சூப்பர் சிங்கரில் குறைந்தது இருவராவது பைனல் செல்வார்கள் என எழுதியிருந்தேன். அது நடக்கவே செய்தது. சாய் சரண் & மாளவிகா என எழுதியதில் பாதி தான் நடந்தது. சாய் சரண் & சந்தோஷ் ஒய்ல்ட் கார்ட் மூலம் பைனல் சென்றுள்ளனர். ஓரளவு சரியான முடிவாகவே தெரிகிறது. வெறும் சாய் சரணுடன் நிறுத்தியிருந்தால் ஒய்ல்ட் கார்ட் நடத்தியதில் என்ன பலன்? முதல் மூவர் தானே பைனல் செல்கிறார்கள் என இருந்திருக்கும் அல்லவா? பைனலுக்கு ஏகப்பட்ட பில்ட் அப் தந்து அடுத்த சில வாரத்தில் நடத்துவார்கள். அதுவரை பைனல் சென்ற பாடகர்கள் மேக் அப்- செய்வது உடைகள் தேர்ந்தெடுப்பது போன்றவை காட்டி ஜல்லி அடிப்பார்கள். பைனலில் வெல்ல சாய் சரணுக்கே வாய்ப்பு என நினைக்கிறேன் ! மிஸ் ஆனால் அடுத்த வாய்ப்பு பூஜாவிற்கு !
பார்த்த படம்: கண்டேன்
ஹீரோ சாந்தனுவை அல்ல, காமெடியன் சந்தானத்தை நம்பி எடுத்த படம் ! அவரும் தன் பங்கிற்கு முடிந்த வரை சிரிக்க வைக்கிறார். சந்தானம் காமெடி, கவுண்டமணி சற்று refined- ஆக இந்த காலத்து யூத் போல இருந்தால் எப்படி இருக்குமோ, அப்படி தான் உள்ளது கவனித்துள்ளீகளா? ஆக மொத்தம் கவுண்டர் ஸ்டைல் தான் !!)
முதல் பாதி ரொம்ப சுமார். பிற்பாதியில் கண் தெரியாமல், ஆனால் தெரிந்த மாதிரி சாந்தனு சமாளிக்கும் காட்சிகள் சற்று சுவாரஸ்யம். ஹீரோவுக்கு தற்காலிகமாக தான் கண் தெரியாது. விரைவில் சரியாகிடும் என முன்பே சொல்லி விடுகிறார்கள். அதனால் ஓவர் செண்டிமெண்டுக்கு வேலை இல்லை.
பாக்கியராஜ் டான்ஸ் எப்போதும் எல்லோராலும் கிண்டல் செய்யப்படுகிற ஒன்று. ஆனால் அவர் மகன் சாந்தனு நன்கு டான்ஸ் ஆடுகிறார் !!
ஆமாம். இந்த படம் இந்த ஞாயிறன்று விஜய் டிவியில் போட்டார்களே! பார்த்தீர்களா?
நாட்டி கார்னர்
நாட்டிக்கு ஏதாவது சில வார்த்தைகளாவது கற்று தந்து விட வேண்டுமென எவ்வளவோ முயன்று வருகிறோம். சின்ன வார்த்தையாக சொல்லி தர வேண்டும் என்றதால் "வா" என்கிற வார்த்தையை பல முறை சொல்லி கொண்டே இருக்கிறோம். நாம் பல முறை "வா" சொன்ன பிறகு நாட்டி நிதானமாய் நம்மை பார்த்து சொல்லும்: "கீ..... . " !
எங்களுக்கு தெரிந்து கிளி வளர்க்கும் ஒருவர் " நிச்சயம் கிளி பேசும். பேசாமல் போகாது" என்கிறார். பார்க்கலாம் !
ரசித்த பாட்டு
வெகு சில பாடல்களே கேட்பதை விட பார்க்க ரொம்ப அருமையாக இருக்கும். இன்னும் வெளி வராத எங்கேயும் எப்போதும் படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் அந்த வகையை சார்ந்தது. ஒரு சின்ன பாடலில் எவ்வளவு விஷயம் சொல்லி விடுகிறார்கள் !! இவ்வளவு சுவாரஸ்யமான காட்சிப்படுத்தல், சமீபத்தில் தமிழில் வேறு பாடலில் பார்க்கவில்லை. சென்னைக்கு வரும் ஒரு பெண் நகர கலாசாரம், ஆணும் பெண்ணும் இடித்து கொண்டு உட்காரும் ஷேர் ஆட்டோ போன்றவற்றை பார்த்து மிரளுவது தான் கான்செப்ட். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்கும் படி உள்ளது (நான் முதலில் இதை ஜாக்கி சேகர் பதிவில் தான் பார்த்தேன், நன்றி ஜாக்கி)
புழுதிவாக்கம் பள்ளிக்கு கணினி ஆசிரியர் தேவை
சமீபத்தில் புழுதிவாக்கம் பள்ளிக்கு சென்ற போது + 2 விற்கு கணினி ஆசிரியர் (Computer Science ) தேவை என்றும், ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் நிரம்ப சிரமபடுவதாகவும் தலைமை ஆசிரியர் சொன்னார். சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில் பாடம் எடுத்து தந்தால் கூட போதும். இங்கு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவும் பொருட்டு இலவசமாக எடுத்தாலும் சரி, அல்லது பார்ட் டைம் ஆசிரியர் போல, அதற்கு என்ன அரசு தருமோ அதனை தரவும் பள்ளி தயாராக உள்ளது. கணினி பற்றிய அடிப்படை விளக்கமும் C+ ம் தான் சிலபஸ்ஸில் உள்ளது. மாணவர்களுக்கு உதவ விருப்பம் உள்ளவர்கள் எனக்கு (snehamohankumar@yahoo.co.in) எழுதுங்கள். பள்ளியில் பேசி ஆவண செய்கிறேன்.
பதிவர் கேள்வி பதில்
கேள்வி: சினிமா துறை ஊழியர்கள், சம்பள உயர்வு கோரி, புது படங்கள் பூஜை போட கூடாதென்றும் ஏற்கனவே எடுக்கும் படங்கள் அக்டோபர் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனரே? இதன் பின்னணி என்ன? இதனால் படங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
பதிவர் கேபிள் சங்கர் : ஊழியர்கள் கேட்கும் ஊதிய உயர்வு மிக அதிகமாக இருப்பதாக தயாரிப்பாளர்கள் கருதுகிறார்கள். 400 ருபாய் தின சம்பளம் எனில் தற்போது அதனை எண்ணூறு ஆக்குமாறு நூறு சதவீத உயர்வு கேட்கிறார்கள். இது வரை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை 20 % ஊதிய உயர்வு போல் தான் தந்து வந்தனர். எனவே தற்போது கேட்கப்படும் ஊதிய உயர்வை பல தரப்பினர் ஒத்து கொள்ள வில்லை. தமிழ் நாடு பிலிம் ப்ரோடியூசர் கவுன்சில் போன்ற வலுவான குழு ஸ்டிரைக் என சொல்லியிருந்தால் நிச்சயம் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
தற்போதைக்கு இது குறித்து நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் பேசி வருகிறார்கள். மாத இறுதியில் தான் என்ன நடக்கும் என தெரியும். ஆயினும் இந்த பிரச்சனையால் படங்களின் படப்பிடிப்பிற்கு பெரிய பாதிப்பு வரும் என தோன்ற வில்லை.
முக்கிய அறிவிப்பு- ப்ளாக் வாசிக்கிறார் Mrs . அய்யா சாமி !
ம். தலைப்பிலேயே முழு கதையும் சொல்லியாச்சே ! அதே தான்! உங்களில் பலர் ஆவலுடன் கேட்டது போல, Mrs . அய்யா சாமி தினம் பத்து நிமிடம் செலவு செய்து, தன் அலுவலகத்திலிருந்தே "வீடு திரும்பல்" ப்ளாகை வாசிக்க ஆரம்பித்துள்ளார். (நாட்டியின் வீடியோக்கள் மற்றும் நாட்டி கார்னரின் விளைவாக இருக்குமோ?) ப்ளாகை படித்து விட்டு "பெண் பார்த்த அனுபவம்", " சட்னி ரெசிப்பி" பதிவுகள் குறித்து பல கேள்வி கணைகளை தொடுத்துள்ளார். இந்த திடீர் திருப்பத்தால் அய்யா சாமி நடுநடுங்கி போய் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
i am a great fan of naughty and ayyasaamy. this week i laughed uncontrollably reading both.welcome Mrs.Ayyasamy.i think she ll have grt reading, the same way we have.And i dont think she ll spare time for reading comments atleast for now.But beware, one day she would start writing comments.
ReplyDelete// எங்களுக்கு தெரிந்து கிளி வளர்க்கும் ஒருவர் " நிச்சயம் கிளி பேசும். பேசாமல் போகாது" என்கிறார். பார்க்கலாம் ! //
ReplyDeleteபெண்கள் கிளி போன்றவர்கள்.. அவர்கள் பேசுகிறார்களே..
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteநல்ல அலசல்.
ReplyDelete//சூப்பர் சிங்கரில் குறைந்தது இருவராவது பைனல் செல்வார்கள் என எழுதியிருந்தேன். அது நடக்கவே செய்தது. //
தீர்கதரசி??
//முக்கிய அறிவிப்பு- ப்ளாக் வாசிக்கிறார் Mrs . அய்யா சாமி !//
கேள்விக்கணைகளை தாங்க தயாராக இருங்க
//இந்த திடீர் திருப்பத்தால் அய்யா சாமி நடுநடுங்கி போய் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன//
ReplyDeleteவீடுதிரும்பல் வீடு திரும்புவதில் பிரச்சனையோ...
//அய்யா சாமி நடுநடுங்கி போய் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.//
ReplyDeleteஆஹா..... பரவாயில்லை....
//நாட்டி நிதானமாய் நம்மை பார்த்து சொல்லும்: "கீ..... . " !//
ReplyDeleteதமிழ் தெரியாதோ என்னவோ, எதுக்கும் கேட்டுக்கோங்க நாட்டிகிட்ட!!
//Mrs . அய்யா சாமி தினம் பத்து நிமிடம் செலவு செய்து, தன் அலுவலகத்திலிருந்தே "வீடு திரும்பல்" ப்ளாகை வாசிக்க ஆரம்பித்துள்ளார்//
ஹப்பாடா, இனி ‘தலைவி’ புராணம் பாடுவது குறையும்!!
//ஆணும் பெண்ணும் இடித்து கொண்டு உட்காரும் ஷேர் ஆட்டோ/
ReplyDeleteஅப்படியா?! புது தகவல் எனக்கு.
ஹுஸைனம்மா said...
ReplyDelete//ஹப்பாடா, இனி ‘தலைவி’ புராணம் பாடுவது குறையும்!!//
அதெல்லாம் குறையாது. வீட்டுலேயே தலைவி பத்தி பேசுறதை தான் இதுவரை ப்ளாகில் போட்டு வந்தேன். :))
டாக்டர் வடிவுக்கரசி: மிக மகிழ்ச்சி. அய்யாசாமியிடம் சொன்னால் மிக மகிழ்வார். நாட்டிக்கு சொன்னா புரியாது :))
ReplyDelete**
மாதவா: நன்றி
**
ராம்வி said // கேள்விக்கணைகளை தாங்க தயாராக இருங்க//
ஆமாங்கோ; ஆமாம்
**
ஆதி மனிதன் said: //வீடுதிரும்பல் வீடு திரும்புவதில் பிரச்சனையோ...//
ஆமாம், அதான் பயமா இருக்கு
**
வெங்கட்: மீ தி பாவம். நீங்க பரவாயில்லைன்னு சொல்றீங்க !!
நான் சொல்ல நினைத்ததை ஹுஸைனம்மா சொல்லி விட்டார்:)!
ReplyDelete[உங்க பதிலையும் பார்த்து விட்டேன்.]
ஒரு வேளை கிளி மழலைப் பேச்சிலேயே நிற்கிறதோ என்னவோ? மெதுவா கற்றுக் கொள்ளட்டும்:)!
//இந்த திடீர் திருப்பத்தால் அய்யா சாமி நடுநடுங்கி போய் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.//
ReplyDeleteஇது மாதிரி ஒரு சம்பவம் நடக்கும் ஜாக்கிரதைன்னு எப்பயோ உங்களுக்கு சொன்னேன்..கேட்டீங்களா? :)))
இனிமே 'தலைவி' பத்தின பதிவுலாம் கம்மியாய்டுமே ;)))
நல்லா கலர் புல்லா இருக்கு. எங்கேயும் எப்போது பற்றி பாடல் வெளியீடு அன்று என் பதிவில் எழுதியிருந்தேன்.நான் தான் பர்ஸ்ட் சொன்னேன்..:))
ReplyDeleteC++ padichathu maranthu pochu. adjust pannikuvanagala? hmmm
ReplyDeletehhehe
Mrs.ayyasamy ku jey
வானவில்லின் அத்தனை நிறங்களும் அழகு!
ReplyDeleteஇன்று முதல் தொடர்கிறேன் நண்பரே
ReplyDeleteஅருமையான தொகுப்புகள் பகிர்வுக்கு நன்றி .
பாடல் அருமை