கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் ஹீரோவாக நடித்த படம். முன்பே சந்தோஷ் சுப்ரமணியத்தில் ஹீரோவின் அண்ணனாக எந்த முக பாவமும் காட்டாமல் நடித்தவர் தான் ரமேஷ். அதிலிருந்து சற்று முன்னேற்றம் இந்த படத்தில். முக பாவங்கள் கொஞ்சமாவது வருகிறது.
லகான் படம், ஆங்கிலேயர்- இந்தியர் இடையே நடக்கும் கிரிக்கெட் மேட்ச், அதில் இந்தியர் வென்றால் வரி கட்ட வேண்டாம் என்று சுதந்திர போராட்டத்தை பின்புலமாக வைத்து எடுத்தனர். அதையே இங்கு லோக்கலாக மாற்றி விட்டனர். (ஆனால் பட இயக்குனர் சொல்கிறார்: " நான் லகான் படமே பார்த்ததில்லை. எனக்கு ஹிந்தி தெரியாது" . அப்படிங்களா? நல்லதுங்கன்னா. பல காட்சிகள் பார்க்கும் போது நீங்க லகான் பாத்தீங்களா இல்லியான்னு நல்லா தெரியுது !!)
ஆங்காங்கு சிரிக்க வைக்கும் மிக லைட்டான கதை. ஹீரோயின் தான் பெரிய ஏமாற்றம். இந்த பொண்ணுக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம்?
ஜாலியாக பார்த்து சிரிக்க ஒரு முறை படம் பார்க்கலாம்.
அய்யாசாமியின் சமையல் குறிப்பு
அலோ இந்த வாரம் நான் சட்னி செய்ய கத்துகிட்டேன் தெரியுமில்ல? சட்னி செய்றது ரொம்ப ஈசி. ஐந்தே ஸ்டெப் தான்.
1 . தேங்காயை திருகிக்குங்க . அல்லது கத்தி வைத்து துண்டு, துண்டா கீறிக்குங்க.
2.பச்சை மிளகாய் ஒண்ணு கீறி போடுங்க . காய்ந்த மிளகாய் எனில் தோசை கல்லில் சற்று காய வைத்து பின் போடுங்க.
3.தேவைப்பட்டால் பொட்டு கடலை, இஞ்சி இவற்றில் ஏதேனும் சேர்க்கலாம். இல்லாட்டி சாய்ஸில் விட்டுடலாம்.
4.உப்பு சேர்க்கணும். இதன் அளவு சரியாக புரிந்து கொண்டால் நீங்க கில்லாடி. இந்த வேலையை மட்டும் வீட்டம்மாவே செய்வாங்க. இதை கத்துகிட்டா நாம் "Independent " ஆகிடுவோம் என. இந்த தடையை தாண்டி தொழில் ரகசியம் கத்துக்கணும் !!
5. பின் மிக்சியில் மேலே சொன்ன அனைத்தும் போட்டு அரைக்கணும். ஓரளவு அரைத்த பின் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மறுபடி அரைச்சா சட்னி ரெடி !
இது தேங்காய் சட்னி ! தேங்காயுடன் கொத்தமல்லி அல்லது பொதினா சேர்த்து செய்தால் அது கொத்தமல்லி or பொதினா சட்னி. ஓகே? செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க.
ரசித்த SMS:
Some one asked Buddha " What is Poison?". He gave a great answer: " Everything excess in life is poison".
ரசித்த பாடல்
தினத்தந்தியில் "இந்த கார்ட்டூனுக்கு விளக்கம் தேவையில்லை" என போடுவார்கள். அதுபோல இந்த பாடல் எனக்கு ஏன் பிடிக்கும் என்பதற்கு விளக்கம் தேவையில்லை. இருந்தாலும் முதலில் பாடலை பாருங்கள் பின் சிறு விளக்கமும் உண்டு.
ஆம். தலைவிக்காக தான் பாட்டு பிடிக்கும். இந்த பாட்டில் எல்லாமே பிடிக்கும் என்றாலும் பிடிக்காத ஒரே விஷயம் தலைவி வண்டி ஓட்டும் போது பின் சீட்டிலிருந்து ஒரு தலை எட்டி, எட்டி பார்ப்பது தான் ! பின்னே அது அய்யா சாமி உட்கார வேண்டிய இடம் அல்லவா? ஏய் .. ஹூ இஸ் தட் டிஸ்டபன்ஸ்?
பதிவர் பக்கம்
சமீபத்தில் வாசித்த பதிவுகளில் பிடித்த பதிவு இது.
இன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்
சென்னை ஸ்பெஷல்: மா நரக பேருந்துகள்
சென்னை மாநகர பேருந்து சிலருக்கு நரக பேருந்தாக மாறி வருவது அனைவரும் அறிந்ததே. அதன் புள்ளி விவரங்கள் படிக்க நேர்ந்தது. வருடத்துக்கு சுமார் 150 பேர் சென்னை மாநகர பேருந்தில் இடிபட்டு இறக்கின்றனர். இறப்பவர்கள் மட்டுமே இந்த அளவு எனில் கை, கால் இழந்தவர்கள், காயம் பட்டவர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள்! அதிகாலை நேரம் மற்றும் இரவு நேரங்களே அதிகம் விபத்துகள் நடக்கின்றன. அதிகம் இறப்போர் ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடப்போர் !! சாலையில் நிரம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று மீண்டும் நினைவூட்டுகிறது இந்த புள்ளி விபரமும் தகவலும்.
ரசித்த கவிதை
விடைபெறல் அவ்வளவு
எளிதாய் நிகழ்வதில்லை.
ஒரு கையசைப்பு போதும்
கடைசி வரை உள்ளிருக்க
-நிலா ரசிகன்
நானும் சமீபத்தில்தான் சட்னி செய்ய கத்துகிட்டேங்கோ!!
ReplyDeleteஅனுஷ்கா மாதிரியே பதிவும் அழகு.. :))
ReplyDeleteநல்ல அலசல்.சட்னி செய்முறைக்கு நன்றி.
ReplyDeleteஅட பரவாயில்லையே சட்னி செய்ய கத்துக்கிட்டீங்களா!! :)))
ReplyDeleteயார் பா அது அய்யாசாமியை டிஸ்டர்ப் பண்றது.... ஜாக்கிரதை....
நல்ல பாடல்... நல்ல பகிர்வு மோகன்...
Without Investment Data Entry Jobs !
ReplyDeleteFOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com
போயும் போயும் அனுஷ்காவப் போயி....
ReplyDeleteகலிகாலம் டோய் !
//இது தேங்காய் சட்னி ! தேங்காயுடன் கொத்தமல்லி அல்லது பொதினா சேர்த்து செய்தால் அது கொத்தமல்லி or பொதினா சட்னி. ஓகே?//
ReplyDeleteவாவ்!! வாழ்த்துகள். இதுக்காகவே என் ஓட்டும்!! (இருங்க.. இருங்க.. இந்த வாழ்த்தும், ஓட்டும் சட்னி செஞ்ச உங்களுக்காக இல்லை! இந்த அளவு உங்களை வளர்த்த உங்க வீட்டம்மாவுக்காக!!) :-)))))))
ஆமா, சட்னில புளி சேக்கிறதில்லியா நீங்க?
சட்னி ரெசிபியில் புளி போடமல் சொதப்பிட்டீர்கள் போலயே. சரியா பிடிச்சாங்க ஹுஸைனம்மா:)!
ReplyDeleteசென்னை ஸ்பெஷல் வருத்தம் தருகிறது.
ஷீ நிசி. நல்லது. புதுசா கல்யாணம் ஆயிருக்கா நண்பா?
ReplyDelete**
மணிகண்டன்: அனுஷ்காவும் அழகு; பதிவும் அழகுன்னு சொல்லிட்டீங்க. ஐ யாம் வெரி ஹாப்பி
**
நன்றி ராம்வி
**
வெங்கட்: நன்றி. ஆமாம் ..அந்த ஆள் அய்யாசாமியை ரொம்ப டிஸ்டர்ப் பண்றார்.
**
ஹுசைனம்மா & ராமலட்சுமி: எனது இந்த பதிவை அதிசயமா அலுவலகத்திலிருந்து உங்கள் இருவர் பின்னூட்டங்களுக்கு முன்பே வாசித்த ஹவுஸ் பாஸ் வீட்டுக்கு வந்ததும் கேட்ட முதல் கேள்வி இது தான்:
ReplyDeleteசட்னில புளி ஏன் சேர்க்கலை? :)))
நம்ம பதில்: விடு. விடு ஏதோ நிஜ சட்னியிலே புளி சேக்காத மாதிரி இவ்ளோ ரைடு விடுறே?
ReplyDeleteஹவுஸ் பாஸ்: நீங்க சொன்னதை பாத்து யாராவது பேச்சிலர் சட்னி செஞ்சு பாக்கலாம்ல? அப்ப நீங்க ஒழுங்கா எழுத வேணாமா?
மீ: ?????
ஆறாவது கமென்ட் போட்ட மாதவா: நான் உன் கூட டூ. தலைவி பத்தி நீ தப்பா பேசிட்டே :))
ReplyDelete//ஹவுஸ் பாஸ்: நீங்க சொன்னதை பாத்து யாராவது பேச்சிலர் சட்னி செஞ்சு பாக்கலாம்ல?//
ReplyDeleteஇவ்ளோ நம்பிக்கையா உங்கமேலே அவங்களுக்கு??!! கிரேட்!! :-)))))))))
தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.
ReplyDeleteஎன்னுடைய பதிவினை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.