வருடா வருடம் பிள்ளையாருக்கு அபிஷேகம், அம்மா- பொண்ணு பாடும் பாடல்களுடன் நடக்கும். இம்முறை எடுத்த படங்களும் வீடியோவும் இதோ :
மண் பிள்ளையார் மட்டும் புதிதாய் வாங்கியது. மற்றவை வீட்டில் உள்ளது..
குளிப்பதற்கு தயாராகிறார் பிள்ளையார்....( அபிஷேகத்திற்கு முன்பு .. )
பூஜை ..சில வினாடிகள் மட்டும் ...
என் பெண் விநாயகருக்கு தனது மாலை அணிவித்து அழகு பார்த்தாள்..
அனைவருக்கும் சதுர்த்தி தின வாழ்த்துகள் !
(பண்டிகை நாளில் டிவி மட்டுமே பார்ப்பதில்லை என்பதை இனியாவது நம்புங்கப்பா.)
சரி.. பிள்ளையாருக்கு அபிஷேகம் பார்க்கலாமா? செய்தது என மகள் ! எருக்கம் பிள்ளையாரை சாய்த்து சாய்த்து உரிமையாய் குளிப்பாட்டுகிறாள் :))
சாப்பாடு தயார் ! எங்க தோட்டத்து இலை ரொம்பவே பெருசு! அதான் நிறைய இடம் காலியா தெரியுது !
பிள்ளையாருக்கு சமைத்த/ படைத்த உணவுகள்.. பச்சை மிளகாய் சாம்பார், கொழுக்கட்டை -ரெண்டு வகை, சுண்டல், வாழைக்காய் வறுவல், பாயசம், அப்பளம், வாழைப்பழ அப்பம் & எள் உருண்டை !
குளித்து முடித்து பூஜைக்கு ரெடி ..
அனைவருக்கும் சதுர்த்தி தின வாழ்த்துகள் !
(பண்டிகை நாளில் டிவி மட்டுமே பார்ப்பதில்லை என்பதை இனியாவது நம்புங்கப்பா.)
நல்ல பகிர்வு. குடும்பத்தினருக்கு சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteகுடும்பத்துடன் பிள்ளையாரை வழிப்பட்டடது போல் இருக்கிறது..
ReplyDeleteசூப்பர்..
சதுர்த்தி வாழ்த்துக்கள்!வலைச்சர அறிமுகத்துக்கும்!
ReplyDeletenambittom!
ReplyDeleteவீடியோ இர்ண்டும் அருமை.
ReplyDeleteஅதென்ன பச்சைமிளகாய் சாம்பார்? எப்படி செய்ய வேண்டும்?
விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்..
சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்
ReplyDelete// (பண்டிகை நாளில் டிவி மட்டுமே பார்ப்பதில்லை என்பதை இனியாவது நம்புங்கப்பா.) //
ReplyDeleteநம்பிட்டோம்..
// பூஜை ..சில வினாடிகள் மட்டும் ...//
அட.. இப்போ புரியுது, பண்டிகை கால சின்னத்திரை நிகழ்ச்சி பற்றிய விமர்சனம், விரைவில்..
// (பண்டிகை நாளில் டிவி மட்டுமே பார்ப்பதில்லை என்பதை இனியாவது நம்புங்கப்பா.) //
ReplyDeleteநிஜமா நம்பிட்டோம் மோகன்.... :)))
பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்....
நல்ல பகிர்வு!
ReplyDelete'பச்சை மிளகாய் சாம்பார்' எங்கள் வீட்டில் சாம்பார் பொடி முடிந்த நாட்களில் வைப்பார்கள். எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
நன்றி ராமலட்சுமி. புகை படங்கள் எடுப்பதில் உங்க கிட்டே கூட நாங்க வர முடியாது
ReplyDelete**
ஆம். நன்றி சௌந்தர்.
**
நன்றி கோகுல்.
**
டாக்டர். நிஜமா தானே எழுதிருக்கேன் :))
**
பச்சை மிளகாய் நிறைய போட்டு செய்தால் பச்சை மிளகாய் சாம்பார். சின்ன வெங்காயம் அதிகம் இல்லாததால் இப்படி செய்ய வேண்டியாதாயிற்று
ReplyDeleteநன்றி ராம்வி மேடம்
**
நன்றி கோபிராஜ்
**
நன்றி வெங்கட். உங்களுக்கும் குடும்பத்தார்க்கும் வாழ்த்துகள்
மாதவா,பூஜை வீடியோ சின்னதா போட்டதற்கு ரெண்டு காரணம்.
ReplyDelete1 . பூஜை முடியும் நேரம் தான் வீடியோ எடுக்க ஆரம்பித்தேன் (பூஜையை கவனிக்காமல் வீடியோ எடுத்து வாங்கி கட்டிக்க முடியாதே? :))
2. அதற்கு முந்தைய வீடியோ சற்று பெரிது என்பதால், இது கொஞ்ச நேரம் தான் என்பதை குறிக்க " சில நொடிகள் மட்டும்" என சொன்னேன்.
நீ சொன்ன கோண(மு)ம் டிபரண்டா இருக்கு :))
**
நன்றி அமைதி அப்பா. வீட்டுக்கு வீடு சாம்பார் நிறையவே மாறுபடும் என நினைக்கிறேன்
பச்சை மிளகாய் சாம்பார் பற்றி சிறு திருத்தம்:
ReplyDeleteவிரத நாளில் ஏற்கனவே அரைத்த மிளகாய் தூளை சேர்க்காமல் பச்சை மிளகாய் மட்டுமே போட்டு செய்வது பச்சை மிளகாய் சாம்பார்
தகவல் நன்றி: ஹவுஸ் பாஸ்
//நன்றி அமைதி அப்பா. வீட்டுக்கு வீடு சாம்பார் நிறையவே மாறுபடும் என நினைக்கிறேன் //
ReplyDelete"ஏற்கனவே அரைத்த மிளகாய் தூளை சேர்க்காமல் பச்சை மிளகாய் மட்டுமே போட்டு செய்வது பச்சை மிளகாய் சாம்பார்" என்று மேடம் சொன்னதுதான் சரி.