Monday, June 20, 2016

ஆதார் கார்ட் என்றொரு அபத்தம்

முதலில் நல்ல விஷயத்தை சொல்லி விடுகிறேன்.. 4 வருட படையெடுப்புக்கு பின் ஒரு வழியாய் ஆதார் கார்டுக்கான புகைப்படம் எனக்கும்- ஹவுஸ் பாசுக்கும் எடுத்து விட்டார்கள்..

முதல் வரியை சரியே கவனித்தீர்களா? 4 வருடங்கள்.. !! நான் இந்த போராட்டத்தை துவங்கி -  போட்டோ எடுக்கும் நிலைக்கு வரு முன் லட்சகணக்கான தமிழர்கள் இஞ்சினியரிங் கோர்ஸ் படிக்க துவங்கி, டிகிரியும் வாங்கி முடித்திருப்பார்கள் !!




முதல் கோணல் முற்றும் கோணல்

ஆதார் கார்ட் கணக்கெடுப்பு எப்படி துவங்கினார்கள் தெரியுமா?  சென்சஸ் எடுக்க வரும் டீச்சர்கள் ஆங்காங்கு வீடுகளில் வந்து தகவல் கேட்டு குறித்து சென்றுள்ளார்கள்.. ஊரில் பாதி வீடுகள் பகல் நேரங்களில் பூட்டி இருக்கின்றன.. இருவரும் வேலை பார்க்க- குழந்தைகளும் பள்ளி சென்று விட, யார் இருப்பார் வீட்டில்?

பிரச்சனை இங்கேயே துவங்கி விடுகிறது..

இப்படி அவர்கள் வந்து தகவல் சேகரித்த செய்தி அறிந்து - அருகில் உள்ள ஒவ்வோர் பள்ளியாக சென்று கடைசியில் எந்த பள்ளியில் சென்சஸ் எடுத்தார்களோ அவர்களை கண்டு கொண்டேன் ! கண்டு கொண்டேன் ! ஒரு முறையல்ல .. அடுத்தடுத்த மாதங்களில் 2 தடவை அவர்களிடம் இதற்கான பார்ம் பில் செய்து தந்தேன்..

அடுத்த கட்டம்

ஊரில் பலருக்கும் போட்டோ பிடிக்க துவங்கினர்.. கூட்டம் பிய்த்து உதறியது.



உங்களுக்கு மெசேஜ் வரும் .. அப்புறம் தான் போட்டோ எடுக்க வர முடியும் என கெத்து காட்டினார்கள்.. இல்லாட்டி அந்த புக்கில் உங்க பேர் வரணும் என்றார்கள்.

அந்த புக் என அவர்கள் சொன்னது ஒரு புக் இல்லை.. ஏழெட்டு புக் !! ஏரியாவாசிகள் பெயர்கள் மொத்தமும் அடங்கிய இந்த புத்தகம் அந்த சென்டரின் நுழை வாயிலில் இருக்கும்.. அந்த எட்டு புக்கின் அனைத்து பக்கத்தையும் ஒன்று விடாமல் நீங்கள் தேட வேண்டும்.. உங்கள் பெயர் இருக்கிறதா என்று !!!

என்ன தலையை சுற்றுகிறதா?

இப்படி எட்டு புக்கின் அனைத்து பக்கத்தையும் தேடும் படலம் மட்டும் 3 வருடத்தில் - மொத்தம் 20 முறைக்கு மேல் செய்த எனக்கு எப்படி இருக்கும் !!

ஒவ்வொரு முறையும் போய் புக்கில் பெயர் இருக்கா என தேடவேண்டியது.. இல்லை என்றதும், பாரம் பில் செஞ்சு கொடுங்க சார் என்பார்கள்.. இந்த பார்ம் மட்டும் 15 முறையாவது பில் செய்து தந்திருப்பேன்.. !!

ஊஹூம்.. எத்தனை தடவை எழுதி தந்தாலும் புக்கில் நம் பெயர் வருகிற மாதிரி இல்லை..

அந்த நாள்.. !!!

4 வருட படையெடுப்புக்கு பின் ஒரு நாள் வெறுத்து போய் இணையத்தில் ஏதாவது நம்பர் கிடைக்குமா என தேடினேன் ..எங்கள் ஏரியா அசிஸ்டென்ட் ரெவினியூ ஆபிசர் (ARO) தொலை பேசி எண் கிடைத்தது.. அவரிடம் போன் செய்து "நாலு வருட தவம் " பற்றி பேச, "நேரில் வாங்க பேசுவோம்" என்றார். ( இந்த ஆதார் கார்ட் வாங்கும் விஷயத்தில் இவர் தான் முக்கிய ஆபிசர் !!) மறுநாளே ஆபிசில் போய் பார்த்ததும், பியூனை அழைத்து "சாருக்கு போட்டோ எடுக்க சொல்லு" என அனுப்பி வைத்தார்..

நம்ப முடிய வில்லை.. இன்னிக்கு எடுத்துடுவாங்களா என ஆச்சரியத்துடன் செல்ல, "சாயந்திரம் 4 மணிக்கு வாங்க; இப்ப கூட்டமா இருக்கு " என அனுப்பி வைத்தனர்..

4 மணிக்கு வந்ததும் - ஒரு பார்ம் கொடுத்து பில் பண்ணுங்க என்றனர்.. 4 வருடத்துக்கு முன் பள்ளியில் கொடுத்த அதே பார்ம் ..!!!  15 தடவைக்கு மேல் பில் அப் பண்ணி தந்த பார்ம்...!! சுஜாதா பாணியில் என்னய்யா விளையாடுகிறீர்களா என கேட்காமல் ,  பொறுமையாய் பில் செய்தேன்..

ஒரு வழியாய், கண், காது, மூக்கு என தனி தனியே எல்லாவற்றையும் போட்டோ எடுத்தனர்.. நம்ம போட்டோ
உடன் சேர்த்து அக்னாலட்ஜ் மென்ட் ஸ்லிப் ஒன்று தந்தனர்..



ஹவுஸ்பாஸ் தனது போட்டோவை பார்த்து விட்டு " சே.. என்ன இது வேலைக்காரி மாதிரி இருக்கு" என அதிர்ந்தார் .. நானும் எட்டி பார்த்தேன்.. கொஞ்சம் அப்படி தான் இருந்தது.. இருந்தாலும் " ச்சே. சே. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை" என்றேன் சிரிப்பை அடக்கிய படி ..

வெளியில் காத்திருந்த நேரம் போட்டோ எடுக்க வந்த ஒரு பெரியவர் சொன்னார்: "எனக்கு ஏற்கனவே போட்டோ எடுத்தாச்சு. ஆனா 2 வருஷம் ஆகியும் கார்ட் வரலை; அதான் மறுபடி எடுக்குறேன் !!"

அடப்பாவிகளா !! நான் எதோ இத்தோட முடிஞ்சு போயிடும்னு நினைச்சேன்.. இப்படி பயமுறுத்துறிங்களே  !! மறுபடி முதல்லேந்தா???

நிற்க. இன்றைக்கு ஒரே நாளில் பார்ம் பில் செய்து வாங்கி, போட்டோ எடுத்து மொத்த வேலையும் முடித்தார்களே . !! ஏன் இதனை முதலிலேயே செய்திருக்க கூடாது?

நேரில் வந்து - ஒரு முகவரி சான்று  (அட்ரஸ் ப்ரூப் ஒரிஜினல் ) காட்டி விட்டு, அன்றே போட்டோ எடுத்தால் வேலை எளிதாய் முடிந்திருக்கும்.. அதை விடுத்து முதலில் வீட்டிற்கு வந்து லிஸ்ட் எடுப்போம். .மிஸ் ஆனால் பார்ம் பில் செய்து தரனும்.. பின் புக்கில் பெயர் வரும். பெயர் வந்தால் மட்டுமே போட்டோ என எவ்வளவு சுத்தி விட்டார்கள் !! கொடுமை..

ஒரு அரசாங்க ப்ராஜக்ட் எப்படி நடத்த பட கூடாது என்பதற்கு மிக சிறந்த உதாரணம் ஆதார் கார்ட் வழங்கும் முறை தான்..

இதுவரை நீங்கள் ஆதார் வாங்காவிடில்..

தற்சமயம் பல்வேறு இடங்களில் அடிக்கடி ஆதார் போட்டோ எடுக்கும் வைபவம் நடத்துகிறார்கள்.. பேப்பரில் கவனியுங்கள்... அல்லது உங்கள் ஏரியாவில் சிலரிடம் சொல்லி வையுங்கள்.. நடந்தால் உங்களுக்கு தெரிவிக்க சொல்லி.. அங்கு நேரடியாக ஒரு அட்ரஸ் ப்ரூப் உடன் சென்று போட்டோ எடுத்து வந்து விடலாம்..

அல்லது உங்கள் ஏரியா ரெவினியூ ஆபிஸ் எங்குள்ளது என விசாரித்து - அங்கு சென்று பாருங்கள்.. அந்த ஆபிசில் தான் ஆதாருக்கு  தினமும் போட்டோ எடுக்கிறார்கள்.. அந்த ஆபிஸ் போகும் போது ARO-ஐ மறந்து விடாதீர்கள் !

ஆல் தி பெஸ்ட் !

3 comments:

  1. வடபழனி விஜயா மாலில் இரண்டாவது மாடியில் தற்காலிகமாக ஒரு நிரந்தர ஸ்டால் மைத்திருப்பதாக ஃபேஸ்புக்கில் எல்கே தகவல்.

    ReplyDelete
  2. உங்களுக்கு நேர்ந்த அதே அனுபவங்கள், எனக்கும், சற்று வித்தியாசமாக. அலைச்சலால் ஏற்பட்ட வெறுப்பு காரணமாக, நான் ஆதார் கார்டு இன்னும் வாங்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் தடை என்றார்கள். ஆனாலும் மத்திய, மாநில அரசுகளே சட்ட மீறல்களைச் செய்கின்றன.

    ReplyDelete
  3. ரொம்பக் கஷ்டப்பட்டு ஒரு டேட் கேட்டு வாங்கி (அன்னைக்குன்னு பாத்து வெள்ள பாதிப்பு நாட்களின் ஆட்களையும் சேர்த்துவிட்டு ஒரு பெரிய களேபரத்தையே உண்டு பண்ணினார்கள் ) காலை 8.30 முதல் மாலை 5 மணி வரை காத்திருந்து ஒரு வழியாக ஃ போட்டோ எடுத்தார்கள் . இது நடந்தது டிசம்பர் 2015 .இன்னும் ஆதார் கார்டு வரவில்லை .மெசெஜு மட்டும் விரைவில் வரும் என்று தான் வந்தது.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...