Monday, December 24, 2012

தொல்லைகாட்சி 2012-- சொல்வதெல்லாம் உண்மை- ஒரு வார்த்தை ஒரு லட்சம்

சொல்வதெல்லாம் உண்மை 


ஜீ - (தமிழ்) டிவி யில் மற்றவர்களுக்கு தெரிந்த ஒரே பிரபல நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை ! இதில் பலர் வந்து பேசும் கண்ணீர் கதைகள் சற்று செட் அப் என்று ஒரு சாரார் சொன்னாலும் கூட, இதே நிகழ்ச்சியில் ஒரு பெண் தன் தந்தை கொலை செய்து புதைத்ததை சொல்ல, அவர் கைதானதும் நடந்தது நீங்கள் அறிந்திருக்கலாம்,

நிற்க. வணக்க்க்க்க்கம் புகழ் நிர்மலா பெரியசாமி இந்நிகழ்ச்சி தொகுத்து வழங்கியது நிறைவுக்கு வந்து ஆரோகணம் பட இயக்குனர் " லட்சுமி ராமகிருஷ்ணா " இனி தொகுத்து வழங்க போகிறாராம். இவர் தொகுத்து வழங்குவதால் ஓரிரு எபிசொட் எப்படி இருக்கு என பார்க்கும் ஆவல் லேசாய் வருது (பார்த்ததும் ஆவல் காற்றாய் மறையவும் வாய்ப்புண்டு !)

ஒரு வார்த்தை ஒரு லட்சம்

விஜய் டிவியில் வரும் நல்ல நிகழ்ச்சிகளில் ஒன்று " ஒரு வார்த்தை ஒரு லட்சம்". நீங்கள் நிச்சயம் ஒரு முறையாவது பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நடத்தும் ஜேம்ஸ் வசந்தன் பல வருடங்களாக நிகழ்ச்சி தொகுப்பாளாராக இருந்து, இப்போது இசை அமைப்பாளர் ஆன போதும், இதற்காக நேரமெடுத்து இதை நடத்துகிறார். தெளிவான உச்சரிப்பில் அழகான தமிழை பேசும் மிக சில தொகுப்பாளர்களில் இவரும் ஒருவர் !




முன்பு சினிமா அல்லது டிவி நட்சத்திரங்கள் இந்த கேம் ஆடினர். இப்போது பள்ளி மாணவ மாணவிகளுக்கு இதே நிகழ்ச்சி நடக்கிறது. நிச்சயம் கலந்து கொள்ளும் இருவரின் புரிந்துணர்வை பொறுத்தே வெற்றி அமைகிறது என தோன்றுகிறது. உங்களுக்கு தெரிந்த பள்ளி மாணவர்கள் இருந்தால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பரிந்துரைக்கலாம் !

ரஜினிக்காக ராகவா லாரன்ஸ் ஆடிய ஸ்பெஷல் டான்ஸ்

ராகவா லாரன்ஸ் திரை உலகிற்கு வர உதவியவர் என்கிற வகையில் ராகவா லாரன்ஸ் எப்போதுமே ரஜினியை மிக உயர்வாக பேசுவார். இவ்வருடம் ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு ராகவா லாரன்ஸ் ஸ்பெஷல் டான்ஸ் ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை சன் மியூசிக்கில் அடிக்கடி போட்டு வருகிறார்கள். ரஜினி ரசிகர்களுக்காகவும், ராகவா லாரன்சின் நடன அசைவுகளுக்காகவும் இப்பாடலை இங்கு பகிர்கிறேன்.

துவக்கத்தில் அரை நிமிடம் ராகவா லாரன்ஸ் பேசிய பிறகு அவர் டான்ஸ் துவங்குகிறது.




பிளாஷ்பேக்: ஒளியும், ஒலியும்

டிவி பொட்டி ஊருக்கு வந்த காலத்தில், வெள்ளியன்று மாலை ஏழரை மணிக்கு தூர்தர்ஷனில் ஒளியும், ஒலியும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். எங்கள் எதிர் வீட்டுக்கு சரியே அந்த நேரத்துக்கு போய் அந்த நிகழ்ச்சி மட்டும் பார்ப்பது வழக்கம். பின் நம் வீட்டுக்கு டிவி வந்தபின், நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தால், " ஒளியும், ஒலியும்" என வெள்ளி மாலை வீட்டுக்கு வருவதும் நடக்கும் ! முதல் 2 பாட்டு மட்டும் புது படத்திலிருந்து போடுவார்கள். மற்றபடி சிவாஜி, எம் ஜி. ஆரின் பழைய பாடல்கள் ரஜினி கமல் பாடல்கள் என போகும்.

அந்த அரை மணி நேர ஒளியும், ஒலியும் தந்த மகிழ்வை, 24 மணி நேரமும் பாட்டு போடும் எந்த சானலாலும் செய்ய முடிய வில்லை !

என் வழி தோனி வழி 

சன் நியூசில் என் வழி தோனி வழி என்கிற நிகழ்ச்சி என்றைக்கெல்லாம் கிரிக்கெட் மேட்ச் இருக்கோ அன்று மாலை ஒளிபரப்பாகும். பாஸ்கி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் அவருடன் எப்போதும் வரும் மற்ற இருவர் ஞானி (எழுத்தாளர் அல்ல) மற்றும் பிரகாஷ். இதில் பிரகாஷ் என்பவர் கிரிக்கெட் பற்றி குருட்டாம்போக்கில் அடித்து விடுவார். அவர் பேசும் ஆங்கிலம் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். ( வேண்டுமென்றே தான் அப்படி பேசுறார் !) எந்த அர்த்தமும் இல்லாத வாய்க்கு வந்த வார்த்தைகளை போட்டு அந்த வாக்கியத்தை அவர் பேசுவதை கேட்பதற்காக, மற்றவர்கள் பேசும் மொக்கைகளை பொறுத்து கொள்வேன். இயலும் போது பாருங்கள் !

டிஷ் டிவி Vs கேபிள் டிவி 

இந்த மாத இறுதியிலிருந்து செட் அப் பாக்ஸ் கட்டாயம் தேவை என்கிறார்கள். இதுவரை எங்கள் வீட்டில் லோக்கல் கேபிள் டிவி தான் வைத்துள்ளோம். நாங்கள் தமிழ் சானல்கள் தவிர ஆங்கில நியூஸ் சானல், கிரிக்கெட் போன்றவை தான் பார்ப்போம். லோக்கல் கேபிள் டிவி ஆப்பரேட்டர் மூலம் செட் அப் பாக்ஸ் வைப்பது நல்லதா அல்லது சன் டிவி போன்றவை மூலம் டிஷ் வாங்குவது நல்லதா? ரொம்ப அதிக செலவு இல்லாமல் மேலே சொன்ன சானல்கள் பார்க்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். எந்த முறையை தேர்ந்தெடுக்கலாம் என கொஞ்சம் அட்வைஸ் செய்யுங்கள் நண்பர்களே !


21 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. //டிஷ் டிவி Vs கேபிள் டிவி//

    நாங்கள் Airtel DTH வைத்திருக்கிறோம் மோகன். A-la-Carte முறையில் கீழ்கண்ட சேனல்களை சப்ஸ்க்ரைப் பண்ணியிருக்கிறோம். மாதம் ரூ.169/- ஆகிறது. You can prefer Airtel or Tata Sky.


    1. Sun TV
    2. K TV
    3. Vijay TV
    4. Kalaignar
    5. Jaya TV
    6. Sun Music
    7. Sun News
    8. Sirippoli
    9. Star Cricket
    10. Times Now
    11. NDTV 24x7
    12. CNN-IBN
    13. Star Movies
    14. HBO
    15. Sony Pix
    16. Zee Studio
    17. Movies Now

    ReplyDelete
  3. For further details, http://www.airtel.in/alacarte/

    ReplyDelete
  4. ஒருவார்த்தை ஒரு லட்சம் நல்ல நிகழ்ச்சி.என் வழி தோனி வழி நிகழ்ச்சியில் பங்குபெறுபவர் பெயர் நாணி. நாராயணன் என்பது அவரது முழுப் பெயர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். உள்ளூர் முன்னாள் கிரிக்கட் வீரர்.

    ReplyDelete
    Replies
    1. அப்டிங்களா Sir? தகவலுக்கு நன்றி

      Delete
  5. ippothu 'solvathellam unmai' avvalavu rasippathillai.
    'oru vaarthai' nigazhchchiyai naanum virumbi paarpen.

    Laurencein paadal ippothu thaan parththen! Nanri!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதவி; ரொம்ப நாள் கழிச்சு எட்டி பார்த்தமைக்கு நன்றி

      Delete
  6. ஒரு வார்த்தை ஒரு லட்சம் இப்போதான் பார்க்க பிடிக்கிறது சார் .. கேம் ஷோ பிரபலமடைவதர்க்காக சின்னத்திரை நட்சத்திரங்கள் வந்து விளையாடினாங்கள்(?) போல....

    ReplyDelete
    Replies
    1. //கேம் ஷோ பிரபலமடைவதர்க்காக சின்னத்திரை நட்சத்திரங்கள் வந்து விளையாடினாங்கள்(?) போல//

      கரக்ட்டு !

      Delete
  7. try scv box. for 1100 and monthly 150 almost all the channels. only drawback the channels rival for sun tv are coming last. all tamil,english,cricket,telugu,malayalam,hindi channels are coming in it

    ReplyDelete
    Replies
    1. நன்றி சீன் கிரியேட்டர் ; உங்கள் யோசனையை consider செய்கிறேன்

      Delete
  8. அந்த அரை மணி நேர ஒளியும், ஒலியும் தந்த மகிழ்வை, 24 மணி நேரமும் பாட்டு போடும் எந்த சானலாலும் செய்ய முடிய வில்லை !

    sariya sonnenga mohan sir correct

    ReplyDelete
    Replies
    1. வாங்க சரவணன் சார் நன்றி

      Delete
  9. ஒரு வார்த்தை ஒரு லட்சம் எனக்கு பிடித்த நிகழ்ச்சி. இப்போ ரோஷ்ணிக்கும் பிடித்திருக்கிறது.
    ஒலியும், ஒளியும் எத்தனை நாள் காத்திருந்து பார்த்திருக்கிறேன். நீங்க சொல்வது போல் 24 மணி நேரமும் பாடல் கேட்டாலும் அதற்கு இணையாகாது....

    ReplyDelete
    Replies
    1. ரோஷினி அம்மா: நலமா? நன்றி

      Delete
  10. \\அந்த அரை மணி நேர ஒளியும், ஒலியும் தந்த மகிழ்வை, 24 மணி நேரமும் பாட்டு போடும் எந்த சானலாலும் செய்ய முடிய வில்லை !\\ இது உண்மைதான்!! அப்போ அந்த அரை மணி நேரத்துக்கே ஒரு வாரமும் காத்து கிடப்போம்.

    I disconnected cable in view of Children's welfare!!

    ReplyDelete
    Replies
    1. //I disconnected cable in view of Children's welfare!!//

      !!!!!

      Delete
  11. ’அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்ற பழமொழியே உண்டு; அதுதான் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் நடப்பது. பசித்தவனுக்கு பழைய சோறும் இனிக்கும் - வாரத்திற்கு ஒரு முறைதான் வரும் என்பதால் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. இப்பொழுது போடும் பாடல்களின் வரிசைகளைக் கூட மாற்றாமல் திரும்பத்திரும்ப ஒளிபரப்புகிறார்கள். [வானொளிகளிலும் திரும்பத் திரும்ப ஒலிபரப்பினாலும் தொ.கா. நம் கண்களை நிரப்புவதால் கவனம் அதிலேயே இருக்கிறது. மேலும் வானொலிகள் வேறு தகவல்களையும் சொல்வதால் நிறைய நேரங்களில் ரசிக்கவும் முடிகிறது].

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சீனி; வானொலி கேட்டு கொண்டே மற்ற வேலை எளிதாய் செய்யலாம்

      Delete
  12. Sir how to my comment in tamil

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...