டில்லி அல்லது சண்டிகார் இவை இரண்டில் எங்கிருந்து வேண்டுமானாலும் சிம்லா எளிதாக செல்லலாம். பேருந்து, விமானம், கார் என அனைத்து விதத்திலும் சிம்லா அடையலாம். ஹிமாச்சல் பிரதேஷின் தலைநகரம் என்பதால் போக்குவரத்து பல வழிகளிலும் ( mode ) உண்டு.
சிம்லாவுக்கு ரயிலில் செல்வது மிக சிறப்பானது. காரணம் இது ஒரு டாய் டிரெயின். இந்த அனுபவம் மிக புதிதாய் வித்யாசமாய் இருக்கும்
டில்லி டு கல்கா சதாப்தியில் |
கல்காவிலிருந்து தினம் ஆறு ரயில்கள் ( Toy train ) சிம்லா செல்கின்றன.
எங்கள் பத்து நாள் டூர் முழுதுமே இந்த டிரெயின் டிக்கெட்டை பொறுத்தே சுழன்றது. முதலில் இந்த டிரெயினில் புக் செய்து விட்டு, பின் தான் டில்லி செல்ல, மணாலி செல்ல, திரும்ப வர என அனைத்து டிக்கெட்டும் புக் செய்தோம்.
சிம்லா ரயில் பயணம் செய்ய விரும்பினால், நீங்கள் உங்களுக்கு எந்த தேதியில் டிக்கெட் கிடைக்கிறதோ அந்த நாளில் பயணம் செய்ய தயாராய் இருக்க வேண்டும். பலர் முதலில் மற்ற விமானம்/ ரயிலும் புக் செய்து விட்டு பின் சிம்லா ரயிலுக்கு டிக்கெட் புக் செய்ய முயல்கிறார்கள். அது கிடைக்காமல் பின் பஸ் அல்லது காரில் சிம்லா பயணிக்கிறார்கள்.
நாங்கள் பகல் பன்னிரண்டரைக்கு கல்காவில் கிளம்பி மாலை ஐந்தரைக்கு சிம்லா செல்லும் ரயிலில் சென்றோம்
நீங்கள் மேட்டுபாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் ரயிலில் ( Toy train ) சென்றுள்ளீர்களா? அதே போன்ற அனுபவம் தான் இதுவும் ! இன்னும் கொஞ்சம் அதிக மலைகளையும், பசுமையான செடி கொடிகளையும் பார்க்க முடியும் என்பது தான் முக்கிய வித்யாசம். மேலும் ஊட்டி ரயிலில் செல்லும் போது சாப்பாடு வழியில் எங்கும் கிடைக்காமல் கஷ்டப்பட்டோம். இங்கு கல்காவிலேயே மதிய சாப்பாடு வாங்கி கொண்டு ரயில் ஏறினோம். வழியிலும் கூட உணவு கிடைக்கிறது. இருந்தாலும் கல்காவில் உணவு வாங்கி விடுவது நல்லது
ஆறு அல்லது ஏழு பேட்டிகள் கொண்ட சிறிய ரயில் இது. எங்கள் ரயில் கிளம்பிய கொஞ்ச நேரத்தில் சிம்லா கிளம்பும் இன்னொரு ரயில் ஒரு மணி நேரம் அதிகமாக (ஆறரை மணி நேர பிராயணம்) செல்லுமாம் !
செல்லும் வழியெங்கும் மலை மேல் இருக்கும் அழகான வீடுகளை பார்க்க பொறாமையாய் இருக்கிறது.
இந்த ரயில் பாதை கட்ட ஆரம்பித்தது 1900-ல் . அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த பாதை முழுதும் போட்டு முடித்து 1903 முதல் இந்த ரயில் இயங்கி வருகிறது
2008 -ல் UNESCO இதை ஒரு " Heritage centre" என அறிவித்துள்ளது
ரயிலின் ஜன்னல் வழியே எடுத்த இந்த படத்தில் ரயில் ஒரு குகைக்குள் (Tunnel) நுழைவது தெரியும்
இந்த பாதையில் மொத்தம் 102 குகைகள் (Tunnel ) மற்றும் 917 வளைவுகள் உள்ளனவாம்
செல்லும் வழியில் ஆங்காங்கே பள்ளி சென்று திரும்பும் குழந்தைகள் உற்சாகமாக நம்மை பார்த்து கையசைக்கின்றனர்
ஓர் இடத்தில் ரயில் நின்ற போது அங்கிருந்த ஸ்டேஷனில் குட்டி ரயிலின் ஒரு பகுதி மட்டும் டிராக்கில் ஓட்டி கொண்டிருந்தனர். அப்போது எடுத்த படம்
மலைகளும் வீடுகளும் |
இந்த வீடியோவில் குகைக்குள் ரயில் நுழைந்து வெளியேறுவதும் அப்போது குட்டி பசங்க எழுப்பும் சத்தமும் பார்க்கலாம்
ஐந்தரை மணி நேரம் செல்லும் போது போக போக போர் அடிக்க தான் செய்யும். ஓரிரு குடும்பங்கள் சேர்ந்து போனால் அதிக போர் அடிக்காமல் செல்லும்.
எங்களுடன் ஒரு ஆந்திரா குடும்பம் பயணித்தது. அந்த பசங்களுடன் சேர்ந்து கார்ட்ஸ் ஆடினோம். பின்னர் இன்னும் சில விளையாட்டுகள் ஆடினோம்.
ஆந்திர குடும்பம் |
இந்த ஆந்திர குடும்பம் மிக நன்றாக எங்களுடன் பழகினர். அரசு துறையில் பணி புரிகிறார். அவர்கள் சிம்லாவில் தங்காமல் நேரே மணாலி மட்டும் பார்க்க சென்றனர்
மிக நீண்ட Tunnel- ஒன்று கடக்க ஐந்து நிமிடம் போல் ஆகிறது . செம திரில்லிங் மற்றும் ஜாலி ஆக இருக்கும். அந்த tunnel-ல் எடுத்த வீடியோ
ரயிலில், எங்கள் கம்பார்ட்மெண்டில் வந்த ஒரு குட்டி பையன் செம அழகாய் இருந்தான்.
சிம்லா நெருங்கியதும் ஆங்காங்கு உள்ள ஊர்களில் சிலர் இறங்குகிறார்கள் (உள்ளூர் மக்கள்)
படம் பிடிப்போரை படம் பிடிப்போம் கார்னர்
நண்பன் படத்தில் " என் பிரண்டை போல யாரு மச்சான்" மற்றும் த்ரீ இடியட்சில் அதே பாட்டும் எடுத்தது இந்த சாலையும், அதன் வளைவுகளிலும் தான். பாருங்கள் :
குறிப்பிட்ட தூரம் தாண்டியதும் குளிரை மிக நன்றாக உணர முடிகிறது. சென்னை மற்றும் டில்லி வெய்யிலை அனுபவித்த எங்களுக்கு முதல் முறை குளிர் காற்றை சுவாசிக்க மிக மகிழ்ச்சியாய் இருந்தது !
எனக்கும் போகனும்ன்னு ஆர்வம வந்திடுச்சி.. நன்றி..
ReplyDeleteவாசிக்கும்போதே, அங்கே போகணும்னு ஆசை வந்துடுது. எப்படி எல்லா இடங்களுக்கும் செல்ல ப்ளான் பண்ணீங்கன்னு நினைக்கும்போதுதான் ஆச்சரியமா இருக்கு.
ReplyDeleteஎங்கேயாவது வெளியூர் போகணும்னா உங்ககிட்ட கண்டிப்பா பேசணும் :)
நல்ல அனுபவ பகிர்வு சார்...நானே அந்த ட்ரெயின்ல பயணம் செஞ்ச மாதிரி இருந்திச்சு...
ReplyDeleteஅருமையான பகிர்வு மற்றும் புகைப்படங்கள் மூலம் நாங்களும் உங்கள்கூட பயணிப்பது போன்ற உணர்வு. வாழ்த்துக்கள்... (த.ம.5)
ReplyDeleteசிறப்பான அனுபவம் மற்றும் படங்களுடன் அழகிய கட்டுரை...
ReplyDeleteவாழ்த்துக்கள்..
அழகிய படங்களுடன் பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி...
ReplyDeleteதொடருங்கள்... வாழ்த்துக்கள்...(TM 8)
சிம்லா ..சொல்லும்போதே சும்மா சில்லுனு இருக்கு..உங்க பயண கட்டுரையை வச்சிக்கிட்டு தான் போகணும் அப்படிங்கிற ஆவல் இருக்கு..குகை வரும்போது நானும் விசில் அடுத்து கொண்டாடி உள்ளேன்.மேட்டுப்பாளையம் டு ஊட்டி ட்ரெயினில் அப்புறம் மங்களூர் டு கோவா கொங்கன் எக்ஸ்பிரஸ் இல்
ReplyDeleteஅருமை!
ReplyDeleteநாங்க டே டைம் போயிட்டு வந்துடலாமேன்னு கிளம்புனதில் ரயில் பயணத்தை தள்ளவேண்டியதாப்போச்சு. இத்தனைக்கும் சண்டிகரில் அப்போது ஜாகை.
வெறும் 115 கிமீட்டர்தானேன்னு அசட்டையா இருந்துட்டோம்:(
சிறப்பான பகிர்வுகள்.. படங்களுடன் பகிர்ந்ததற்குப் பாராட்டுக்க்ள்...
ReplyDeleteஎமது பதிவு.....
http://jaghamani.blogspot.in/2011/09/blog-post_22.html
இரயில் பயணங்களில் ......
நண்பன் பாடல் ஊட்டி என்று நினைத்தேன் ... உங்கள் பயணம் பயணிக்க பயணிக்க பரவசம்
ReplyDeleteபதிவை வாசிக்கும்போதே உங்களுடன் சேர்ந்து பயணிப்பதைப் போல இருந்தது..
ReplyDeleteசிறப்பான பகிர்வு...படங்கள் மிக அருமை....
ReplyDeleteசிறப்பான பகிர்வு...படங்கள் மிக அருமை....
ReplyDeleteசிறப்பான பகிர்வு...படங்கள் மிக அருமை....
ReplyDeleteவழக்கம் போல் அருமையான பயண கட்டுரை!
ReplyDeleteவழக்கம் போல் அருமையான பயண கட்டுரை!
ReplyDeleteவழக்கம் போல் அருமையான பயண கட்டுரை!
ReplyDeleteஜம்மு, பஞ்சாப், ஹிமாசல், சண்டிகர் ஆகியவற்றைப் பார்த்திருந்தாலும் இன்னமும் சிம்லா சென்றதில்லை. உங்கள் பதிவு அந்த ஆர்வத்தைத் தூண்டுகிறது.
ReplyDeleteஐஸ் இல்லாத சீசனுக்கு சிம்லா போவதும், ஊட்டிக்குப் போவதும் ஒன்று என சொல்லலாமா சார்?
ReplyDeleteசிம்லா குளிருது...
ReplyDeleteசிம்லா என்றதும் உடனடியாக ஞாபகத்துக்கு வருவது 'அன்பே வா' தான்! படங்கள் பிரமாதம். மழைக் காட்சிகள் பொறாமை கொள்ளத்தான் வைக்கின்றன!
ReplyDeleteநன்றாக உள்ளது தங்களின் பயண அனுபவக் குறிப்புகள். போட்டோ எல்லாம் நன்றாக உள்ளது.
ReplyDeleteஇரண்டு நாட்களாக மக்கள் டிவி பார்க்கவில்லை. மொத்தமாகப் பார்த்துவிட்டு எனது கருத்துகளை தெரிவிக்கிறேன்.
அழகிய படங்கள்.அருமையான வர்ணனை!
ReplyDeleteஇரண்டாண்டுகள் தில்லியிலும்,மூன்றாண்டுகள் ஃபரிதாபாத்திலும் இருந்தென்ன பயன்?ஜடம்!(என்னைத்தான்)
படங்களில் பார்த்து செல்லவேண்டுமென நினைத்த இடம்.
ReplyDeleteசிம்லா நேரில் காணக் கிடைக்குமா தெரியவில்லை. உங்கள் பதிவில் கண்டுகொள்வேன்.
கருன்: நன்றி அவசியம் ஒரு முறை போயிட்டு வாங்க நண்பா
ReplyDeleteகண்டிப்பா ரகு: ஒவ்வொரு ஊர் போகும் போதும் நானும் அங்கு ஏற்கனவே சென்ற நண்பர்கள் மூலம் தான் கேட்டு தெரிந்து கொள்கிறேன்
ReplyDeleteநன்றி ராஜ் மகிழ்ச்சி
ReplyDeleteமகிழ்ச்சி பாலஹனுமான் சார் நன்றி
ReplyDeleteவாங்க சௌந்தர் நன்றி
ReplyDeleteதனபாலன் சார்: தொடர் ஆதரவுக்கு நன்றி
ReplyDeleteகோவை நேரம்: நீங்கள் போன மங்களூர் டு கோவா கொங்கன் எக்ஸ்பிரஸ் இல் போனதில்லை போகணும்
ReplyDeleteதுளசி மேடம்: அடடா ! சண்டிகர் அருகே தான் கல்கா :(
ReplyDeleteநன்றி ராஜேஸ்வரி
ReplyDeleteசீனு: ஆம் எனக்கும் இந்த இடம் என அங்கு போன பின், பலரும் சொல்லி தான் தெரிந்தது
ReplyDeleteநன்றி தோழர் மதுமதி
ReplyDeleteஆட்டோமொபைல்: நன்றி
ReplyDeleteவணக்கம் வரலாற்று சுவடுகள் நன்றி
ReplyDeleteசீனி: டில்லி தானே? அவசியம் ஒரு முறை போய் வாருங்கள் நண்பா
ReplyDeleteநித்ய அஜால் குஜாலானந்தா : ஆஹா ! நல்லா கேட்டீங்க? சிம்லா வச்சு மத்த பதிவேல்லாம் நான் போட வேண்டாமா? அப்புறம் மக்கள் எப்படி படிப்பாங்க?
ReplyDeleteஒன்னு மட்டும் இப்போ சொல்றேன்: சிம்லா போக சிறந்த நேரம் டிசம்பர், ஜனவரி :) உங்களுக்கு பதில் கிடைச்சிருக்கும்
சங்கவி: நன்றி நண்பா
ReplyDeleteஸ்ரீராம் : நன்றி மகிழ்ச்சி
ReplyDeleteநன்றி அமைதி அப்பா முடியும் போது பாருங்கள். நீங்கள் தந்த லிங்க் மூலம் தான் நான் மறுபடி பார்க்கிறேன். நண்பர்களுக்கு அந்த லிங்க் சொல்கிறேன்
ReplyDeleteசென்னைப்பித்தன் ஐயா : தங்களின் முதல் வரி மகிழ்வு. பின் வரி வருத்தம்
ReplyDeleteநன்றி மாதேவி. உங்களுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்க வேண்டுகிறேன்
ReplyDeleteபடங்களும் பதிவும் மிக அழகு!வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
ஒண்ணொன்னு .. ஒண்ணொன்னு வேணும்!
http://thalirssb.blogspot.in
பதிலுக்கு நன்றி சார், அது சரி, இந்தப் பதில் எனக்கு மட்டும் தான் புரியும் என்று எப்படி நினைக்கிறீங்களோ தெரியலை!!
ReplyDeleteTunnel உள்ளே நுழையும் வீடியோ மணிரத்தினம் படம் மாதிரி இருட்டா இருக்கு. பயணம் செய்த போது திரில்லாக இருந்திருக்கும், ஆனால் மாமூல் ரயில் பெட்டியை சாதாரணமாகப் பார்க்கவே ஒண்ணுமிருக்காது, அதை இருட்டில் வேறு பார்த்தால் சொல்லவே வேண்டாம். I am not able to appreciate the thrill. ரயில் மலைப்பகுதியில் போகும் வழியில் நீங்கள் எடுத்திருந்த எதை பகிர்ந்திருந்தாலும் பார்க்க விருந்தாக அமைந்திருக்கும். [நான் உசிர குடுத்து பதிவு போடறேன், இவன் சும்மா வந்து நோகாம நொங்கு சாப்பிட்டுவிட்டு குறை சொல்றானே என்று நினைக்க வேண்டாம். இதை ஒரு +ve feedback ஆக எடுத்துக் கொள்ளுங்கள்!! பலர் இதை நினைத்திருந்தாலும் சொல்லத் தயங்கக் கூடும், நான் சொல்லிவிட்டேன், தட்'s all!!]
\\நண்பன் படத்தில் " என் பிரண்டை போல யாரு மச்சான்" மற்றும் த்ரீ இடியட்சில் அதே பாட்டும் எடுத்தது இந்த சாலையும், அதன் வளைவுகளிலும் தான். பாருங்கள் :\\ அப்போ அது ஊட்டி இல்லியா........... நான்தான் எமாந்துட்டேனா ....... :((
ReplyDeleteநித்ய அஜால்: உங்கள் கேள்வியையும் என் பதிலையும் சேர்த்து படித்தால் புரியும். அவ்வளவு மெனக்கெட்டு படிப்பவர்கள் குறைவே
ReplyDeleteவீடியோ பற்றி சொன்னது உண்மை தான். இந்த ரயில் பயணத்தில் எடுத்த சில வீடியோக்கள்/ இயற்கை காட்சி மிஸ்ஸிங். பத்து நாள்/ ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடியோ இடையே மிஸ் ஆகிடுச்சு. வீடியோ எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்றும் பார்க்க முடியும். பதிவை படிப்பதில் 5 % மக்கள் தான் வீடியோ பார்க்கிறார்கள்
I take your comment in the right spirit
சுரேஷ்: நன்றி
ReplyDeleteதில்,திராணி,இருந்தால் நாளை மாலை எங்கள் எடக்கு மடக்கு தளத்துக்கு வந்து பதில் கூறவும்
ReplyDeleteசிம்லா பார்க்கத்துடிக்கும் உங்கள் வாசகர்களுக்காக இங்கே மூணே மூணு சுட்டிகள். நேரம் கிடைக்கும்போது வாசிக்கலாம்:-)
ReplyDeletehttp://thulasidhalam.blogspot.co.nz/2011/05/blog-post_09.html
http://thulasidhalam.blogspot.co.nz/2011/05/1.html
http://thulasidhalam.blogspot.co.nz/2011/05/2.html
உங்கள் கையை பிடித்து கொண்டே யாத்திரை செல்வது போல இருக்குதே மக்கா...!
ReplyDeleteபடங்கள் தெளிவாக இருக்கின்றன.
ReplyDeleteசிம்லா போனதைப் படிக்கவாவது செய்கிறேன். தொடருங்கள்.