Wednesday, February 29, 2012

வானவில் 78: விராத் கோலி -எஸ். ரா- சூப்பர் சிங்கர் ஜூனியர்

கிரிக்கெட் கார்னர்

நேத்து இந்தியா VS இலங்கை மேட்சில் இந்தியாவின் பேட்டிங் அசத்தல். குறிப்பா விராத் கோலி ! என்னா அடி ! Fantastic ! 40 ஓவருக்குள் 320 ரன் அடிப்பது மிக மிக சிரமம். இதை எவ்வளவு எளிதாக அடித்தார்கள் பாருங்கள் !

நிற்க. கொஞ்ச நாள் கழித்து இந்த மேட்ச் பிக்ஸ் ஆன ஒன்று என செய்தி வந்தால் ஆச்சரிய பட ஒன்றுமில்லை ! BCCI is so powerful !

ஏசியா கப் டீமில் கோலியை வைஸ் கேப்டன் ஆக்கிட்டாங்க. பொதுவா வைஸ் கேப்டனா இருக்கும் போது எல்லாரும் நல்லா ஆடுவாங்க ( உ-தா: அசார் கேப்டன்சியில் சச்சின், கங்குலி கேப்டன்சியில் டிராவிட்) ஆனா கேப்டன் ஆனா தான் ஆட்டம் சொதப்பிடும். கேப்டன் ஆகியும் நன்கு ஆடுவது தோனி தான். எனக்கு தெரிந்து இப்போது உள்ள நபர்களில் தோனியே சரியான கேப்டன் என தோன்றுகிறது.

சினிமாபாடல்கள் பற்றி விகடனில் ராஜு முருகன் 

சினிமா பாடல்களை ரசிக்காதோர் யார் உள்ளார் சொல்லுங்கள்? இத்தகைய சினிமா பாடல்கள் பற்றியும் சிறு வயதில் அந்த பாடல்களை தங்கள் வாழ்வோடு சேர்த்து நேசித்த சிலர் குறித்தும் ராஜூ முருகன் விகடனில் ஒரு பகுதி எழுதியிருக்கார் பாருங்கள்... அசத்தல் ! வட்டியும் முதலும் தொடரின் -29ஆவது அத்தியாயத்தில் இந்த பகுதி எழுதி உள்ளார். (விகடன் பிப்ரவரி 29 தேதி இட்ட இதழ்). வாசித்து பாருங்கள் ! ஹும் பதிவு எழுதும் நாமெல்லாம்  எழுத்தாளர் என சொல்லி கொள்ளவோ,  நினைக்கவோ கூடாது ! சுகா போல, ராஜூ முருகன் போல எழுதுவோர் மட்டும் தான் அப்படி சொல்லி கொள்ளலாம் ! என்னா மாதிரி எழுத்து !

சம்பவம் : ஆம்புலன்ஸ் முன் ஓடிய ஆள்

மாலை நேரம். வேளச்சேரி சிக்னலில் வண்டியில் காத்திருக்கிறேன். ஒரு ஆம்புலன்ஸ் சிக்னலை கடக்கிறது. அப்போது அதற்கு குறுக்கே புகுந்து பஸ் நிறுத்தத்துக்கு ஓடினார் ஒருவர் ! "சிவப்பு விளக்கையும் மதிக்காமல், ஆம்புலன்சையும் மதிக்காமல் ஓடுறியே ! உன் மேலே அந்த ஆம்புலஸ் மோதினா, நீயும் உள்ளே ஏறி போக வேண்டியிருக்கும் தம்பி"

சரி சரி ! நம்மளை மாதிரி ஹவுஸ் பாசுக்கு பயந்த ஆள் போல இருக்கு; அதான் அவசரமா வீட்டுக்கு ஓடுறாரு :))

அம்மாவுக்கு 64- அடி கட் அவுட்

இதுவும் வேளச்சேரி குறித்த செய்தி தான். சென்ற வருடம் "ஜெ" அவர்கள் பிறந்த நாளுக்கு (அப்போ அவர் முதல்வர் இல்லை ) 63 அடியில் கட் அவுட் வைத்திருக்கார் வேளச்சேரி பகுதி மூர்த்தி. வைத்த சில நிமிடங்களில் அது முறிந்து விழுந்து விட்டது. இரவென்பதால் யாருக்கும் பாதிப்பு இல்லை. இரவோடு இரவாக கட் அவுட் அப்புற படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வருடமும் 64- அடி கட் அவுட் வைத்தார் மூர்த்தி. இம்முறை தேவையான பேஸ்மன்ட் தந்து உறுதியாக செய்து விட்டார். என்ன செலவு தான் கொஞ்சம் ஜாஸ்தி ஆகிடுச்சு. வேளச்சேரி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கடைகளில் வசூல் ஆளுக்கு 20,000 என்று நம்ப தகுந்த வட்டாரம் மூலம் தகவல் வந்தது.

எஸ். ராவும் நண்பன் தேவ குமாரும்

எஸ். ராவை நண்பன் தேவ குமாரும், நானும் சந்தித்ததை ஏற்கனவே பகிர்ந்திருந்தேன். எஸ். ரா இம்முறை டில்லி சென்றபோது தேவா அவருடன் நீண்ட நேரம் செலவிட்டுள்ளான். மேலும் எஸ். ரா ஒரு நாள் இரவு உணவுக்கு தேவா வீட்டுக்கும் வந்திருந்தாராம் ! இது பற்றி தேவா வீடுதிரும்பலில் ஒரு பதிவு எழுதுவார் என எதிர்பார்க்கிறேன் !

அம்மா

அம்மா டிஸ்சார்ஜ் ஆகி அண்ணன் வீடு வந்து விட்டார். உடல்நிலை சற்று தேவலாம். பிரார்த்தனை என்பது எத்தனை வலிமையானது என்று மீண்டும் ஒரு முறை உணர்கிறேன். பதிவில் அம்மா உடல்நிலை பற்றி எழுதி விட்டு என்னுடன் போனில் பேசிய அனைத்து பதிவர்களும் " அம்மாவுக்கு ஒன்றும் ஆகாது. கவலை படாதீர்கள். நாங்கள் வேண்டி கொள்கிறோம்" என்றனர். என்னுடைய ஆறுதலுக்கு தான் சொல்கிறார்களே தவிர அம்மா பிழைப்பது மிக கடினம் என நினைத்தேன்.  அமைதி அப்பா போனில் சொன்னது போல் " பிழைக்கவே பிழைக்காது என சொல்வோர் பிழைப்பதும் நடக்கும். சாதாரண  கேஸ் இறப்பதும் நடக்கும்" ! அம்மா நலனுக்காக பிரார்த்தனை செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி !

சூப்பர் சிங்கர் ஜூனியர் கார்னர்

சென்ற வாரம் " காதலில் சொதப்புவது எப்படி" டீம் சூப்பர் சிங்கர் ஜூனியரில் வந்தார்கள். அமலா பால், நிகழ்ச்சியை தொகுக்கும் மா. கா. பா ஆனந்தை கட்டி பிடிக்க, "இது எனக்கு பொறாமை ஆக இருக்கு" என்றான் ஒரு பன்னிரண்டு வயது சிறுவன். "உனக்கு கஷ்டமா இருக்கா?" என்று கேட்ட அமலா பால், அவனை கட்டி பிடித்ததுடன் கிஸ்சும் செய்ய, அந்த 12 வயது பையன், மயங்கி விழுகிற எபக்ட் தந்தான். மத்த பசங்களும் அமலா பால் முத்தத்துக்கு ஏங்குற மாதிரி காட்டினாங்க. சிறுவன் என்று அன்போடு கொடுக்கும் முத்தம் வேறு. இரண்டாங் கேட்டான் வயதான 12 வயது பையனுக்கு முத்தம் தந்து, அவன் கிறக்கத்தில் மயங்கி விழுகிற மாதிரி காட்டி சின்ன பசங்களை விஜய் டிவி கெடுக்கணுமா?

ஏங்க.. நான் சரியா தான் பேசுறேனா??

38 comments:

  1. Anonymous5:15:00 PM

    நேற்று ஆட்டத்தை மிஸ் பண்ணிவிட்டேன் அண்ணே, ஆட்டத்தின் முடிவு தெரிய வந்ததும் எனக்கு மிகுந்த வருத்தமாய் போய் விட்டது. காலையில் பேப்பரில் ஸ்கோர்போர்டு பார்த்ததும் தான் நேற்றைய ஆட்டத்தின் முழு விவரம் தெரிய வந்தது. நம்ம ஆட்கள் அசத்தி விட்டார்கள்.

    ReplyDelete
  2. ஏங்க.. நான் சரியா தான் பேசுறேனா??//

    சரியாத்தான் பேசுறீங்க..
    அனுஷ்கா மேட்டரா இருந்தாத் தான் நீங்க சொதப்புவீங்க..

    ReplyDelete
  3. வானவில் 78- சுவாரசியமான அலசல்.

    //தோனியே சரியான கேப்டன் என தோன்றுகிறது.//
    ஆம், எனக்கும் இதே கருத்துதான்.

    விகடனில் ராஜு முருகன் எழுதுவதில் சிலவற்றை நானும் படித்து ரசித்து பிரம்மித்தேன். அருமையாக இருக்கு அவருடைய எழுத்துக்கள். 29 அத்யாயம் ஆகிவிட்டதா?? கூடிய விரைவில் எல்லாவற்றையும் படித்து விடுவேன்.

    அம்மா வீட்டிற்கு வந்தது பற்றி மிகவும் சந்தோஷம், மோகன் குமார்.

    //ஏங்க.. நான் சரியா தான் பேசுறேனா??..

    ரொம்ப சரியாக சொல்லியிருக்கீங்க, அதிலும் கடைசி விஷயம்..விஜய் டி.வி. இப்படி பண்ண வேண்டாம்.

    ReplyDelete
  4. அம்மா டிஸ்சார்ஜ் ஆகி அண்ணன் வீடு வந்து விட்டார். உடல்நிலை சற்று தேவலாம். பிரார்த்தனை என்பது எத்தனை வலிமையானது என்று மீண்டும் ஒரு முறை உணர்கிறேன்.

    இறைவனுக்கு நன்றி

    ReplyDelete
  5. நானும் ' இதோ இப்போ சொதப்பப்போகிறார்கள்' என்று சொல்லிக்கொண்டே பார்த்தேன் நேற்றைய ஆட்டத்தை!! கடைசியில் ஜெயித்தே விட்டார்கள்! ஷார்ஜாவில் இப்படித்தான் 1998ல் ஃபைனல் ஆட்டத்துக்கு முன் சச்சின் புயல் மாதிரி ஒரு ஆட்டம் ஆடுவார், அது தான் விராத் கோலி ஆடியபோது ஞாபகம் வந்தது!

    உன்மையில் விக‌ட‌னில் ராஜுமுருக‌ன் எழுதும் தொட‌ர் அருமை தான்!

    அம்மா ந‌ல‌மடைந்து வீடு திரும்பியது அறிய மிகவும் மகிழ்ச்சி!

    ReplyDelete
  6. நேற்று சரியான மேட்ச்தான். சந்தேகமில்லை. ஆனால் கடைசி நேரத்தில் வீரம் வருவதற்கு, முன்னரே வீறு கொண்டிருக்கலாம்! தோனி பேட் செய்ய வந்திருந்தால் நாற்பதாவது ஓரின் கடைசி பந்தில் முடிக்க முயற்சித்திருப்பரோ என்னமோ...!

    ராஜு முருகன் நன்றாகத்தான் எழுதுகிறார். ஆனால் ஒரு வரி இடறியது!

    அம்மா குணமடைந்து வீடு திரும்பியது நெகிழ்வைத் தந்தது. இறைவனுக்கு நன்றி.

    ReplyDelete
  7. \\ஹவுஸ் பாசுக்கு பயந்த ஆள் போல இருக்கு\\

    :))))

    அம்மாவின் உடல்நிலை தேறியது குறித்து மகிழ்ச்சி...

    ReplyDelete
  8. நல்லதோர் வானவில்....

    உங்கள் நண்பரின் பதிவினை உங்கள் பக்கத்தில் எதிர்பார்த்து நானும்....

    ReplyDelete
  9. அருமையான பதிவு.
    அம்மா நலம் பெற்று திரும்பி வந்தது மிக்க மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. கட்-அவுட்,சூப்பர் சிங்கர்... திருத்தவே முடியாது.

    அம்மாவின் நலம் அறிந்து மகிழ்ச்சி.

    நல்ல தொகுப்பு.

    ReplyDelete
  11. என் பதிவில உங்க கேம்ன்ட் பாத்து தான் தெரிஞ்சுக்கிட்டேன் கோக்லிக்கு வைஸ் கேப்டன் பொறுப்பு தந்திருப்பது.காலையில கேப்டனாக வாய்ப்புனு பதிவு போட்டேன்.அந்த பதவிக்கு தகுந்தவராகத்தான் தெரிகிறார். பாப்போம்.

    ReplyDelete
  12. அம்மா நலமுடன் திரும்பியது மகிழ்ச்சி.

    விஜய் டி.வில இந்த மாதிரி ஷோ ல எல்லாம் இதைப்போல ஏதாவது ஸ்டன்ட் பண்றது வழக்கமாகிடுச்சு.

    ReplyDelete
  13. உங்களுடைய இந்த வரிகளை படித்தபோது மிகுந்த வருத்தமடைந்தேன்.
    "நீ கஷ்டப்படாம நல்ல படியா சாகணும்னு தினம் வேண்டிக்குறேன்; ஆனா சீக்கிரம் சாகணும்னு வேண்டிக்க முடியலை. மனசு வரலைம்மா" என்றேன்."
    அமைதி அப்பா அவர்கள் சொன்னது உண்மை.. அதை என் வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன்.யாருடைய மரணத்தையும் அனுமானிக்க நாம யார் ?

    அம்மா வீடு திரும்பிய செய்தி மகிழ்வளிக்கிறது.... Take Care of her....

    ReplyDelete
  14. Anonymous2:28:00 AM

    தாயார் உடல்நிலை சீரான செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.

    ReplyDelete
  15. அண்ணா, அம்மா குணமடைந்ததில் மகிழ்ச்சி.
    உங்கள் பதிவு இப்போதெல்லாம் விராட் கோலி ஆட்டம் மாதிரி டாப் கியரில் போவதை ரசிக்க முடிகிறது! அதுவும், "ஏங்க.. நான் சரியா தான் பேசுறேனா??" நல்ல touch. எஸ்ரா சந்திப்பை பற்றி எழுத முயற்சிக்கிறேன்

    ReplyDelete
  16. அம்மாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து அம்மா நன்றாக இருக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம்.

    //அமைதி அப்பா போனில் சொன்னது போல் " பிழைக்கவே பிழைக்காது என சொல்வோர் பிழைப்பதும் நடக்கும். சாதாரண கேஸ் இறப்பதும் நடக்கும்"//

    நான் தங்களிடம் குறிப்பிட்டது, என் நண்பர்களின் அம்மா மருத்துவமனையில் இருந்த பொழுது பெற்ற அனுபவத்தில்.நன்றாகப் பேசிக்கொண்டிருந்தவர் இறந்துவிட்டார். கோமா நிலையில் இருந்தவர் மீண்டு வந்தார். இரண்டும் சில வார இடைவெளியில் நிகழ்ந்ததால் எனக்குள் ஒரு நம்பிக்கை வந்துவிட்டது.


    //சினிமாபாடல்கள் பற்றி விகடனில் ராஜு முருகன் //

    நானும் தொடர்ந்து படித்து வருகிறேன். நம்ம பகுதிக்காரர், நம்முடைய மொழி இவையெல்லாம் நம்மை அதிகளவில் ஈர்க்க காரணமென்று நினைக்கிறேன். மற்றபடி, அவர் சிறப்பான எழுத்தாளர் என்பதற்கு ஒவ்வொரு வாரமும் வெளியாகும் ஆனந்த விகடனே சாட்சி. சில வாரங்களுக்கு முன்பு 'பிள்ளைகள் எப்படி வளர வேண்டும் என்று பெற்றோர் ஆசைப்படுவதும், பிறகு நடப்பதுக் குறித்தும் எழுதியிருந்தார்' அவசியம் ஒவ்வொரு பெறோரும் படிக்க வேண்டியது.


    //ஏங்க.. நான் சரியா தான் பேசுறேனா??//

    எஸ் சார்...!

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. அம்மாவின் உடல்நலன் தேறி வீடு வந்து சேர்ந்தது குறித்து மகிழ்ச்சி....

    சிக்னலுக்கும் நிற்காமல் ஆம்புலன்ஸுக்கு முன்னாடியும் ஓடி அவருக்கு ஏதாவது நடந்திருந்தால்.....எதற்கு அவசரம்.

    //ஏங்க.. நான் சரியா தான் பேசுறேனா??//

    மிகச்சரியாகத் தான் சொல்றீங்க. தேவையில்லாம குழந்தைகள் மனதை பாழ்படுத்துகிறார்கள்.

    ReplyDelete
  19. கோஹ்லி ஆட்டம் செம! மேட்ச் பிக்ஸிங் கண்டிப்பாக இருக்காது. மலிங்கா வழக்கம் போல் நிறைய யார்க்கர்கள்தான் முயற்சி செய்தார். ஆனால் கோஹ்லியின் டைமும், டைமிங்கும் சூப்பராக இருந்ததால் கிடைத்ததுதான் இந்த வெற்றி!

    //நாமெல்லாம் எழுத்தாளர் என சொல்லி கொள்ளவோ, நினைக்கவோ கூடாது ! //

    எழுத்தாளர் என்பது பதிவருக்கான பதவி உயர்வு அல்ல மோகன். முயற்சி செய்தால் நீங்களும் ராஜுமுருகன் போல எழுதலாம். ஆனால் உங்கள் எளிமையான எழுத்துதான் உங்கள் பலம். அதை மாற்றிவிடாதீர்கள்.

    அம்மாவின் உடல் நலம் குறித்து மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு கால் பண்ணி பேசலாம் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் ஆஸ்பத்திரியும் வீடுமாக பிசியாக இருப்பீர்களோ என்று கொஞ்சம் தயக்கமாக இருந்தது.

    // 12 வயது பையனுக்கு முத்தம் தந்து, அவன் கிறக்கத்தில் மயங்கி விழுகிற மாதிரி காட்டி சின்ன பசங்களை விஜய் டிவி கெடுக்கணுமா?//

    புடிங்க சார்...அவங்கள புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் :)) ஆன் சீரியஸ் நோட், ஐ ஹேட் சூப்பர் சிங்கர்

    ReplyDelete
  20. //வேளச்சேரி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கடைகளில் வசூல் ஆளுக்கு 20,000 என்று நம்ப தகுந்த வட்டாரம் மூலம் தகவல் வந்தது.//

    என்ன ஆட்டோ பயம் போயிடுச்சா? அம்மா ஆட்சியில் போலீசார் எப்படி காலரை தூக்கி விட்டுக் கொண்டு நடக்கிறார்களோ அதே போல் ஆட்டோவும் அவ்வப்போது சீறிப் பாய்ந்து வரும்...

    ReplyDelete
  21. ஆரூர் மூனா செந்தில் : நன்றி தம்பி. அலுவலகத்தில் இருந்ததால் நானும் தான் பார்த்தேன்.

    ReplyDelete
  22. Madhavan Srinivasagopalan said...

    சரியாத்தான் பேசுறீங்க..அனுஷ்கா மேட்டரா இருந்தாத் தான் நீங்க சொதப்புவீங்க..

    **
    ஹா ஹா உனது உரிமையான கமண்ட்டை ரசித்தேன் மாதவா !

    ReplyDelete
  23. ராம்வி: ராஜூ முருகன் தொடர் உங்களையும் கவர்ந்ததில் மகிழ்ச்சி. கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  24. ரிஷபன் சார்: நன்றி

    ReplyDelete
  25. மனோ மேடம்: உங்களுக்கு கிரிக்கெட்டில் இவ்ளோ ஆர்வம் இருப்பது ஆச்சரியமாயிருக்கு. நீங்க சொன்ன சச்சின் ஆட்டம் இன்னும் நினைவிருக்கு !

    ReplyDelete
  26. ஸ்ரீராம். said...


    நேற்று சரியான மேட்ச்தான். சந்தேகமில்லை. ஆனால் கடைசி நேரத்தில் வீரம் வருவதற்கு, முன்னரே வீறு கொண்டிருக்கலாம்! தோனி பேட் செய்ய வந்திருந்தால் நாற்பதாவது ஓரின் கடைசி பந்தில் முடிக்க முயற்சித்திருப்பரோ என்னமோ...!

    **

    ஸ்ரீராம்: ரொம்ப சரியா சொன்னீங்க !

    ReplyDelete
  27. வித்யா said...

    \\ஹவுஸ் பாசுக்கு பயந்த ஆள் போல இருக்கு\\

    :))))

    க்கும். எல்லாரும் கணவர்களை மிரட்டிட்டு சிரிக்கிறீங்களா? :))

    ReplyDelete
  28. வெங்கட் நாகராஜ் said...


    நல்லதோர் வானவில்....

    உங்கள் நண்பரின் பதிவினை உங்கள் பக்கத்தில் எதிர்பார்த்து நானும்....

    *******
    விரைவில் எழுதுவார்னு நானும் நம்புறேன் வெங்கட்

    ReplyDelete
  29. Rathnavel Natarajan said...

    அருமையான பதிவு. அம்மா நலம் பெற்று திரும்பி வந்தது மிக்க மகிழ்ச்சி.
    **
    நன்றியும் மகிழ்ச்சியும் சார்

    ReplyDelete
  30. ராமலக்ஷ்மி said...

    கட்-அவுட்,சூப்பர் சிங்கர்... திருத்தவே முடியாது.
    **
    கட்-அவுட் - சூப்பர் என நான் முதலில் படிச்சுட்டேன்; அப்புறம் தான் நீங்க சொல்ல வருவது புரிஞ்சுது ! :))

    ReplyDelete
  31. கோகுல் said...

    கோக்லிக்கு வைஸ் கேப்டன் பொறுப்பு தந்திருப்பது..அந்த பதவிக்கு தகுந்தவராகத்தான் தெரிகிறார். பாப்போம்.

    **

    எனக்கு தெரிந்து கம்பீருக்கு அந்த பதவி தந்திருக்கலாம். பார்ப்போம் !

    ReplyDelete
  32. ஜமீல் said...


    அமைதி அப்பா அவர்கள் சொன்னது உண்மை.. அதை என் வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன்.யாருடைய மரணத்தையும் அனுமானிக்க நாம யார் ?

    **
    ஆம். அம்மா உடல்நிலை சரியில்லாத போது நானும் இதே விதமாய் உணர்ந்தேன்.

    ReplyDelete
  33. சிவகுமார் ! said...

    தாயார் உடல்நிலை சீரான செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.
    ********
    நன்றி சிவா !

    ReplyDelete
  34. தேவகுமார் said...

    உங்கள் பதிவு இப்போதெல்லாம் விராட் கோலி ஆட்டம் மாதிரி டாப் கியரில் போவதை ரசிக்க முடிகிறது! அதுவும், "ஏங்க.. நான் சரியா தான் பேசுறேனா??" நல்ல touch.

    **
    உனது மனம் திறந்த பாராட்டு மிக மகிழ்ச்சி தந்தது தேவா !

    ReplyDelete
  35. அமைதி அப்பா said

    //நம்ம பகுதிக்காரர், நம்முடைய மொழி இவையெல்லாம் நம்மை அதிகளவில் ஈர்க்க காரணமென்று நினைக்கிறேன்//

    *******
    உண்மை தான். அதையும் தாண்டி ராஜூ முருகன் நன்கு எழுதுகிறார் !

    ReplyDelete
  36. கோவை2தில்லி said...


    //சிக்னலுக்கும் நிற்காமல் ஆம்புலன்ஸுக்கு முன்னாடியும் ஓடி அவருக்கு ஏதாவது நடந்திருந்தால்.....எதற்கு அவசரம்.//
    ******
    காமெடிக்காக ஹவுஸ் பாஸ் எல்லாம் இழுதுள்லேனே ஒழிய நீங்கள் நினைத்தது தான் நான் சொல்ல விரும்பியதும் !

    ReplyDelete
  37. ரகு said

    //முயற்சி செய்தால் நீங்களும் ராஜுமுருகன் போல எழுதலாம். ஆனால் உங்கள் எளிமையான எழுத்துதான் உங்கள் பலம். அதை மாற்றிவிடாதீர்கள்.//


    ரகு: ரூம் போட்டு யோசிச்சாலும் என்னால் இதே நடையில் தான் எழுத முடியும். சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும் !


    //புடிங்க சார்...அவங்கள புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் :)) ஆன் சீரியஸ் நோட், ஐ ஹேட் சூப்பர் சிங்கர்

    ஹா ஹா. ரசித்தேன் பட் ஐ லவ் சூப்பர் சிங்கர் :))

    ReplyDelete
  38. ஆதி மனிதன் said...

    என்ன ஆட்டோ பயம் போயிடுச்சா? அம்மா ஆட்சியில் போலீசார் எப்படி காலரை தூக்கி விட்டுக் கொண்டு நடக்கிறார்களோ அதே போல் ஆட்டோவும் அவ்வப்போது சீறிப் பாய்ந்து வரும்...

    **
    புதுசா தஞ்சையில் கமல வண்ணன் என்ற நண்பர் கிடைத்துள்ளார். அந்த தைரியம் தான் :))

    அவருக்கு இன்னொரு பேரும் இருக்கு; அது உங்களுக்கே தெரியும் !

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...