்ப்பும்
வக்கீல் படிப்பு- வேலை வாய்ப்பு - ஓர் அலசல்
காஸ்ட் அக்கவுன்ட்டசி கோர்ஸ் - ஒரு பார்வை

பயனுள்ள தகவல்கள்! நன்றி!
ReplyDeleteஅருமையான பதிவு CA பயிலும் மாணவர்களுக்கு நிச்சயம் உதவும் விதமாக தெளிவான பதிவு!
ReplyDeleteமிக்க நன்றி சார்