Monday, March 14, 2011

வானவில்: கிரிக்கெட் தோல்வியும், விருதகிரியும்

கிரிக்கெட்: இந்தியாவின் நிலை 

உலக கோப்பையில் இந்தியா தென் ஆப்ரிக்காவிடம் தோற்றதுபற்றி "இது தான் இந்தியாவிற்கு முதல் தோல்வி" என்று சிலர் சொல்கிறார்கள். யோசித்து பாருங்கள்: இந்தியா ஜெயித்தது எல்லாம் பங்களாதேஷ், அயர்லேந்து, நெதர்லேந்து என்ற பிள்ளை பூச்சிகளை தான். இங்கிலாந்திடம் ஜெயிக்க வேண்டிய மேட்ச் "டை" செய்தனர். தென் ஆப்ரிக்காவிடம் நல்ல நிலையில் இருந்து, பின் தோற்றனர். இந்த இரு நல்ல அணிகளுடன் நாம் விளையாடியதில் பல ஒற்றுமைகள்: முதலில் நாம் டாஸ் வின் செய்தோம் ; நாற்பது ஓவர் வரை சரியான பேட்டிங்; பின் செம சரிவு; நமது சொதப்பல் பவுலிங்...இப்படி.தோனி & கிர்ஸ்டன் கவனித்து கற்று கொள்ள நிறைய உள்ளது.  இன்னும் சரியான அணியே எது என்று முடிவு செய்ய முடியாமல் இந்தியா இருப்பது பெரும் சோகம். சென்னையிலாவது அஸ்வினுக்கு வாய்ப்பு தர வேண்டும். 

"பி"பிரிவில் தென் ஆப்ரிக்கா முதல் இடத்திலும் இந்தியா இரண்டு அல்லது மூன்றாம் இடத்திலும் வர கூடும். "A"பிரிவில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் வருவது கிட்ட தட்ட உறுதி ! கால் இறுதியில் தென் ஆப்ரிகா நியுசிலாந்துடன் விளையாடி ஜெயிக்கும். போலவே ஆஸ்திரேலியா இங்கிலாந்து அல்லது பங்களாதேஷ் உடன் ஆடி ஜெயிக்கும். இப்போதைக்கு ஆஸ்திரேலியா &  தென் ஆப்ரிக்கா அரை இறுதி செல்ல வாய்ப்புகள் பிரகாசமாய் உள்ளது. இந்தியா கால் இறுதியில் இலங்கை அல்லது பாகிஸ்தானுடன் விளையாடும்!! தன் ஆட்டத்தை மிக drastic ஆக improve செய்யா விடில் நாக் அவுட் நிலையில் இந்தியா எங்கு வேண்டுமானாலும் அடி வாங்கி திரும்பி விடும் அபாயம் உள்ளது. சச்சின் தனது நூறாவது சதத்தை நெருங்குவது மட்டுமே நமக்கெல்லாம் ஆறுதல் !


அம்மா பதிவை படித்த அம்மா

கடந்த சில வருடங்களாகவே இரண்டு மாதத்திற்கு ஓர் முறை அம்மா மருத்துவ மனையில் அட்மிட் ஆகி பத்து நாள் இருந்து பின் வீடு திரும்புவது  தொடர்கிறது. இதனால் அடிக்கடி நான் தஞ்சை செல்ல வேண்டிய சூழ்நிலை. இம்முறை சென்ற போது அம்மா பற்றிய பதிவை பிரின்ட் எடுத்து சென்றிருந்தேன். மருத்துவ மனையில் உள்ள டிவியில் இந்தியா தென் ஆப்ரிக்காவிடம் தோற்ற மேட்சை நான் பார்த்தபடி இருக்க, அம்மா மிக மிக மெதுவாய் பதிவை வாசித்தார். வாசிக்கும் போதே முகத்தில் சிரிப்பும் மகிழ்ச்சியும். "ரொம்ப நல்லா எழுதியிருக்கேடா. எனக்குன்னு இவ்ளோ நேரம் ஒதுக்கி எழுதியிருக்கியே. நல்லா எழுதறே" என்றார். அந்த பிரிண்ட் அவுட்டை என்னிடம் திரும்ப தந்து, " பத்திரமா வச்சிக்கோ" என்று சொல்ல, " என்னோட கம்பியூட்டரில் இருக்கு. அதில் நான் படிச்சிப்பேன். இது உனக்கு தான்" என்றேன். மகிழ்வுடன் வைத்து கொண்டார். தன் மற்ற மகன், மகளிடம் காண்பிக்க கூடும்.

பின்னூட்டங்களும் நானே எழுதியது என நினைத்து அதில் சிலவற்றை பற்றி மாற்று கருத்து சொன்னார். "அது எல்லாம் நான் எழுதலை மற்றவர்கள் எழுதியது; புக்கில வர்ற கடிதம் மாதிரி இது" என்று பின்னூட்டத்தை புரிய வைக்க முயன்றேன். புரிந்ததா இல்லையா தெரியலை!

தஞ்சை அப்டேட்

தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழா சமீபத்தில் ஆயிரம் டான்சர்கள் நடனமாட, அமர்க்களமாய் நடந்ததை அறிந்திருப்பீர்கள். இதற்கு முன் பெரிய கோவில் சென்றால் சந்நிதியில் பத்து பேர் இருப்பார்கள். அவர்கள் சென்று விட்டால் மீண்டும் பத்து பேரோ, சில நேரம் நாம் மட்டும் தனியே நின்று கூட வணங்கலாம். ஆனால் ஆயிரமாவது ஆண்டு விழா முடிந்து பல மாதங்கள் ஆனாலும் கோயிலில் கூட்டம் நிரம்பி வழிகிறது.நேரே சந்நிதி சென்ற நிலை போய், எப்போதும் பெரிய கியூ .. ம்ம் பார்க்கலாம் ..எத்தனை நாளைக்கு மக்களின் இந்த ஆர்வம் நீடிக்கிறதென!


டிவி பக்கம்

ஜீ தமிழ் நல்ல சேனல். இதில் வரும்

ஜான்சி ராணி( சரித்திர தொடர்;  இந்தி டப்பிங்) மற்றும்
இரவு பத்து மணிக்கு வரும் டாப் டென் செய்திகள் (தமிழகம் / இந்தியா/ உலகம்/ விளையாட்டு என தனி தனி பிரிவுகளில்)

ஆகிய இரண்டும் மிக நல்ல நிகழ்ச்சிகள். இவை இரண்டும் பற்றி முன்பே குறிப்பிட்டுள்ளேன். டப்பிங் எனினும் மற்றொரு நல்ல நிகழ்ச்சி "சபாஷ் இந்தியா" இந்தியாவில் சாதனை செய்யும் பலரை அந்த சாதனையுடன் காட்டுகின்றனர். வார நாட்களில் தினம் இரவு எட்டு முப்பதுக்கு ஒளி பரப்பாகிறது. முடிந்தால் பாருங்கள்.

ஜப்பானில் நிகழ்ந்த பேரழிவு 

ஜப்பான் எனக்கு மிக பிடித்த நாடு... கடினமாய் உழைக்கும் ஜப்பானியர்களுக்காகவே! கடந்த சில நாட்களாக அங்கு நிகழ்ந்த இயற்கை சீற்றம் மனதை உலுக்குகிறது. எனது நண்பர் நடராஜ் டோக்கியோவில் உள்ளார். துணை அமைப்பை சேர்ந்த நடராஜ் ஏழு குழந்தைகளுக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக ஸ்பான்சர் செய்து வருகிறார். அவருக்கு உதவி தேவைப்படும் குழந்தைகளை அறிமுக படுத்தும் ஒரே நபர் இங்கு நான்! துணை மூலம் அறிமுகமானாலும் கடந்த ஆறு ஆண்டுகளில் மிக நட்பாகி விட்டோம்.

முதல் நாள் அவரது தொலை பேசி ரீச் ஆகவே இல்லை. மறு நாள் தான் பேச முடிந்தது. டோக்கியோவில் பெரிய பாதிப்பு இல்லை என்றும் அனைவரும் நலம் என்றும் சொன்னார். பேஸ்புக்கில் அடிக்கடி இனி அப்டேட்ஸ் தருகிறேன் என்றார். 

இத்தகைய நிகழ்வுகள் சீனா அல்லது இந்தியாவில் நிகழ்ந்தால் உயிரிழப்பு பல லட்ச கணக்கில் இருந்திருக்கும். ஜப்பான் மிக முன் யோசனையாக வீடு 
கட்டும் முறையிலும் , பிற எச்சரிக்கைகளிலும் முனைப்போடு இருந்ததால், பொருள் இழப்பு மிக அதிகம் , மனிதர்கள் இழப்பு பத்தாயிரம் என்கிற அளவில் உள்ளது. தங்கள் கடின உழைப்பால் ஜப்பானியர்கள் மீண்டு எழுவார்கள்.. நம்பிக்கை இருக்கிறது. 


ரசித்த கவிதை

நான் எல்லோரிடமும் புன்னகைக்கிறேன்
குறிப்பாக மளிகை கடைக்காரனிடம்
பொருட்களை அவன் நிறுத்தும் போது
எனக்கு சாதகமாக
ஒரு சிறு சாய்வை ஏற்படுத்துவான் என புன்னகைக்கிறேன்

எனது அன்றாட தேவைகளின் விலை
மிகவும் கூடி விட்டது
எனவே காய்கறி வியாபாரியிடம் கூட
புன்னகைக்கிறேன்

மாலை நேரத்திற்குள்
இன்னும் பல உதவிகள் வேண்டி
என் புன்னகை அனைத்தையும்
செலவழித்து விட்டேன்

என் கை வசம்
புன்னகை ஏதும் இல்லை
வீட்டிற்கு கொண்டு செல்ல

                                                 மோதிலால் ஜாத்வாணி (சிந்தி)

பார்த்த படம்: விருதகிரி

இந்த படம் பார்த்து ரொம்ப நாளானாலும் இப்போது தான் பகிர்கிறேன். "வாசபி" படத்தை சரத் குமார் ஜக்கு பாய் என எடுத்து கையை சுட்டு கொண்டார். அதையே விஜய காந்த் திருநங்கைகள் பிரச்சனை, தமிழ் நாடு அரசியல் எல்லாம் கலந்து விருதகிரி ஆக்கியுள்ளார். காமெடியன் இல்லா விட்டாலும் கேப்டனே அந்த குறையை போக்கி விடுகிறார். பெரும்பகுதி படம் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் எல்லாரும் ஆங்கிலத்தில் பேசினாலும் simultaneous ஆக அவர்களுக்கு தமிழ் டப்பிங் கொடுத்து "புதுமை" செய்துள்ளார் கேப்டன். பார்க்க செம சிரிப்பாக உள்ளது. படத்தில் ஒரு நிமிடமே வந்து போகும் நண்டு, சுண்டு கேரக்டர்கள் கூட கேப்டனை வானளாவ புகழ்ந்து பேசுகிறார்கள். வில்லன்களே இவரை புகழும் போது வயிற்றை பிடித்து கொண்டு நாம் சிரிப்பது உறுதி. மற்றபடி கேப்டனின் ஸ்பெஷாலிட்டி சண்டைகள் & லெக் கிக்குகள்... இவையும் இருக்கின்றன. படத்தில் நிறுத்த முடியாமல் தொடர்ந்து சிரிக்க வைத்த காட்சி ஒன்று உண்டு. படத்தில் வரும் முக்கிய பெண் பாத்திரம் பெயர் ப்ரியா. இவர் காண வில்லை என்பதை கேப்டன் இப்படி சொல்லுவார் : "BBriyaa இன்னும் கிடைக்கலை !" . கலக்குங்க கேப்டன். இன்னும் நிறைய படம் டைரக்ட் பண்ணுங்க. பார்த்து சிரிக்க நாங்க இருக்கோம்!

21 comments:

  1. வானவில் சுவையான கலவை – விருத்தகிரி பார்க்கும் அளவுக்கு உங்களுக்கு தைரியம் இருப்பதை பாராட்டத்தான் வேண்டும்! கேப்டன் படம் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது! இந்தியாவிலோ அல்லது சீனாவிலோ ஜப்பானில் நிகழ்ந்தது போல நடந்திருந்தால் நிச்சயம் பேரழிவு ஏற்பட்டு இருக்கும் என்பது உண்மை.

    ReplyDelete
  2. //ஏற்படுதுவான்//

    ஏற்படுத்துவான்

    வானவில் நல்லா இருக்கு.

    ReplyDelete
  3. I agree with you that we are not still confident about the team composition. We need to play 5 bowlers (3 pace bowlers & two specialist spinners). Drop virat kohli (he is a good batsman and done exceedingly well in this tournatment, but we dont need 7 batsmen) and bring in second spinner.
    Drop pathan and bring in raina.

    ReplyDelete
  4. தோனியோட மனக் கணக்கு பலிப்பதில்லை போலும்..

    ReplyDelete
  5. அம்மாவின் சந்தோசந்தான் நம் சந்தோசம்....

    ReplyDelete
  6. Mr. Mohan,

    the artilce was really superb.

    How is yr mother? Hope she is back home from hospital. Our prayers for yr mother to get well soon.

    Good Day!

    Mrs. Ramaa Krishnakumar

    ReplyDelete
  7. //...கோயிலில் கூட்டம் நிரம்பி வழிகிறது...//
    இதை கேட்பதற்கே சந்தோசமாக இருக்கிறது. இல்லையென்றால் அவ்வளவு சிறப்பு வாய்ந்த கோவில் பெரும்பாலும் கூட்டம் குறைந்தே காணப்படும். இப்போதாவது மக்களுக்கு பெரிய கோவிலின் சிறப்பு தெரிய வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. கடவுள் நம்பிக்கையை மீறி பெரிய கோவிலின் கட்டடக்கலையும் ராசராசனின் உழைப்பும் என்னை எப்போதும் மலைக்க வைக்கும்.

    ReplyDelete
  8. வானவில் - இம்முறை உணர்ச்சிகளின் கலவை!

    ReplyDelete
  9. அம்மாவுடன் இருந்த நேரமும், பகிர்ந்த கவிதையும் மிக அருமை மோகன்!

    ReplyDelete
  10. தொகுப்பு நன்று எப்போதும் போலவே.

    அம்மாவுக்கு புரியும் உங்கள் அன்பு!!!

    ReplyDelete
  11. அம்மாவுடனான நேரங்களை அழகா பகிர்ந்திருக்கீங்க.

    விருதகிரி பார்க்கிற அளவிற்கு மனதைரியம் கொண்டவரா நீங்க?

    ReplyDelete
  12. //முதல் நாள் அவரது தொலை பேசி ரீச் ஆகவே இல்லை. மறு நாள் தான் பேச முடிந்தது. டோக்கியோவில் பெரிய பாதிப்பு இல்லை என்றும் அனைவரும் நலம் என்றும் சொன்னார். பேஸ்புக்கில் அடிக்கடி இனி அப்டேட்ஸ் தருகிறேன் என்றார்//

    நண்பர் நலமுடன் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.சுனாமியின் கொடுரத்தை நேரில் அனுபவித்தவன் என்கிற முறையில்,ஜப்பான் சுனாமியை தொலைக்காட்சியில் பார்த்த பொழுது எனக்கு பழைய நினைவுகள் வந்து கண்களை கலங்கச் செய்துவிட்டது.

    ReplyDelete
  13. Anonymous11:59:00 AM

    வழக்கம் போல அருமையான தொகுப்பு அண்ணா!

    ReplyDelete
  14. கோவிலில் கூட்டம் கேட்க சந்தோஷம். ஆனால் நான் போனால் கூட்டமில்லாமல் இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவேன்! அப்போதெல்லாம் தஞ்சையின் ஒரு பொழுதுபோக்கு சிவகங்கைப் பூங்கா...இப்போது எப்படி இருக்கோ...!

    ReplyDelete
  15. நன்றி வெங்கட்.
    **
    உலகனாதன் நன்றி மாற்றி விட்டேன்.
    **
    பரத்: எஸ். நீங்கள் சொல்லும் மாறுதல்கள் செய்தால் நல்லது; பார்க்கலாம்
    **
    நன்றி மாதவா
    **
    சங்கவி: ஆம் நன்றி
    **
    மிக்க நன்றி ரமா. அம்மா இன்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிறார்கள்
    **
    ஆதி மனிதன்: மகிழ்ச்சி நன்றி
    **
    நன்றி மாதவி
    **
    நன்றி சமுத்ரா

    ReplyDelete
  16. மகிழ்ச்சியும் நன்றியும் ராஜாராம்
    **
    ராமலட்சுமி: நீங்கள் சொல்வது உண்மையே ; நன்றி
    **
    வித்யா: இந்த கேபிள் அங்கிள் தான் விருதகிரி படம் நல்லாருக்கு என சொல்லிகிட்டே இருந்தார். பார்த்ததில் மனம் விட்டு சிரிக்க முடிந்தது
    **
    அமைதி அப்பா: வேதாரண்யத்தில் இருந்த போது சுனாமி சந்தித்த அனுபவம் உண்டா? அதை நீங்கள் பகிரலாமே?
    **
    நன்றி பாலாஜி சரவணா
    **
    ஸ்ரீ ராம்: அட நீங்களும் நான் நினைக்கிற மாதிரியே சொல்றீங்க. ஆனா ஆதி மனித மேலே சொன்ன பிறகு இனி கூட்டம் இருந்தால் மகிழ்வாய் எடுத்துக்கனும் என நினைக்கிறேன்

    ReplyDelete
  17. "ரொம்ப நல்லா எழுதியிருக்கேடா. எனக்குன்னு இவ்ளோ நேரம் ஒதுக்கி எழுதியிருக்கியே. நல்லா எழுதறே" என்றார்.
    அம்மாவின் வார்த்தை அப்படியே காதில் ஒலிக்கிறது..

    ReplyDelete
  18. //அமைதி அப்பா: வேதாரண்யத்தில் இருந்த போது சுனாமி சந்தித்த அனுபவம் உண்டா? அதை நீங்கள் பகிரலாமே?//

    நாகையில் இருந்தேன். சுனாமி அனுபவம், அது கற்றுத்தந்த பாடம்,ஆபத்துக் காலத்தில் மனிதர்களின் மனநிலை என்று பெரிய பதிவே போடலாம்.
    பார்ப்போம்.

    ReplyDelete
  19. அம்மாவின் உடல்நலம் இப்போது சற்று தேறியிருக்கும்னு நினைக்கிறேன் - உங்க பதிவைப் படிச்சிருக்காங்களே!! :-))

    ஜப்பான் நண்பர் நலமா? ரேடியேஷன்னு பயங்காட்டுறாங்களே?

    //: "BBriyaa//
    புள்ளிவிவரம், “ஆங்” போல இதுவும் ட்ரேட் மார்க் ஆகிவிடுமா? :-)))

    ReplyDelete
  20. I pray the almighty to ease the rest of your mother s life. may she be blessed with pain free, happy moments.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...